12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  2. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  3. இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  4. இந்தியாவின் பழம் பெருமையை பற்றி அரவிந்த கோஷ் கூறுவது யாது?

  5. சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?

  6. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய பொருளாதாரம் சீர்குலைய வழிவகுத்தது என்ற கூற்றை நிரூபி.

  7. மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?

  8. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

  9. ரிஸ்லி அறிக்கை பற்றி குறிப்பு வரைக.

  10. ஆக்கப்பூர்வமான சுதேசி என்பது பற்றி ரவீந்திரநாத் தாகூரின் கருத்து என்ன?

  11. AITUC - பற்றி சுருக்கமாக எழுதுக?

  12. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆதரவாளர்கள் பெயரை குறிப்பிடுக.

  13. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆரம்பகால பணிகள் குறித்து கூறுக.

  14. இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

  15. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

  16. உதம் சிங் பற்றி தருக.

  17. குலாம்கிரி எதை அடிக்கோடிட்டுக் காட்டியது ?

  18. இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

  19. கராச்சி அமர்வின் முக்கியத்துவம் குறித்து கூறு.

  20. பொருளாதார பெருமந்த காலத்தில் தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பற்றி கூறு.

  21. தாய்நாட்டைக் காப்பதற்காய் பெண்களின் நிலை என்ன?

  22. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

  23. நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?

  24. மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.

  25. லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

  26. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

  27. இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணையின் விளைவு என்ன?

  28. இராயல் இந்தியக் கடற்படையின் கலகத்தின் முக்கியத்துவம் யாது?

  29. ஏன் வேவல் பிரபு சிம்லா பேசசுவார்த்தையைக் கைவிட்டார் ?

  30. கஃபிலா (Kafila) என்றால் என்ன?

  31. இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?

  32. இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.

  33. நில உச்சவரம்பு பொருள் யாது?

  34. 1956 இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்.அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது.அவை யாவை?

  35. 1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  36. நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  37. பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.

  38. மனிதன்  மற்றும்  குடிமக்களின்  உரிமைப்  பிரகடனத்தின்  சாரம்சத்தை  அடிக்கோடிட்டுக்  காட்டவும்.

  39. தொழிற்புரட்சியின்  சிறப்புக்கூறுகளை  முன்னிலைப்படுத்திக்  காட்டவும். 

  40. எமிகிரஸ் என்போர் யார்?

  41. டோல்புடில் குற்றவழக்கின் பின்னணி யாது?

  42. கியூபெக் சட்டம் பின்னணி யாது?

  43. க்ளாட் ஹென்றி செயின்ட் - சைமன் பற்றி குறிப்பு தருக.

  44. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

  45. முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கை விளக்குக.

  46. நிகிலிசம் என்றால் என்ன?

  47. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.

  48. நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.

  49. பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?

  50. ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment