12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

  பகுதி-I

  25 x 5 = 125
 1. மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக. 

 2. புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க

 3. தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பி தொதகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.

 4. வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.

 5. E=2X103NC-1 வலிமையுடைய மின்புலம் ஒன்றில் மூடப்பட்ட பரப்புடைய முக்கோணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

  (அ) அதில் நெடுக்கைத் (vertical) திசையில் அமைந்த செவ்வகப் பரப்பு
  (ஆ) சாய்வான பரப்பு மற்றும்
  (இ) மொத்த பரப்பு ஆகியவற்றைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக.

 6. h = 1 mm இடைவெளி கொண்ட 5 V மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் தட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு எலக்ட்ரானும், ஒரு புரோட்டானும் விழுகின்றன

  அ) எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் பறக்கும் நேரத்தைக் கணக்கிடுக.
  (ஆ) நியூட்ரான் ஒன்று விழுந்தால் அதன் பறக்கும் நேரம் எவ்வளவு?
  (இ) இம்மூன்றில் எது முதலில் அடித்தட்டை அடையும்? (mp = 1.6 × 10-27 kg, me = 9.1 × 10-31 kg
  மற்றும் g = 10 m s-2)

 7. வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் சமன்செய் நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.

 8. மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?

 9. பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டங்களை கணக்கிடுக.

 10. சீரான காந்தப்புலத்திலுள்ள காந்த ஊசி ஒன்றின் மீது செயல்படும் திருப்பு விசைக்கான கோவையைப் பெறுக

 11. சைக்ளோட்ரான் இயங்கும் முறையை விரிவாக விளக்கவும்.

 12. கால்வானோ மீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும் வோல்ட் மீட்டராக எவ்வாறு மாற்றுவாய் என்பதையும் விவரிக்கவும்.

 13. குறுக்குவெட்டுப்பரப்பு 0.1 cm2 கொண்ட வட்டக்கம்பிச்சுருள் ஒன்று 0.2 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருள் வழியே பாயும் மின்னோட்டம் 3 A மேலும் கம்பிச்சுருளின் பரப்பு காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ளபோது பின்வருவனவற்றைக் காண்க.
  (அ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்ததிருப்புவிசை
  (ஆ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்த விசை
  (இ) காநாந்தப்புலத்தினால் கம்பிச்சுருளில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின் மீதும் செயல்படும் சராசரி விசை (கம்பிச்சுருள் செய்யப்பட்டுள்ள பொருளின் கட்டுறா எலக்ட்ரான் அடர்த்தி 1028 m-3 எனக் கொள்க)

 14. XY மற்றும் PQ என்ற இரண்டு நீண்ட கிடைத்தள கம்பிகளின் வழியே I1 மற்றும் I2 என்ற நிலையான மின்னோட்டங்கள் பாய்கின்றன. PQ கம்பி கிடைத்தளத்தில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. XY கம்பி செங்குத்துத்தளத்தில் இயங்கும்படி உள்ளது. படத்தில் காட்டியுள்ளவாறு PQ கம்பிக்கு மேலே d உயரத்தில் XY கம்பி சமநிலையில் இருப்பதாகக் கருதி, XY கம்பியை சிறிது இழுத்துவிட்டால் அது தனித்த சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் எனக்காட்டுக (SHM) மேலும் அலைவு நேரத்தையும் கணக்கிடுக.

 15. ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன் இயற்பியல் முக்கியத்துவம் யாது?

 16. மின்தூண்டல் எண் L கொண்ட ஒரு மின்தூண்டி i என்ற மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. அதில் மின்னோட்டத்தை நிறுவ சேமிக்கப்பட்ட ஆற்றல் யாது?

 17. AC மின்னியற்றின் பொதுவான அமைப்பு விபரங்களை விவரி.

 18. தொடர் LC சுற்றில், L மற்றும் C இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடுகள் 180° கட்ட வேறுபாட்டில் உள்ளன. இது சரியா? விளக்குக.

 19. ஒரு தொடர் RLC சுற்றில், திறன் காரணி எப்போது பெருமமாகும் ?

 20. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் 560 nm மற்றும் 420 nm அலைநீளங்களையுடைய இரண்டு ஒளி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. மையப் பொலிவுப்பட்டையிலிருந்து இரண்டு அலைநீளங்களின் பொலிவுப்பட்டைகளும் ஒன்றினையும் சிறுமத்ததொலைவைக் காண்க. கொடுக்கப்பட்டவை , D = 1 m மற்றும் d = 3 mm.

 21. ஒன்றுக்கொன்று செங்குத்தாக (பரவு அச்சுகள் 900 கோணத்தில் உள்ள) இரண்டு போலராய்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பினைக் கொண்டு பின்வருவனவற்றைக் காண்க.
  (i) முதல் போலராய்டின் மீது (I) ஒளிச்செறிவு கொண்ட ஒளி விழுந்தால், இரண்டாவது போலராய்டிலிருந்து வெளியேறும் ஒளியின் செறிவு என்ன?
  (ii) இரண்டு போலராய்டுகளுக்கு 450 சாய்ந்த நிலையில், மூன்றாவது போலராய்டுகளுக்கு 450 சாய்ந்த நிலையில் மூன்றாவது போலராய்டு ஒன்றை அவற்றின் நடுவே வைத்தால் இரண்டாவது போலராய்டிலிருந்து வெளியேறும் ஒளியின் செறிவைக் காண்க.

 22. ஆல்பா சிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 23. பீட்டா சிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 24. ஒரு டிரான்சிஸ்டர் சாவியாகச் செயல்படுவதை விளக்குக.

 25. பூலியன் விதிகளைக் கூறுக. அவை எவ்வாறு பூலியன் சமன்பாடுகளை எளிமையாக்குகின்றன என்பதனை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil  Medium Physics Reduced Syllabus Five Mark Important Questions With Answer Key - 2021(Public Exam )

Write your Comment