12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) பாலகங்காதர திலகர்  1. இந்தியாவின் குரல்
    (ஆ) தாதாபாய் நெளரோஜி 2. மெட்ராஸ் டைம்ஸ்
    (இ) மெக்காலே 3. கேசரி
    (ஈ) வில்லியம் டிக்பை 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
    (a)
    D
    2 4 1 3
    (b)
    D
    3 1 4 2
    (c)
    D
    1 3 2 4
    (d)
    D
    4 2 3 1
  2. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
    பொருத்துக.
    1.இண்டிகா காலம்                                   - i.1857
    2.ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்       - ii .சிலோன்
    3.டெல்லி முற்றுகை                                 - iii.1952
    4.சென்னைவாசிகள் சங்கம்               - iv 1859

    (a)

    I ,II ,III,IV

    (b)

    IV ,II ,I ,III

    (c)

    II ,I ,IV ,III

    (d)

    III,II ,I ,IV

  3. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  4. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    1908- செய்தித்தாள் சட்டம்

    (b)

    1912-இந்தியப் பத்திரிக்கைச் சட்டம்

    (c)

    1910-மிண்டோ -மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள்

    (d)

    1905- விடிவெள்ளிக் கழகம்

  5. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.

    (a)

    முஸ்லீம் லீக் எழுச்சி

    (b)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

    (c)

    முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

    (d)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

  6. "இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று அழைக்கப்படுபவர் யார்? 

    (a)

    அன்னிபெசன்ட் 

    (b)

    காந்தி 

    (c)

    ஜின்னா 

    (d)

    சரோஜினி நாயூடு 

  7. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

    (a)

    டிசம்பர் 31, 1929

    (b)

    மார்ச் 12, 1930

    (c)

    ஜனவரி 26, 1930

    (d)

    ஜனவரி 26, 1931

  8. சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர்.

    (a)

    ஜோதிராவ் பூலே 

    (b)

    அம்பேத்கார் 

    (c)

    ஈ.வெ.ரா 

    (d)

    காந்தியடிகள் 

  9. கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

    (a)

    ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்அசோசியேஷன்

    (b)

    வங்காள சபை 

    (c)

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    (d)

    இந்தியக் குடியரசு இராணுவம்

  10. தென்னிந்தியாவில் பல தொழிற்சங்களை இவர் தோற்றுவித்தார்

    (a)

    காமராஜர்

    (b)

    பெரியார்

    (c)

    திரு.வி.க

    (d)

    அண்ணா

  11. வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் _______.

    (a)

    லின்லித்கோ

    (b)

    பெதிக் லாரன்ஸ்

    (c)

    மௌண்ட்பேட்டன் 

    (d)

    செம்ஸ்ஃபோர்டு 

  12. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1922

  13. பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

    (a)

    ஆகஸ்ட் 15, 1947

    (b)

    ஜனவரி 26, 1950

    (c)

    ஜூன், 1948

    (d)

    டிசம்பர், 1949

  14. பொருத்துக 
    அ) ஷா நவாஷ் கான் - 1.போர்க்கப்பல் 
    ஆ) HMIS தல்வார் - 2.ஜான்சி ராணி படைப்பிரிவு 
    இ) ஆஷாத் ஹிந்து ரேடியோ 
    ஈ) டாக்டர் லட்சுமி - 4.ஜெர்மனி 

    (a)

    4 2 1 3

    (b)

    4 2 3 1

    (c)

    3 1 4 2

    (d)

    3 4 1 2

  15. நேரு அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது?

    (a)

    1927

    (b)

    1935

    (c)

    1928

    (d)

    1930

  16. கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?

    (a)

    ஐந்தாம் நிக்கோலஸ்

    (b)

    இரண்டாம் ஜூலியஸ்

    (c)

    இரண்டாம் பயஸ்

    (d)

    மூன்றாம் பால்

  17. ______  நகரம்  'காட்டன்பொலிஸ்'எனும்  புனைப்  பெயரைப்  பெற்றது.

    (a)

    மான்செஸ்டர்

    (b)

    லங்காசயர்

    (c)

    லிவர்பூல் 

    (d)

    கிளாஸ்கோ

  18. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

    (a)

    1842

    (b)

    1848

    (c)

    1867

    (d)

    1871

  19. கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.

    (a)

    விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர் 

    (b)

    இரத்த ஞாயிறு -  இரண்டாம் நிக்கோலஸ் 

    (c)

    ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம்  நிக்கோலஸ் 

    (d)

    பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை -  மூன்றாம்  அலெக்ஸாண்டர்

  20. 1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு ______.

    (a)

    கிழக்கு ஜெர்மனி

    (b)

    செக்கோஸ்லோவாக்கியா

    (c)

    கிரீஸ்

    (d)

    துருக்கி

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21. மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?

  22. தன்னாட்சி இயக்கம் ஏன் வீழ்ச்சி கண்டது?

  23. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

  24. தாய்நாட்டைக் காப்பதற்காய் பெண்களின் நிலை என்ன?

  25. மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.

  26. கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

  27. வேவல் திட்டம் பற்றிய அறிக்கை எழுதுக.

  28. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  29. எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன்  24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக்  கொள்ளப்படுகின்றன?

  30. ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 3 = 21
  32. இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது எப்படி?

  33. பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.

  34. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  35. தனித்தொகுதியும் வகுப்புவாதம் பரவலும் பற்றி எழுதுக.

  36. காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதிஆவணத்தில் கையெழுத்திட்டார்?

  37. சீன இந்திய உறவு ஏன் முக்கியத்துவம் பெற்றது?

  38. இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல் பயணிகளின் சாதனைகள் என்ன?

  39. 1783 இல்  கையெழுத்திடப்பட்ட  பாரிஸ்  உடன்படிக்கையின்  முக்கிய  சரத்துக்களை  விவாதிக்கவும்.

  40. இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.

  41. பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

    2. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

    1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட சமிதிகளின் பணிகள் யாவை?

    2. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

    1. ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

    2. உலகப் பெருமந்தம் இந்தியாவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?

    1. பாகிஸ்தான் யூனியன் உருவானதில் முகமது அலி ஜின்னாவின் பங்கு யாது?

    2. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

    1. அமைச்சரவைத் தூதுக்குழு பற்றி விவரி.

    2. சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும்விளக்குக.

    1. ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.

    2. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

    1. அமெரிக்க  விடுதலைப்  போருக்கான  காரணங்கள், அதன்  போக்கு, விளைவுகள்  குறித்து  விவாதிக்கவும்.

    2. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021

Write your Comment