12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. மின்புலம் – வரையறு.

  2. சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?

  3. நீர் ஒரு சிறந்த கரைப்பானாக செயற்படுகிறது. காரணம் கூறுக.

  4. காஸ் விதியைக் கூறுக.

  5. மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருள்களை வேறுபடுத்துக.

  6. மின்னல் தாங்கி எவ்வாறு உயரமான கட்டடங்களை இடி மின்னலிலுருந்து பாதுகாக்கிறது?

  7. மின்புலத்திற்கும் \(\left( \vec { E } \right) \) மின்னழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு யாது(V)?

  8. மின்னூட்ட மாறாத் தன்மை விதியைக் கூறுக.

  9. 5cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  10. 24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

  11. 20°C மற்றும் 40°C வெப்பநிலைகளில் ஒரு பொருளின் மின்தடைகள் முறையே 45 Ω மற்றும் 85 Ω ஆகும் எனில் அதன் வெப்பநிலை மின்தடை எண்ணைக் கண்டுபிடி.

  12. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?

  13. வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையானது எந்த காரணிகளைச் சார்ந்திருக்கும்?

  14. மின் கடத்து எண்ணின் சமன்பாடு மற்றும் அதன் அலகை எழுதுக?

  15. ஒரு பொருளின் வழியே பாயும் மின்னோட்டத்தின் மதிப்புகள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.
    a) \(t=0\) ,
    b) \(t=2\) ,
    c) t = 5s ஆகிய நேரங்களில் பொருளின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டத்தை காண்க.

  16. \(10\Omega \) மின்தடையாக்கி வழியாக 5A மின்னோட்டம் 5 நிமிட நேரம் பாய்வதால் தோன்றும் வெப்ப ஆற்றலின் மதிப்பைக் காண்க.

  17. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

  18. ஆம்பியர் சுற்று விதியைக் கூறு?

  19. இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.

  20. மின்கடத்தும் ஒரு வட்ட வடிவ கம்பி சுருள் ஆரம் R என்க. அதன் அச்சில் காந்தப்புலத்தின் மதிப்பு \(\frac {1}{8}\) எனில் வட்ட வடிவ கம்பிச்சுருளின் தொலைவை காண்க.

  21. ஒரு புரோட்டான் மற்றும் ∝- துகள் சீரான காந்தப் புலத்தில் செங்குத்தாக ஒரே வேகத்தில் செல்கிறது. புரோட்டான் 5 சுழற்சிகளை 25μ  விநாடிகளில் சுற்றுகிறது. ∝- துகளின் அலைவு நேரத்தைக் கணக்கிடு.

  22. காந்தப்பாயம் வரையறு.

  23. சுழல் மின்னோட்டத்தின் பயன்பாடுகளை வரிசைப்படுத்துக.

  24. ஒரு லட்சிய மின்தூண்டிக்கான நிபந்தனை யாது?

  25. ஒரு மின்தேக்கி எப்போது முடிவிலா மின்மறுப்பு பெரும்?

  26. AC சுற்றின் திறன் வரையறு.

  27. முழுத்திறன் கொண்ட மின்னோட்டம் என்றால் என்ன?

  28. இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  29. UV கதிரின் பயன்கள் யாவை?

  30. மின்காந்த அலை ஒன்று x - அச்சில் பரவும் போது அவற்றின் காந்தப்புலம் y - அச்சில் அலையுறும் போது அவற்றின் அதிர்வெண் 3 x 1010 Hz எனில் அவற்றின் வீச்சு 10-7 T எனில்
    (i) அலையின் நீளம்,
    (ii) அலையுறும் மின்புலச் சமன்பாட்டை எழுதுக

  31. அலையுறும் காந்தப்புல சமதள மின்காந்த அலையினை \({ B }_{ y }=(8\times { 10 }^{ -6 })sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]T\)
    (i) மின்காந்த அலையின் அலைநீளம்
    (ii) அலையுறும் மின்புல சமன்பாட்டை தருவி

  32. மின்காந்த அலை ஒன்றின் பெரும மின்புலச் செறிவின் மதிப்பு E0 = 120 NC-1 மற்றும் அதிர்வெண் 50.0MHz
    (a) B0, ω, k மற்றும் λ மதிப்பை கணக்கிடு
    (b) \(\vec { E } \) மற்றும் \(\vec { B } \) சமன்பாட்டை தருவி

  33. 100 W மின்திறன் கொண்ட மின்விளக்கு அவற்றின் திறனில் 5% கண்ணுறு ஒளியாக மாற்றப்பட்டால் மாறும் மின்காந்த அலையின் பெரும செறிவு
    a) 1 m தொலைவில்
    b) 10 m தொலைவில்

  34. மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?

  35. கிட்டப்பார்வை குறைபாடுடைய நபர் ஒருவரால் 1.8m தொலைவிற்குள் உள்ள பொருள்களை மட்டுமே பார்க்கமுடியும். இவரின் குறைபாட்டை நீக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் திறனைக் காண்க.

  36. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் பயன்படும் இரட்டைப் பிளவுகளில் ஒளிவிளம்பு விளைவு அடையுமா?

  37. தலைவிளைவுக்கோணம் என்றால் என்ன?

  38. புவியில்‌ வளிமண்டலம்‌ இல்லாதிருந்தால்‌ பகல்‌ பொழுதின்‌ நேரம்‌ தற்போது இருப்பதை விட குறைவாக இருக்கும்‌. விளக்குக.

  39. லித்தியம் பரப்பின் மீது 1800 \(\mathring { A }\) அலைநீளம் கொண்ட புறஊதாக் கதிர் படுகிறது. லித்தியத்தின் பயன்தொடக்க அலைநீளம் 4965 \(\mathring { A }\) எனில், உமிழப்படும் எலக்ட்ரான்களின் பெரும ஆற்றலைக் கண்டுபிடி. 

  40. கொடுக்கப்பட்ட கணத்தில், சூரியனிடமிருந்து 4 cal cm-2 min-1 என்ற அளவில் பூமியானது ஆற்றலைப் பெறுகிறது. ஒரு நிமிடத்திற்கு புவியின் 1 cm2 பரப்பில் பெறப்படும் ஃபோட்டான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக. (தரவுகள்: சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் = 5500 \(\mathring { A }\); 1 கலோரி = 4.2 J) 

  41. அயனியாக்க ஆற்றல் மற்றும் அயனியாக்க மின்னழுத்தம் – வரையறுக்கவும் .

  42. கதிரியக்கச் செயல்பாடு அல்லது சிதைவு வீதம் என்றால் என்ன? அதன் அலகு என்ன?

  43. பின்வரும்  தகவல்களை பயன்படுத்தி  \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவின்  பிணைப்பு ஆற்றலைக் கணக்கிடுக: ஹீலியம் அணுவின் அணு நிறை M4(He) = 4.00260 u மற்றும் ஹைட்ரஜன் அணுவின் நிறை mH = 1.00785 u 

  44. விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி வரையறு.

  45. லாஜிக் கேட்டுகள் என்றால் என்ன?

  46. இயற்கையில் உள்ள 'நானோ' பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  47. துணை  அணுத்துகள்கள் என்பவை யாவை?

  48. அலைமுகப்பு என்றால் என்ன?

  49. கட்ட வேறுபாட்டிற்கும், பாதை வேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பை வருவி?

  50. ஒளிச்செறிவு (அல்லது) வீச்சுப் பகுப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

Write your Comment