12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I 

    25 x 3 = 75
  1. 1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

  2. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  3. கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்?

  4. 1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

  5. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

  6. பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.

  7. தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

  8. இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில்அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுது.

  9. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

  10. இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

  11. பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.

  12. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?

  13. மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?

  14. மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.

  15. ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.

  16. அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

  17. தொழிற்புரட்சியின்  இரண்டாம்  கட்டத்தில்  ஜெர்மனியில்  நடந்தது  என்ன?

  18. தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு இராபர்ட் ஓவன் மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.

  19. இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.

  20. போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரகமாக எடுத்துக் கூறுக

  21. பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக

  22. நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது - விளக்குக.  

  23. ஒரு ஏகாதிபத்திய சக்தியாக ஜப்பானின் திட்டங்கள் யாவை? 

  24. சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.

  25. நேட்டோ  உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment