Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

  2. கூலூம் விதியின் வெக்டர் வடிவத்தை எழுதி அதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் எதைச் சுட்டுகின்றது என்பதைக் கூறுக.

  3. மின்புலம் – வரையறு.

  4. மின்பாயம் – வரையறு.

  5. விடுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன் என்றால் என்ன? அவை எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ?

  6. மின்னழுத்த வேறுபாட்டின் அலகினை வரையறு (அ) வோல்ட் வரையறு

  7. ஒரு மின் இருமுனையின் மின்னூட்டங்கள் 2 x 10-6 C மற்றும் -2 x 10-6 C இரண்டும் 1cm. தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மின் இருமுனையால்
    அ) அச்சுக்கோட்டில் அதன் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி
    ஆ) நடுவரைக் கோட்டில் மையத்திலிருந்து 1m தொலைவில் உள்ள புள்ளி ஆகியவற்றில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக.

  8. கிர்க்காஃப்பின் மின்னழுத்த வேறுபாட்டு விதியைக் கூறு.

  9. வெப்ப தடையகம் [Themistor] என்றால் என்ன?

  10. காந்தமாக்கு புலம் என்றால் என்ன?

  11. டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் 2 சுற்றுகள், 5சுற்றுகள் மற்றும் 50 சுற்றுகள் கொண்ட வெவ்வேறு தடிமனுடைய கம்பிகள் எதற்காக பயன்படுகின்றன?

  12. பிளமிங் வலக்கை விதியைக் கூறுக

  13. மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு என்றால் என்ன?

  14. மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.

  15. மின்காந்த அலை ஒன்றின் மின்புலச் சமன்பாடு \({ E }_{ y }=30sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
    (a) அலைநீளம்
    (b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு

  16. மைக்ரோ அலையின் பயன்கள் யாவை?

  17. மைக்ரோ அலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  18. ஒளிமூலமும் அதன் பிம்பமும் எவ்வாறு ஓரியல் மூலங்களாகச் செயல்படுகின்றன என்பதைச் சுருக்கமாக விவரி.

  19. தளவிளைவுக் கோணம் என்றால் என்ன? தளவிளைவுக் கோணத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.

  20. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் நிற ஒளி மூலங்கள் ஓரியல் மூலங்களாகாது ஏன்? 

  21. உலோகங்களில்  கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளன?

  22. அயனியாக்க ஆற்றல் மற்றும் அயனியாக்க மின்னழுத்தம் – வரையறுக்கவும் .

  23. கதிரியக்கம் என்றால் என்ன ?

  24. ஒரு குறைகடத்தி பொருளில் எலக்ட்ரான்துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  25. கம்பிவழி மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பை வேறுபடுத்துக. அவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் நெடுக்கத்தைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Physics - Full Portion Two Marks Question Paper )

Write your Comment