12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

   பகுதி-I

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 

  15 x 1 = 15
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. மின்தேக்கியின் நடுவே காற்றினை மாற்றி K மின்காப்பு மாறிலி கொண்ட மின்காப்பு பொருளை நுழைக்கும் பொழுது அவற்றின் தேங்கும் திறன்

  (a)

  K மடங்கு குறையும்

  (b)

  K மடங்கு அதிகரிக்கும்

  (c)

  K2 மடங்கு அதிகரிக்கும்

  (d)

  மாறாது

 3. பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

  (a)

  1.5 Ω

  (b)

  2.5 Ω

  (c)

  3.5 Ω

  (d)

  4.5 Ω

 4. மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

  (a)

  வெக்டர் 

  (b)

  ஸ்கேலார் 

  (c)

  இயற்பியல் 

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை 

 5. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  (a)

  \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

  (b)

  \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

  (c)

  \(\sqrt { 2 } \beta Il\)

  (d)

  \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

 6. ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு

  (a)

  \(\frac {π}{4}\)

  (b)

  \(\frac {π}{2}\)

  (c)

  \(\frac {π}{6}\)

  (d)

  zero

 7. 311 V பெரும் மதிப்புடைய மின்னழுத்தத்தின் rms மதிப்பு

  (a)

  110V 

  (b)

  440V 

  (c)

  220V 

  (d)

  70.7V 

 8. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?

  (a)

  குறுக்கலை

  (b)

  இயந்திர அலைகள்

  (c)

  நெட்டலை

  (d)

  முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன

 9. மேக்ஸ்வெல் கூற்றுப்படி, மாறும் மின்புலம் உருவாக்குவது

  (a)

  மின்னியக்கு விசை

  (b)

  மின் இடப்பெயர்ச்சி புலம்

  (c)

  காந்தப்புலம்

  (d)

  அழுத்த சரிவு

 10. காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே Va மற்றும் λa. இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λw எனில், தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?

  (a)

  \(\frac { { V }_{ w } }{ { V }_{ a } } \)

  (b)

  \(\frac { V_{ a } }{ { V }_{ w } } \)

  (c)

  \(\frac { { \lambda }_{ w } }{ { \lambda }_{ a } } \)

  (d)

  \(\frac { { V }_{ a }{ \lambda }_{ a } }{ { V }_{ w }{ \lambda }_{ w } } \)

 11. ஒரு உலோகத்தின்  மீது  λ அலைநீளம் கொண்ட ∴போட்டான்கள்  படுகின்றன. உலோகத்திலிருந்து  உமிழப்படும் அதிக ஆற்றல்  கொண்ட  எலக்ட்ரான்கள், B  எண்  மதிப்பு  கொண்ட  செங்குத்து  காந்தப்புலத்தினால்  R  ஆரமுடைய  வட்ட  வில்  பாதையில்  வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின்  ஒளிமின்  வெளியேற்று ஆற்றல் 

  (a)

  \(\frac {hc}{λ} - m_{e} + \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)

  (b)

  \(\frac {hc}{λ} + 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)

  (c)

  \(\frac {hc}{λ} - m_{e}c^{2} - \frac {e^{2}B^{2}R^{2}}{2m_{e}}\)

  (d)

  \(\frac {hc}{λ} - 2m_{e} [\frac{eBR}{2m_{e}}]^{2}\)

 12. ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் V = V0In\((\frac{r}{r_0})\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால், முதன்மை குவாண்டம் எண் nஐப் பொறுத்து n ஆவது சுற்றுபாதை rn இந்த மாறுபாட்டின் தன்மை

  (a)

  \({ r }_{ n }∝\frac { r }{ n } \)

  (b)

  rn ∝ n

  (c)

  \({ r }_{ n }∝\frac { r }{ n^2 } \)

  (d)

  rn ∝ n2

 13. ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட 

  (a)

  நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும

  (b)

  பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும

  (c)

  கட்டமாற்றம் சுழி அல்லது 2π யாக இருக்க வேண்டும்

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 14. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் 

  (a)

  வடிவ நினைவு உலோகக்கலவைகள் 

  (b)

  தங்கம் தாமிர  உலோகக்கலவைகள் 

  (c)

  தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள் 

  (d)

  இரு பரிமாண உலோகக்கலவைகள் 

  1. பகுதி-II

   எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 15. மின்துகளின் மின்னழுத்த வரையறுத்தலில் எதன் காரணமாக மின்துகள் சீரான திசைவேகத்துடன் நகர்த்தப் படுகிறது?

 16. ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15 Ω என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3:2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.

 17. மின் சுற்றில் உருவாக்கப்படும் வெப்பத்தை பாதிக்கும் காரணிகள் எவை?

 18. டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் 2 சுற்றுகள், 5சுற்றுகள் மற்றும் 50 சுற்றுகள் கொண்ட வெவ்வேறு தடிமனுடைய கம்பிகள் எதற்காக பயன்படுகின்றன?

 19. 10-6s நேர அளவு கொண்ட ஒளித்துடிப்பு ஒன்று தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ள சிறிய பொருளினால் முழுவதும் உட்கவரப்படுகிறது. ஒளித்துடிப்பின் திறன் 60 x 10-3 W எனில், அச்சிறிய பொருளின் இறுதி உந்தத்தைக் கணக்கிடுக.

 20. அணுக்கருவின் பிணைப்பாற்றல் என்றால் என்ன? அதன் கோவையை எழுதுக

 21. ஒரே வகையான குறைகடத்தி பொருளால் செய்யப்பட்டபோதிலும் ஒரு டிரான்ஸிஸ்டரின் உமிழ்ப்பான் மற்றும் ஏற்பான் ஆகியவற்றை பரிமாற்றிப் பயன்படுத்த இயலாது ஏன்?

 22. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

 23.             பகுதி-III

   எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  6 x 3 = 18
 24. ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

 25. ஜூலின் வெப்ப விளைவு என்றால் என்ன?

 26. கால்வனனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறனை 50% அதிகரிக்கும்போது, அதன் மின்தடை, தொடக்க மின்தடையைப்போன்று இருமடங்காகிறது. இந்த நிபந்தனையில் கால்வனனோமீட்டரின் மின்னழுத்த உணர்திறன் மாறுமா? அவ்வாறு மாற்றமடைந்தால் எவ்வளவு மாற்றமடையும்?

 27. 20mH தன்மின்தூண்டல் எண்.0.2A மின்னோட்டம் பாயும் சுருளில் சேகரிக்கப்பட்ட ஆற்றலைக் கணக்கிடுக.

 28. மின்காந்த அலைகள் என்றால் என்ன?

 29. \(_{ 47 }^{ 108 }{ Ag }\) அணுக்கருவின் நிறை இழப்பு மற்றும் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல் ஆகியவற்றைக் கணக்கிடவும் . (\(_{ 47 }^{ 108 }{ Ag }\) அணு நிறை = Ag =107.905949 u)

 30. ஒரு நல்லியல்பு டையோடு மற்றும் ஒரு 5Ω மின்தடையும் தொடரினைப்பில் ஒரு 15V மின்னழுத்த மூலத்துடன் பின் வரும் படத்தில் உள்வாறு இணைக்கப்படுள்ளன எனில் டையோடின் வழியாக பாயும் மின்னோட்டத்தை கணக்கிடுக?

 31. நானோ பயன்படுத்துவதால் சாத்தியமான தீய விளைவுகள் யாவை? ஏன்?

  1. பகுதி-IV

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
 32. பின்வரும் வரைபடங்கள் A,B,C,D,E மற்றும் F ஆகிய ஆறு கடத்திகளின் மின்னோட்டம் – மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்தம் - மின்னோட்டம் ஆகியவற்றின் தொடர்பினை தருகின்றன எனில், அதிக மின்தடை உள்ள கடத்தி மற்றும் குறைந்த மின்தடை உள்ள கடத்திகள் எவை?

 33. அ) மின்திறன் வரையறு.
  ஆ) 80 ᘯ மின்தடையுள்ள மின்சலவைப்பெட்டியானது 200V மின்னழுத்ததில் 2 மணி நேரம் செயல்பட்டால், பயன்படுத்தப்பட்ட மின்னாற்றலைக் கணக்கிடுக.

 34. கால்வானோ மீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும் வோல்ட் மீட்டராக எவ்வாறு மாற்றுவாய் என்பதையும் விவரிக்கவும்.

 35. மின்தூண்டியில் சேமிக்கப்படும் ஆற்றலுக்கான கோவையை வருவி.

 36. மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.

 37. நேர்குறி z - அச்சில் சமதள மின்காந்த அலை ஒன்றின் திசைவேகம் c எனில்
  (i) பாரடே விதியின் அடிப்படையில் E = cB என்பதையும்
  (ii) மாற்றியமைக்க பெற்ற ஆம்பியர் சுற்று விதியை \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \) எனவும் தருவி

 38. நிறப்பிரிகை என்றால் என்ன? ஊடகம் ஒன்றின் நிறப்பிரிகை திறனுக்கான கோவையைப் பெறுக.

 39. எலக்ட்ரானின் அலை  இயல்பினை  விவரிக்கும்  டேவிசன் -ஜெர்மர்  சோதனையை  சுருக்கமாக  விவரி.

 40. இயற்கையில் உள்ள அடிப்படைத் துகள்களைப் பற்றி விளக்குக.

 41. ஒரு PN சந்தி டையோடின் இயக்கமில்லாத பகுதி மற்றும் மின்னழுத்த அரண் ஆகியவை உருவாவதை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil  Medium Physics Reduced syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment