ஐரோப்பாவில் அமைதியின்மை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் _______ ஆகும்.

    (a)

    எல்பா    

    (b)

    செயின்ட் ஹெலனா

    (c)

    கார்சிகா 

    (d)

    வாட்டர்லூ

  2. பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்_______.

    (a)

    பிரான்ஸ்    

    (b)

    ஜெர்மனி

    (c)

    பெல்ஜியம்

    (d)

    இத்தாலி

  3. கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளை ப் பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர் .
    காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்த்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர் .

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  4. இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு ________. 

    (a)

    1815

    (b)

    1822

    (c)

    1824

    (d)

    1827

  5. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றை தெரிவு செய்துப் பொருத்துக

    (அ) புதிய கிறித்த வம் 1) வில்லியம் லவெட்
    (ஆ) எ நியூ வியூ ஆப் சொசை ட்டி 2) லூயி பிளாங்க்
    (இ) ரெவ்யூ டூ ப்ராக்ரஸ்   3) செயின்ட் சீமோன்
    (ஈ) மக்களின் பட்டயம் 4) இராபர்ட் ஓவன்
    (a)
    2 3 4 1
    (b)
    3 4 2 1
    (c)
    1 4 3 2
    (d)
    3 1 2 4
  6. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

    (a)

    1842

    (b)

    1848

    (c)

    1867

    (d)

    1871

  7. கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல .
    காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.

    (a)

    கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  8. சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற செய்தித்தாள் ________  ஆகும்.

    (a)

    ஏழை மனிதனின் பாதுகாவலன்

    (b)

    பட்டயம்

    (c)

    வடக்கத்திய நட்சத்திரம்

    (d)

    இல் ரிசார்ஜிமென்டோ

  9. நெப்போலியன் போன பார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் சூடிக் கொண்ட பட்டம் _______  என்பதாகும்.

    (a)

    இரண்டாம் நெப்போலியன்

    (b)

    மூன்றாம் நெப்போலியன்

    (c)

    ஆர்லியன்ஸின் கோமகன்

    (d)

    நான்காம் நெப்போலியன்

  10. கோட் டெ லா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______  ஆவார் .

    (a)

    சார்லஸ் ஃபூரியர்

    (b)

    எட்டியன்-கேப்ரியல் மோராலி

    (c)

    செயின்ட் சீமோன்

    (d)

    பகுனின்

  11. கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
    காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  12. இரண்டாம் சர்வதேசம்  ________  நகரில் துவக்கப்பட்டது.

    (a)

    பாரிஸ்    

    (b)

    பெர்லின்

    (c)

    லண்டன்

    (d)

    ரோம் 

  13. இளம் இத்தாலி இயக்கம் ________  ஆண்டு துவக்கப்பட்டது.

    (a)

    1822

    (b)

    1827

    (c)

    1831

    (d)

    1846

  14. பார்மா , மொடினா , டஸ்கனி ஆகிய பகுதிகள் ________ க்குப் பிறகு பியட்மாண் ட்-சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.

    (a)

    பொதுவாக்கெடுப்பு

    (b)

    சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு

    (c)

    சால்ஃபரினோ  உடன்ப டிக்கை

    (d)

    வில்லா ஃப்ராங்கா உடன்படிக்கை

  15. “இரு உலகங்களின் நாயகன்” என  கொண்டாடப்பட்டவர் ________  ஆவார். 

    (a)

    சார்லஸ் ஆல்பிரட்

    (b)

    பிஸ்மார்க்

    (c)

    மூன்றாம் நெப்போலியன்

    (d)

    கரிபால்டி

  16. _______  இடையே ஏழு வாரப் போர் நடந்தது.

    (a)

    டென்மார்க் , பிரஷ்யா

    (b)

    பியட்மாண் ட்-சார்டினியா , ஆஸ்திரியா

    (c)

    பிரான்ஸ், பிரஷ்யா

    (d)

    ஆஸ்திரியா , பிரஷ்யா

  17. பிராங்கோ -பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது ________  ஆகும்

    (a)

    காஸ்டெய்ன் மாநாடு

    (b)

    எம்ஸ் தந்தி

    (c)

    பிரேக் உடன்படிக்கை

    (d)

    அல்சேஸ் ,லொரைன் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை

  18. ஜெர்மன் தேசத்திற்கு தொடர்  சொற்பொழிவுகளை வழங்கியவர் ________  ஆவார் .

    (a)

    ஜோஹன் வான் ஹெர்டர்

    (b)

    பிரைட்ரிக் ஷெலிகெல்

    (c)

    J.G. ஃபிக்ட்

    (d)

    ஆட்டோ வான் பிஸ்மார்க்

  19. கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார் .
    காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  20. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றைத் தெரிவுசெய்து பொருத்துக

    (அ) மெட்டர் னிக் 1) பியட்மாண்ட்- சார்டினியாவின் ஆட்சியாளர்
    (ஆ) பத்தாம் சார்லஸ் 2) பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்
    (இ) கிராமோன்ட் 3) பிரெஞ்சு மன்னர்
    (ஈ) சார்லஸ் ஆல்பர்ட் 4) ஆஸ்திரிய-ஹங்கேரியின் பிரதம அமைச்சர்
    (a)
    1 3 4 2
    (b)
    4 2 1 3
    (c)
    4 1 2 3
    (d)
    4 3 2 1

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Europe in Turmoil One Mark Question with Answer )

Write your Comment