12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 

    15 x 1 = 15
  1. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு ______.

    (a)

    4 mC

    (b)

    8 mC

    (c)

    5 mC

    (d)

    7 mC

  2. ஒவ்வொன்றும் A பரப்பளவும், தட்டுகளுக்கு இடையேயான இடைவெளி d நான்கு தட்டுகள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின்தேக்கு திறனானது ________

    (a)

    \(\cfrac { { A\varepsilon }_{ 0 } }{ d } \)

    (b)

    \(\cfrac { { A\varepsilon }_{ 0 } }{ 2d } \)

    (c)

    \(\cfrac { { 2A\varepsilon }_{ 0 } }{ d } \)

    (d)

    \(\cfrac { 3A{ \varepsilon }_{ 0 } }{ d } \)

  3. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

    (b)

    மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

    (c)

    ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

    (d)

    பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

  4. மனித உடலில் உலர்ந்த தோலின் மின்தடை ________

    (a)

    \(\\ 1000\Omega \)

    (b)

    \(\\ 100\Omega \)

    (c)

    \(500\Omega \)

    (d)

    \(50\Omega \)

  5. செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

    (a)

    \(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)

    (b)

    \(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)

    (c)

    \(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)

    (d)

    \(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)

  6. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .

    (a)

    0.76 W

    (b)

    0.89 W

    (c)

    0.46 W

    (d)

    0.67 W

  7. ஒரு 50 mH கம்பிச்சுருளில் 4A மின்னோட்டம் பாய்கிறது எனில் கம்பிச்சுருளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ________

    (a)

    0.4 J 

    (b)

    4.0 J 

    (c)

    0.8 J 

    (d)

    0.04 J 

  8. \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்________.

    (a)

    [L T−1]

    (b)

    [L2 T-2]

    (c)

    [L−1 T]

    (d)

    [L-2 T2]

  9. இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்பது_______

    (a)

    மின்புலம் தொடர்ந்து மாறும் வீதத்தைப் பொறுத்து தொடரும்

    (b)

    காந்தப்புலம் தொடர்ந்து மாறும் வீதத்தைப் பொறுத்து தொடரும்

    (c)

    இருபுல மாற்றத்தில் தொடரும்

    (d)

    கம்பி மற்றும் மின்தடையாக்கிகளில் தொடரும்

  10. ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் இருக்க வேண்டும்?

    (a)

    ஒன்றைவிடக் குறைவு

    (b)

    கண்ணாடியைவிடக் குறைவாக

    (c)

    கண்ணாடியைவிட அதிகமாக

    (d)

    கண்ணாடிக்குச் சமமாக

  11. λe அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் λp கொண்ட ∴போட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின், அலைநீளங்கள் λe மற்றும் λp இடையிலான தொடர்பு_______.

    (a)

    \(\lambda_p \alpha \lambda_e\)

    (b)

    \(\lambda_{\mathrm{p}} \alpha \frac{1}{\sqrt{\lambda_e}}\)

    (c)

    \(\lambda_p \alpha \frac{1}{\sqrt{\lambda_e}}\)

    (d)

    \(\lambda_p \space \alpha \space \lambda_e^2\)

  12. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 விலிருந்து n = 1 க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்______.

    (a)

    1:2:3

    (b)

    1:4:9

    (c)

    3:2:1

    (d)

    4:9:36

  13. பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது______ 

    (a)

    AND கேட் 

    (b)

    OR கேட் 

    (c)

    NOR கேட்

    (d)

    NOT கேட் 

  14. ZnO பொருளின் துகள் அளவு 30nm. இந்த பரிமாணத்தின் அடிப்படையில் அது இவ்வாறு வகைப்படுகிறது. 

    (a)

    பேரளவு பொருள் 

    (b)

    நானோ பொருள் 

    (c)

    மென்மையான பொருள் 

    (d)

    காந்தப்பொருள் 

  15. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

    (a)

    ஒளி எதிரொளிப்பு

    (b)

    முழு அ்க எதிரொளிப்பு

    (c)

    ஒளி விலகல்

    (d)

    தளவிளைவு

    1. பகுதி-II

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  16. இரு சம மின்னழுத்த பரப்புகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளுமாறு அமையுமா?

  17. ஒரு தாமிரக்கம்பிக்கு அளிக்கப்படும் மின்புலத்தின் எண்மதிப்பு 570 NC-1 எனில் எலக்ட்ரான் பெறும் முடுக்கத்தை கண்டுபிடி.

  18. ஒரு மின்கலத் தொகுப்பின் அகமின்தடை என்பது என்ன?

  19. மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.

  20. ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

  21. கதிரியக்கம் என்றால் என்ன ?

  22. மாசூட்டல் என்பதன் பொருள் என்ன?

  23. துணை  அணுத்துகள்கள் என்பவை யாவை?

  24.             பகுதி-III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6x 3 = 18
  25. ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

  26. \(10\Omega \) மின்தடை கொண்ட கம்பியொன்று சீராக இழுக்கப்பட்டு அதன் தொடக்க நீளத்தைப் போல மூன்று மடங்காக்கப்படுகிறது. இப்பொழுது அக்கம்பியின் மின்தடையைக் கணக்கிடுக.

  27. q மின்னூட்டம் பெற்ற துகளொன்று \(\vec { B } \) காந்தப்புலத்தில் \(\vec { v } \) என்ற திசைவேகத்தில் நேர்க்குறி y – திசையில் செல்கிறது. பின்வரும் நிபந்தனைகளின்படி லாரன்ஸ் விசையைக் கணக்கிடுக.
    (அ) காந்தப்புலம் நேர்க்குறி y – திசையில் உள்ளபோது
    (ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளபோது
    (இ) துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்தும் காந்தப்புலம் zy தளத்தில் உள்ளபோது. மேற்கண்ட ஒவ்வொரு நிபந்தனைகளிலும் காந்தவிசையின் திசையினைக் குறிப்பிட்டு காட்டுக.

  28. மின்மாற்றி என்றால் என்ன?

  29. 200 V மின்னழுத்த வேறுபாட்டிலுள்ள இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளைக் கருதுக. தகடுகளுக்கு இடைப்பட்டத் தொலைவு மற்றும் தகடுகளின் பரப்பு முறையே 1 mm மற்றும் 20 cm2 எனில், மைக்ரோவினாடியில் (μs) பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் காண்க.

  30. கதிரியக்கச் செயல்பாடு 1 Curie என்றிருக்கும் ரேடியத்தின் (\(_{ 88 }^{ 226 }{ Ra }\)) நிறை ஏறக்குறைய 1 g எனக்காட்டுக. (T1/2 = 1600 ஆண்டுகள்)

  31. பின்வரும் படத்தில் உள்ளவாறு நான்கு சிலிக்கான் டையோடுகள் மற்றும் ஒரு 10 Ω மின்தடை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு டையோடும் 1 Ω மின்தடை கொண்டவை 10 Ω மின்தடை வழியாகப் பாயும் மின்னோட்டத்தினைக் கணக்கிடுக.

  32. நானோ பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் யாவை ? ஏன்?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5x 5 = 25
    1. ஓம் விதியின் நுண்மாதிரி அமைப்பிலிருந்து ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை பெறுக. அதன் வரம்புகளை விவாதி.

    2. (அ) சீபெக் விளைவை படத்துடன் விவரி.
      (ஆ) சீபெக் விளைவின் பயன்பாடுகளைக் கூறுக.

    1. ஆம்பியரின் சுற்று விதியின் உதவியுடன் நீண்ட வரிச்சுருளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் கணக்கிடுக.

    2. மின்தூண்டியில் சேமிக்கப்படும் ஆற்றலுக்கான கோவையை வருவி.

    1. மின்காந்த அலைகளின் பண்புகளை எழுதுக.

    2. நேர்குறி z - அச்சில் சமதள மின்காந்த அலை ஒன்றின் திசைவேகம் c எனில்
      (i) பாரடே விதியின் அடிப்படையில் E = cB என்பதையும்
      (ii) மாற்றியமைக்க பெற்ற ஆம்பியர் சுற்று விதியை \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \) எனவும் தருவி

    1. 500 nm அலைநீளமுடைய ஒளிஅலை, 0.2 mm அகலமுடைய பிளவு ஒன்றின் வழியே செல்லும்போது விளிம்பு விளைவு அடைகிறது. பிளவிலிருந்து 60 cm தொலைவில் விளிம்பு விளைவுப்பட்டை கிடைக்கிறது எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
      (i) மையப் பொலிவின் கோணப் பரவல்
      (ii) மையப்பெருமத்திலிருந்து இரண்டாவது சிறுமம் அமைந்துள்ள தொலைவு. 

    2. எலக்ட்ரானின் டிப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப்  பெறுக.

    1. எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைக் கண்டறிய உதவும் மில்லிகன் எண்ணெய்த் துளி ஆய்வினை விவரி.

    2. டீமார்கனின் முதல் தேற்றம் மற்றும் இரண்டாவது தேற்றங்களை கூறி நிரூபிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 -12th Standard Tamil Medium Physics Reduced syllabus Public Exam Model Question  Paper With Answer Key - 2021

Write your Comment