12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பகுதி-I

  50 x 2 = 100
 1. மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

 2. நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு

 3. 100 N C-1 மதிப்புடைய சீரான மின்புலம் நிலவும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 5 cm மற்றும் 10 cm பக்கங்கள் கொண்ட செவ்வகத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்ட கோணம் θ = 60˚. ஒருவேளை θ சுழி எனில், மின்பாயம் என்ன?

 4. காஸ் விதியைக் கூறுக.

 5. மின்தேக்குத் திறனின் அலகினை வரையறு (அ) பாரட் வரையறு. 

 6. மின்னல் தாங்கி எவ்வாறு உயரமான கட்டடங்களை இடி மின்னலிலுருந்து பாதுகாக்கிறது?

 7. ஒரு மின் இருமனையின் மின்னூட்டங்கள் 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C இரண்டும் 1cm. தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மின் இருமனையால்
  அ) அச்சுக்கோட்டில் அதன் மையத்திலிருந்து 1 m தொலைவில் உள்ள புள்ளி
  ஆ) நடுவரைக் கோட்டில் மையத்திலிருந்து 1 m தொலைவில் உள்ள புள்ளி ஆகியவற்றில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக 

 8. மின் இருமுனையின் திருப்பு விசயைக் கூறுக.

 9. ஒரு பொருள்,எப்போது மின்னூட்டம் அடைகிறது?

 10. ஒரு தாமிரக்கம்பிக்கு அளிக்கப்படும் மின்புலத்தின் எண்மதிப்பு 570 NC-1 எனில் எலக்ட்ரான் பெறும் முடுக்கத்தை கண்டுபிடி.

 11. 200C வெப்பநிலை யில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 Ω மற் றும் α = 0.004/0C எனில் 1000C வெ ப்பநிலை யில் அதன் மின்தடையைக் காண்க?

 12. மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலர் ஏன்?

 13. இழுப்பு திசைவேகம் மற்றும் இயக்க எண் ஆகியவற்றை வேறுபடுத்து.

 14. வீடுகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் [Trippers] எவ்வாறு பயன்படுகிறது?

 15. மிககடத்து திறனில் (Super conductivity) உள்ள மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை என்பது என்ன?

 16. ஒரு பொருளின் வழியே பாயும் மின்னோட்டத்தின் மதிப்புகள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.a)\(t=0\) ,b)\(t=2\) ,c)t=5s ஆகிய நேரங்களில் பொருளின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டத்தை காண்க.

 17. மின்னோட்டம் வரையறு.

 18. காந்தப்பாயத்தை வரையறு.

 19. ஆம்பியர் சுற்றுவிதியைக் கூறு.

 20. சைக்ளோட்ரானின் வரம்புகளைத் தருக.

 21. புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?

 22. டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் மற்றும் இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் வேறுபடுத்துக.

 23. காந்த இருமுனையில் நடுவரைக் கோட்டில் உள்ள ஒரு புள்ளயில் காந்தபுலத்திற்கான கோவையை எழுதுக.

 24. 3cm விட்டமும் 2மீ நீளமும் கொண்ட சுருள்வில்லானது 1000 சுற்றுகள் கொண்ட 5 படிவங்கள் உள்ளன.அதன் வழியே 5A மின்னோட்டம் பாயும் அதன் மையத்தில் ஏற்படும் காந்த தூண்டலைக் கணக்கிடுக.

 25. முதலாவது கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம் 2 A இல் இருந்து 10 A ஆக 0.4 விநாடியில் மாறுகிறது. இரண்டாவது கம்பிச்சுருளில் 60 mV மின்னியக்கு விசை தூண்டப்பட்டால், இரு கம்பிச்சுருள்களுக்கு இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் காண்க. மேலும் முதலாவது கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம் 4 A இல் இருந்து 16 A ஆக 0.03 விநாடியில் மாறும்போது, இரண்டாவது கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் கணக்கிடுக. தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பை மட்டும் கருதுக.

 26. தன் மின்தூண்டல் என்றால் என்ன?

 27. ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பை வரையறு.

 28. இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

 29. மின்காந்த அலை ஒன்று x - அச்சில் பரவும் போது அவற்றின் காந்தப்புலம் y - அச்சில் அலையுறும் போது அவற்றின் அதிர்வெண் 3 x 1010 Hz எனில் அவற்றின் வீச்சு 10-7 T எனில்
  (i) அலையின் நீளம்,
  (ii) அலையுறும் மின்புலச் சமன்பாட்டை எழுதுக

 30. அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
  (i) மின்காந்த அலையின் அலைநீளம்
  (ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி

 31. ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?

 32. மின்காந்த அலை நிறமாலை என்றால் என்ன?

 33. வைரம் ஜொலிப்பதற்கான காரணத்தை விளக்குக. 

 34. அகஉள்நோக்கி (endoscope) செயல்படும் முறையை விவரி.

 35. தொலைவிலுள்ள ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் , சிறிய வட்டத்தட்டு ஒன்றினை வைத்து அதன் நிழலைப் பார்க்கும்போது, நிழலின் மையம் கருமையாகத் தெரியுமா? அல்லது வெண்மையாகத் தெரியுமா?

 36. முழு ௮௧ எதிரொளிப்பு ஏற்பட நிபந்தனைகள்‌ யாவை?

 37. ஒரு சிறிய தொலைநோக்கியில் பொருளருகு லென்சின் குவியத்தூரம் 180cm மற்றும் கண்ணருகு வில்லையின் குவியத்தூரம் 3 cm.தொலைநோக்கியின் உருப்பெருக்கம் என்ன?பொருளருகு லென்சிற்கும் கண் விலைக்கும் இடையேயானத் தொலைவு என்ன?1 இடைவெளியில் அமைந்த இரு விண்மீன்கள் எவ்வளவு இடைவெளியில் தெரியும்?

 38. உலோகப்பரப்பு ஒன்றின் மீது 9 x 1014 Hz அதிர்வெண் கொண்ட ஒளி படும்போது வெளிப்படும் ஒளி எலக்ட்ரான்களின் பெரும வேகம் 8 x 105 ms-1 எனில், உலோகப் பரப்பின் பயன்தொடக்க அதிர்வெண்ணைக் கணக்கிடுக.

 39. டூயான்  - ஹண்ட் வாய்பாடு தருக,

 40. 2ev இயக்க ஆற்றல் கொண்ட ஒரு எலக்ட்ரானின் உந்தத்தைக் கணக்கிடுக.

 41. ரூதர்பபோர்டு ஆல்பா சிதறல் ஆய்வின் முடிவுகளைக் கூறுக.

 42. கிளர்வு ஆற்றல் என்றால் என்ன ?

 43. ஐசோபார் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.

 44. கதிரியக்கம் என்றால் என்ன ?

 45. ஒரு முழு அலைதிருத்தியின் வெளியீட்டு அலைவடிவத்தை வரைக.

 46. ஒளி உமிழ்வு டையோடின் பயன்பாடுகளை வரிசைப்படுத்து.

 47. பண்பேற்றம் என்றால் என்ன?

 48. ப்ரானோஃபர் விளிம்பு விளைவில் ஏற்படும் முதல் சிறுமத்திற்கான சிறப்பு நேர்வினை விளக்குக..

 49. தளவிளைவு அடைந்த மற்றும் தளவிளைவு அடையாத ஒளிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

 50. புரூஸ்டர் விதியைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

Write your Comment