திருப்புதல் தேர்வு, மே 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி

Time : 01:30:00 Hrs
Total Marks : 50

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  5 x 1 = 5
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.

  (a)

  மின்னழுத்த வேறுபாடு 

  (b)

  மின்னோட்டம் 

  (c)

  மின் விசை 

  (d)

  இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள் 

 3. 5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  (a)

  1.0 amp – m2

  (b)

  1.2 amp – m2

  (c)

  0.5 amp – m2

  (d)

  0.8 amp – m2

 4. ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E0 sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?

  (a)

  0.3 × 10-14 rad s-1

  (b)

  3 x 10-14 rad s-1

  (c)

  0.3 x 1014 rad s-1

  (d)

  3 x 1014 rad s-1

 5. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

  (a)

  ஒளி எதிரொளிப்பு

  (b)

  முழு அ்க எதிரொளிப்பு

  (c)

  ஒளி விலகல்

  (d)

  தளவிளைவு

 6. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

  5 x 2 = 10
 7. மின்புலம், நிலை மின்னழுத்தம் – இடையிலான தொ டர்பைத் தருக

 8. மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலர் ஏன்?

 9. பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?

 10. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

 11. 200C வெப்பநிலை யில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 Ω மற் றும் α = 0.004/0C எனில் 1000C வெ ப்பநிலை யில் அதன் மின்தடையைக் காண்க?

 12. மின்காந்த அலைகள் ஏன் இயந்திர அலைகள் அல்ல?

 13. ஒளியியல் பாதை என்றால் என்ன?

 14. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

  5 x 3 = 15
 15. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

 16. கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் A மற்றும் B புள்ளிகளுக்கிடையே மின்னழுத்த ஆற்றலுக்கான சமன்பாட்டினைத் தருவி.

 17. பயோட்  – சாவர்ட் விதியைக் கூறு

 18. LC அலைவுகள் என்றால் என்ன?

 19. பின்வருவனவற்றின் பயன்பாடுகளைக் கூறுக.
  (i) அகச்சிவப்பு 
  (ii) மைக்ரோ அலைகள் 
  (iii) புறஊதாக் கதிர்கள் 

 20. மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

 21. தோற்ற ஆழத்திற்கான கோவையை வருவி.

 22. எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி

  4 x 5 = 20
 23. வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.

 24. வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் சமன்செய் நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.

 25. மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச் சுருளின் அச்சில் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

 26. மின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்குக.

 27. வெளியிடு நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

 28. ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஃபிஸீயு (Fizeau) முறையை விவரி.

*****************************************

Reviews & Comments about திருப்புதல் தேர்வு, மே 2021

Write your Comment