11th First Revision Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

  I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  15 x 1 = 15
 1. 0ε0)-1/2 ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?

  (a)

  நீளம்

  (b)

  காலம்

  (c)

  திசைவேகம்

  (d)

  விசை

 2. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

  (a)

  \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

  (b)

  \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

  (c)

  \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

  (d)

  \({{m}_{1}\over{m}_{2}}\)

 3. இயங்கும் துகள் ஒன்றின் கடந்த தொலைவும் இடப்பெயர்ச்சியும் சமமாக அமைய, அது இயங்க வேண்டிய பாதை

  (a)

  வட்டம்

  (b)

  பரவளையம்

  (c)

  நேர்கோடு

  (d)

  அதிபரவளையம்

 4. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  எப்பொழுதும் சுழி

  (b)

  சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

  (c)

  எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

  (d)

  முடிவு செய்ய இயலாது

 5. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை 

  (a)

  \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  (b)

  \(F=\beta x\)

  (c)

  \(F=-\beta x\)

  (d)

  \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

 6. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது

  (a)

  இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

  (b)

  சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

  (c)

  சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

  (d)

  இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

 7. \(\overrightarrow { F } =4\hat { i } +5\hat { j } -6\hat { k } \) என்ற விசையானது (2, -2, -2) என்ற புள்ளியில் அமைந்த நிலை வெக்டரின் மீது செயல்படுகின்றது. ஆதியைப் பொருத்து திருப்புவிசையின் மதிப்பு 

  (a)

  \(-8\hat { i } -4\hat { j } -7\hat { k } \)

  (b)

  \(-4\hat { i } -\hat { j } -8\hat { k } \)

  (c)

  \(-7\hat { i } -8\hat { j } -4\hat { k } \)

  (d)

  \(-7\hat { i } -4\hat { j } -8\hat { k } \)

 8. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சம பரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வித்தியானது _____ மாறா விதிப்படி அமைந்துள்ளது.

  (a)

  நேர்கோட்டு உந்தம் (Linear momentum)

  (b)

  கோண உந்தம்(Angular momentum)

  (c)

  ஆற்றல் 

  (d)

  இயக்க ஆற்றல்

 9. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே 

  (a)

  அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

  (b)

  அதிகரிக்கும் மற்றும் குறையும் 

  (c)

  குறையும்  மற்றும் அதிகரிக்கும்

  (d)

  குறையும்  மற்றும் குறையும்  

 10. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்கனா வரைபடம் 

  (a)

  ஒரு நீள்வட்டம் 

  (b)

  ஒரு வட்டம் 

  (c)

  ஒரு நேர்க்கோட்டு 

  (d)

  ஒரு பரவளையம் 

 11. ஒரு திறந்த கதவின் மூலம் இணைக்கப்பட்ட முழுவதும் ஒத்த அளவுள்ள A மற்றும் B என்ற இரண்டு அறைகள் உள்ளன. குளிர் சாதன வசதியுள்ள A0C அறையின் வெப்பநிலை B அறையைவிட 4 குறைவாக உள்ளது. எந்த அறையிலுள்ள காற்றின் அளவு அதிகமாக இருக்கும்?

  (a)

  அறை A

  (b)

  அறை B

  (c)

  இரண்டு அறைகளிலும் ஒரே அளவுள்ள காற்று இருக்கும்

  (d)

  கண்டறிய இயலாது

 12. வாயுவின் சராசரி வேகம் SO2 ஐப் போல் நான்கு மடங்கு எனில் [மூலக்கூறு நிறை 64]

  (a)

  He [மூலக்கூறு நிறை 64]

  (b)

  O2[மூலக்கூறு நிறை 4]

  (c)

  M2[மூலக்கூறு நிறை 32]

  (d)

  CH4[மூலக்கூறு நிறை 16]

 13. தனிஊசற் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளபோது, சீரிசை அலை இயற்றியை போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில் ஊசல் குண்டின் முடுக்கமானது 16ms-1 எனில் அதன் அலைவுநேரம்

  (a)

  2s

  (b)

  1s

  (c)

  2\(\pi\)s

  (d)

  \(\pi\)s

 14. சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்துகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்.

