12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

  பகுதி-I

  25 x 3 = 75
 1. ஆரம் 1m கொண்ட வட்டத்திலுள்ள நான்கு புள்ளிகளில் நான்கு சமமான மின்னூட்டம் கொண்டமின்துகள்கள் q1, q2 ,q3 மற்றும் q4 = q = +1 μC வைக்கப்பட்டுள்ளன. மின்துகள் q1 ன் மீது மற்ற அனைத்து மின்துகள்களாலும் செலுத்தப்படும் மொத்த விசையைக் கணக்கிடுக.

 2. பல்வேறு மின்துகள் அமைப்புகளுக்கான மின்புலக் கோடுகள் பின்வரும் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.


  (i) படம் (அ) வில் உள்ள q1 மற்றும் q2 ஆகிய இரு மின்துகள்களின் குறியீடுகளை அடை யாளம் கண்டு,\(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \) ன் விகிதத்தைக் கா ண்க.
  (ii) படம் (ஆ) வில் உள்ள இரு நே ர் மின்துகள்களின் மின்னூட்ட விகிதத்தைக் கணக்கிடுக. மேலும் A, B, C ஆகிய புள்ளிகளில் மின்புலத்தின் வலிமையைக் கணக்கிடுக
  (iii) படம் (இ) ல் மூன்று மின்துகள்களின் மின்புலக் கோ டுகள் கொடுக்கப்பட்டுள்ளன . q2 = - 20 nC எனில், q1 மற்றும் q3 ன் மின்னூட்ட மதிப்புகளைக் கணக்கிடுக

 3. 3× 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 × 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.

 4. படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன. (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு. (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும்போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

 5. சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை?

 6. நிலை மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி என்றால் என்ன?

 7. மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.

 8. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 5 cm பக்கம் கொண்ட இரு சதுரக் தட்டுகளை 1mm இடைவெளியில் கொண்டுள்ளது.
  (அ) மின்தேக்கியின் மின்தேக்குதுத்திறனைக் கணக்கிடு.
  (ஆ) 10 V மின்கலம் ஒன்றை அதனுடன் இணைத்தால், ஒரு தட்டில் சேமிக்கப்படும் மின்துகள்களின, மின்னூட்ட மதிப்பைக் கணக்கிடுக.(\({ \varepsilon }_{ 0 }\) =8.85X10-42N-1m-2C2)

 9. படத்தில் கொடுத்துள்ளவா்ளவா்ளவாறு +q மின்னூட்ட மதிப்பும் m நிறையும் கொண்ட மின்கடத்து பொருளாலான சிறிய பந்து ஒன்று கிடைமட்டத்திற்கு θ கோணத்தில் vo என்ற தொடக்க திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. g மதிப்புடைய ஈர்ப்புப் புலத்தின் திசையிலேயே, சீரான மதிப்புடைய E என்ற மின்புலம் அங்கு செயல்படுகிறது எனில் மின்னூட்டம் பெற்ற அப்பந்தின் கிடைத்தள நெடுக்கம், பெரும உயரம் மற்றும் பறக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிடுக. காற்றினால் ஏற்படும் விளைவைப் புறக்கணிக்க; மேலும் பந்தை ஒரு புள்ளி நிறையாகக் கருதுக.

   


 10. (i) படம் (அ) வில் மூடிய பரப்புகள் A1 மற்றும் A2 ஐக் கடக்கும் மின்பாயத்தினைக் கணக்கிடுக.
  (ii) படம் (ஆ) வில் கன சதுரத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக

 11. 24 V மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள 4 Ω மற்றும் 6 Ω மின்தடையாக்கிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடுகளை காண்க. மேலும் இந்த மின்சுற்றில் உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

 12. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

 13. பின்வரும் மின்சுற்றில் 1 Ω மின்தடையாக்கி வழியே பாயும் மின்னோட்டத்தை கணக்கிடுக.

 14. தாம்ஸன் விளைவு என்றால் என்ன?

 15. 10-6 m2 குறுக்குவெட்டு பரப்பு கொண்ட ஒரு தாமிரக்கம்பி வழியே 2 A மின்னோட்டம் செல்கிறது. ஒரு கன மீட்டரில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 x 1028 எனில், மின்னோட்ட அடர்த்தி மற்றும் சராசரி இழுப்புத்திசை வேகத்தை கணக்கிடுக.

