Half yearly Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல் தொகுதிII

தேவையான இடங்களில் படம் வரையவும். 
Time : 01:30:00 Hrs
Total Marks : 75
    விளக்குக:
    15 x 5 = 75
  1. புவியை வலம் வரும் துணைக்கோளின் சுற்றுக்காலத்திற்கான கோவையை தருவி.

  2. துணைக்கோளின் ஆற்றலுக்கான கோவையை தருவி.

  3. ஈர்ப்புத் தன்னிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.ஆப்பிள் கீழே விழும் நிகழ்வினைக் கொண்டு விவரி.

  4. 1. திரவத்துளி 2. திரவக்குமிழி 3. காற்றுக்குமிழி ஆகியவற்றின் உள்ளே மிகையழுத்தத்திற்கான கோவையைத் தருவி.

  5. ஒரு இலேசான தண்டின் நீளம் 2m இரு செங்குத்து மூலம் கிடைமட்டமாக தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் முனைகள் சமமான நீளுங்களுடையவை. ஒரு கம்பி எஃகினாலும் அதன் குறுக்கு பரப்பு A1=0.1cm மற்றொன்று பித்தளையாலும் இதன் குறுக்குப் பரப்பு A= 0.2 cm2 தண்டின் எந்த நிலைகளிலும் எடை தொடங்கவிடப்பட்டால் பின்வருவன உண்டாகும்? (i) இரு கம்பிகளும் ஒத்தி தகைவுகள், (ii) இரு எஃகு கம்பிகளிலும் ஒத்தி திரிபு Y= 20X 1010 Nm-2பித்தளை Y = 10 X 1010 Nm-2

  6. மாணவர் ஒருவர் காலைச் சிற்றுண்டியாக 200 உணவு கலோரி (food calorie)ஆற்றலுடைய உணவை உண்கிறார். அவர் அவ்வாற்றலை கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து பள்ளியில் உள்ள மரங்களுக்கு உற்றுவதன் மூலம் செலவழிக்கலாம் எனக் கருதுகிறார். அவ்வாறு செலவழிக்க வேண்டுமென்றால் எத்தனை மரங்களுக்கு அவர் தண்ணீர் ஊற்ற முடியும்? இங்கு கிணற்றின் ஆழம் 25 m, குடத்தின் கொள்ளளவு 25L, ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு  குடம் நீர் ஊற்ற வேண்டும் என்க. (நடக்கும்போது செலவழிக்கப்படும் ஆற்றலையும், குடத்தின் நிறையையும் புறக்கணிக்கவும் g=10ms-2எனக் கருதுக.

  7. கார்னோ வெப்ப இயந்திரத்தைப்பற்றி விரிவாக விளக்குக. 

  8. -200C ல் 0.6 kg பனிக்கட்டியின் மாற்றத்திற்கு தேவையான வெப்பத்தைக் கணக்கிடுக. இது கலோரிமானியில் 1000C வளிமண்டல அழுத்தத்தில் ஆவியாக்கப்படுகிறது. பனிக்கட்டியின் தன் வெப்ப ஏற்புத்திறன் =2100 J kg-1 k-1.

  9. 27oC வெப்பநிலையில் உள்ள கால்பந்து ஒன்றினுள் 0.5 மோல் காற்று மூலக்கூறுகள் உள்ளன. கால்பந்தின் உள்ளே உள்ள காற்றின் அக ஆற்றலைக் கண்டுபிடி.

  10. வாயுக்களின் இயக்கவியற் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சில அடிப்படை விதிகளைத் தருவித்து விவாதி.

  11. சீரிசை அலை இயக்கம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக மற்றும் எல்லா சீரிசை இயக்கங்களும் சீரலைவு இயக்கமே ஆனால் அதன் மறுதலை உண்மையல்ல ஏன்? விளக்குக.

  12. கீழ்காணும் அமைப்புகளின் தொகுபயன் சுருள்வில் மாறிலியின் மதிப்பைக் கணக்கிடுக. அனைத்து சுருள்வில்களுக்கும் சுருள்மாறிலிகளின் மதிப்பு சமம் எனக் கொண்டு கணக்கீடு செய்க.

  13. ஒரு பொருள் அச்சின் வழியாக தனிசீரிசை இயக்கத்துடன் அலைவுறுகிறது. பின்வரும் சமன்பாட்டின்படி அதன் இடப்பெயர்ச்சி காலத்தைப் பொறுத்து மாறுகிறது.
    \(x=\left( 4.00\quad m \right) cos\left( { \pi }_{ t }^{ + }\cfrac { \pi }{ 4 } \right) t=1.00\quad s\)
    (a) இடப்பெயர்ச்சி, (b) திசைவேகம், (c) முடுக்கம். (d) பெருமவேகம்  மற்றும் பெரும முடுக்கம், (e) கட்டம் t ல் 2.00s  

  14. y = sin(x − a) என்ற அலை \(a = 0, a ={\pi\over4},a={\pi\over2},a={2\pi\over2}\) மற்றும் a = π என்ற மதிப்புகளுக்கு எவ்வாறு இருக்கிறது என வரைபடங்கள் மூலம் காட்டுக.

  15. வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் யாவை? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாள் ( 11th Physics Half yearly Question Paper )

Write your Comment