12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

   பகுதி-I

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 

  15 x 1 = 15
 1. பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் \(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \)என்ன?

  (a)

  \(\cfrac { 1 }{ 5 } \)

  (b)

  \(\cfrac { 25 }{ 11 } \)

  (c)

  5

  (d)

  \(\cfrac { 11 }{ 25 } \)

 2. டிபாய் (Debye) என்பது அவற்றின் அலகு

  (a)

  மின்பாயம்

  (b)

  மின்இருமுனை திருப்புத்திறன்

  (c)

  மின்னழுத்தம்

  (d)

  மின்புலச்செறிவு

 3. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

  (a)

  100 k Ω

  (b)

  10 k Ω

  (c)

  1k Ω

  (d)

  1000 k Ω

 4. 20oC ல் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 ஓம் \(\alpha =0.004/^{ o }C\) எனில் 100oC ல் அதன் மின்தடை 

  (a)

  \(\\ 1.98\Omega \)

  (b)

  \(3.96\Omega \)

  (c)

  \(7.92\Omega \)

  (d)

  \(39.6\Omega \)

 5. N சுற்றுககளும் R ஆரமும் கொண்ட ஒத்த கம்பிச்சுருள்கள் படத்தில் கட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருளின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக \(\frac {R }{2}\)தொலைவில்  உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்

  (a)

  \(\frac { 8{ N\mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

  (b)

  \(\frac { 8N{ \mu }_{ 0 }I }{ { 5 }^{ 3/2 }R } \)

  (c)

  \(\frac { { 8N\mu }_{ 0 }I }{ 5R } \)

  (d)

  \(\frac { 4N{ \mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

 6. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய  அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B - இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது.

  (a)

  சுழி

  (b)

  \(\frac { Bv\pi { r }^{ 2 } }{ 2 } \) மற்றும் P உயர் மின்னழுத்ததில் இருக்கும்.

  (c)

  πrBv மற்றும் R உயர் மின்னழுத்தததில்இருக்கும்

  (d)

  2rBv மற்றும் R உயர் மின்னழுத்தததில் இருக்கும்

 7. A  பரப்பும். l நீளமும், N  சுற்றுகளும் கொண்ட அருள் - ஊடகத்தை நிரப்பினால் தன்மின் தூண்டல் எண் 

  (a)

  \(L=\frac{\mu A^{2} N}{l}\)

  (b)

  \(L=\frac{\mu l^{2} A}{N}\)

  (c)

  \(L=\frac{\mu N^{2} A}{l}\)

  (d)

  \(L=\frac{-N^{2} A I}{l}\)

 8. ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E0 sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?

  (a)

  0.3 × 10-14 rad s-1

  (b)

  3 x 10-14 rad s-1

  (c)

  0.3 x 1014 rad s-1

  (d)

  3 x 1014 rad s-1

 9. ஹெர்ட்ஸ் ஆய்வில் உருவான மின்காந்த அலையின் அதிர்வெண் 5 x 107 Hz எனில் அவற்றின் அலை நீளம்

  (a)

  150 m

  (b)

  15 m

  (c)

  6 m

  (d)

  60 m

 10. காற்றிலிருந்து ஒளிவிலகல் எண் 2 கொண்ட கண்ணாடிப் பட்டகத்தின் மீது ஒளி விழுகிறது எனில், சாத்தியமான பெரும விலகுகோணத்தின் மதிப்பு என்ன?

  (a)

  300

  (b)

  450

  (c)

  600

  (d)

  900

 11. ஒளிஉணர்  பரப்பு  ஒன்று அடுத்தடுத்த  λ  மற்றும்  \(\frac {λ}{2}\)  அலைநீளம்  கொண்ட  ஒற்றை  நிற  ஒளியினால்  ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது  நேர்வில்  உமிழப்படும் எலக்ட்ரானின்  பெரும  இயக்க  ஆற்றல்  ஆனது  முதல்  நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும  இயக்க  ஆற்றலை  விட  3 மடங்காக  இருப்பின், உலகோப்  பரப்பின்  வெளியேற்று  ஆற்றலானது

  (a)

  \(\frac{h}{λc}\)

  (b)

  \(\frac{2hc}{λ}\)

  (c)

  \(\frac{hc}{3λ}\)

  (d)

  \(\frac{hc}{2λ}\)

 12. 27Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய

  (a)

  2.4

  (b)

  1.2

  (c)

  4.8

  (d)

  3.6

 13. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோட்டினைக் குறிக்கும்.

  (a)

  (b)

  (c)

  (d)

 14. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது 

  (a)

  தாமரை இலை 

  (b)

  மார்ஃபோ பட்டாம்பூச்சி  

  (c)

  கிளிமீன் 

  (d)

  மயிலிறகு 

 15. ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA =3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

  (a)

  3

  (b)

  \(\sqrt{3}\)

  (c)

  \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  (d)

  \(\frac { 1 }{ 3 } \)

  1. பகுதி-II

   எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 16. மின்காப்பு புகுக்கப்படும் மின்தேக்கியின் மின்னோட்டம், மின்னழுத்த வேறுபாடு, மின்புலம் மற்றும் மின்தேக்குத்திறன், ஆற்றல் ஆகியவை மின்கலனில் இணைப்பு இருக்கும் போதும், துண்டிக்கப்பட்ட பின்பும் எவ்வாறு இருக்கும்?

