Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    60 x 1 = 60
  1. சமநிலை விலை என்பது அந்த விலையில்

    (a)

    எல்லாம் விற்கப்படுகிறது

    (b)

    வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

    (c)

    தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

    (d)

    மிகைத்தேவை பூஜ்ஜியம்

  2. பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    இராபின்ஸ்

    (d)

    ராபர்ட்சன்

  3. 'நலஇயல்' என்பது_________.

    (a)

    மகிழ்ச்சி 

    (b)

    தனி மனிதனின் நலம் 

    (c)

    ஒட்டுமொத்த மக்களின் நலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  4. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

    (a)

    இயல்புரை 

    (b)

    நெறியுரை 

    (c)

    எதிர்மறை 

    (d)

    எதுவுமில்லை 

  5. தொகுத்தாய்வு முறை _______ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    பகுத்தறியும் முறை 

    (b)

    கருத்திலான முறை 

    (c)

    செயலறி முறை 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  6. நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    ராபின்ஸ்

    (d)

    ரிக்கார்டோ

  7. சம நோக்கு வளைகோடுகள்

    (a)

    செங்குத்துக் கோடுகள்

    (b)

    படுக்கைக் கோடுகள்

    (c)

    நேர்மறைச் சரிவுடையது

    (d)

    எதிர்மறைச் சரிவுடையது

  8. ________ தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைர முரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (c)

    J.M.கீன்சு

    (d)

    A.C.பிகு 

  9. அளிப்பு மாற்றத்திற்கேற்ப விலையில் ஏற்படும் மற்ற விழுக்காடு _______ஆகும்.

    (a)

    அளிப்பு நெகிழ்ச்சி 

    (b)

    தேவை நெகிழ்ச்சி 

    (c)

    நெகிழ்ச்சி விதி 

    (d)

    அலகு அளிப்பு நெகிழ்ச்சி 

  10. சமநோக்கு வளைகோடு _______தரத்தில் அமையும்

    (a)

    உயர்தர 

    (b)

    கீழ்தரம் 

    (c)

    சாதாரண தரம் 

    (d)

    எதுவுமில்லை 

  11. தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

    (a)

    ஜே.பி கிளார்க்

    (b)

    சும்பீட்டர்

    (c)

    நைட்

    (d)

    ஆடம் ஸ்மித்

  12. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

    (a)

    உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

    (b)

    உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (c)

    உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (d)

    உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

  13. உற்பத்தி என்பது _______ உருவாக்குதல் ஆகும்.

    (a)

    பரிமாற்றம் 

    (b)

    பகிர்வு 

    (c)

    பயன்பாடு 

    (d)

    தேவை 

  14. வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் வேறு சில பண ஆதாரம் அனைத்தும்  _______  ஆகும்.

    (a)

    பண மூலதனம் 

    (b)

    மனித மூலதனம் 

    (c)

    பரும மூலதனம் 

    (d)

    எதுவுமில்லை 

  15. \(\alpha +\beta <1\) என்பது _______ 

    (a)

    வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (b)

    மாறா விகித அளவு விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (d)

    எதுவுமில்லை 

  16. உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு ---------- செலவு எனப்படும்.

    (a)

    பண

    (b)

    மாறும்

    (c)

    மொத்த

    (d)

    மாறா

  17. கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    மாறா

    (b)

    மாறும்

    (c)

    இறுதிநிலை

    (d)

    வாய்ப்பு

  18. வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பிறவாய்ப்புச் செலவு 

    (b)

    மாற்றுச் செலவு 

    (c)

    பரிமாற்றச் செலவு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  19. மொத்த செலவு (TC)=___________.

    (a)

    TFC+TVC

    (b)

    TFC-TVC

    (c)

    TFCxTVC

    (d)

    TFC\(\div\)TVC

  20. நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.

    (a)

    மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.

    (b)

    படுகிடை கோடாக 

    (c)

    கீழ்நோக்கி சரிந்து செல்லும் 

    (d)

    செங்குத்தாக 

  21. கீழ்க்கண்டவற்றுள் உபரிதிறன் இல்லாதது ________

    (a)

    முற்றுரிமை

    (b)

    முற்றுரிமை போட்டி

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    நிறைவுப் போட்டி

  22. விலையின் மற்றொரு பெயர்______

    (a)

    சராசரி வருவாய்

    (b)

    இறுதிநிலை வருவாய்

    (c)

    மொத்த வருவாய்

    (d)

    சராசரி செலவு

  23. மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக் காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  24. _________  முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர். 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருமுகமுற்றுரிமை 

    (c)

    இருமுக சில்லோர் 

    (d)

    முற்றுரிமை போட்டி 

  25. முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________ 

    (a)

    மின்சார வாரியம் 

    (b)

    LIC 

    (c)

    வங்கி 

    (d)

    சிமெண்ட் ஆலை 

  26. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

    (a)

    மூலதனம்

    (b)

    உழைப்பாளி

    (c)

    நிலம்

    (d)

    அமைப்பு

  27. எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

    (a)

    கீன்ஸ்

    (b)

    வாக்கர்

    (c)

    ஹாலே

    (d)

    நைட்

  28. MRP=_________.

    (a)

    MPP x MR 

    (b)

    MPP \(\div \) MR 

    (c)

    MPP - MR 

    (d)

    MPP + MR 

  29. வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்___________.

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    டேவிட் ரிகார்டோ

    (c)

    போம் போகுவார்க் 

    (d)

    நட்விக்செல் 

  30. டேவிட் ரிகார்டோ ஒரு ___________பொருளியல் அறிஞர் ஆவார். 

    (a)

    தொன்மை பொருளியல் அறிஞர்

    (b)

    புதிய தொன்மை பொருளியல் அறிஞர்

    (c)

    நவீன பொருளியல் அறிஞர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  31. கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

    (a)

    கோலார்

    (b)

    இராமகிரி

    (c)

    அனந்தபூர்

    (d)

    கொச்சின்

  32. கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

    (a)

    மெக்ஸிகோ

    (b)

    கானா

    (c)

    பிரான்ஸ்

    (d)

    ஸ்ரீலங்கா

  33. மேக்னடைட் தாது ________ல் அதிகம் கிடைக்கிறது.

    (a)

    மத்திய பிரதேசம் 

    (b)

    உத்திர பிரதேசம் 

    (c)

    கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரை 

    (d)

    மேற்காணும் அனைத்தும் 

  34. வேளாண்மை இந்தியாவில் ______ஆக கருதுகின்றனர்.

    (a)

    மூளையாக 

    (b)

    முதுகெலும்பாக 

    (c)

    இதயமாக 

    (d)

    எதுவுமில்லை 

  35. "உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" இதை கொடுத்தவர் _______.

    (a)

    திருவள்ளுவர் 

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    ஜவஹர்லால் நேரு 

    (d)

    அமர்த்தியா சென் 

  36. வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு

    (a)

    1989-1991

    (b)

    1990-1992

    (c)

    2000-2001

    (d)

    1981-1983

  37. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

    (a)

    திட்டக்குழு

    (b)

    நேரு

    (c)

    D.மோரிஸ்

    (d)

    பிஸ்வாஜித்

  38. 1510 லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர்

    (a)

    இந்தியர்கள்

    (b)

    போர்ச்சுக்கீசியர்கள் 

    (c)

    கிரேக்கர்கள் 

    (d)

    ரோமானியர்கள் 

  39. இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.  

    (a)

    முதல் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  40. ______ மக்களுக்கு பசுமைப்புரட்சி செழிப்பை வழங்கியது     

    (a)

    நகர்புற மக்களுக்கு 

    (b)

    கிராமப்புற மக்களுக்கு 

    (c)

    மாநகராட்சி மக்களுக்கு  

    (d)

    ஏதுமில்லை 

  41. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

    (a)

    ஆலோசனைக் குழு

    (b)

    சட்டபூர்வமான குழு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    எதுவுமில்லை

  42. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _____________ அமல்படுத்தப்பட்டது.