  (a)

  (b)

  (c)

  (d)

 15. பின்வருவனவற்றில் ஒரு நிலையான அலைக்குப் பொருந்தும்?

  (a)

  ஏதொரு தளத்தின் குறுக்கேயும் மொத்த ஆற்றல் பரிமாற்றம் இல்லை 

  (b)

  எல்லாத் துகள்களும் அதன் சராசரி நிலையில் ஒரே நேரத்தில் கடக்கின்றன 

  (c)

  ஒவ்வொரு துகளிலும் விசையூட்டப்பட்ட வீச்சு உள்ளது 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. கோட்பாடுகளும், ஆய்வகச் செயல்முறைகளும் பயன்பாட்டில் எங்கனம் ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன?

 18. இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல் பற்றி சிறுகுறிப்பு வரைக.

 19. 10m வளைவு ஆரம் கொண்ட வட்ட வடிவச் சாலையில் செல்லும் கார், 50 ms-1 திசைவேகத்தில் வளைகிறது அக்காரினுள்ளே அமர்ந்திருக்கும் 60 kg நிறையுடைய மனிதர் உணரும் மையவிலக்கு விசையைக் காண்க.

 20. 30 மீ ஆழத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் 20 மெட்ரிக் டன் நிலக்கரியை துக்கக்கூடிய ஒரு என்ஜினின் திறனைக் கணக்கிடு.

 21. நிறை மையம் எவ்வடிவங்களில் மூலை விட்டங்களில் அமைந்திருக்கும்.

 22. நியூட்டனின் ஈர்ப்பியல் பொது விதியை தருக.

 23. நல்லியல்பு வாயு ஒன்றின் சுழற்சி நிகழ்வினைக் காட்டும் பின்வரும் படத்திலிருந்து, கீழ்கண்டவற்றைக் காண்க. 
  a. வாயுவால் செய்யப்பட்ட வேலை 
  b. வாயுவின் மீது செய்யப்பட்ட வேலை 
  c. இந்நிகழ்வில் செய்யப்பட்ட தொகுபயன் வேலை 

 24. பொறியியல் பயன்பாடுகளில் அதிர்வு இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?

 25. அலைகள் என்றால் என்ன?

 26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

  6 x 3 = 18
 27. பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை msஇல் மாற்றுக.

 28. கோண இடப்பெயர்ச்சி மற்றும் கோணத்திசை வேகம் இவற்றை வரையறு

 29. கீழ்க்கண்ட அமைப்புகளில் செயல்படும் அக மற்றும் புறவிசைகளை காண்க.
  a) புவியை மட்டும் தனியாகக் கொண்ட அமைப்பு
  b) புவி மற்றும் சூரியன் இணைந்த அமைப்பு
  c) நடக்கும் மனிதன் - என்ற அமைப்பு
  d) நமது உடல் மற்றும் புவி இணைந்த அமைப்பு.

 30. 10 m s-1 வேகததில் இ்யங்கும் ஒரு நிறை குறைவான பொருள் அதன நீரையைப் போன்று இரு மடங்கு மற்றும் அதன வேகததில் பாதி்ய்ளவு சகாண்ட அதே திசையில்   இ்யங்கும் மறறொரு பொருளின் மீது மோதுகிறது .மொதலானது ஒரு பாரிமான மீட்சி மோதல் எனக் கருதுக.மோதலுக்கு பிறகு  இரு பொருள்களின் வேகம் என்ன?

 31. சறுக்குதலுக்கும் நழுவுதலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 32. தொடுவிசை, தொடாவிசை விவரி.

 33. ஒரு உலோகத்தின் பாய்சன் விகிதம் 0.5.இவ்உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியின் மீது செலுத்தப்படும்போது 4% அதன் குறுக்குப் பரப்பில் குறைவு ஏற்படுகிறது. நீளத்தில் ஏற்படும் சதவீத உயர்வு யாது?       

 34. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கண்டறியக் காரணம் யாது?

 35. வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.

 36. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  5 x 5 = 25
  1. வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது செயல்படும் விசையானது (F) பொருளின் நிறை (m), திசைவேகம் (v), மற்றும் வட்டப்பாதையின் ஆரம் (r) ஆகியவற்றைப் பொருத்தது, எனில் விசைக்கான சமன்பாட்டை பரிமாண பகுப்பாய்வு முறையில் பெறுக. (மாறிலி k = 1)

  2. ஒரு துகளின் நிலை r=\(=2.00t\hat { i } -1.00{ t }^{ 2 }\hat { j } +3.00\hat { k } \)எனக் கொடுக்கப்பட்டுள்ளது. t செகண்டுகளிலும். குணகங்கள் அதற்கேற்ற அலகுகளையும், r என்பது மீட்டரிலும் உள்ளது. துகளின் i) திசைவேகத்தையும், முடுக்கத்தையும் கண்டுபிடி ii) t=2s களில் துகளின் திசைவேகத்தின் எண் மதிப்பு மற்றும் திசைகளையும் யாது?

  1. 50 kg நிறையுடைய பொருள் தளம் ஒன்றில் ஓய்வுநிலையில் உள்ளது. அப்பொருளினை நகர்த்த அதன் மீது 5 N விசை செலுத்தப்படுகிறது. எனினும் பொருள் நகரவில்லை. இந்நிலையில் பொருள் வைக்கப்பட்டுள்ள தளம், பொருளின் மீது செலுத்தும் உராய்வு விசையைக் கண்டுபிடி.

  2. 25g நிறையுடைய ஒரு துப்பாக்கிக் குண்டு 400 ms-1 திசை வேகத்துடன் ஒரு அட்டையைத் தாக்குகிறது. அதன் மறு முனை வழியாக 300 ms-1 என்ற திசைவேகத்துடன் வெளியேறுகிறது. அட்டையின் வழியே செல்ல செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடு. 

  1. இரு துகள்கள் P மற்றும் Q என்பனவற்றின் நிறைகள் முறையே 1kg மற்றும் 3kg அவற்றிற்கு இடையேயான கவர்ச்சி விசையினால் 30 m s-1 மற்றும் 6 m s-1 என்ற திசைவேகங்களுடன் ஒன்றை ஒன்று நோக்கி நகர்கின்றன. அவற்றின் நிறைமையங்களின் திசைவேகங்கள் என்ன?

  2. எடையின்மை என்பதை மின் உயர்த்தி இயக்கத்தை பயன்படுத்தி விளக்குக.

  1. ஒரு மெல்லிய தண்டின் புறக்கணிக்கத்தக்க நிறையும், குறுக்குப் பரப்பு 4 X 10-6 உடையது. 1000C ல் 5 நீளமுள்ள ஒருமுனை குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. 00C ல் குளிர்வடையும்போது சுருங்குவதைக் தடுக்க அதன் கீழ்முனையில் ஒரு நிறை இணைக்கப்படுகிறது. நிறை , தண்டின் சேகரிக்கப்பட்ட ஆற்றல் காண்க. Y =10X 1011 Nm -2நீரின் விரிவு குணகம் =10-5k -1 g =10ms-2

  2. ஒரு மோல் அளவுள்ள ஏதேனும் ஒரு வாயுவின் பருமனை படித்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (STP) காண்க. மேலும் அதே மூலக்கூறுகளின் பருமனை அறைவெப்பநிலை (300k) மற்றும் ஒரு வளி மண்டல அழுத்தத்தில் (1atm) கணக்கிடுக.

  1. சுருள்வில்லின் கிடைத்தள அலைவுகளை விவரி.

  2. y = sin(x − a) என்ற அலை \(a = 0, a ={\pi\over4},a={\pi\over2},a={2\pi\over2}\) மற்றும் a = π என்ற மதிப்புகளுக்கு எவ்வாறு இருக்கிறது என வரைபடங்கள் மூலம் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th Physics First Revision Exam )

Write your Comment