+1 Revision Exam ( Full Portion )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. கீழ்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

    (a)

    விசை மற்றும் திறன்

    (b)

    திருப்புவிசை மற்றும் ஆற்றல்

    (c)

    திருப்புவிசை மற்றும் திறன்

    (d)

    விசை மற்றும் திருப்புவிசை

  2. m1 மற்றும் m2 நிறை கொண்ட இரண்டு பொருட்கள் h1 மற்றும் h2 உயரத்திலிருந்து விழுகின்றன. அவை தரையை அடையும்போது அவற்றின் உந்தங்களின் எண்மதிப்புகளின் விகிதம் என்ன?

    (a)

    \(\sqrt{{h}_{1}\over{h}_{2}}\)

    (b)

    \(\sqrt{{m}_{1}{h}_{1}\over{m}_{2}{h}_{2}}\)

    (c)

    \({{{m}_{1}}\over{{m}_{2}}}\sqrt{{{h}_{1}\over{h}_{2}}}\)

    (d)

    \({{m}_{1}\over{m}_{2}}\)

  3. ஒரே ஆரம் கொண்ட இரும்பு மற்றும் மரத்தாலான இரு கோலங்கள் h உயரத்திலிருந்து வெற்றிடத்தில் தானே கேழே விழுந்தால் அவை தரையை அடைய எடுத்துக்கொள்ளும் காலம்_____ 

    (a)

    ஓரளவுக்குச் சமம்

    (b)

    சமம்

    (c)

    சமமாக இருக்காது

    (d)

    சுழி

  4. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வழுவழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

    (a)

    பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

    (b)

    பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

    (c)

    இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

    (d)

    இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

  5. சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5ms-1 மற்றும் -9ms-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள்  முறையே_______.

    (a)

    -4ms-1 மற்றும் 10ms-1

    (b)

    10ms-1 மற்றும் 0ms-1

    (c)

    -9ms-1 மற்றும் 5ms-1

    (d)

    5ms-1 மற்றும்  1ms-1

  6. இரட்டை உருவாக்குவது ______.

    (a)

    சுழற்சி இயக்கம்

    (b)

    இடப்பெயர்ச்சி இயக்கம்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி

    (d)

    இயக்க மின்மை

  7. கோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்?

    (a)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் ஆரவெக்டர் 

    (b)

    நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணத் திசைவேகம் 

    (c)

    நேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம் 

    (d)

    நேர்கோட்டுத் திசைவேகம்  மற்றும் ஆரவெக்டர் 

  8. சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத்தொலைவு  (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் \(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\) _____.

    (a)

    \(\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)

    (b)

    \({ \left( \frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \right) }^{ 2 }\)

    (c)

    \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }\)

  9. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே  _____.

    (a)

    அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

    (b)

    அதிகரிக்கும் மற்றும் குறையும் 

    (c)

    குறையும்  மற்றும் அதிகரிக்கும்

    (d)

    குறையும்  மற்றும் குறையும்  

  10. மேசை மீது வைக்கப்பட்ட சூடான தேநீர் சிறிது நேரத்தில் சூழலுடன் வெப்பச் சமநிலையை அடைகிறது. அறையில் உள்ள காற்று மூலக்கூறுகளை வெப்ப அமைப்பு என்று கருதினால் கீழ்கண்டவற்றுள் எக்கூற்று பொருத்தமானது.

    (a)

    \(\Delta \)U > O , Q = O ,

    (b)

    \(\Delta \)U > O , W < O ,

    (c)

    \(\Delta \)U > O , Q  > O ,

    (d)

    \(\Delta \)U = O , Q  > O ,

  11. நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

    (a)

    rms வேகம்

    (b)

    சராசரி வேகம்

    (c)

    சராசரித் திசைவேகம்

    (d)

    மிகவும் சாத்தியமான வேகம்

  12. ஒரு வாயுவின் வெப்பநிலை 27oC யிலிருந்து 927oCக்கு உயரும்போது மூலக்கூறு வேகத்தின் rms மதிப்பு  

    (a)

    பாதியாகும் 

    (b)

    இரட்டிப்பாகும் 

    (c)

    மாறாதது 

    (d)

    முந்தைய மதிப்பிலிருந்து\(\sqrt { \frac { 927 }{ 27 } } \) தடவைகள் 

  13. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  14. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

  15. ஒரு அலைச் சமன்பாடு y = 0.01 Sin (100πt - kx) அலை திசைவேகம் 100 m/s. அதன் எண்ணிக்கை.

    (a)

    1 m-1

    (b)

    2m-1

    (c)

    πm-1

    (d)

    2πm-1

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. நிறையை அளவிடப் பயன்படும் உருளை பிளாட்டினம் -இரிடிய உலோகக்கலவையால் உருவாக்கப்படுவதேன்?

  18. பொருளொன்றை கிடைத்தளத்துடன் எக்கோணத்தில் எறிந்தால், அப்பொருளின் கிடைத்தள நெடுக்கம் பெரும உயரத்தைப் போன்று நான்கு மடங்காக இருக்கும்?

  19. உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா?

  20. ஒரு பொருள் ஆய ஆச்சு அமைப்பின் x அச்சு வழியே இயங்குமாறு ஒரு நிலையான விசை \(\overrightarrow { F } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } )N,\)க்கு உட்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனில் x அச்சில் 4 மீ தொலைவிற்கு பொருளை நகர்த்தி செய்யப்பட்ட வேலை யாது?

  21. வேகவைத்த முட்டையையும், வேகாத முட்டையையும் அதனை சுற்றிப்பார்த்து வேவ்வேறு கண்டறிவாய்?

  22. கோளின் கோண உந்தம் மாறுமா? உன் விடையை நிரூபி.

  23. சுழற்சி நிகழ்வு என்றால் என்ன?

  24. ஒரு தனி ஊசலின் நீளம் 1.20m, ஆனால் அதை நோக்குபவர் 1மீ நீளம் எனக் காண்கிறார். அதன் அலைவு காலம் 2.00s ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனில் புவிஈர்ப்பு முடுக்கம் யாது?

  25. y = x + a என்ற தொடர்பிற்கு படம் வரைக அதை விளக்குக.

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

  28. ஒரு தடகள வீரர் 50 m ஆரமுடைய வட்டவடிவ ஓடுபாதையில் மூன்று முறை சுற்றி வருகிறார், அவர் கடந்த தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சியைக் காண்க.

  29. 400 g நிறை கொண்ட மாங்காய் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி மாங்காயைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்க.

  30. m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
    (a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
    (b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
    (c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)

  31. திருப்பு விசைக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

  32. ஒன்றையொன்று தொடாத இரு நிறைகளிடையே நடைபெறும் இடைவினையை "ஈர்ப்பு புலம்" என்ற கருத்தின் மூலம் விளக்குக.

  33. பின்வரும் வரைபடம் 1m ஒரு கம்பியின் நீட்சி \(\triangle \)I.இதன் ஒரு முனை கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பளு w மறுமுனையில் இணைக்கப்பட்டுள்ளது,கம்பியின் குறுக்குப் பரப்பு 10-6m2 கம்பியின் யங்குணத்தைக் கணக்கிடுக                

  34. கீழே கொடுக்கப்பட்டுள்ள PV வரைபடம் மூலம் உயர்ந்த வெப்பநிலை எது எனக்கண்டறி. வரைபடம் வெவ்வேறு வெப்பநிலைகளில் நடைபெறும் இரண்டு மாறா நிகழ்வுகளைக் குறிக்கின்றன.

  35. மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மேன் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும்.

  36. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    5 x 5 = 25
    1. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

    2. ஒழுங்கற்ற வளைகோட்டின் கீழே அமையும் பரப்பை எவ்வாறு காண்பாய்?

    1. சென்னையிலுள்ள 60 kg நிறையுடைய மனிதரின் மீது செயல்படும் மையவிலக்கு விசையைக் காண்க
      (கொடுக்கப்பட்டவை: சென்னையில் குறுக்குக் கோடு θ = 13°)

    2. செங்குத்து வட்ட இயக்கத்தினை படத்துடன் சமன்பாடுகளுடன் விவரி.

    1. 500 g நிறையும் 10 cm ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்று தன்னிச்சையாக படத்தில் காட்டப்பட்டது போல நிலையான அச்சைப் பொருத்துச் சுழல்கிறது. எடையற்ற மற்றும் மீட்சித் தன்மையற்ற கம்பியானது வட்டத்தின் விளம்பில் சுற்றுகள் சுற்றப்பட்டு மற்றொரு முணையானது 100 g நிறையுடன் இணைக்கப்பட்ணைக்கப்பட்டுள்ளது. 100 g நிறையின் முடுக்கத்தை காண்க. [தகவல் : கம்பியானது வட்டத்தட்டின் விளிம்பில் நழுவவில்லை. மாறாக வட்டத்தட்டுடன் சுழல்கிறது g = 10 m s-2]

    2. உயரத்தை பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?

    1. இரு கோள வடிவ சோப்பு குமிழிகள் இணைகின்றன. V என்பது அவற்றிலுள்ள காற்றின் பருமனில் மாற்றம் A என்பது மொத்த  பரப்பளவின் மாற்றம் எனில் 3PV  + 4AT  = 0 காட்டு . T என்பது பரப்பு இழுவிசை p என்பது வளி அழுத்தம்.     

    2. அழுத்தம் மாறா நிகழ்வினை விவரித்து, அந்நிகழ்வில் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாட்டைப் பெறுக.

    1. தனிஊசலை விரிவாக விவாதிக்க.

    2. கடலில் ஒரு கப்பல் சோனார் (SONAR) மூலம் ஒளி அலைகளை கடலின் கீழ்நோக்கி அனுப்புகிறது. கடலின் அடி கட்டத்தில் உள்ள ஒரு பாறையில் இந்த ஒலி அலைகள் எதிரொலிக்கப்பட்டு 3.5s ல் சோனாரை அடைகிறது.கப்பல் 100km தொலைவைக் கடக்கும்போது மீண்டும் சைகைகளை கீழ்நோக்கி அனுப்புகிறது. அந்த சைகைகளை 2s ல் எதிரொலித்து சோனாரை அடைகிறது.இரண்டு இடங்களிலும் ஆழங்களை கண்டு பிடித்து அவற்றின் வேறுபாட்டை காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் முழு பாடத் தேர்வு ( 11th Physics +1 Full Portion Test )

Write your Comment