12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I

    25 x 5 = 125
  1. மின்னூட்டம் பெற்ற இரு இணையான முடிவிலா தட்டுகளினால் உருவாகும் மின்புலத்திற்கான கோவையை வருவி.

  2. மின்புலக் கோடுகளின் பண்புகளை விவரி 

  3. மின்னோட்ட அடர்த்தியின் கருத்துரு (Concept] யை பயன்படுத்தி ஓம் விதியை வருவிக்க வேண்டும்?

  4. மின் திறன் மற்றும் மின்னழுத்த ஆற்றல் வரையறு. மின்தடை R-ன் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V செலுத்தப்படுகிறது. செலவழிக்கப்படும் மின்திறனுக்கான தொடர்பை கண்டுபிடிக்க.

  5. கார்பன் மின்தடையாக்கிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  6. மின்கலங்கள் தொடரிணைப்பில் உள்ளபோது பாயும் மின்னோட்டத்திற்குரிய கோவையை விவரி.

  7. மின்கலன்கள் பக்க இணைப்பில், இணைக்கப்படும்போது பாயும் மின்னூட்டத்திற்குரிய கோவையை வருவி.

  8. சீரான காந்தபுலத்தில் உள்ள சட்ட காந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசையை விளக்குக.

  9. சீரான காந்தபுலத்தில் உள்ள சட்ட காந்தமொன்றின் நிலையாற்றலை விவரித்து எழுதுக.

  10. ஃபெர்ரோ காந்தப் பொருளில், காந்தப்புலத்திற்கும், \((\overrightarrow { B } )\) காந்தமாக்குப் புலத்திற்கும் \((\overrightarrow { H } )\)இடையே ஏற்படும் தன்மையை விவரித்துக் காட்டுக.

  11. மின்தடை மட்டும் உள்ள AC சுற்றை விளக்குக 

  12. தொடர் ஒத்திசைவின் பாதிப்புகளை விளக்கி, ஒத்திசைவு விளைவு வரைக.

  13. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் அடையும் பொழுது ஆம்பியர் சுற்று விதியின் இடப்பெயர்ச்சி மின்னூட்டம் விதியில் சேருவதற்கான வழிமுறையை எழுக

  14. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

  15. மாறுபடும் மின்புலம் எவ்வாறு காந்தப்புலத்தை உருவாக்குகின்றது.

  16. தொடர் x கதிர் நிறமாலையில் டூயாகுன் - ஹண்ட் வாய்ப்பாட்டினைத் தருவிக்கவும். இதை பண்டைய மின்காந்தக் கொள்கையால் விளக்க இயலுமா?

  17. ஹைட்ரஜன் நிறமாலை பற்றி குறிப்பு வரைக.

  18. கம்பியில்லா தகவல்தொடர்பில் பண்பேற்றமானது விண்ணலைக் கம்பியின் அளவைக் குறைக்க உதவுகிறது - விளக்குக.

  19. டிரான்சிஸ்டர் அலை இயற்றியின் கட்டப்படம் வரைந்து விளக்குக

  20. திண்மங்களில் ஆற்றல் பட்டை படம் வரைந்து விளக்குக.

  21. ரேடார் என்றால் என்ன? அதன் செயல்பாட்டை விவரி. அவைகளின் பயன்பாடுகள் தருக.

  22. எந்திரனியலின் தீமைகள் யாவை?

  23. முப்பட்டகத்தில் விலக்க கோணம் A.முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகள் எண் \(cot\cfrac { A }{ 2 } \) சிறுதிசைமாற்றக் கோணம் என்ன?

  24. 0.1 mm இடைவெளியில் உள்ள இரு புள்ளிகள் 6000Ao அலைநீளம் உடைய ஒளியின் உதவியுடன் நுண்ணோக்கி ஒன்றினால் பிரித்தறியப்படுகிறது.4800Ao அலை நீளமுடைய ஒளி பயன்படுத்தப்பட்டால் பிரித்தறியும் இடைவெளி என்ன?

  25. சமவீச்சு கொண்ட இரண்டு ஒளி மூலங்கள் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன.பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகளுக்கு இடையேயுள்ள விகிதத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -  12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment