12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:40:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. இந்திய அரசியலை ஒருமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற ஐரோப்பியர் 

    (a)

    ஆங்கிலேயர் 

    (b)

    பிரெஞ்சுக்காரர்கள் 

    (c)

    போர்ச்சுகீசியர் 

    (d)

    ஸ்பானியர் 

  2. விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று

    (a)

    அதிக நிலவரி

    (b)

    பஞ்சம்

    (c)

    அரசியல் அமைப்பு

    (d)

    ஜமீன்தார்களின் சுரண்டல்

  3. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
    (a)
    3 1 4 2
    (b)
    1 2 3 4
    (c)
    3 4 1 2
    (d)
    1 2 4 3
  5. கூற்று  : வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906 லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது.
    காரணம்  : தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துக்கள் மூலம் இக்கருத்துக்களைப் பிரபலமடையச் செய்தார்.

    (a)

    கூற்று காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

  6. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  7. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.

    (a)

    முஸ்லீம் லீக் எழுச்சி

    (b)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

    (c)

    முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

    (d)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

  8. கூற்று :தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை.
    காரணம்: இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் என்று குழுக்களாகப்பிளவு பட்டிருந்தது.

    (a)

    கூற்று சரி காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு,காரணம் சரி 

    (c)

    கூற்று சரி காரணம் கூற்றிக்கான விளக்கம்

    (d)

    கூற்று சாய் காரணம் கூற்றிக்கான விளக்கம் இல்லை 

  9. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

    (a)

    டிசம்பர் 31, 1929

    (b)

    மார்ச் 12, 1930

    (c)

    ஜனவரி 26, 1930

    (d)

    ஜனவரி 26, 1931

  10. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) நாமசூத்ரா இயக்கம் 1. வடமேற்கு இந்தியா
    (ஆ) ஆதிதர்ம இயக்கம் 2. தென்னிந்தியா
    (இ) சத்யசோதக் இயக்கம் 3. கிழக்கிந்தியா
    (ஈ) திராவிட இயக்கம் 4. மேற்கு இந்தியா
    (a)
    3 1 4 2
    (b)
    2 1 4 3
    (c)
    1 2 3 4
    (d)
    3 4 1 2
  11. கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும்  ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  12. இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1925

    (c)

    1918

    (d)

    1919

  13. ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்புடைய கவர்னர் ஜெனரல் யார்?

    (a)

    O. டையர்

    (b)

    கானிங் பிரபு

    (c)

    பர்லோ பிரபு

    (d)

    இவற்றில் எவரும் இல்லை

  14. லண்டன் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஒ.டையரை படுகொலை செய்தவர் யார்?

    (a)

    வாஞ்சிநாதன்

    (b)

    ஊமைத்துரை

    (c)

    உதம் சிங்

    (d)

    சுக்தேவ்

  15. முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.

    (a)

    1852

    (b)

    1854

    (c)

    1861

    (d)

    1865

  16. 1929 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற _______ வழக்கு படைப்பெற்றது

    (a)

    மீரட் சதி வழக்கு

    (b)

    ஜான்சி வழக்கு

    (c)

    டெல்லி சதி வழக்கு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  17. கிஷன்சிங் மற்றும் வித்யாவதி கவுர் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்

    (a)

    உத்தம்சிங்

    (b)

    இக்பால்

    (c)

    மகத்சிங்

    (d)

    வாஞ்சிநாதன்

  18. சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
    கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என நம்பினர்.
    கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
    கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

    (a)

    I மற்றும் II

    (b)

    I மற்றும் III

    (c)

    II மற்றும் III

    (d)

    அனைத்தும்

  19. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    அ. இந்துமத மறுமலர்ச்சி  M.S.கோல்வாக்கர் 
    ஆ. கலீஃபா பதவி ஒழிப்பு  ஆரிய சமாஜம்
    இ. லாலா லஜபதி ராய்  1924
    ஈ. ராஷ்டிரிய சுயசேவா சங்கம்  இந்து - முஸ்லிம் மாகாணங்களா்களாக பஞ்சாப் பிரித்தல்.
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    2 4 3 1
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    3 4 1 2
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    1 3 2 4
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    2 3 4 1
  20. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1885

    (b)

    1900

    (c)

    1886

    (d)

    1887

  21. காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?

    (a)

    172

    (b)

    79

    (c)

    75

    (d)

    72

  22. இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மோதிலால் நேரு 

    (c)

    இராஜாஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  23. சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லிட்டன்பிரபு

    (c)

    கர்சன் பிரபு

    (d)

    கானிங் பிரபு

  24. மௌண்ட் பேட்டன் திட்டம் எந்த நாளில் கொண்டு வரப்பட்டது?

    (a)

    ஜூலை - 7

    (b)

    ஜூலை - 5

    (c)

    ஜூலை - 3

    (d)

    ஜூன் - 3

  25. பொருத்துக 
    அ) ஷா நவாஷ் கான் - 1.போர்க்கப்பல் 
    ஆ) HMIS தல்வார் - 2.ஜான்சி ராணி படைப்பிரிவு 
    இ) ஆஷாத் ஹிந்து ரேடியோ 
    ஈ) டாக்டர் லட்சுமி - 4.ஜெர்மனி 

    (a)

    4 2 1 3

    (b)

    4 2 3 1

    (c)

    3 1 4 2

    (d)

    3 4 1 2

  26. ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் _______.

    (a)

    பொட்டி ஸ்ரீராமுலு

    (b)

    பட்டாபி சீத்தாராமையா 

    (c)

    கே.எம். பணிக்கர் 

    (d)

    டி. பிரகாசம்

  27. அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் _______.

