Model Unit Test-1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    2 மதிப்பெண் வினாக்கள்

    23 x 2 = 46
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  3. வருடி (Scanner) என்றல் என்ன?

  4. (28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.

  5. BCD - என்றால்  என்ன? 

  6. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  7. உயர் வரையறை பல்லூடக இடைமுகம் என்றால் என்ன?

  8. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?

  9. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?

  10. Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  11. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  12. ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக

  13. மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்

  14. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  15. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  16. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

  17. நிபந்தனைக் கூற்று மற்றும் சுழற்சிக் கூற்று இரண்டுமே , ஒரு நிபந்தனை மற்றும் செயல்படு கூற்றை பெற்றிருக்கிறது எனில், அவை எவ்வாறு வேறுபடுகிறது.

  18. போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன? 

  19. தொடர் கூற்று என்பது என்ன? 

  20. தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?

  21. இயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.

  22. சுழற்சி என்றால் என்ன?

  23. அடிப்படை நிலை (கூயளந ஊயளந) என்றால் என்ன?

  24. 3 மதிப்பெண் வினாக்கள்

    18 x 3 = 54
  25. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  26. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  27. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  28. (6213)8 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  29. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக 22

  30. பதினாறு நிலை எண் முறை பற்றி எழுதுக

  31. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  32. நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (programmable Read Only Memory-PROM) விவரி.

  33. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  34. இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.

  35. மதிப்பிருத்தல் செயற்குறி மற்றும் சமநிலை செயற்குறி இடையே உள்ள வேறுபாடு என்ன?

  36. கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?

  37. வழிமுறைகளை பண்புகள் யாவை?

  38. தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .

  39. A என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.    

  40. மன்னன் விக்கிரமாதித்தனிடம் இரண்டு மந்திர வாள்கள் இருக்கின்றன. ஒரு வாளை வைத்து அவனால் வேதாளத்தின் 19 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதன்பின் வேதாளத்துக்கு 13 தலைகள் முளைக்கின்றன. இன்னொரு வாளை வைத்து 7 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதற்குப்பின் 22 புதிய தலைகள் முளைக்கின்றன. எல்லாத் தலைகளையும் வெட்டிவிட்டால், வேதாளம் செத்துவிடும். வேதாளத்துக்கு ஆரம்பத்தில் 1000 தலைகள் இருந்தால், அது சாகிற வாய்ற வாய்ப்பு உண்டா? (சகுறிப்பு: தலை mod 3 –ன் எண்ணிக்கை மாறாது).

  41. ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)

  42. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி தேர்வு வினாத்தாள் ( 11th standard computer science model test paper )

Write your Comment