அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கேத்தோடு கதிர்களின் மின்னூட்டம்_______.

    (a)

    நேர்குறி

    (b)

    எதிர்குறி

    (c)

    நடுநிலை

    (d)

    வரையறுக்கப்படவில்லை

  2. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 விலிருந்து n = 1 க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்______.

    (a)

    1:2:3

    (b)

    1:4:9

    (c)

    3:2:1

    (d)

    4:9:36

  3. 27Al அணுக்கரு ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கரு ஆரம் ஏறக்குறைய_______.

    (a)

    2.4

    (b)

    1.2

    (c)

    4.8

    (d)

    3.6

  4. Mp என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M(N, Z) ஆனது: (இங்கு c என்பது ஒளியின் வேகம்)

    (a)

    M(N, Z) = NMn + ZMp - BC2

    (b)

    M(N, Z) = NMn + ZMp + BC2

    (c)

    M(N, Z) = NMn + ZMp - B/C2

    (d)

    M(N, Z) = NMn + ZMp + B/C2

  5. t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம் \(\left( t=\frac { 1 }{ 2 } { T }_{ \frac { 1 }{ 2 } } \right) \) ஆகும் போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை________

    (a)

    \(\frac { { N }_{ 0 } }{ 2 } \)

    (b)

    \(\frac { { N }_{ 0 } }{ \sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { { N }_{ 0 } }{ 4 } \)

    (d)

    \(\frac { { N }_{ 0 } }{ 8 } \)

  6. 5 x 2 = 10
  7. ஐசோடோன்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.

  8. அனைத்து அணுக்கருக்களின் (Z>10) அணுக்கரு அடர்த்தி மாறிலி எனக் காட்டுக.

  9. ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களை அது ஏன் உமிழ்வதில்லை?

  10. கியூரி-வரையறுக்கவும்.

  11. நியூட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவை எந்த துகள்களினால் ஆனவை?

  12. 5 x 3 = 15
  13. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை தொடர்களை விளக்குக.

  14. பீட்டா சிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  15. அ) முதல் போர் சுற்றுப்பாதையில், எலக்ட்ரானின் திசைவேம் ஒளியின் திசைவேகம் இடையேயான தகவு பரிமாணம் இல்லாத ஒரு எண் என்பதை நிறுவுக.
    ஆ) போர் அணு மாதிரியில் அடிநிலை, முதல் கிளர்வு நிலை மற்றும் இரண்டாவது கிளர்வு நிலைகளில் உள்ள எலக்ட்ரான்களின் திசைவேகங்களைக் கணக்கிடுக.

  16. \(_{ 79 }^{ 197 }{ Au }\) அணுக்கருவின் ஆரத்தைக் கணக்கிடுக.

  17. நிறை எண் A கொண்ட அணுக்கருவின் அடர்த்தியைக் கணக்கிடுக.

  18. 4 x 5 = 20
  19. போர் அணு மாதிரியில், நிலை மாற்றங்களின் (transitions) அதிர்வெண் பின்வரும் சமன்பாட்டினால் அறியப்படுகிறது. \(v=Rc\left( \frac { 1 }{ { n }^{ 2 } } -\frac { 1 }{ { m }^{ 2 } } \right) \), இங்கு n < m பின்வரும் நிலை மாற்றங்களைக் கருதுக.

    நிலை மாற்றங்கள் m⟶n
    1 3⟶2
    2 2⟶1
    3 3⟶1

    இந்நிலை மாற்றங்களின் அதிர்வெண் கூட்டல் விதிக்கு (இவ்விதி ரிட்ஸ் சேர்க்கைத் தத்துவம் என்றழைக்கப்படுகிறது) உட்படும் என்பதை நிறுவுக.

  20. ரேடான் உள்ள சிறு அளவு கதிரியக்கப் பொருள் 60% சிதைவடைய ஆகும் காலத்தைக் கணக்கிடுக. (ரேடானின் T1/2 = 3.8 நாட்கள்)

  21. கீழடி என்ற சிறிய கிராமம் தமிழ்நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிகளில் (படம்) ஒன்றாகும். இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. (தங்க நாணயங்கள், மண்கலன்கள், மணிகள், இரும்புக் கருவிகள், அணிகலன்கள் மற்றும் மரக்கரித்துண்டு உள்ளிட்ட) பல தொல் கைவினைப் பொருள்கள்
    கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வைகை ஆற்றங்கரைகளில் பண்டைய நாகரிகம் செழித்திருந்தது என்பதற்கான தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. இப்பொருள்களின் காலத்தைக் கணிப்பதற்கு, (படத்தில் கொடுக்கப்பட்டுள்ள) 200 g கரியானது கார்பன் காலக்கணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் \(_{ 6 }^{ 14 }{ C }\) இன் செயல்பாடு 38 சிதைவுகள்/s எனில், அக்கரியின் வயதைக் கணக்கிடுக.

  22. 1kg நிறையுள்ள \(_{ 92 }^{ 235 }{ U }\) பிளவுறும் போது வெளிப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Atomic and Nuclear Physics Model Question Paper )

Write your Comment