 16. பின்வரும் படத்தில் உள்ள தண்டு இரண்டு வெவ்வேறு பொருட்களில் ஆனது. இரண்டு பொருட்களும் 3 mm பக்கமுடைய சதுர குறுக்கு வெட்டு பரப்பைக் கொண்டுள்ளன. 25 cm நீளமுள்ள முதல் பொருளின் மின்தடை எண் 4 x 10-3 Ωm மற்றும் 70 cm நீளமுள்ள இரண்டாவது பொருளின் மின்தடை எண் 5 x 10-3 Ωm. இத்தண்டின் இருமுனைகளுக்கிடையே உள்ள மின்தடை மதிப்பு என்ன ?

 17. புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.

 18. q மின்னூட்டம் பெற்ற துகளொன்று \(\vec { B } \) காந்தப்புலத்தில் \(\vec { v } \) என்ற திசைவேகத்தில் நேர்க்குறி y – திசையில் செல்கிறது. பின்வரும் நிபந்தனைகளின்படி லாரன்ஸ் விசையைக் கணக்கிடுக.
  (அ) காந்தப்புலம் நேர்க்குறி y – திசையில் உள்ளபோது
  (ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளபோது
  (இ) துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்தும் காந்தப்புலம் zy தளத்தில் உள்ளபோது. மேற்கண்ட ஒவ்வொரு நிபந்தனைகளிலும் காந்தவிசையின் திசையினைக் குறிப்பிட்டு காட்டுக.

 19. 0.500 T அளவுள்ள சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக செல்லும் எலக்ட்ரான் ஒன்று 2.8 mm ஆரமுடைய வட்டப்பாதையைட்டப்பாதையை மேற்கொள்கிறது எனில் அதன் வேகத்தைக் காண்க.

 20. X – அச்சுதிசையில் செயல்படும், 0.500 T வலிமை கொண்ட காந்தப்புலத்தினுள் புரோட்டான் ஒன்று செல்கிறது. தொடக்க நேரம் t = 0 s, இல் புரோட்டானின் திசைவேகம் \(\vec { v } =(1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\)ms-1 எனில் பின்வருவனவற்றைக் காண்க.
  (அ) தொடக்க நேரத்தில் புரோட்டானின் முடுக்கம்
  ஆ) புரோட்டானின் பாதை வட்டப்பதையா?
  சுருள் வட்டப்பாதை எனில் அதன் ஆரத்தைக் காண்க. மேலும் ஒரு முழு சுழற்சிக்கு சுருள் வட்டப்பாதையின் அச்சின் வழியே புரோட்டான்  கடந்த தொலைவைக் காண்க.

 21. ஒரு இயங்குசுருள் கால்வனோமீட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கை ஐந்து. ஒவ்வொரு சுற்றின் நிகர பரப்பும் 2 × 10-2 m2. இக்கம்பிச்சுருள் 4 × 10-2 Wb m-2 வலிமை கொண்டகாந்தப்புலம் ஒன்றினுள் 4 × 10-9 N m deg-1 முறுக்கு மாறிலி K கொண்ட இழையினால் தொங்கவிடப்பட்டுள்ளது.
  (அ) கால்வனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறன் டிகிரி / மைக்ரோ – ஆம்பியரில் காண்க.
  (ஆ) 50 பிரிவுகள் கொண்ட அளவுகோலின் முழு விலக்கத்திற்கான மின்னழுத்தம் 25 mV என்ற நிபந்தனையில் அதன் மின்னழுத்த உணர்திறனைக் காண்க.
  (இ) கால்வனோமீட்டரின் மின்தடையைக் காண்க

 22. 5 × 10−2 m2 பரப்புள்ள ஒரு வட்ட வடிவச் சுற்று, 0.2 T சீரான காந்தப்புலத்தில் சுழல்கிறது. படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றானது காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ள அதன் விட்டத்தைப் பொருத்து சுழன்றால், சுற்றின் தளமானது
  (i) புலத்திற்கு செங்குத்தாக
  (ii) புலத்திற்கு 60° சாய்வாக மற்றும்
  (iii) புலத்திற்கு இணையாக உள்ளபோது சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தைக் கணக்கிடுக.

 23. 600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது
  (i) புலத்திற்கு குத்தாக
  (ii) புலத்திற்கு இணையாக மற்றும்
  (iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக

 24. v =10sin(3π×104 t) வோல்ட் என்ற மாறுதிசை மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்பைக்  கொடுக்கப்பட்டுள்ள கணங்களில் கண்டுபிடி
  i) 0 s
  ii) 50 μs
  iii) 75 μs.

 25. ஒரு மின்தூண்டிச் சுற்றில் உள்ள மின்னோட்டம் 0.3 sin (200t – 40°) A ஆகும். மின்தூண்டல் எண் 40mH எனில், அதன் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கா ன சமன்பாட்டை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

Write your Comment