 17. 10°C மற்றும் 40°C வெப்பநிலைகளில் ஒரு பொருளின் மின்தடைகள் முறையே 45 Ω மற்றும் 85 Ω ஆகும் எனில் அதன் வெப்பநிலை மின்தடை எண்ணைக் கண்டுபிடி.

 18. மிககடத்து திறனில் (Super conductivity) உள்ள மாறுநிலை வெப்பநிலை அல்லது பெயர்வு வெப்பநிலை என்பது என்ன?

 19. கூலூம் விசை மற்றும் லாரன்ஸ் விசை வேறுபடுத்துக்க.

 20. பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 μH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 μF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன?

 21. மீச்சிறு அணுகு தொலைவு என்றால் என்ன?

 22. மாசூட்டல் என்பதன் பொருள் என்ன?

 23. எந்திரனியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக?

 24.             பகுதி-III

   எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  6 x 3 = 18
 25. மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக

 26. ஒரு தாமிரக்கம்பியில் 1 mm3 கன அளவில் 1028 கட்டுறா எலக்ட்ரான்கள் உள்ளன.அதன் மின்னோட்ட அடர்த்தி 1A/mm2 எனில்,இழுப்புதிசைவேகத்தைக் கணக்கிடுக.

 27. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

 28. 1000 சுற்றுகள் உள்ள சுருளின் வழியே 2A மின்னோட்டம் பாயும் போது 0.02 Weber காந்தப் பாயம் உருவானால்  சுருளின் தன்மின்தண்டலைக் கணக்கிடுக.

 29. மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

 30. நிறை எண் A கொண்ட அணுக்கருவின் அடர்த்தியைக் கணக்கிடுக

 31. கொடுக்கப்பட்ட மின்சுற்றில் வெளியீடு Yக்கான பூலியன் சமன்பாடு மற்றும் அதன் உண்மை அட்டவணையும் தருக.

 32. நானோ பயன்படுத்துவதால் சாத்தியமான தீய விளைவுகள் யாவை? ஏன்?

 33. பகுதி-IV

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. பின்வரும் வரைபடங்கள் A,B,C,D,E மற்றும் F ஆகிய ஆறு கடத்திகளின் மின்னோட்டம் – மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்தம் - மின்னோட்டம் ஆகியவற்றின் தொடர்பினை தருகின்றன எனில், அதிக மின்தடை உள்ள கடத்தி மற்றும் குறைந்த மின்தடை உள்ள கடத்திகள் எவை?

  2. மின்கலங்கள் தொடரிணைப்பில் உள்ளபோது பாயும் மின்னோட்டத்திற்குரிய கோவையை விவரி.

  1. குறுக்குவெட்டுப்பரப்பு 0.1 cm2 கொண்ட வட்டக்கம்பிச்சுருள் ஒன்று 0.2 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருள் வழியே பாயும் மின்னோட்டம் 3 A மேலும் கம்பிச்சுருளின் பரப்பு காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ளபோது பின்வருவனவற்றைக் காண்க.
   (அ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்ததிருப்புவிசை
   (ஆ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்த விசை
   (இ) காநாந்தப்புலத்தினால் கம்பிச்சுருளில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின் மீதும் செயல்படும் சராசரி விசை (கம்பிச்சுருள் செய்யப்பட்டுள்ள பொருளின் கட்டுறா எலக்ட்ரான் அடர்த்தி 1028 m-3 எனக் கொள்க)

  2. பொது அச்சு கொண்ட இரு நீண்ட வரிச்சுருள்களுக்கிடையே பரிமாற்று மின்தூண்டல் எண்ணிற்கான கோவையை பெறுக.

  1. உட்கவர் நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  2. நேர்குறி z - அச்சில் சமதள மின்காந்த அலை ஒன்றின் திசைவேகம் c எனில்
   (i) பாரடே விதியின் அடிப்படையில் E = cB என்பதையும்
   (ii) மாற்றியமைக்க பெற்ற ஆம்பியர் சுற்று விதியை \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \) எனவும் தருவி

  1. இருபுறக் குவிலென்ஸ் ஒன்று 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளது. அதன் இரண்டுபரப்புகளும் சமவளைவு ஆரங்களைப் பெற்றுள்ளன.அவற்றின் மதிப்பு 30cm ஆகும். இருபுறக்குவிலென்ஸின் ஏதேனும் ஒரு வெளிப்புறப்பரப்பு வெள்ளி பூசப்பட்டுள்ள நிலையில் பின்வருவனவற்றைக் காண்க,
   (அ) வெள்ளி பூசப்பட்ட லென்ஸின்குவியத்தூரம் மற்றும் திறனைக் கணக்கிடு
   (ஆ) பொருளின் மீதே பிம்பம் ஏற்பட, பொருளை வெள்ளி பூசப்பட்ட லென்ஸின் முன்புறம் எத்தொலைவில் வைக்க வேண்டும்?

  2. ஒளியின் குவாண்டம்  கருத்தினை  விவரி.

  1. படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.

  2. அதிர்வெண் பண்பேற்றத்தின் நன்மை மற்றும் தீமைகளை வரிசைப்படுத்து.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil  Medium Physics Reduced syllabus Annual Exam Model Question Paper With Answer Key - 2021

Write your Comment