Higher Secondary First Year One Mark Important

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 

    50 x 1 = 50
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  3. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  4. பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

    (a)

    \(\sqrt{hG\over c^{3\over2}}\)

    (b)

    \(\sqrt{hG\over C^{5\over2}}\)

    (c)

    \(\sqrt{hc\over G}\)

    (d)

    \(\sqrt{Gc\over h^{3\over2}}\)

  5. ஒரு ஒளியாண்டு =_______

    (a)

    9.647x 1012

    (b)

    6.764x 105

    (c)

    9.467x 1012km 

    (d)

    9.467x 1015km 

  6. 19.95 என்ற எண்ணை மூன்று முக்கிய எண்ணுரு வடிவில் முழுமைப்படுத்துக.

    (a)

    19.9

    (b)

    20.0

    (c)

    20.1

    (d)

    19.5

  7. அழுத்தச் சரிவின் பரிணாமங்கள் கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமம்?

    (a)

    திசைவேகம் சரிவு

    (b)

    மின்னழுத்தச் சரிவு

    (c)

    ஆற்றல் சரிவு

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  8. வானியல் கால அளவுகள் மற்றும் மைக்ரோஸ்கோபிக் அளவுக்குமான வீச்சு______ 

    (a)

    1015 s முதல் 10-15 s

    (b)

    109 s முதல் 10-18 s

    (c)

    1018 s முதல் 10-22 s

    (d)

    1011 s முதல் 10-16 s

  9. 2.64 x 104 kg ல் உள்ள முக்கிய எண்ணுருக்களின் எண்ணிக்கை____ 

    (a)

    2

    (b)

    4

    (c)

    5

    (d)

    3

  10. ஒரு கிலோமீட்டரில் எத்தனை பர்செக் உள்ளன?

    (a)

    3.084 x 10-16

    (b)

    3.08 x 108

    (c)

    3.24 x 10-14

    (d)

    எதுவுமில்லை

  11. பொருளொன்று கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகிறது, அப்பொருள் 4 வினாடியில் தரையை அடைந்தால் கட்டிடத்தின் உயரமென்ன? ( காற்றுத்தடையைப் புறக்கணிக்க)

    (a)

    77.3 m

    (b)

    78.4 m

    (c)

    80.5 m

    (d)

    79.2 m

  12. v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v - t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளங்குகிறது.

    (a)

    (b)

    (c)

    (d)

  13. குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?

    (a)

    (b)

    (c)

    (d)

  14. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  15. துகல் ஒன்றின் இடப்பெயர்ச்சி சுழி எனில் அது கடந்த தொலைவு_____ 

    (a)

    சுழியாக இருக்கும்

    (b)

    சுழியாக இருக்க முடியாது

    (c)

    எதிர்க்குறி உடையது

    (d)

    சுழியாகவோ அல்லது சுழியற்றதாகவோ இருக்கலாம்

  16. துகள் ஒன்றின் இடப்பெயர்ச்சி \(x=a_0+{a_1t\over 2}-{a_2t^2\over 3}\) என்ற சமன்பாட்டால் குறிக்கப்பட்டால் அதன் முடுக்கம் யாது?

    (a)

    2a2/3

    (b)

    -2a2/3

    (c)

    a2

    (d)

    சுழி

  17. பொருளொன்றின் இடப்பெயர்ச்சியானது அது கடக்க எடுத்து கொண்ட காலத்தின் மும்மடிக்கு நேர்தக்கவில் அமைந்தால் அதன் முடுக்கத்தின் எண் மதிப்பு_____ 

    (a)

    காலத்தை பொறுத்து அதிகரிக்கும்

    (b)

    காலத்தை பொறுத்து குறையும்

    (c)

    காலத்தை பொறுத்து மாறாது, ஆனால் சுழியல்லா

    (d)

    சுழி

  18. தடங்கலின்றி தானே கீழே விழும் பொருளின் 1, 2 மற்றும் 3 நொடிகளில் கடந்த தொலைவுகளின் தகவு______ 

    (a)

    1:2:3

    (b)

    1:3:5

    (c)

    1:4:9

    (d)

    9:4:1

  19. துகள் ஒன்று r ஆரமுள்ள வட்டப்பாதையில் இயங்குகின்றது. அரைச்சுற்றில் அதன் இடப்பெயர்ச்சி மற்றும் அது கடந்த தொலைவு _______

    (a)

    2r, 2\(\pi \)

    (b)

    \(r/\sqrt { 2 } ,\pi r\quad \)

    (c)

    2r, \(\pi \)

    (d)

    r, \(\pi \)

  20. துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும் போது, அதன் முடுக்கம்_____

    (a)

    தொடுகோட்டின் வழியே ஏற்படும்.

