12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

   பகுதி-I

  50 x 2 = 100
 1. நிலை மின்னியல் என்றால் என்ன?

 2. கூலும் விதியின் அடிப்படையில் கூலும் என்பதை வரையறு. (M.05)

 3. காஸ் விதியைக் கூறுக.

 4. சில சமயங்களில் மின் இணைப்பைக் கொடுத்தாலும் கூரை விசிறி இயங்க மறுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அதன் இறக்கைகளை சற்று சுழற்றிய பின் விசிறி இயல்பாக சுழலும். ஏன்?

 5. புள்ளி மின்னூட்டம் வரையறு

 6. மின்னல் தாங்கி எவ்வாறு உயரமான கட்டடங்களை இடி மின்னலிலுருந்து பாதுகாக்கிறது?

 7. ஒவ்வொன்றும் 9 pF மின்தேக்குத்திறன் கொண்ட மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுப்பின் மொத்த மின்தேக்குத்திறன் யாது? தொகுப்பானது 120V மூலத்துடன் இணைக்கப்படும் பொது, ஒவ்வொரு மின்தேக்கியின் இடையேயும் உள்ள மின்னழுத்த வேறுபாடு யாது?

 8. \(\vec { { F }_{ 21 } } =\cfrac { { kq }_{ 1 }{ q }_{ 2 } }{ { r }^{ 2 } } { \hat { r } }_{ 13 }\),இல் k இன் மதிப்பு என்ன?

 9. மின்புலத்திற்கும் \(\left( \vec { E } \right) \) மின்னழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு யாது(V)?

 10. நேர் மின் அயனி மின்னோட்டத்தை உருவாக்குமா? எப்படி?

 11. மின்தடை எண்ணைப் பொருத்து பொருட்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

 12. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ள போது அதன் தொகுபயன் மின்தடையை வரையறு.

 13. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?

 14. வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மினியாக்கு விசையானது எந்த காரணிகளைச் சார்ந்திருக்கும்?

 15. மின் கடத்து எண்ணின் சமன்பாடு மற்றும் அதன் அலகை எழுதுக?

 16. சரிவு அல்லது காந்தச் சரிவு என்றால் என்ன?

 17. மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.

 18. புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?

 19. மெய்சனர் விளைவு என்றால் என்ன?

 20. இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.

 21. ஒரு புரோட்டான் மற்றும் ∝- துகள் சீரான காந்தப் புலத்தில் செங்குத்தாக ஒரே வேகத்தில் செல்கிறது. புரோட்டான் 5 சுழற்சிகளை 25μ  விநாடிகளில் சுற்றுகிறது. ∝- துகளின் அலைவு நேரத்தைக் கணக்கிடு.

 22. 3cm விட்டமும் 2மீ நீளமும் கொண்ட சுருள்வில்லானது 1000 சுற்றுகள் கொண்ட 5 படிவங்கள் உள்ளன.அதன் வழியே 5A மின்னோட்டம் பாயும் அதன் மையத்தில் ஏற்படும் காந்த தூண்டலைக் கணக்கிடுக.

 23. ஏற்று மின்மாற்றி - இறக்கு மின்மாற்றி வேறுபடுத்துக.

 24. சைன் வடிவ மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?

 25. ஒரு லட்சிய மின்தூண்டிக்கான நிபந்தனை யாது?

 26. ஒரு மின்தேக்கி எப்போது முடிவிலா மின்மறுப்பு பெரும்?

 27. RMS மின்னோட்டத்தை வரையறு, அதன் கோவையை எழுதுக.

 28. பாயிண்டிங் வெக்டர் என்றால் என்ன?

 29. UV - கதிரின் பயன்கள் யாவை?

 30. மின்காந்த அலை ஒன்றின் பெரும மின்புலச் செறிவின் மதிப்பு E0 = 120 NC-1 மற்றும் அதிர்வெண் 50.0MHz
  (a) B0, ω, k மற்றும் λ மதிப்பை கணக்கிடு
  (b) \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \) சமன்பாட்டை தருவி

 31. 100 W மின்திறன் கொண்ட மின்விளக்கு அவற்றின் திறனில் 5% கண்ணுறு ஒளியாக மாற்றப்பட்டால் மாறும் மின்காந்த அலையின் பெரும செறிவு
  a) 1 m தொலைவில்
  b) 10 m தொலைவில்

 32. மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?

 33. ரேடியோ அலைகள் என்று உருவாகிறது?

 34. ஒன்றை ஒன்று தொட்டுக்‌ கொண்டுள்ள இரண்டு லென்சுகளின்‌ கூட்டமைப்பால்‌, சுழி மதிப்புள்ள திறனை உருவாக்க முடியுமா? விளக்குக.

 35. மெய்‌ மற்றும்‌ மாய பிம்பங்கங்களை வேறுபடுத்துக

 36. ஒரேநேர .எதிரொளிப்பு அல்லது ஒரேநேர ஒளிவிலகல்‌ என்றால்‌ என்ன?

 37. ஒளிவிலகலின்‌ பண்புகள்‌ .யாவை?

 38. புவியில்‌ வளிமண்டலம்‌ இல்லாதிருந்தால்‌. பகல்‌ பொழுதின்‌ நேரம்‌ தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும்‌. விளக்குக.

 39. உலோகப்பரப்பிலிருந்து வெளியிடப்படும் அனைத்து பாலக்ட்ரான்களும் முரே அளயான இயக்க ஆற்றலைக் கொண்டிருக்குமா? ஏன்?

 40. சீசியத்தின் வெளியேற்று ஆற்றல் 2eV. இதனை விளக்குக.

 41. அலுமினியத்தின் வெளியேற்று ஆற்றல் 4.2 eV. ஒவ்வொன்றும் 2.5 GV ஆற்றலுடைய இரு ஃபோட்டான்கள் உலோகப்பரப்பின் மீது விழுகிறது. எலக்ட்ரான் வெளிவருவது சாத்தியமா?

 42. X-கதிர் என்றால் என்ன?

 43. பரப்பு அரண் என்றால் என்ன?

 44. வெள்ளி பரப்பிற்கான பயன் தொடக்க அலைநீளம் 3250X10-10m.அதன்மிது 536X10-10m அலைநீளமுடைய புறஊதாக் கதிர் ஒன்று விழும்பொழுது வெளிவரும் எலக்ட்ரானின் பெரும திசைவேகத்தைக் கண்டுபிடி.

 45. \(5\mathring { A } \) இடைவெளியுடைய அணு அமைப்பை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பிரித்தரிய வேண்டியுள்ளது.இதற்குச் சமமான அலைநீளமுடைய எலக்ட்ரானை உருவாக்க,எலக்ட்ரான் முடுக்கப்பட வேண்டியது.

 46. 20,000V முடுக்கம் மின்னழுத்தம் உள்ள X-கதிர் குழாயில் இருந்து வெளிவரும் X-கதிர்களின் வெட்டு அலைநீளம் மற்றும் வெட்டு அதிர்வெண் ஆகியவற்றைக் கணக்கிடுக.

 47. தொடர் வினை என்றால் என்ன?

 48. கட்டுப்பாடற்ற தொடர்வினை என்றால் என்ன?

 49. ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட புரட்டுகளுக்கான காரணம் என்ன?

 50. ஏற்பியின் செயலை விவரி,

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment