காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள பகுதி அல்லது வெளியில், அக்காந்தத்தின் தாக்கம் வேறொரு காந்தத்தை வைக்கும் போது உணரப்பட்டால், அக்காந்தத்தை சுற்றியுள்ள பகுதி அல்லது வெளி _________ எனப்படும்.

    (a)

    காந்ததூண்டல் 

    (b)

    காந்த துருவத்தளம் 

    (c)

    மின்புலம் 

    (d)

    காந்தப்புலம் 

  2. லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு மற்றும் திசை __________

    (a)

    \(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)

    (b)

    \(\ { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )\)

    (c)

    \(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { E } )\)

    (d)

    \(\\ \overrightarrow { F } =q(\overrightarrow { V } .\overrightarrow { B } )\)

  3. காந்த மிதப்பு இரயில் வண்டியில் _________ ஜோடி காந்தங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    (a)

    ஒன்று 

    (b)

    மூன்று 

    (c)

    இரண்டு 

    (d)

    நான்கு 

  4. ஒரு மின்துகளானது சீரான காந்தப்புலத்திற்கு செங்குத்தாக செல்லுமாயின் அத்துகள் செல்லும் பாதை ________ 

    (a)

    நேர்பாதை 

    (b)

    வட்டப்பாதை 

    (c)

    நீள்வட்டப்பாதை 

    (d)

    பரவளையப்பாதை 

  5. ஒரு ஆல்பா துகளானது 0.45m ஆரம் கொண்ட ஒரு வட்டப் பாதையில் B = 1.2Wb/m2 காந்தப் புலத்தில், 2.6 x 107 m/s வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படியெனில் ஆல்பாதுகள் சுற்றும் நேரம் எவ்வளவு?

    (a)

    1.1 x 10-5s

    (b)

    1.09 x 10-6s

    (c)

    1.08 x 10-7s

    (d)

    1.1 x 10-8s

  6. 5 x 2 = 10
  7. வலதுகை பெருவிரல் விதியை தருக.

  8. நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.

  9. எதனால் பாஸ்பர் வெண்கல இழை கம்பிச்சுருளை தொங்கவிடப் பயன்படுத்தப்படுகிறது?

  10. புவி ஒரு சீரற்ற காந்தப்புலத்தைப் பெற்றிருந்தாலும், உங்கள் ஆய்வுக் கூடத்தில் தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தம் இடப்பெயர்ச்சி இயக்கத்தை மேற்கொள்ளாமல், சுழற்சி இயக்கத்தை மட்டுமே மேற்கொள்கிறது. ஏன்?

  11. இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.

  12. 5 x 3 = 15
  13. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம்?

  14. வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும் ஏன்?

  15. வோல்ட் மீட்டரின் மின்தடை அதிகமாக இருக்க வேண்டும் ஏன்?

  16. ஒரு கடத்தியை காந்தப்புலத்தில் வைக்கும் போது அதில் உருவாகும் விசையின் திசை என்ன காரணிகளைக் கொண்டு அமையும்?

  17. ஒரு தனித்த செம்புக் கம்பிச் சுருளை கால்வனோ மீட்டருடன் இணைக்கவும். ஒரு சட்டக் காந்தத்தை செம்புக் கம்பிச் சுருளையுடன் அழுத்தும் போது என்ன மாறுதல் ஏற்படும்?

  18. 4 x 5 = 20
  19. காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசைக்கான கோவையை வருவி.

  20. நீண்ட நிலையான மின்னோட்டம் பாயும் இரு இணை கடத்திகளுக்கிடையே ஏற்படும் விசையின் மதிப்பிற்கான கோவையைப் பெறுக.

  21. ஒரு புரோட்டான் மற்றும் ∝- துகள் சீரான காந்தப் புலத்தில் செங்குத்தாக ஒரே வேகத்தில் செல்கிறது. புரோட்டான் 5 சுழற்சிகளை 25μ  விநாடிகளில் சுற்றுகிறது. ∝- துகளின் அலைவு நேரத்தைக் கணக்கிடு.

  22. சுற்றுகளின் எண்ணிக்கை 2:3:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று டேன்ஜன்ட் கால்வனோமீட்டர்கள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு மின்னோட்டம் செலுத்தப்படும் போது முறையே 30o, 45o, 60o விலகல்கள் ஏற்படுகின்றன. கம்பிச் சுருள்களின் ஆரங்களின் விகிதத்தைக் கணக்கிடு.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Magnetism And Magnetic Effects Of Electric Current Model Question Paper )

Write your Comment