    (b)

    ஆரத்தின் வழியே ஏற்படும்

    (c)

    வட்டப்பாதை வழியே ஏற்படும்

    (d)

    சுழி

  21. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

    (a)

    திசையில் நிலைமம்

    (b)

    இயக்கத்தில் நிலைமம்

    (c)

    ஓய்வில் நிலைமம்

    (d)

    நிலைமமற்ற தன்மை

  22. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நி்றை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நி்றையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நி்லையில் கி்டைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

    (a)

    mg ஐ விடக் குறைவு

    (b)

    mg க்குச் சமம்

    (c)

    mg ஐ விட அதிகம்

    (d)

    கண்டறிய முடியாது

  23. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வழுவழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

    (a)

    பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

    (b)

    பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

    (c)

    இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

    (d)

    இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

  24. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

    (a)

    பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

    (b)

    ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

    (c)

    ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

    (d)

    ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

  25. நிலைமம் என்பது ஒரு பொருளின் எந்த நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு?

    (a)

    ஓய்வு நிலையை மட்டும்

    (b)

    சீரான நேர்கோட்டு இயக்க நிலையை மட்டும்

    (c)

    இயக்கத் திசையை மட்டும்

    (d)

    தனது ஓய்வு நிலையையும், அதன் சீரான நேர்கோட்டு இயக்க நிலையையும்

  26. விசை Y அச்சிலும், காலம் X -அச்சிலும் கொண்டு வரையப்படும் வரைபடத்தின் கீழ் உள்ள பரப்பளவு எதைக் கொடுக்கும்?

    (a)

    உந்தம்

    (b)

    இரட்டை

    (c)

    விசையின் திருப்புத்திறன்

    (d)

    விசையின் தாக்கம்

  27. ராக்கெட் ஒன்று செயல்படுவதன் தத்துவம்_______ 

    (a)

    மீட்சிப் பண்பு

    (b)

    கெப்ளரின் விதிகள்

    (c)

    நியூட்டனின் விதிகள்

    (d)

    உந்த அழிவின்மை விதி

  28. 10 N விசை ஒரு பொருளின் திசைவேகத்தை 20 ms-1 லிருந்து 40 ms-1 க்கு 8 செகண்டுகளில் மாறுகிறது.அதே மாற்றத்தை 4 செகண்டுகளில் எவ்வளவு விசை தேவை?     

    (a)

    10 N 

    (b)

    5 N

    (c)

    20 w 

    (d)

    ஏதுமில்லை 

  29. ஒரு சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கட்டி அதன் சாய்வுடன் உண்டாக்கும் கோணம் \(\theta\).பிளாக் நிலையான வேகத்துடன் தளத்தில் கீழே நழுவுகிறது எனில் உராய்வுக் குணகம் இதற்குச் சமம்_______

    (a)

    sin\(\theta\) 

    (b)

    cos\(\theta\) 

    (c)

    (d)

    tan\(\theta\) 

  30. மாறா திசைவேகத்தில் செல்லும் ஒரு திறந்த காரில் செல்லும் ஒரு நபர் காற்றில் பந்தை செங்குத்தாக எறிகிறார்.பந்து விழுவது _______

    (a)

    சரியாக இருந்தவரின் கையிலேயே 

    (b)

    காருக்கு வெளியே 

    (c)

    நபருக்கு முன்னால்  

    (d)

    நபருக்கு பின்னால் 

  31. 1 kg நிறையுள்ள ஒரு பொருள்  20 m s-1 திசைவேகத்துடன மேல்நோக்கி எறி்யப்படுகிறது. அது 18 m உயரத்தை   அடைந்தவுடன்  கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால்  இழக்கப்பட்ட  ஆற்றல் எவ்வளவு? (g = 10 ms-2 எனக்கொள்க)

    (a)

    20J

    (b)

    30J

    (c)

    40J

    (d)

    10J

  32. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியாக இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும்  இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின்  நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட விதம் யாது?               

    (a)

    \(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)

    (b)

    mv3

    (c)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

    (d)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

  33. சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms-1 மற்றும் -9ms-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள்  முறையே_______.

    (a)

    -4ms-1 மற்றும் 10ms-1

    (b)

    10ms-1 மற்றும் 0ms-1

    (c)

    -9ms-1 மற்றும் 5ms-1

    (d)

    5ms-1 மற்றும்  1ms-1

  34. x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்குறி மதிப்புள்ள மாறிலிகள். x \(\ge\) 0 என்பதற்கு பொருளின்  நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம் _______.

    (a)

    (b)

    (c)

    (d)

  35. வேலையின் பரிமாண வாய்ப்பாடு___________.

