12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1825

    (b)

    1835

    (c)

    1845

    (d)

    1855

  2. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    வில்லியம் ஜோன்ஸ்

    (b)

    சார்லஸ் வில்கின்ஸ்

    (c)

    மாக்ஸ் முல்லர்

    (d)

    அரவிந்த கோஷ்

  3. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.

    (a)

    சுரேந்திரநாத் பானர்ஜி

    (b)

    பத்ருதீன் தியாப்ஜி

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    W.C. பானர்ஜி

  5. “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    M.K. காந்தி

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  6. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

    (a)

    1, 2

    (b)

    1, 3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  7. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
    (a)
    3 1 4 2
    (b)
    1 2 3 4
    (c)
    3 4 1 2
    (d)
    1 2 4 3
  9. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்  _______.

    (a)

    புலின் பிஹாரி தாஸ்

    (b)

    ஹோமச்சந்திர கானுங்கோ

    (c)

    ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

    (d)

    குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

  10. கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
    காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  11. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

    (a)

    பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

    (b)

    பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்

    (c)

    பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.

    (d)

    பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்

  12. பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?
    1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
    3. 1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom"" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.

    (a)

    1 மற்றும் 2

    (b)

    2 மற்றும் 3

    (c)

    1 மற்றும் 3

    (d)

    1, 2 மற்றும் 3

  13. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  14. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.

    (a)

    முஸ்லீம் லீக் எழுச்சி

    (b)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

    (c)

    முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

    (d)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

  15. பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.

    (அ) கதார் கட்சி i. 1916
    (ஆ) நியூ இந்தியா ii. 1913
    (இ) தன்னாட்சி இயக்கம் iii. 1909
    (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் iv. 1915
    (a)

    ii, iv, i, iii

    (b)

    iv, i, ii, iii

    (c)

    i, iv, iii, ii

    (d)

    ii, iii, iv, i

  16. ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
    (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
    (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
    (3) செளரி செளரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
    (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

    (a)

    2, 1, 4, 3

    (b)

    1, 3, 2, 4

    (c)

    2, 4, 1, 3

    (d)

    3, 2, 4, 1

  17. பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
    (i) கேதா சத்தியாகிரகம்
    (ii) சம்பரான் இயக்கம்
    (iii) பிராமணரல்லாதார் இயக்கம்
    (iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

    (a)

    ii, iii, i, iv

    (b)

    iii, ii, i, iv

    (c)

    ii, i, iv, iii

    (d)

    ii, i, iii, iv

  18. பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
    (i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதிஆசிரமத்தை நிறுவினார்.
    (ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
    (iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
    (iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.

    (a)

    i

    (b)

    i மற்றும் iv

    (c)

    ii மற்றும் iii

    (d)

    iii மட்டும்

  19. பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும்மந்தம் குறித்துச் சரியானவை.
    (i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது.
    (ii) வால்தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும்மந்தத்தை விரைவுபடுத்தியது.
    (iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை மட்டுமே பாதித்தது.
    iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.

    (a)

    i மற்றும் ii 

    (b)

    i,ii  மற்றும் iii 

    (c)

    i மற்றும் iv 

    (d)

    i,iiii  மற்றும் iv 

  20. சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
    கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என நம்பினர்.
    கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
    கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

    (a)

    I மற்றும் II

    (b)

    I மற்றும் III

    (c)

    II மற்றும் III

    (d)

    அனைத்தும்

  21. இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்________.

    (a)

    இராஜாஜி

    (b)

    ராம்சே மெக்டொனால்டு

    (c)

    முகமது இக்பால்

    (d)

    சர் வாசிர் ஹசன்

  22. பின்வரும் சமூக,சமயச் சீர்திருத்த நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
    1.அனைத்து இந்திய முஸ்லீம் லீக்
    2.ஆரிய சமாஜம்
    3.அனைத்திந்திய இந்து மகா சபை
    4.பஞ்சாப் இந்து சபை

    (a)

    1,2,3,4

    (b)

    2,1,4,3

    (c)

    2,4,3,1

    (d)

    4,3,2,1

  23. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

    (a)

    உஷா மேத்தா

    (b)

    பிரீத்தி வதேதார்

    (c)

    ஆசப் அலி

    (d)

    கேப்டன் லட்சுமி

  24. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லின்லித்கோ பிரபு

    (c)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (d)

    வின்ஸ்டன் சர்ச்சில்

  25. பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

    (a)

    ஆகஸ்ட் 15, 1947

    (b)

    ஜனவரி 26, 1950

    (c)

    ஜூன், 1948

    (d)

    டிசம்பர், 1949

  26. பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.
    (i) சீன மக்கள் குடியரசு
    (ii) சீனாவுடனான இந்தியப் போர்
    (iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
    (iv) பஞ்சசீலக் கொள்கை
    (v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
     கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    i, ii, iii, iv, v

    (b)

    iii, i , v, iv, ii

    (c)

    iii, iv, i, v, ii

    (d)

    i, iii, iv, v, ii

  27. மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் _______.

    (a)

    ஜனவரி 30,1948

    (b)

    ஆகஸ்ட் 15, 1947

    (c)

    ஜனவரி 30, 1949

    (d)

    அக்டோபர் 2, 1948

  28. அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் _______.

    (a)

    இராஜேந்திர பிரசாத்

    (b)

    ஜவகர்லால் நேரு 

    (c)

    வல்லபாய் படேல் 

    (d)

    மௌலானா அபுல் கலாம் ஆசாத்

  29. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

    (a)

    மார்ச் 22, 1949

    (b)

    ஜனவரி 26, 1946

    (c)

    டிசம்பர் 9, 1946

    (d)

    டிசம்பர் 13, 1946

  30. இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

    (a)

    முதலாளித்துவ

    (b)

    சமதர்ம

    (c)

    தெய்வீக

    (d)

    தொழிற்சாலை

  31. இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

    (a)

    1951

    (b)

    1952

    (c)

    1976

    (d)

    1978

  32. பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் _______.

    (a)

    ராம் மனோகர் லோகியா

    (b)

    ஜெயப்பிரகாஷ் நாராயணன்

    (c)

    வினோபா பாவே

    (d)

    சுந்தர் லால் பகுகுணா

  33. கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?

    (a)

    ஐந்தாம் நிக்கோலஸ்

    (b)

    இரண்டாம் ஜூலியஸ்

    (c)

    இரண்டாம் பயஸ்

    (d)

    மூன்றாம் பால்

  34. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?

    (a)

    மார்க்கோ போலோ 

    (b)

    ரோஜர் பேக்கன்

    (c)

    கொலம்பஸ்

    (d)

    பார்தோலோமியோ டயஸ்

  35. துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?

    (a)

    ஜியோவனி அவுரிஸ்பா

    (b)

    மேனுவல் கிரைசாலொரஸ்

    (c)

    ரோஜர் பேக்கன்

    (d)

    கொலம்பஸ்

  36. போப்பாண்டவரால் கட்டப்பட்ட  ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?

    (a)

    டோனிடெல்லா

    (b)

    ரபேல்

    (c)

    லியானர்டோ  டாவின்சி

    (d)

    மைக்கேல்  ஆஞ்சிலோ 

  37. கூற்று: 1770 இல்  இங்கிலாந்து  தேயிலையைத்  தவிர ஏனைய  பொருட்களின்  மீதான  வரிகளை  ரத்து  செய்தது.
    காரணம்:  காலனி  நாடுகளின்  மீது  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும்  உரிமை  ஆங்கிலேய  பாராளுமன்றத்திற்கு  உண்டு  என்பதை  உறுதிப்படுத்தவே  தேயிலையின்  மீதான  வரி  தக்கவைத்துக்  கொள்ளப்பட்டது.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி, காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி, ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை.

    (c)

    கூற்று  சரி, காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு, காரணம் சரி.

  38. பாஸ்டன் தேநீர் விருந்து  நிகழ்வு ______  இல்  நடைபெற்றது.

    (a)

    1775

    (b)

    1773

    (c)

    1784

    (d)

    1799

  39. கீழ்க்காணும்  கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
    கூற்று I: 1776 ஜுலை  4 இல் பதின்மூன்று காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை  பெற்றதாக அறிவித்தன.
    கூற்று II: சுதந்திரப் பிரகடனத்தைத் தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப் பங்கினை வகித்தார்.

    (a)

    (b)

    II 

    (c)

    இரண்டும் தவறு 

    (d)

    இரண்டும் சரி 

  40. அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை  தாங்கியவர்_____.

    (a)

    ரிச்சட்டு லீ

    (b)

    ஜார்ஜ் வாஷிங்டன்

    (c)

    வில்லியம் ஹோவே

    (d)

    ராக்கிங்காம்

  41. கூற்று: வளர்ந்து  கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
    காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென  அவர்கள்  விரும்பினர்.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி.காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு. காரணம் சரி.

  42. மெக்சிகோவில் புரட்சிக்குத்  தலைமையேற்றவர் _______.

    (a)

    சைமன்  பொலிவர் 

    (b)

    ஜோஸ்  மரியா  மோர்லோ

    (c)

    பெர்டினான்டு டி  லெஸ்ஸெப்ஸ் 

    (d)

    மிகுவல் ஹிடல்கோ

  43. அர்ஜென்டினாவை  விடுதலையடையச்  செய்தவர் _____ .

    (a)

    சான் மார்ட்டின் 

    (b)

    டாம்  பெட்ரோ 

    (c)

    பெர்னார்டோ  ஓ  ஹிக்கின்ஸ் 

    (d)

    மரினா  மோர்லஸ் 

  44. பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்_______.

    (a)

    பிரான்ஸ்    

    (b)

    ஜெர்மனி

    (c)

    பெல்ஜியம்

    (d)

    இத்தாலி

  45. கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை ப் பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
    காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  46. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

    (a)

    1842

    (b)

    1848

    (c)

    1867

    (d)

    1871

  47. இளம் இத்தாலி இயக்கம் ________  ஆண்டு துவக்கப்பட்டது.

    (a)

    1822

    (b)

    1827

    (c)

    1831

    (d)

    1846

  48. பார்மா , மொடினா , டஸ்கனி ஆகிய பகுதிகள் ________ க்குப் பிறகு பியட்மாண் ட்-சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.

    (a)

    பொதுவாக்கெடுப்பு

    (b)

    சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு

    (c)

    சால்ஃபரினோ  உடன்ப டிக்கை

    (d)

    வில்லா ஃப்ராங்கா உடன்படிக்கை

  49. கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார் .
    காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  50. 'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.

    (a)

    ஜான் A. ஹாப்சன் 

    (b)

    கார்ல் மார்க்ஸ்

    (c)

    ஃபிஷர்

    (d)

    கௌர்னே

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative one Mark Question with Answerkey - 2021(Public Exam)

Write your Comment