12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  2. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    தக்கேரி

    (d)

    ஜே.எம்.கீன்ஸ்

  3. கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.

    (a)

    பண அளிப்பு

    (b)

    சொத்துக்கள்

    (c)

    வருவாய்

    (d)

    வெளிநாட்டுச் செலவாணி இருப்பு

  4. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

    (a)

    கட்டடத்துறை

    (b)

    விவசாயத்துறை

    (c)

    பணித்துறை

    (d)

    வங்கித் துறை

  5. ஒரு நாட்டின்_______ செயலை தேசிய வருவாய் குறி[பிடுகிறது.

    (a)

    தொழில்

    (b)

    விவசாயம்

    (c)

    பொருளாதாரம்

    (d)

    நுகர்வு

  6. NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________

    (a)

    மொத்த தேசிய உற்பத்தி

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    நிகர தேசிய உற்பத்தி

    (d)

    தனிநபர் வருமானம்

  7. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  8. தனிநபர் வருமானம்

    (a)

    தேசிய வருமானம் - நேர்முக வரிகள்

    (b)

    தேசிய வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தேசிய வருமானம் - சமூக பாதுகாப்பு பங்களிப்பு + மாற்று செலுத்துதல்

    (d)

    தேசிய வருமானம் - வெளிநாட்டு நிகர வருமானம்

  9. உண்மை வருமானம்

    (a)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1/P0

    (b)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் - P1/P0

    (c)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் x P1/P0

    (d)

    நடப்பு விலையில் தேசிய வருவாய் / P1/P0

  10. J.P சே ஒரு ________

    (a)

    புதிய-தொன்மை பொருளியலாளர்

    (b)

    தொன்மை பொருளியலாளர்

    (c)

    நவீன பொருளியலாளர்

    (d)

    புதிய பொருளியலாளர்

  11. நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

    (a)

    கீன்ஸ்

    (b)

    சே(Say)

    (c)

    தொன்மையது

    (d)

    வேலை வாய்ப்பு

  12. வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

    (a)

    தொகுத் தேவை

    (b)

    தொகு அளிப்பு

    (c)

    விளைவுத் தேவை

    (d)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு

  13. தொகுத் தேவையின் கூறு________ ஆகும்

    (a)

    தனிநபர் தேவை

    (b)

    அரசுச் செலவு

    (c)

    ஏற்றுமதி மட்டும்

    (d)

    இறக்குமதி மட்டும்

  14. தொகு அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    4

    (c)

    1

    (d)

    2

  15. இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்

    (a)

    நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்

    (b)

    நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்

    (c)

    நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்

    (d)

    சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்

  16. குறைவான வட்டி வீதம்

    (a)

    நுகர்வைக் குறைக்கும்

    (b)

    கடனுக்கான செலவை உயர்த்தும்

    (c)

    சேமிப்பை ஊக்குவிக்கும்

    (d)

    கடனையும் செலவையும் அதிகரிக்கும்.

  17. முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர் 

    (a)

    J.M. கிளார்க் 

    (b)

    ஹாட்ரி 

    (c)

    J.R.ஹிக்ஸ் 

    (d)

    J.M.கீன்ஸ் 

  18. பணம் என்பது

    (a)

    உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.

    (b)

    நிலையான வாங்கும் சக்தியை கொண்டது

    (c)

    உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.

    (d)

    வளங்களை பங்கிட்டுக்கொள்ள தேவைப்படுகிறது.

  19. பற்று அட்டை என்பது______ உதாரணம் ஆகும்

    (a)

    கட்டளைப்பண

    (b)

    காகிதப்பண

    (c)

    நெகிழி பண

    (d)

    கடன் பண

  20. ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்த பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

    (a)

    மதிப்பளவு

    (b)

    மதிப்பின் நிலக்கலன்

    (c)

    பரிவர்த்தனை கருவி

    (d)

    வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை

  21. பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் போது பிறர் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க ______ என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    மீட்சி 

    (b)

    தொட்டி 

    (c)

    தேக்கம் 

    (d)

    எதுவுமில்லை 

  22. மந்த நிலையிலிருந்த பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வு 

    (a)

    மீட்சி 

    (b)

    தொட்டி 

    (c)

    வணிகவசூல் 

    (d)

    வியாபார சூழல் 

  23. வங்கி விகிதம் என்பது

    (a)

    முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது

    (b)

    வட்டி விகிதம்

    (c)

    அந்நிய செலவாணி

    (d)

    வளர்ச்சி விகிதம்

  24. சமஸ்கிருத சொல்லான _________ வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.

    (a)

    நோமியா 

    (b)

    ரூபே 

    (c)

    ரௌப்பியா 

    (d)

    எதுவுமில்லை 

  25. பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்

    (a)

    வணிகக் கட்டுப்பாடுகள்

    (b)

    உற்பத்திக் காரணிகள் இடம் பெயர இயலாமை

    (c)

    நாடுகளின் கொள்கை வேறுபாடுகள்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  26. சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பயணம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகிறது

    (a)

    பொருள் வாணிகக் கணக்கு

    (b)

    பணிகள் வாணிக கணக்கு

    (c)

    பரிவர்த்தனை கணக்கு

    (d)

    மூலதன கணக்கு

  27. சாதகமான அயல்நாட்டு செலுத்து நிலையின் குறியீடு 

    (a)

    R/P =1

    (b)

    R/P < 1

    (c)

    R/P > 1

    (d)

    R/P # 1

  28. மாறும் / நிலையற்ற பணமாற்று வீதம் இதை __________ என்றும் அழைக்கலாம்.

