New Manual Exam

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:40:00 Hrs
Total Marks : 100
    19 x 3 = 57
  1. ஒரு கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு (100 ± 5) V மற்றும் அதன் வழியே பாயும் மின்னோட்டம் (10 ± 0.2) A எனில். அக்கம்பியின் மின்தடையைக் காண்க.

  2. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

  3. இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?

  4. நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை – வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

  5. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக்க.

  6. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  7. வேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்?

  8. \(\left[ P+\frac { a }{ { V }^{ 2 } } \right] \left[ V-b \right] =RT\) என்ற சமன்பாட்டில் a மற்றும் b இன் பரிமாண வாய்ப்பாடுகளைக் காண்க. இங்கு P என்பது வாயுவின் அழுத்தத்தையும், V என்பது வாயுவின் பருமனையும் குறிக்கிறது.

  9. (P5/6 \({ \rho }^{ 1/2 }\)E1/3) இன் பரிமாணம் காலத்தின் பரிமாணத்திற்குச் சமம் என நிரூபி. இங்கு P என்பது அழுத்தம், \(\rho \) என்பது அடர்த்தி, E என்பது ஆற்றல் ஆகும்.

  10. நிறையின் பரிமாணத்தை ஆற்றல் [E], நீளம் [L] மற்றும் காலம் [T] ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுக 

  11. Q என்ற இயற்பியல் அளவு x, y, z ஆகிய அளவுகளைப் பொறுத்தது எனில் \(Q=\frac { { x }^{ 2 }{ y }^{ 3 } }{ { z }^{ 1 } } \) என்ற சமன்பாட்டில் x, y மற்றும் z இன் விழுக்காட்டுப் பிழையைக் கணக்கிடுக. 

  12. ஒரு பொருளின் நிறை மற்றும் பருமன் முறையே (4\(\pm \)0.03) kg மற்றும் (5\(\pm \)0.01) m எனக் கண்டறியப் பட்டுள்ளது எனில், அடர்த்தியின் பெரும சதவிதப் பிழையைக் கண்டறிக. 

  13. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

  14. பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை msஇல் மாற்றுக.

  15. பரிமாண முறையில் கீழ்காணும் சமன்பாடு சரியா எனக்கணக்கிடுக. முடிவைப் பற்றி உனது கருத்தைத் தருக.
    s = ut + 1/4 at2 இங்கு s என்பது துகளின் இடப்பெயர்ச்சி, u என்பது ஆரம்பத் திசைவேகம், t என்பது காலம் மற்றும் a என்பது முடுக்கம். 

  16. முக்கிய எண்ணுருக்கள் அடிப்படையில்  பின்வருவனவற்றைத் தீர்க்க
    அ) \(\sqrt { 4.5-3.31 } \)
    ஆ) (5.9 \(\times\) 105) - (2.3 \(\times\) 104)
    இ) 7.18 + 4.3
    ஈ) 6.5 + .0136

  17. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

  18. ஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.

  19. ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தின் ஆரம்ப மற்றும் இறுதி வெப்பநிலைகள் முறையே 75.4 \(\pm \) 0.5°C மற்றும் 56.8 \(\pm \) 0.2°C எனில் திரவத்தின் வெப்பநிலைத் தாழ்வைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about New Manual Exam

Write your Comment