    (a)

    இராஜேந்திர பிரசாத்

    (b)

    ஜவகர்லால் நேரு 

    (c)

    வல்லபாய் படேல் 

    (d)

    மௌலானா அபுல் கலாம் ஆசாத்

  28. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    1. இந்திய தேசிய காங்கிரஸ் கராச்சி கூட்டம்  - 1. 1948
    2. அரசமைப்புக்கான குறிக்கோள் - 2. 1956
    3. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கம் - 3. 1931 மார்ச்
    4. மூவர் ஆணையம் அமைத்தல் - 4. 1946 டிசம்பர் 13
    (a)
    3 4 1 2
    (b)
    4 3 2 1
    (c)
    3 4 2 1
    (d)
    1 3 2 4
  29. ஆசியத் தலைவர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?

    (a)

    டெல்லி

    (b)

    கொழும்பு 

    (c)

    லண்டன்

    (d)

    பெல்கிரேட்

  30. இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

    (a)

    முதலாளித்துவ

    (b)

    சமதர்ம

    (c)

    தெய்வீக

    (d)

    தொழிற்சாலை

  31. எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?

    (a)

    1961

    (b)

    1991

    (c)

    2008

    (d)

    2005

  32. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்ட ம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?

    (a)

    200

    (b)

    150

    (c)

    100

    (d)

    75

  33. குத்தகை முறையின் கீழ் இருந்த நிலங்களின் விழுக்காடு 

    (a)

    50

    (b)

    70

    (c)

    65

    (d)

    55

  34. நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி அடைந்த மாநிலங்கள் 

    (a)

    கேரளா மற்றும் ஆந்திரா 

    (b)

    மேற்கு வங்காளம் மற்றும் உதிரப்பிரதேசம் 

    (c)

    தமிழ்நாடு மற்றும் கேரளா 

    (d)

    கேரளா மற்றும் மேற்கு வங்காளம் 

  35. 1972ல் அடிப்படை அலகு _______ என மாற்றப்பட்டது.

    (a)

    கிராமம் 

    (b)

    மகல் 

    (c)

    குடும்பம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  36. கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் 

    (a)

    IRDP 

    (b)

    MGENREGA 

    (c)

    RDP 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  37. தமிழகத்தில் அமைந்துள்ள வேளாண் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  38. பொருளாதார வளர்ச்சியை அடைய இந்திய தேர்வு செய்த வழி

    (a)

    சுதந்திரமான செயல்பாடு

    (b)

    முதலாளித்துவப் பாதை

    (c)

    சமதர்மப் பாதை

    (d)

    இறையாண்மை

  39. கூற்று: கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்தவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
    காரணம்: சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  40. கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
    அறிக்கை I: இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
    அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
    அறிக்கை III: கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
    அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.

    (a)

    I, II மற்றும் III

    (b)

    II மற்றும் III

    (c)

    I மற்றும் III

    (d)

    அனைத்தும் சரி

  41. மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?

    (a)

    சாண்டா மரியா    

    (b)

    பிண்ட்டா

    (c)

    நினா    

    (d)

    விட்டோரியா

  42. சிசரோவின் கடிதங்களை மறுபடியும் கண்டுபிடித்தவர் 

    (a)

    பெட்ரார்க் 

    (b)

    ஜியோவனி பெர்க்காசியோ 

    (c)

    நிக்கோலோ மாக்கிய வல்லி 

    (d)

    தாந்தே 

  43. பாஸ்டன் தேநீர் விருந்து  நிகழ்வு ______  இல்  நடைபெற்றது.

    (a)

    1775

    (b)

    1773

    (c)

    1784

    (d)

    1799

  44. நெப்போலியன் போன பார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் சூடிக் கொண்ட பட்டம் _______  என்பதாகும்.

    (a)

    இரண்டாம் நெப்போலியன்

    (b)

    மூன்றாம் நெப்போலியன்

    (c)

    ஆர்லியன்ஸின் கோமகன்

    (d)

    நான்காம் நெப்போலியன்

  45. கோட் டெ லா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______  ஆவார் .

    (a)

    சார்லஸ் ஃபூரியர்

    (b)

    எட்டியன்-கேப்ரியல் மோராலி

    (c)

    செயின்ட் சீமோன்

    (d)

    பகுனின்

  46. _______ க்குப் பின்  ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது 

    (a)

    ரஷ்ய-ஜப்பனியப் போர் 

    (b)

    இரண்டாம் அபினிப் போர் 

    (c)

    இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர் 

    (d)

    சீன-ஜப்பானியப் போர் 

  47. போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் பூரித்த நாடு ________ஆகும் .

    (a)

    ஸ்பெயின் 

    (b)

    பிரிட்டன் 

    (c)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

    (d)

    பிரான்ஸ் 

  48. ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச் சந்தித்தது  _______ என்னுமிடத்தில் ஆகும்.

    (a)

    போட்ஸ்டாம் 

    (b)

    எல் அலாமின்

    (c)

    ஸ்டாலின்கிராட் 

    (d)

    மிட்வே

  49. கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?

    (a)

    கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப்  பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.

    (b)

    முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்பபடும்.

    (c)

    ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.

    (d)

    ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.

  50. அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு _______ ல் நடைபெற்றது

    (a)

    பெல்கிரேடு

    (b)

    பெய்ஜிங்

    (c)

    பாண்டுங்  

    (d)

    பாலி

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus One mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment