அரையாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

    (a)

    இலயனல் இராபின்ஸ்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. முரண்பட்டதை தெரிவு செய்க.

    (a)

    ஆடம்பர பண்டங்கள்

    (b)

    வசதிபண்டங்கள்

    (c)

    அத்தியாவசிய பண்டங்கள்

    (d)

    விவசாயப் பொருட்கள்

  3. தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    பெஃர்கூசன் 

    (c)

    கார்ல் மார்க்ஸ் 

    (d)

    கிஃபன் 

  4. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    உழைப்பாளர்

    (b)

    நிலம்

    (c)

    தொழிலமைப்போர்

    (d)

    மூலதனம்

  5. ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    சராசரி

    (c)

    இறுதிநிலை

    (d)

    மொத்த

  6. வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பிறவாய்ப்புச் செலவு 

    (b)

    மாற்றுச் செலவு 

    (c)

    பரிமாற்றச் செலவு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  7. முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்

    (a)

    இயல்பு இலாபம்

    (b)

    நஷ்டம்

    (c)

    அதிக இலாபம்

    (d)

    அதிக நஷ்டம்

  8. பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ________ ஆகும். 

    (a)

    தனிநபர் பேதம் 

    (b)

    இட பேதம் 

    (c)

    பயன் அடிப்படையில் பேதம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  9. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

    (a)

    மூலதனம்

    (b)

    உழைப்பாளி

    (c)

    நிலம்

    (d)

    அமைப்பு

  10. "மொத்த நாடுகள் மகிழ்ச்சிக் குறியீடு"(GNHI)என்ற தொடரை உருவாக்கியவர்________.

    (a)

    பூடானின் முதல் மன்னர்-மார்ஷல் 

    (b)

    பூடானின் இரண்டாவது மன்னர் -J.M.கீன்ஸ் 

    (c)

    பூடானின் மூன்றாவது மன்னர் -ஷாஜஹான் 

    (d)

    பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக் 

  11. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

    (a)

    இரயில்வே துறை

    (b)

    செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்

    (c)

    அணு ஆற்றல்

    (d)

    அணு கனிமங்கள்

  12. 'சர்வசிக்ஷா அபியான் ' எத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது _______.              

    (a)

    முதல் ஐந்தாண்டுத் திட்டம்     

    (b)

    பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்

    (c)

    மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்

    (d)

    ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்

  13. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _____________ அமல்படுத்தப்பட்டது.

    (a)

    2017 ஜுலை 1ந் தேதி

    (b)

    2016 ஜுலை 1ந்தேதி

    (c)

    2017 ஜனவரி 1ந்தேதி

    (d)

    2016 ஜனவரி 1ம்தேதி

  14. ஏற்றுமதி உதவிகளை ________ சதவீத அளவு குறைக்க "இந்தியத் தயாரிப்பு" என்று கருத்து உருவாக்கப்பட்டது.

    (a)

    30%

    (b)

    20%

    (c)

    25%

    (d)

    40%

  15. இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது

    (a)

    நுட்பம்

    (b)

    சார்ந்திருப்பு

    (c)

    இரட்டை தன்மை

    (d)

    சமமின்மை

  16. பெருன்பான்மையான கிராம மக்கள் ____ அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்.

    (a)

    தனியார் நிறுவனம்

    (b)

    நிதி நிறுவனம்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  17. தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

    (a)

    நாகப்பட்டினம்

    (b)

    நீலகிரி

    (c)

    திருச்சி

    (d)

    தஞ்சாவூர்

  18. _____________ மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.

    (a)

    தொழிற்துறை

    (b)

    வேளாண்மை

    (c)

    சுரங்கம்

    (d)

    வாணிபம்

  19. நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.

    (a)

    சமநிலை

    (b)

    சமநிலையின்மை

    (c)

    குறைந்தபட்ச புள்ளி

    (d)

    அதிகபட்ச புள்ளி

  20. நுகர்வோர் உபரியை கணக்கிடும் சூத்திரம் _________ 

    (a)

    Qd=Qs

    (b)

    \(n_0={-p\over x}{dx\over dp}\)

    (c)

    \(Cs=[\int^{xo}_{o}f(x)dx\)

    (d)

    \(Ps=x_op_o-\int^{xo}_{o}g(x)dx\)

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. பணிகளின் இயல்புகள் யாவை?

  23. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?

  24. சம உற்பத்தி செலவு கோடு என்றால் என்ன?

  25. இறுதிநிலை வருவாய் என்றால் என்ன?

  26. இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை? 

  27. வட்டி பற்றி நீ அறிவது யாது?

  28. இந்தியாவில் உடல்நலப் பணிகள் பற்றி எழுதுக.

  29. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?

  30. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

  31. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  32. பகுதி - III

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

    7 x 3 = 21
  33. இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியல் ஒப்பிடுக

  34. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

  35. சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.

  36. AC மற்றும் MC வளைகோட்டில் உள்ள தொடர்புகளை வரைபடம் வரைந்து விளக்குக.

  37. முற்றுரிமை என்றால் என்ன? முற்றுரிமை அங்காடியில் அதிக பொருட்களை அதிக விலைக்கு விற்கிறார்களா?  

  38. காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக

  39. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

  40. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியக் கைவினைப் பொருட்கள் உற்பத்தி குறைந்தது ஏன்?

  41. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

  42. ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

    2. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
      (i) P = 0
      (ii) P=20
      (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

    1. தொழிற்கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக.

    2. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

    1. மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.

    2. நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

    1. இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாட்டை விளக்குக

    2. தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி. 

    1. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

    2. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

    1. ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?

    2. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?

    1. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

    2. தேவை விதி மற்றும் அதன் விதி விலக்குகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Economics Half Yearly Model Question Paper )

Write your Comment