    (a)

    பெயரளவு பணமாற்று வீதம் 

    (b)

    மெய்யான பணமாற்று வீதம் 

    (c)

    மிதக்கும் பணமாற்று வீதம் 

    (d)

    நிலையான பணமாற்று வீதம் 

  29. உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்

    (a)

    சிங்கப்பூர்

    (b)

    ஜெனிவா

    (c)

    சியாட்டில்

    (d)

    டோஹா

  30. உலக பெருமந்தம் தோன்றிய ஆண்டு

    (a)

    1928

    (b)

    1930

    (c)

    1950

    (d)

    1947

  31. எஸ்டி.ஆர். குறிப்பது யாது?

    (a)

    நிதியம் 

    (b)

    உலக வங்கி 

    (c)

    சிறப்பு எடுப்பு உரிமைகள் 

    (d)

    உலக வர்த்தக அமைப்பு 

  32. WTO வின் முதல் மாநாடு சிங்கப்பூரில் ______ ஆண்டு கூட்டப்பட்டது.

    (a)

    1991

    (b)

    1995

    (c)

    1959

    (d)

    2017

  33. WTO வின் 12 வது  அமைச்சர்கள் நிலையான மாநாட்டை______ நாட்டில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

    (a)

    பாகிஸ்தான் 

    (b)

    கஜகஸ்தான் 

    (c)

    ஆப்கானிஸ்தான் 

    (d)

    வாஷிங்டன் 

  34. "பிரிக்ஸ்" தலைமையகம் எங்குள்ளது?

    (a)

    காத்மண்டு 

    (b)

    ஜஹார்த்தா 

    (c)

    ஷாங்காய் 

    (d)

    வாஷிங்டன் 

  35. கீழே உள்ள வாக்யங்களைக் கருத்தில் கொண்டு சரியான ஒன்றை அடையாளம் காண்க
    (i) மாநில பட்டியிலோ, இணைப்பு பட்டியிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
    (ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியல் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.

    (a)

    i மட்டும்

    (b)

    ii மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    ஏதுமில்லை

  36. அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______ 

    (a)

    பொதுச்செலவு 

    (b)

    பொதுவருவாய் 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக் கடன் 

  37. மக்களின் சமூகத் தேவையை நிறைவேற்ற மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் செலவினமே ______ ஆகும்.

    (a)

    பொது வருவாய் 

    (b)

    பொதுச் செலவு 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக்கடன் 

  38. கடனுக்கேனே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.

    (a)

    பொது நிதி 

    (b)

    மூழ்கும் நிதி 

    (c)

    நேர்முக வரி 

    (d)

    மறைமுக வரி 

  39. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசின் வருவாய் , செலவை விட குறைவாக இருந்தால் அது _______ வரவு செலவுத் திட்டம் எனப்படும்.

    (a)

    உபரி 

    (b)

    சமநிலை 

    (c)

    பற்றாக்குறை 

    (d)

    செயல்திறன் 

  40. முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1960

  41.  உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?

    (a)

    உயிர் வாழ்வன

    (b)

    உயிரற்றவை

    (c)

    பருப்பொருள்

    (d)

    மேற்சொன்ன எதுவுமில்ல

  42. ஒருவருடைய நுகர்ச்சி அல்லது உற்பத்தி, இதற்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது.

    (a)

    புற விளைவுகள் 

    (b)

    சூழல் அமைப்பு 

    (c)

    மாசுபடுதல் 

    (d)

    காலநிலை மாற்றம் 

  43. அமிலமழை பொழிவதற்கு முக்கிய கரணம் 

    (a)

    நீர் மாசு 

    (b)

    காற்று மாசு 

    (c)

    ஒலி மாசு

    (d)

    நில மாசு 

  44. பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.

    (a)

    உற்பத்தித் திறன் வளர்ச்சி 

    (b)

    பெயரளவு வருமான அதிகரிப்பு 

    (c)

    உற்பத்தி அதிகரிப்பு 

    (d)

    இவை எதுவுமில்லை  

  45. நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம் 

    (a)

    National Institute for Transport in India

    (b)

     National Institute for Trade in India

    (c)

    National Institute for Tomorrow’s India

    (d)

    National Institution for Transforming India

  46. "முன்னேற்றமடைவதற்கு மூலதனம் அடிப்டையானதே ஒழிய அதுமட்டுமே போதுமானதல்ல"எனக் கூறியவர் ...................

    (a)

    தாமஸ் பிக்கெட்டி

    (b)

    டக்ளஸ் சி.நார்த்

    (c)

    சும்பீட்டர்

    (d)

    ராக்னர்  நர்க்ஸ் 

  47. இந்தியாவில் முதல் தொழில்கொள்கை ................... ஆண்டு அறிவிக்கப்பட்டது 

    (a)

    1950

    (b)

    1948

    (c)

    1947

    (d)

    1951

  48. சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.

    (a)

    உடன் தொடர்புக் கெழு 

    (b)

    சரிவு 

    (c)

     ஒட்டுறவு 

    (d)

    பிழைக் கருத்து 

  49. Y = 2-0.2X எனில், Y அச்சு வெட்டு 

    (a)

    -2

    (b)

    2

    (c)

    0.2X 

    (d)

    மேற்சொன்ன அனைத்தும் 

  50. ____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.

    (a)

    பண்பு

    (b)

    பெயரளவு

    (c)

    தரவரிசை

    (d)

    அளவு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam )

Write your Comment