நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் \(\left| \frac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \)என்ன?

    (a)

    \(\cfrac { 1 }{ 5 } \)

    (b)

    \(\cfrac { 25 }{ 11 } \)

    (c)

    5

    (d)

    \(\cfrac { 11 }{ 25 } \)

  2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு ______.

    (a)

    4 mC

    (b)

    8 mC

    (c)

    5 mC

    (d)

    7 mC

  3. பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

    (a)

    1 = 4 < 2 < 3

    (b)

    2 = 4 < 3 < 1

    (c)

    2 = 3 < 1 < 4

    (d)

    3 < 1 < 2 < 4

  4. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

    (a)

    Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

    (b)

    Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

    (c)

    C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

    (d)

    Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

  5. q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை ______.

    (a)

    முன்பை விடக் குறைவாக இருக்கும் 

    (b)

    அதேயளவு இருக்கும் 

    (c)

    முன்பை விட அதிகமாக இருக்கும் 

    (d)

    சுழி 

  6. கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____

    (a)

    சுழி

    (b)

    5 μCm-2

    (c)

    20 μCm-2

    (d)

    8 μCm-2

  7. 12 V மின்கலனில் நேர்மின்வாய் புவியோடு இணைக்கப்படும் எனில் எதிர் மின்வாய் பெற்றிருக்கும் மின்னழுத்தம்_____

    (a)

    -6 V

    (b)

    +12 V

    (c)

    சுழி

    (d)

    -12V

  8. 1 x 1 = 1
  9. இரு மின்னூட்டங்களுக்கான நிலைமின்னாற்றல் அம்மின்னூட்டங்களின் _______ நேர்த்தகவில் அமையும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெருக்கற்பலன் 

  10. 1 x 2 = 2
  11. கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகரத்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
    காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  12. 1 x 2 = 2
  13. (a) மின்புலம்
    (b) மின்னூட்ட விசை
    (c) மின்னழுத்தம்
    (d) இருமுனை திருப்புத்திறன்

  14. 1 x 2 = 2
  15.   வரிசை I    வரிசை II
    A புறமின்புலத்தில் கடத்தி ஒன்றின் உள்ளே 1 மின்புலம் = 0
    B மின் இருமனையின் மையத்தில் 2 திருப்பு விசை = 0
    C சமநிலை ஒன்றில் மின் இருமுனை 3 நிலையாற்றல் = 0
    D மின்புலத்தில் செங்குத்தாக வைக்கப்படும் மின்இருமுனை  4 மின்னழுத்தம் = 0
  16. 2 x 1 = 2
  17. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க.
    I. மின்விசைக்கோடுகள் சம மின்னழுத்த பரப்பில் செங்குத்தாகவே இருக்கும்
    II. இரு வேறு சம மின்னழுத்த பரப்புகள் ஒன்றை ஒன்று வெட்டாது.
    III. சம மின்னழுத்த பரப்பின் ஒரு புள்ளியில் வரையும் தொடுகோடு அப்புள்ளியின் மின்புலத்திசையை குறிக்கும்.
    (a) I மட்டும்
    (b) II மட்டும்
    (c) I மற்றும் II
    (d) I, II மற்றும் III

  18. மின்தேக்கியில் சேமித்து வைக்கும் ஆற்றல் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) இவற்றில் எந்த கூற்று தவறு
    I. மின்னூட்டம் சேமிக்க செய்யும் வேலை நிலைமின்னாற்றலாக கடத்தியில் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) என உள்ளது
    II. மின்தேக்கியில் மொத்த மின்னூட்டம் Q
    III. தட்டு ஒன்றின் மொத்த மின்னூட்ட மதிப்பு Q
    (a) I மட்டும்
    (b) II மட்டும்
    (c) I மற்றும் II
    (d) I, II மற்றும் III

  19. 5 x 2 = 10
  20. நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு

  21. ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?

  22. உராய்வு மின்னேற்றம் என்றால் என்ன?

  23. மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருள்களை வேறுபடுத்துக.

  24. ஒவ்வொன்றும் 9 pF மின்தேக்குத்திறன் கொண்ட மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுப்பின் மொத்த மின்தேக்குத்திறன் யாது? தொகுப்பானது 120V மூலத்துடன் இணைக்கப்படும் பொது, ஒவ்வொரு மின்தேக்கியின் இடையேயும் உள்ள மின்னழுத்த வேறுபாடு யாது?

  25. 3 x 3 = 9
  26. படத்தில் இரு புள்ளி மின்துகள்கள் q1 மற்றும் q2 நிலையாக உள்ளன.

    அவை 1 m இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பின்வரும் நேர்வுகளுக்கு அவற்றுக்கு இடையே செயல்படும் விசையை கணக்கிடுக.
    (அ) q1 = +2 μC மற்றும் q2 = +3 μC
    (ஆ) q1 = +2 μC மற்றும் q2 = -3 μC
    (இ) q= +2 μC மற்றும் q2 = -3 μC நீரில் (εr = 80) வைக்கப்படும்போது

  27. பல்வேறு மின்துகள் அமைப்புகளுக்கான மின்புலக் கோடுகள் பின்வரும் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.


    (i) படம் (அ) வில் உள்ள q1 மற்றும் q2 ஆகிய இரு மின்துகள்களின் குறியீடுகளை அடை யாளம் கண்டு,\(\left| \frac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \) ன் விகிதத்தைக் காண்க.
    (ii) படம் (ஆ) வில் உள்ள இரு நே ர் மின்துகள்களின் மின்னூட்ட விகிதத்தைக் கணக்கிடுக. மேலும் A, B, C ஆகிய புள்ளிகளில் மின்புலத்தின் வலிமையைக் கணக்கிடுக.
    (iii) படம் (இ) ல் மூன்று மின்துகள்களின் மின்புலக் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. q2 = - 20 nC எனில், q1 மற்றும் q3 ன் மின்னூட்ட மதிப்புகளைக் கணக்கிடுக.

  28. நிலை மின் சமநிலையில் உள்ள கடத்திகளின் பல்வேறு பண்புகளை விவாதிக்கவும்.

  29. 3 x 5 = 15
  30. x – ஆயத் தொலைவின் சார்பாக மட்டும் குறிக்கப்படும் மின்னழுத்தம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. x ன் சார்பாக மின்புலத்தை வரைந்து காட்டுக

  31. நீர் மூலக்கூறு ஒன்றின் மின் இருமுனைத் திருப்புத்திறன் 6.3 × 10-30 Cm. 1022 நீர் மூலக்கூறுகளைக் கொண்ட மாதிரி (sample) ஒன்றிலுள்ள அனைத்து இருமுனைத் திருப்புத்திறன்களும் எண்மதிப்பு 3 × 105 NC-1 கொண்ட புற மின்புலத்துடன் ஒருங்கமைந்துள்ளன. அனைத்து நீர் மூலக்கூறுகளையும் θ = 0˚ லிருந்து 90˚ க்கு சுழலச் செய்ய தேவைப்படும் வேலை எவ்வளவு?

  32. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின்தேக்கி நிலையமைப்பில்
    (அ) ஒவ்வொரு மின்தேக்கியிலும் சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பைக் காண்க.
    (ஆ) ஒவ்வொன்றின் குறுக்கேயும் உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க.
    (இ) மின்தேக்கி ஒவ்வொன்றிலும் சேமிக்கப்படும் ஆற்றலைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Electrostatics Model Question Paper )

Write your Comment