    (a)

    2017 ஜுலை 1ந் தேதி

    (b)

    2016 ஜுலை 1ந்தேதி

    (c)

    2017 ஜனவரி 1ந்தேதி

    (d)

    2016 ஜனவரி 1ம்தேதி

  43. ________ போன்ற பணப்பயிர்களை பாரம்பரியப் பயிர்களோடு ஊடு பயிர் வளர்ப்பதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

    (a)

    மிளகாய்

    (b)

    பருத்தி

    (c)

    புகையிலை

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  44. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் _________ ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும்.

    (a)

    1991

    (b)

    1998

    (c)

    2016

    (d)

    1992

  45. உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் _____ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    (a)

    APMC

    (b)

    ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை 

    (c)

    வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்

    (d)

    SEZ

  46. இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது

    (a)

    நுட்பம்

    (b)

    சார்ந்திருப்பு

    (c)

    இரட்டை தன்மை

    (d)

    சமமின்மை

  47. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

    (a)

    வேளாண்மை சாரா வேலையின்மை

    (b)

    அதிக வேலை நிலை

    (c)

    குறைந்த பணவீக்க வீதம்

    (d)

    அதிக முதலீடு

  48. பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலனி தயாரித்தல், மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன _____ தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

    (a)

    பெரிய தொழில்

    (b)

    சிறு தொழில்கள்

    (c)

    கிராமத் தொழிற்சாலைகள்

    (d)

    எதுவுமில்லை

  49. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ______ 

    (a)

    8வது ஏப்ரல் 2015

    (b)

    16வது மார்ச் 2015

    (c)

    18வது ஜூன் 2013

    (d)

    4வது ஏப்ரல் 2014

  50. வேளாண்மை சார்ந்த தொழிலுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    ஜவுளி தொழிற்சாலை

    (b)

    சர்க்கரை தொழிற் ஆலை

    (c)

    காகித ஆலை

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  51. கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?

    (a)

    மதுரை

    (b)

    திருச்சி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    கோயம்புத்தூர்

  52. எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

    (a)

    சண்டிகர்

    (b)

    பாண்டிச்சேரி

    (c)

    இலட்சத்தீவு

    (d)

    அந்தமான் நிக்கோபர் தீவுகள்

  53. அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் _________________

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கேரளா

    (c)

    மேற்கு வங்காளம்

    (d)

    மகாராஷ்டிரா

  54. மேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ______________ மீ ஆகும்.

    (a)

    1600மீ

    (b)

    1700மீ

    (c)

    1800மீ

    (d)

    1500மீ

  55. __________________ கடற்கரை உலகிலே மிகப்பெரிய கடற்கரையாகும். 

    (a)

    மெரினா கடற்கரை

    (b)

    ஹாட்வாடர் கடற்கரை

    (c)

    மாயா கடற்கரை

    (d)

    ஆல்மென்ட் கடற்கரை

  56. D = 50 - 5P எனக்கொள்க. D = 0 எனில், P யின் மதிப்பு

    (a)

    P = 10

    (b)

    P = 20

    (c)

    P = 5

    (d)

    P = -10

  57. n என்பதன் வகையீட்டுக்கெழு _____________ ஆகும்.

    (a)

    nx(n-1)

    (b)

    nx (n+1)

    (c)

    பூஜ்யம்

    (d)

    ஒன்று

  58. _______என்ற பொருளியலாளர் அரசியல் மற்றும் பொருளாதார கருத்துக்களை எண்கள்.எடை மற்றும் அளவுகளில் சுருக்கி அமைக்க வேண்டும் என்று கருதினார்.

    (a)

    சர்.வில்லியம் பெட்டி  

    (b)

    G.கிராமர் 

    (c)

    J.M.கீன்சு 

    (d)

    மார்ஷல் 

  59. மாறிகள் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை ______ஆகும்.

    (a)

    எளிய மாறிச் சார்பு 

    (b)

    பலமாறிச் சார்புகள் 

    (c)

    இரண்டு மாறிச் சார்புகள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  60. இறுதிநிலைச் வருவாயைக் கணக்கிடும் வாய்ப்பாடு _________ 

    (a)

    \(MC={d(TC)\over dQ}\)

    (b)

    Qd=Qs

    (c)

    \(MR={d(TR)\over dQ}\)

    (d)

    Ps=2Q+1

  61. பகுதி  - II

    40 x 2 = 80
  62. பண்டங்கள் என்றால் என்ன?

  63. பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக

  64. பணிகளின் இயல்புகள் யாவை?

  65. பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  66. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி

  67. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  68. வரவு செலவுக் கோட்டை வரையறு.

  69. அங்காடித் தேவை என்றால் என்ன?

  70. உழைப்பு – வரையறு

  71. சம உற்பத்தி செலவு கோடு என்றால் என்ன?

  72. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

  73. அளிப்பு விதி என்றால் என்ன?

  74. செலவுச் சார்பை வரையறு

  75. மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?

  76. உண்மைச் செலவு என்றால் என்ன?

  77. சராசரி வருவாய் என்றால் என்ன?

  78. தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு

  79. விற்பனை செலவு என்றால் என்ன?

  80. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

  81. இருமுக முற்றுரிமை என்றால் என்ன? 

  82. பகிர்வின் வகைகள் யாவை?

  83. வட்டி பற்றி நீ அறிவது யாது?

  84. ரிகார்டோ வாரக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

  85. கடன் நிதிகளின் தேவையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  86. முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.

  87. முன்னேறிய நாடுகளின் இயல்புகள் யாவை?

  88. இந்தியாவில் உடல்நலப் பணிகள் பற்றி எழுதுக.

  89. திட்ட விடுமுறை குறிப்பு வரைக. 

  90. மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.   

  91. ஏற்றுமதி செயலாக்க மண்டல மாதிரிகளின் பயன்பாட்டை உணர்த்திய நாடு எது? எப்பொழுது?

  92. ஊரக வளர்ச்சி என்றால் என்ன?

  93. இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.

  94. ஊரக தொழிற்சாலைகள் என்றால் என்ன?

  95. ஊரக அங்காடி என்றால் என்ன?

  96. பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் நிலை யாது?

  97. காற்றழுத்த விசைக்குழாய் நகரம்' என்றழைப்பது ஏன்?

  98. \(\int { \left( { x }^{ 2 }+x-1 \right) dx=\int { { x }^{ 2 }dx+\int { xdx } -\int { dx } } } \)

  99. தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p என்றால் இறுதிநிலை வருவாய் சார்பினை வருவி.

  100. Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?

  101. TC = 30 + 6Q2 +14Qஎன்பது மொத்த செலவுச் சார்பு என தரப்படின் இறுதிநிலைச் செலவுச் சார்பினை வருவி.

  102. பகுதி  - III

    20 x 3 = 60
  103. பணிகளின் பல்வேறு இயல்புகளை விவரி.

  104. பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக. 

  105. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

  106. பண்டங்களின் வகைகளை விளக்குக.

  107. உற்பத்தியாளர் சமநிலையை உதாரணத்துடன் விளக்குக

  108. மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.

  109. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

  110. சராசரி செலவு வளைகோட்டை வரைபடத்துடன் விளக்குக.

  111. முற்றுரிமையின் போட்டியின் முக்கிய இயல்புகள் யாவை? 

  112. காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக

  113. நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.

  114. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  115. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

  116. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பற்றி எழுதுக. 

  117. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.

  118. வேளாண் உற்பத்தியில் உணவுப் பொருள்களின் கழிவுகள் பற்றி எழுதுக.

  119. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

  120. ஊரக கடன் சுமைகளின் இயல்புகள் யாவை?

  121. சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டின் செயல்திறனை விளக்குக.

  122. கிராமர் விதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நேர்கோட்டுச் சமன்பாடுகளை தீர்வு காண்.
    x1-x2+x3=2: x1+x2-x3=0: -x1-x2-x3 = -6

  123. பகுதி  - IV

    10 x 5 = 50
  124. நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  125. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  126. உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  127. மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.

  128. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  129. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

  130. ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?

  131. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

  132. Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண். 

  133. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
    அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
    ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
    இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
    [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil medium Economics All Chapter Important Question) 

Write your Comment