XI STD Important Question ( Volume- 1 )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 85

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    20 x 2 = 40
  1. புவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன?
    (புவியின் ஆரம் 6.4 × 106m )

  2. ஒரு வெப்பநிலைமானி கொண்டு அளவிடப்பட்ட இரு பொருட்களின் வெப்பநிலை t1 = (20 ± 0.5)°C மற்றும் t2 = (50 ± 0.5)°C எனில் அவற்றின் வெப்பநிலை வேறுபாட்டையும், பிழையையும் கணக்கிடுக

  3. அடிப்படை அளவுகள் ஏன்றால் என்ன? எ.கா தருக 

  4. கடிகாரம் என்பது யாது? அதன் வகைகள் கூறு:

  5. \(\overrightarrow{A}=2\hat{i}+3\hat{j},\) எனில் \(3\overrightarrow{A}\) ஐக் காண்க.

  6. பின்வரும் அட்டவணை வெவ்வேறு கோள்களில் எறியப்பட்ட எறிபொருள் அடைந்த கிடைத்தள நெடுக்கத்தைக் காட்டுகிறது. அனைத்து பொருட்களும் ஒரே கிடைத்தள கோணத்துடனும் சம ஆரம்பத் திசைவேகத்துடனும் எறியப்பட்டுள்ளன. இவ்விவரங்களிலிருந்து மிக அதிக மற்றும் மிகக் குறைந்த ஈர்ப்பு முடுக்கமுடைய கோள்களைக் கண்டுபிடி. மேலும் கோள்களை அவற்றின் ஈர்ப்பு முடுக்கத்தின் (g) அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும்.

     கோள்   கிடைத்தள வீச்சு 
     வியாழன்   50 m 
     புவி   75 m 
     செவ்வாய்   90 m 
     புதன்  95 m
  7. சம வெக்டர்கள் என்றால் என்ன?

  8. சராசரி வேகம் என்பது யாது?

  9. ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா?

  10. மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் எதிர் செயல்வினை எவ்வாறு இருக்கும்.

  11. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறி விளக்கு. 

  12. மரப்பெட்டியொன்று சாய்தளத்தின் மீது ஓய்வு நிலையில் உள்ளது. கோணம் (angle of inclination) 45° இல், மரப்பெட்டி சறுக்கத் தொடங்குகிறதெனில், அதன் உராய்வுக் குணகத்தைக் காண்க

  13. மீட்சி மற்றும் மீட்சி்யற்ற மோதலின்  சிறப்பியல்புகளை வி்ளக்குக

  14. மிட்சி மற்றும் மிட்சியற்ற மோதலின் சிறப்பியகளை விளக்குக

  15. வரையறு: இயக்க ஆற்றல் 

  16. ஓய்வுநிலையில் உள்ள 10 kg நிறை கொண்ட பொருள் 16N. விசைக்கு உட்படுத்தப்படுகிறது. 10s முடிவில் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. 

  17. மூட்டை தூக்கும் தொழிலாளி, மூட்டையை முதுகில் சுமக்கும் போது முன்நோக்கி சாய்வது ஏன்?

  18. இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.

  19. ஈர்ப்பின் மையம் என்றால் என்ன?

  20. வேகவைத்த முட்டையையும், வேகாத முட்டையையும் அதனை சுற்றிப்பார்த்து வேவ்வேறு கண்டறிவாய்?

  21. அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    15 x 3 = 45
  22. மீட்டர் அளவு கோலும், கம்பியும் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பியின் விட்டதை எவ்வாறு கணக்கிடுவீர்கள்?

  23. அளவின் அடுக்கினால் ஏற்படும் பிழையினை விளக்குக 

  24. பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை msஇல் மாற்றுக.

  25. படத்தில் உள்ளவாறு பொருளொன்று O புள்ளியிலிருந்து P புள்ளிக்கு 5 வினாடியில் கடந்து செல்கிறது. அப்பொருளின் சராசரித் திசைவேகம் மற்றும் சராசரி வேகம் ஆகியவற்றைக் காண்க.

  26. புள்ளிநிறையின் பண்புகள் யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.

  27. இரவு பகல் இருவேளைகளிலும் சூரியனைப் பொறுத்து நாம் ஒரே வேகத்தில் செல்கிறோமா என்பதை படத்துடன்விளக்கு.

  28. வண்டியில் கட்டப்பட்ட குதிரை ஒன்றைக் கருதுக. தொடக்கத்தில் அக்குதிரை ஒய்வு நிலையில் உள்ளது. குதிரை முன் நோக்கி நடக்கத் தொடங்கும் போது, வண்டி முன்நோக்கி ஒரு முடுக்கத்தைப்பெறும். Fh என்ற விசையுடன் குதிரை, வண்டியை முன் நோக்கி இழுக்கும். அதேநேரத்தில் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி வண்டியும், அதற்கு சமமான எதிர்திசையில் செயல்படும் (Fc = Fh) என்ற விசையுடன் குதிரையைப் பின்னோக்கி இழுக்கும். எனவே குதிரை மற்றும் வண்டி என்ற தொகுப்பின் விசை சுழியாக இருப்பினும் ஏன் குதிரை மற்றும் வண்டி முடுக்கமடைந்து முன்நோக்கி செல்கின்றன?

  29. உந்தமாறாவிதியின் பொருள் தருக.

  30. ஒரு சைக்கிள் ஓட்டுபவர் 70 km/h, வேகத்துடன் ஒரு வளைவுப் பாதையில் பயணிக்கும்போது 60கோணத்தில் திருப்புகிறது. எனில் வட்டத்தின் சிறிய ஆரம் என்ன?

  31. இரு சுருள்வில்கள் A மற்றும் B யின் சுருள்மாறிலிகள் kA > kB என்றவாறு உள்ளன. அவை சம விசைகளால் நீட்சியடையச் செய்யப்பட்டால் எந்த சுருள்வில்லின் மீது அதிக வேலை செய்யப்பட வேண்டும்?

  32. எப்போது வேலை சுழியாகும்?

  33. உந்தம் -இயக்க ஆற்றல் இடையே உள்ள தொடர்பு யாது?

  34. சீரான நிறை அடர்த்தி கொண்ட திண்மத்தண்டின் நிலைமத் திருப்புத்திறனை அதற்கு செங்குத்தாகவும் ஏதேனும் ஒரு முனையின் வழியே செல்லும் அச்சைப்பொருத்து காண்க.

  35. சுழல் மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களின் ஒப்பீடு.

  36. 100kg எடையுள்ள வட்டவளையத்தின் ஆரம் 2m அது கிடைத்தளத் தரையில் உருளுகிறது எனில் அதன் நிறைமையத்தின் வேகம் 20cm/s. அதை நிறுத்த செய்யப்படும் வேலையின் அளவு யாது?

*****************************************

Reviews & Comments about XI STD Important Question ( Volume- 1 )

Write your Comment