+1 Second Full Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும்சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன்விடையினையும்சேர்த்துஎழுதுக : 

          
    15 x 1 = 15
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  6. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?

    (a)

    மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

    (b)

    மிதிவண்டியை விவரித்தல்

    (c)

    ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.

    (d)

    ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்

  7. மடக்கிற்கு முன்னர், C பொய் எனில், கட்டுப்பாட்டு பாய்வு எதன் வழியும் இயங்கும்?
    1    S1
    2            while C
    3           S2
    4     S3

    (a)

    S1; S3

    (b)

    S1;S2;S3

    (c)

    S1;S2;S2;S3

    (d)

    S1;S2;S2;S2;S3

  8. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)

    (a)

    11

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  9. C++ என பெயர் சூட்டியவர் யார்?

    (a)

    ரிக் மாஸ்கிட்டி 

    (b)

    ரிக் பிஜர்னே 

    (c)

    பில் கேட்ஸ் 

    (d)

    டென்னிஸ் ரிட்சி

  10. ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க  கூடியது    

    (a)

    கோவைகள் 

    (b)

    செயற்கூறுகள்  

    (c)

    பாய்வு கட்டுபாடு  

    (d)

    செயற்குறிகள்  

  11. பின்வருவனவற்றுள் கட்டுருக்களில் அறிவிக்கப்படும் மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    தரவினம்

    (b)

    தரவு உறுப்பினர்கள்

    (c)

    செயற்கூறுகள்

    (d)

    செயற்குறிகள்

  12. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

    (a)

    தரவு மிகைமை 

    (b)

    மறுபயனாக்கம் 

    (c)

    மாற்றம் 

    (d)

    தொகுத்தல் 

  13. பின்வரும் எந்த சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடியும்போது அழைக்கப்படும்?

    (a)

    ஆக்கி 

    (b)

    அழிப்பி 

    (c)

    உறுப்பு செயற்கூறு 

    (d)

    தரவு உறுப்பு 

  14. செய்தி அல்லது தரவினை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் செயலாக்கவல்ல செயற்கூறின் திறனை எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

    (a)

    செயற்கூறு பணிமிகப்பு

    (b)

    செயற்குறி பணிமிகப்பு

    (c)

    உறை பொதியாக்கம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    bus இனக்குழுவின் பொருள், அணுக கூடிய தரவு உறுப்பு செயற்கூறுகளை குறிப்பிடுக.

    (a)

    input_data( )

    (b)

    read_data( ), output data ( ) write_data( )

    (c)

    fetch_data( )

    (d)

    all of these display_data( )

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 24 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6x 2 = 12
  17. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  18. பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.

  19. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?

  20. அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?

  21. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

  22. While மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  23. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  24. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    {
    int num[5]={10, 20, 30, 40, 50};
    int t=2
    cout << num[2] << endl;
    cout <<num[3+1] << endl;
    cout << num[t=t+1];
    }

  25. எப்போது உறுப்பு செயற்கூறு அணுக பொருளானது தேவைப்படாது?

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 33 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. தரவு மற்றும் தகவல் விவரி.

  28. டிமார்கன் தேற்றங்களை எழுதுக.

  29. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  30. ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)

  31. “=” மற்றும் “==” வேறுபடுத்துக.

  32. முன்னியல்புச் செயலுருப்புக்களை  பயன்படுத்தும் போது  கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?            

  33. சரங்களின் அணியைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  34. உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.

  35. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்? 

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

    1. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

    2. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

    1. கோணத்தின் கொள்ளவை கண்டுபிடிப்பதற்கான C++ நிரலை எழுதுக.

    2. LCM மற்றும் GDC போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக.

    1. Inline செயற்கூற்றினை எடுத்துகாட்டுடன் விரிவாக எழுதுக.

    2. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

    1. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

    2. பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Science Full Paper Questions 2018 )

Write your Comment