HSC First Year 3rd Revision Exam 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.

    (a)

    \(\sqrt{hG\over c^{3\over2}}\)

    (b)

    \(\sqrt{hG\over C^{5\over2}}\)

    (c)

    \(\sqrt{hc\over G}\)

    (d)

    \(\sqrt{Gc\over h^{3\over2}}\)

  2. கோள் ஒன்றில், 50 m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?

    (a)

    g = 20 m s–2

    (b)

    g = 25 m s–2

    (c)

    g = 15 m s–2

    (d)

    g = 30 m s–2

  3. கிடைத்தளத்துடன் 600 மற்றும் 300 கோணங்களில் துப்பாக்கி ஒன்று, இரு குண்டுகளை சமதிசைவேகங்களில் வெளியேற்றுகிறது. இரு துப்பாக்கிக் குண்டுகளின் பெரும உயரங்களின் தகவு _______ 

    (a)

    2:1

    (b)

    3:1

    (c)

    4:1

    (d)

    1:1

  4. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வழுவழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

    (a)

    பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

    (b)

    பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

    (c)

    இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

    (d)

    இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

  5. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியாக இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும்  இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின்  நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட விதம் யாது?               

    (a)

    \(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)

    (b)

    mv3

    (c)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

    (d)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

  6. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  7. M  நிறை கொண்ட பொருள் ஒன்று X-அச்சுக்கு இணையாக, சீரான திசைவேகத்தில் இயங்கினால், தொடக்க நிலையைச் சார்ந்து பொருளின் கோண உந்தம் 

    (a)

    அதிகரித்துக் கொண்டே செல்லும் 

    (b)

    குறைந்து கொண்டே செல்லும் 

    (c)

    மாறாது 

    (d)

    சுழி 

  8. சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத்தொலைவு  (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் \(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\) _____.

    (a)

    \(\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)

    (b)

    \({ \left( \frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \right) }^{ 2 }\)

    (c)

    \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }\)

  9. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

    (a)

    நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm 

    (b)

    நீளம் = 200 cm, விட்டம் 1 mm 

    (c)

    நீளம் = 200 cm, விட்டம் 2 mm 

    (d)

    நீளம் = 200 cm, விட்டம் 3 mm 

  10. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைமாறிகளைக் கொண்ட தொகுப்பு?

    (a)

    Q, T, W

    (b)

    P, T, U

    (c)

    Q, W

    (d)

    P, T, Q

  11. 8g ஹீலியம் மற்றும் 16g ஆக்சிஜன் உள்ள வாயுக்கலவையின் \(\gamma ={C_p\over C_v}\)மதிப்பு என்ன?

    (a)

    23/15

    (b)

    15/23

    (c)

    27/11

    (d)

    17/27

  12. ஒரு வாயுவின் மூலக்கூறுகள் சீரான வேகத்தில் இயங்குகின்றன. மூலக்கூறுகளின் அக வெப்பநிலை 

    (a)

    உயரும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    சிலவற்றில் குறைந்து மற்றவற்றில் அதிகரிக்கும் 

  13. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  14. இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 s இலும் 2வது எதிரொலியை  t2 s இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி _______.

    (a)

    \({v(t_1-t_2)\over 2}\)

    (b)

    \({v(t_1t_2)\over 2(t_1+t_2)}\)

    (c)

    v(t1+t2)

    (d)

    \({v(t_1+t_2)\over 2}\)

  15. ஒரு ஒலியைப் பெறுபவரால் 20dB அளவிற்கு ஒலி மட்டுப்படுத்தப்படுகிறது எனில் செறிவில் ஏற்படும் தாழ்வின் காரணி 

    (a)

    100

    (b)

    1000

    (c)

    10000

    (d)

    10

  16. 6 x 2 = 12
  17. ஒரு படித்திர நொடி என்பது யாது?

  18. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow{A}\) வெக்டரிலிருந்து \(4\overrightarrow{A}\) மற்றும் \(-4\overrightarrow{A}\) ஜக் காண்க.

  19. சூரியனிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள புவி, சூரியனைச் சுற்றி வருவதால் ஏற்படும் மையநோக்கு முடுக்கத்தைக் கணக்கிடுக. (இங்கு புவி சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்று கருதுக).

  20. செங்குத்து வட்ட இயக்கத்தில் வட்டத்தை நிறைவு செய்ய தேவையான சிறும வேகம் என்ன?

  21. சூழல் இயக்கம் என்றாள் என்ன?

  22. ஒவ்வொரு மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?

  23. குளிர்சாதனப்பெட்டி ஒன்றின் COP யானது 3 ஆகும். 200J வெப்பத்தை குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனில் எவ்வளவு வேலை செய்யப்பட வேண்டும்? 

  24. 1.20m நீளமுள்ள ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை காண்.

  25. வாயு ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகளை எழுதுக.

  26. 6 x 3 = 18
  27. (P5/6 \({ \rho }^{ 1/2 }\)E1/3) இன் பரிமாணம் காலத்தின் பரிமாணத்திற்குச் சமம் என நிரூபி. இங்கு P என்பது அழுத்தம், \(\rho \) என்பது அடர்த்தி, E என்பது ஆற்றல் ஆகும்.

  28. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.

  29. உராய்வின் பல்வேறு வகைகளை விளக்குக. உராய்வினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றைத் தருக.

  30. m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
    (a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
    (b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
    (c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)

  31. திருப்பு விசைக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது?

  32. புவியின் மையத்திலிருந்து 6.6 x 1010 m தொலைவில் உள்ள 67 kg  நிறையுள்ள ஒரு பொருளின் நிலை ஆற்றல் என்னவாக இருக்கும்? இத்தொலைவில் ஈர்ப்புத் தன்னிலை ஆற்றலைக் காண்.

  33. ரெனால்டு எண் Rc ன் முக்கியத்துவம் யாது? அதன் மூலம் ஒற்றுமை விதி என்பதை விளக்கு.       

  34. நிலைமாற்றம் குறிப்பு வரைக. எடுத்துக்காட்டு தருக.

  35. மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மேன் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும்.

  36. 5 x 5 = 25
  37. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

  38. இரு துகள்கள் x அச்சில் இயங்குகின்றன. துகளின் நிலை x = 6.0t+4.0t +2.0, இரண்டாவது துகள் முடுக்கம் a =-6.0t.t =0 கால அளவில் திசைவேகம் 30m/s துகள்களின் திசைவேகங்கள் பொருத்தமாகும் போது அதன் திசை வேகத்தைக் காண்.

  39. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

  40. மீட்சியளிப்பு குணகம் 'e' என்பதை விவரி. 

  41. செங்குத்து அச்சுத் தேற்றத்தைக் கூறி நிரூபிக்க.

  42. நிலவும் ஆப்பிளும் ஒரே ஈர்ப்பியல் விசையாலேயே முடுக்கமடைகிறது. இவை இரண்டும் அடையும் முடுக்கங்களை ஒப்பிடுக.

  43. வரிச்சீர் ஓட்டத்தினை எடுத்துக்கட்டுடன் விவரி.

  44. கார்னோ வெப்ப இயந்திரத்தின் பயனுறுதிறனுக்கான கோவையைப் பெறுக.

  45. கோண சீரிசை அலையியற்றி என்றால் என்ன? அதன் அலைவுக் காலத்தை கணக்கிடுக.

  46. மேற்பொருந்துதல் தத்துவத்தை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Physics 3rd Revision Test Question Paper 2019 )

Write your Comment