    (a)

    ML2T-2

    (b)

    ML2T-1

    (c)

    ML-1T-1

    (d)

    LT-2

  36. 4 kg மற்றும் 5 kg நிறை கொண்ட இரு பொருட்களின் உன்னதங்கள் சமம்  எனில் அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் 

    (a)

    4 : 5

    (b)

    2 : 1

    (c)

    1 : 3

    (d)

    5 : 4

  37. 100g நிறை கொண்ட பொருள் ஒன்று, r ஆரமுடைய வட்டப்பாதையில் சீரான வேகத்தில் சுற்றி வருகின்றது. ஒரு முழுச்சுற்றில் அது செய்த வேலை

    (a)

    (r/100)J

    (b)

    (100/r)J

    (c)

    100rJ

    (d)

    சுழி

  38. பொருள் ஒன்றின் நிறை பாதியாக்கப்பட்டு, வேகம் இரு மடங்கானல், அதன் இயக்க ஆற்றல் 

    (a)

    2 மடங்காகும் 

    (b)

    4 மடங்காகும் 

    (c)

    8 மடங்காகும் 

    (d)

    மாறாது 

  39. 120 ம் ஆழமுள்ள ஒரு கிணற்றிலிருந்து 3 நிமிடங்களில் 2000 லிட்டர் தண்ணீர் இறைக்கக்கூடிய மோட்டார் உள்ளது. மோட்டாரின் திறன் (power) யாது? 

    (a)

    8.730 kW

    (b)

    7.840 kW

    (c)

    11.652 kW

    (d)

    13.066 kW

  40. ஒரு பந்து 75% அதன் மூல உயரத்திற்கு எழும்புகிறது. ஒவ்வொரு எழும்பலின் போதும் இழக்கும் இயந்திர ஆற்றலை கணக்கிடு.

    (a)

    0.40

    (b)

    0.35

    (c)

    0.25

    (d)

    0.20

  41. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  42. மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது______.

    (a)

    15 MR2/32

    (b)

    13 MR2/32

    (c)

    11 MR2/32

    (d)

    9 MR2/32

  43. திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்______.

    (a)

    \(\sqrt { \frac { 4 }{ 3 } gh } \)

    (b)

    \(\sqrt { \frac { 10 }{ 7 } gh } \)

    (c)

    \(\sqrt { 2gh } \)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } gh } \)

  44. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.

    (a)

    இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

    (b)

    சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

    (d)

    இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

  45. திருப்பு விசை செயல்படாத போது பொருளின் கோண உந்தம் _____

    (a)

    சிறுமம்

    (b)

    பெருமம்

    (c)

    மாறாது

    (d)

    சுழி

  46. ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து, சம நிறையுள்ள இரு பந்துகள், ஒரே திசைவேகத்தில், ஒண்டு கிடைத்தளத்தோடு \(\theta \) கோணத்தில் மேல்நோக்கியும், மற்றது கிடைத்தளத்தோடு \(\theta \)கோணத்தில் கீழ் நோக்கியும் அறியப்படுகின்றன எனில், இரு பந்துகளின் நிறையின் மையத்தின் பாதை 

    (a)

    செங்குத்து, நேர்கோடு வழியாக அமையும் 

    (b)

    கிடைத்தள, நேர்கோடு வழியாக அமையும் 

    (c)

    கிடைத்தளத்தோடு \(\alpha (<\theta )\)என்ற நேர்கோடு வழியாக அமையும் 

    (d)

    பரவளையப் பாதையில் அமையும் 

  47. எஞ்சின் ஒன்றின் சக்கரம் நிமிடத்திற்கு 90 முறை சுழலுமெனில் அதன் கோணத் திசைவேகம்?

    (a)

    1.5  \(\pi \)rad/s

    (b)

    3  \(\pi \)rad/s

    (c)

    4.5  \(\pi \)rad/s

    (d)

    6  \(\pi \)rad/s

  48. m நிறையும், l நீளமும் கொண்ட கம்பி ஒன்று வட்ட வளையமாக மாற்றப்பட்டால், வளையத்தின் அச்சைப் பற்றிய நிலைமத் திருப்புதிறன்  

    (a)

    ml2

    (b)

    \(\frac { { ml }^{ 2 } }{ { 2\pi }^{ 2 } } \)

    (c)

    \(\frac { { ml }^{ 2 } }{ {4\pi }^{ 2 } } \)

    (d)

    \(\frac { { ml }^{ 2 } }{ { 8\pi }^{ 2 } } \)

  49. பனிக்கட்டியின்மீது நடமாடும் ஒருவர் கையை மடித்து வைத்துள்ள நிலையில் வேகமாக சுழல்கிறார் ஏனெனில்

    (a)

    ஆற்றல் அதிகரிப்பு மற்றும் கோண உந்தம் அதிகரிப்பு

    (b)

    இயக்க ஆற்றல் உயரும் மற்றும் கோண உந்தம் குறையும்

    (c)

    இயக்க ஆற்றல் உயரும், கோண உந்தம் நிலையாக இருக்கும்.

    (d)

    ஸ்கேட்டிங் குறைந்த உராய்வு

  50. 4செகண்டுகளில் J லிருந்து 4J க்கு கோண உந்தம் மாறும்போது அதன் திருப்பு விசை

    (a)

    3/4J

    (b)

    1J

    (c)

    5/4J

    (d)

    4/3J

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Physics Important 1 Mark Questions 2018 )

Write your Comment