12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli_real_escape_string() expects parameter 1 to be mysqli, bool given

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 316

   பகுதி-I

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


  20 x 1 = 20
 1. பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
  (i) கிழக்கிந்தியக் கழகம்
  (ii) சென்னை மகாஜன சங்கம்
  (iii) சென்னைவாசிகள் சங்கம்
  (iv) இந்தியச் சங்கம்

  (a)

  ii, i, iii, iv

  (b)

  ii, iii, i, iv

  (c)

  iii, iv, i, ii

  (d)

  iii, iv, ii, i

 2. கூற்று:தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்:1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் மிதவாத தேசியவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து.

  (a)

  கூற்று காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி,ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு ஆனால் காரணம் சரி 

 3. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

  (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
  (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
  (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
  (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
  (a)
  3 1 4 2
  (b)
  1 2 3 4
  (c)
  3 4 1 2
  (d)
  1 2 4 3
 4. தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கிய வருடம் 

  (a)

  1905

  (b)

  1907

  (c)

  1908

  (d)

  1907

 5. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

  (a)

  பி.பி.வாடிய

  (b)

  ஜவஹர்லால் நேரு

  (c)

  லாலா லஜபதிராய்

  (d)

  சி.ஆர்.தாஸ்

 6. கூற்று :தன்னாட்சிக்கான அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து மேலும் வலியுறுத்த முடியவில்லை.
  காரணம்: இந்திய தேசிய காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் என்று குழுக்களாகப்பிளவு பட்டிருந்தது.

  (a)

  கூற்று சரி காரணம் தவறு

  (b)

  கூற்று தவறு,காரணம் சரி 

  (c)

  கூற்று சரி காரணம் கூற்றிக்கான விளக்கம்

  (d)

  கூற்று சாய் காரணம் கூற்றிக்கான விளக்கம் இல்லை 

 7. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

  (a)

  இராஜாஜி

  (b)

  சித்தரஞ்சன் தாஸ்

  (c)

  மோதிலால் நேரு

  (d)

  சத்யமூர்த்தி

 8. இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?

  (a)

  காந்தி 

  (b)

  கோகலே 

  (c)

  நேரு 

  (d)

  சுபாஷ்

 9. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  (a)

  1920

  (b)

  1925

  (c)

  1930

  (d)

  1935

 10. சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கிய பெண்மணி யார்?

  (a)

  அன்னி பெசன்ட்

  (b)

  ஜான்சி ராணி

  (c)

  கல்பனா தத்

  (d)

  லட்சுமி 

 11. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியானவிடையைத் தேர்வு செய்க.

  பட்டியல் I    பட்டியல் II
  (அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
  (ஆ) சை சையது அகமது கான்  - 2.தயானந்த சரஸ்வதி
  (இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை 
  (ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
  (a)
  அ    ஆ  இ  ஈ 
  3 1 4 2
  (b)
  அ    ஆ  இ  ஈ 
  1 2 3 4
  (c)
  அ    ஆ  இ  ஈ 
  4 3 2 1
  (d)
  அ    ஆ  இ  ஈ 
  2 3 4 1
 12. லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.

  (a)

  1920

  (b)

  1916

  (c)

  1927

  (d)

  1919

 13. மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லதுசெத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்புவிடுத்தார்?

  (a)

  சட்டமறுப்பு இயக்கம்

  (b)

  ஒத்துழையாமை இயக்கம் 

  (c)

  வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

  (d)

  இவை அனைத்தும்

 14. "செய்" அல்லது "செத்துமடி" என்னும் முழக்கம் இட்டவர் யார்?

  (a)

  காந்தி

  (b)

  நேரு

  (c)

  ஜின்னா

  (d)

  இவற்றில் யாரும்இல்லை

 15. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

  1. இந்திய தேசிய காங்கிரஸ் கராச்சி கூட்டம்  - 1. 1948
  2. அரசமைப்புக்கான குறிக்கோள் - 2. 1956
  3. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கம் - 3. 1931 மார்ச்
  4. மூவர் ஆணையம் அமைத்தல் - 4. 1946 டிசம்பர் 13
  (a)
  3 4 1 2
  (b)
  4 3 2 1
  (c)
  3 4 2 1
  (d)
  1 3 2 4
 16. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?

  (a)

  அரிஸ்டாட்டில்

  (b)

  பிளாட்டோ 

  (c)

  ரோஜர் பேக்கன்

  (d)

  லாண்ட்ஸ்டெய்னர்

 17. பாஸ்டில் சிறை தகர்ப்பு  _____  இல்  நடந்தது. 

  (a)

  1798, ஜூன் 5

  (b)

  1789, ஜூலை 14

  (c)

  1789, நவம்பர் 11

  (d)

  1789, மே 1

 18. கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை ப் பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
  காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .

  (a)

  கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 19. கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகைஉற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன. 
  காரணம்: மிகைஉற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.   

  (a)

  கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது 

  (b)

  கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 20. கிளாஸ்நாஸ்ட் குறிப்பது ________ 

  (a)

  ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை

  (b)

  சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப்படுத்தப்படுவதை

  (c)

  சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை

  (d)

  பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை

  1. பகுதி-II

   எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  7 x 2 = 14
 21. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

 22. தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி எப்போது ஏற்பட்டது?

 23. பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

 24. அமெரிக்காவில் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவு பற்றி எழுதுக?

 25. மத ரீதியாக காலனித்துவ எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியவர் பெயரை பிடியிலிடு.

 26. லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

 27. உலக போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசுய இராணுவம் எவ்வாறு செயல்பட்டது?

 28. நாடு விடுதலை அடைந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.

 29. ஆறு  சரத்துகளைக் கொண்ட  1838ஆம்  ஆண்டின் மக்களின் பட்டயத்தைப்  பற்றி  எழுதுக. 

 30. கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டை விளக்குக.

 31.             பகுதி-III

   எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  7 x 3 = 21
 32. இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?

 33. பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.

 34. தென்னிந்தியாவில்தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

 35. முகமது இக்பால் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

 36. இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

 37. இந்திய அரசமைப்பு உருவாக்குவதில் காங்கிரஸ் நோக்கம் யாது?

 38. ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின்  பற்றிய பங்கை ஆராய்க.

 39. "செப்டம்பர் படுகொலைகள்" எதனால்  ஏற்பட்டது?

 40. தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு இராபர்ட் ஓவன் மேற்கொண்ட முன்னோ டி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.

 41. போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரகமாக எடுத்துக் கூறுக

  1. பகுதி-IV

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


  7 x 5 = 35
  1. இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?

  2. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  1. சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?

  2. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?

  1. டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.

  2. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO வளர்ச்சி பற்றி எழுதுக?

  1. பசுவதையும் வகுப்புவாத கலவரங்களையும்பற்றி விவரி.

  2. இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படைகலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?

  1. மெளண்ட் பேட்டன் பிரபுவின் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.

  2. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  1. இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .

  2. இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.

  1. பாஸ்டில்  சிறை  தகர்ப்பு முதல்  ரோபஸ்பியர்  கொல்லப்பட்டது வரையிலுமான  பிரெஞ்சுப்  புரட்சியின்  போக்கினை  வரைக.

  2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment