+1 Public Official Model Question 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது துல்லியத்தன்மை 0.01 m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை_______.

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  2. துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.

    (a)

    துகளின் திசைவேகம் மற்றும் வேகம் மாறிலி

    (b)

    துகளின் முடுக்கம் மற்றும் வேகம் மாறிலி

    (c)

    துகளின் திசைவேகம் மற்றும் முடுக்கம் மாறிலி

    (d)

    துகளின் வேகம் மற்றும் முடுக்கத்தின் எண்மதிப்பு மாறிலி

  3. கோண இயக்கத்தின் இயக்க சமன்பாடுகள்______

    (a)

    நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (b)

    கோணமுடுக்கம் உடைய பொருள்களுக்குப் பொருந்தும்

    (c)

    மாறாத நேர்க்கோட்டு முடுக்கத்தில் உள்ள பொருட்களுக்குப் பொருந்தும்

    (d)

    மாறாத கோணமுடுக்கம் உடைய பொருட்களுக்குப் பொருந்தும்

  4. ஓய்வுநிலை உராய்வுக் குணகம் \({ \mu }_{ s }\) கொண்ட, கிடைத்தளப்பரப்புடன் \(\theta\) கோணம் சாய்ந்துள்ள சாய்தளமென்றில் m என்ற நிறைவழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வுநிலை உராய்வு விசையின் அளவு _______.

    (a)

    mg

    (b)

    \({ \mu }_{ s }\) mg

    (c)

    \({ \mu }_{ s }\) mg sin\(\theta\)

    (d)

    \({ \mu }_{ s }\) mg cos\(\theta\)

  5. k என்ற விசை மாறிலி கொண்ட  ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது _______.

    (a)

    \(\frac { 2 }{ 3 } k\)

    (b)

    \(\frac { 3 }{ 2 } k\)

    (c)

    3K

    (d)

    6K

  6. இரட்டை உருவாக்குவது ______.

    (a)

    சுழற்சி இயக்கம்

    (b)

    இடப்பெயர்ச்சி இயக்கம்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

    (d)

    இயக்க மின்மை

  7. நிலைத்தொலைவு (1m, 1m,1m) கொண்ட 1 kg நிறையுடைய துகள் ஒன்றின் Z-அச்சைப்பற்றிய நிலைமத் திருப்புத்திறன் 

    (a)

    1 kg m2

    (b)

    2 kg m2

    (c)

    3 kg m2

    (d)

    எதுவும் இல்லை 

  8. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg  நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு_____.

    (a)

    98N 

    (b)

    சுழி 

    (c)

    49N 

    (d)

    9.8N 

  9. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

  10. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.

    (a)

    ஒரு நீள்வட்டம் 

    (b)

    ஒரு வட்டம் 

    (c)

    ஒரு நேர்க்கோட்டு 

    (d)

    ஒரு பரவளையம் 

  11. நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

    (a)

    இருமடங்காகும்

    (b)

    மாறாது

    (c)

    பாதியாக குறையும்

    (d)

    நான்கு மடங்கு அதிகரிக்கும்

  12. ஓரலகு பருமனில் 'n' எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் நிறை m, Vx என்பது திசைவேக அழுத்தத்தின் x-கூறு எனில்  

    (a)

    \(P=nm{ V }_{ x }^{ 2 }\)

    (b)

    \(P=2nm{ V }_{ x }^{ 2 }\)

    (c)

    \(P=m{ V }_{ x }^{ 2 }\)

    (d)

    \(P=n{ V }_{ x }^{ 2 }\)

  13. a முடுக்கத்துடன் கிடைத்தளத்தில் இயங்க கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T ∝ {1\over g^2+a^2}\)

    (b)

    \(T ∝ {1\over \sqrt {g^2+a^2}}\)

    (c)

    \(T ∝ \sqrt {g^2+a^2}\)

    (d)

    T \(∝\) (g2 + a2)

  14. கீழ்கண்டவற்றுள் எது சரி?

    A B
    1 தரம் A செறிவு
    2 சுருதி B அலை வடிவம்
    3 உரப்பு C அதிர்வெண்

    (1), (2) , (3) க்கான சரியான ஜோடி

    (a)

    (B),(C) மற்றும் (A)

    (b)

    (C), (A) மற்றும் (B)

    (c)

    (A), (B) மற்றும் (C)

    (d)

    (B), (A) மற்றும் (C)

  15. அலைநீளம் \( \lambda\) கொண்ட ஒழி அலைகள் ஒரு ஊடகத்தின் வழியே v m/s  வேகத்துடன் நுழையும் போது வேகம் 2 v m/s ஆகிறது. இரண்டாம் ஊடகத்தில் ஒலி அலைகளின் அலை நீளம் 

    (a)

    \( \lambda \)

    (b)

    \(\frac { \lambda }{ 2 } \)

    (c)

    \(2 \lambda \)

    (d)

    \(4 \lambda \)

  16. 6 x 2 = 12
  17. புவியிலிருந்து விண்மீனுக்கு இடையேயான தொலைவை எவ்வாறு அளவிடலாம்? அதனை வரையறு.

  18. 10 m உயரத்திலிருந்து இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் ஒரே நேரத்தில் விழுகின்றன. இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
    அ) இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் தரையை அடையும்போது அவற்றின் திசை வேகங்கள் எவ்வளவு?
    (காற்றுத் தடையைப் புறக்கணிக்கவும் மேலும் g = 10 m s-2 என்க)

  19. துகள் அமைப்பின் உந்தம் எப்பொழுதும் மாறாது சரியா தவறா?

  20. ஒரு பொருள் இயக்கத்தில் உள்ள போது புவியீர்ப்பு விசையின் பங்கு என்ன?

  21. புரிமுடுக்கியின் (Wrench) கைப்பிடி அதிக நீளமாக இருப்பது நல்லது. எதனால்?

  22. உன் மாவட்ட தலைநகரத்தில் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு காண்க. (குறிப்பு - கூகுள் தேடுதல் மூலம் குறுக்குகோட்டு மதிப்பு பெறுக) g ன் மதிப்பு சென்னையிலிருந்து கன்னியாகுமரியில் எவ்வாறு மாறுபடுகிறது?

  23. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் கிளாசியஸ் கூற்றைக் கூறுக.

  24. ஒரு தனி ஊசலின் நீளம் 1.20m, ஆனால் அதை நோக்குபவர் 1மீ நீளம் எனக் காண்கிறார். அதன் அலைவு காலம் 2.00s ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனில் புவிஈர்ப்பு முடுக்கம் யாது?

  25. y = x + a என்ற தொடர்பிற்கு படம் வரைக அதை விளக்குக.

  26. 6 x 3 = 18
  27. ஒரு பொருளின் நிறை மற்றும் பருமன் முறையே (4\(\pm \)0.03) kg மற்றும் (5\(\pm \)0.01) m எனக் கண்டறியப் பட்டுள்ளது எனில், அடர்த்தியின் பெரும சதவிதப் பிழையைக் கண்டறிக. 

  28. வட்டப்பாதை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் கோண முடுக்கம் \(\alpha=0.2 rad \ {s}^{-2}\)
    அ) இத்துடன் 5 வினாடிகளுக்கு பின்னர் அடைந்த கோண இடப்பெயர்ச்சி மற்றும் 
    ஆ) நேரம் t = 5 வினாடியில் இத்துகளின் கோணத்திசை வேகம் ஆகியவற்றைக் காண்க.
    (துகளின் ஆரம்பக்கோணத்திசைவேகம் சுழி எனக் கருதுக.)

  29. புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரண்டாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளை ஆராய்க.

  30. 2 kg மற்றும் 4 kg நிறை கொண்ட இரு பொருள்கள் 20 kg m s-1 என்ற சம உந்தத்துடன் இயங்குகின்றன.
    (a) அவை சம இயக்க ஆற்றலைப் பெற்றிருக்குமா?
    (b) அவை சம வேகத்தைப் பெற்றிருக்குமா?

  31. நான்கு உருளை வடிவ பொருட்களான வளையம் வட்டத்தட்டு உள்ளீடற்ற கோளம் மற்றும் திண்மக் கோளம் ஆகியவை ஒத்த ஆரம் R உடன் ஒரே நேரத்தில் சாய்தளத்தின் உருள ஆரம்பிக்கிறது. எந்த பொருள் சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் வந்தடையும் என்பதைக் காண்க.

  32. தொடுவிசை, தொடாவிசை விவரி.

  33. சறுக்குப் பெயர்ச்சித்திரிபு, பருமத் திரிபு  இவற்றை விளக்குக.       

  34. பகல், இரவு நேரங்களில் ஏற்படும் காற்று பரிமாற்றத்தினை வெப்ப இயக்கவியல் மூலம் விளக்குக. [ கடல் காற்று, நிலக்காற்று].

  35. வாயுக்களின் சராசரி மோதலிடைந்ததூரத்திற்கான கோவையை வருவி.

  36. 5 x 5 = 25
  37. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

  38. இரு துகள்கள் x அச்சில் இயங்குகின்றன. துகளின் நிலை x = 6.0t+4.0t +2.0, இரண்டாவது துகள் முடுக்கம் a =-6.0t.t =0 கால அளவில் திசைவேகம் 30m/s துகள்களின் திசைவேகங்கள் பொருத்தமாகும் போது அதன் திசை வேகத்தைக் காண்.

  39. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

  40. ஒரு நேரான சாலையில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ஒரே இயக்க ஆற்றலுடன் இயங்குகின்றன. அவற்றின் என்ஜின் ஒரே மாதிரியாக அணைக்கப்பட்டுள்ளன. எவ்வாகனம் நீண்ட தொலைவிற்கு சென்று நிற்கும்? 

  41. சீரான வளையத்தின் மையம் வழிச் செல்வதும், தளத்திற்கு செங்குத்தானதுமான அச்சைப் பற்றிய நிலைமத்திருப்புத்திறனிற்கான சமன்பாட்டை வருவி.

  42. குன்றின்  உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?

  43. இரு கோள வடிவ சோப்பு குமிழிகள் இணைகின்றன. V என்பது அவற்றிலுள்ள காற்றின் பருமனில் மாற்றம் A என்பது மொத்த  பரப்பளவின் மாற்றம் எனில் 3PV  + 4AT  = 0 காட்டு . T என்பது பரப்பு இழுவிசை p என்பது வளி அழுத்தம்.     

  44. வெப்ப விரிவைப்பற்றி விவாதித்து எழுதுக.

  45. ஒரு துகளானது தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்வதாக கொள்வோம். x1 நிலையில் துகளானது v1 திசைவேகத்தையும் மற்றும், x2 நிலையில் v2 திசைவேகத்தையும் பெற்றிருப்பதாகக் கருதுவோம். அலைவு நேரம் மற்றும் வீச்சின் தகைவு
    \(\frac { T }{ A } =2\pi \sqrt { \frac { { x }_{ 2 }^{ 2 }-{ x }_{ 1 }^{ 2 } }{ { { v }_{ 1 }^{ 2 }x }_{ 2 }^{ 2 }-{ { v }_{ 2 }^{ 2 }x }_{ 1 }^{ 2 } } } \) எனக் காட்டுக.

  46. ஆக்சிஜன், நைட்ரஜன் அடர்த்திகளின் தகவு 16:14 எந்த வெப்பநிலையில் ஆக்சிஜனில் செல்லும் ஒலியின் திசைவேகமானது,17o C இல் நைட்ரஜனில் செல்லும் ஒலியின் திசைவேகத்திற்கு சமமாகும்?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 இயற்பியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment