ஒளியியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    2 x 1 = 2
  1. பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?

    (a)

    சிவப்பு

    (b)

    மஞ்சள்

    (c)

    பச்சை

    (d)

    ஊதா

  2. படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?

    (a)

    கீழ்நோக்கி இடம்பெயரும்

    (b)

    மேல்நோக்கி இடம்பெயரும்

    (c)

    அங்கேயே தொடர்ந்து இருக்கும்

    (d)

    கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல

  3. 4 x 2 = 8
  4. கோளக ஆடி ஒன்றிற்கான கார்ட்டீசியன் குறியீடு மரபுகளைக் கூறுக.

  5. கானல் நீர் மற்றும் குளிர் மாயத்தோற்றம் (looming) என்றால் என்ன?

  6. ஒளிச்செறிவு (அல்லது) வீச்சுப் பகுப்பு என்றால் என்ன?

  7. அடர்மிகு ஊடகம் ஒன்றில் பட்டு ஒளி எதிரொளிப்பு அடையும் போது, அதன் கட்டத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படும்?

  8. 5 x 3 = 15
  9. 15.0 cm குவியத்தூரம் கொண்ட குழிஆடியின்  முன்னே 20.0 cm தொலைவில் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது.
    அ) தெளிவான பிம்பத்தினைப் பெற, குழி ஆடியிலிருந்து திரையை எவ்வளவு தொலைவில் வைக்க வேண்டும்?
    ஆ) பிம்பத்தின் தன்மை என்ன?

  10. கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நேர்வுகளில் புள்ளிப்பொருள் 0 வின் பிம்பம் எங்கு தோன்றும் எனக் கண்டுபிடிக்க. பரப்பின் வளைவு ஆரம் R = 15 cm, n1 = 1 மற்றும் n2 = 2 எனக் கொள்க.
    நேர்வு i) பரப்பிற்கு இடமாக 10 cm தொலைவில் 0 உள்ளபோது.
    நேர்வு ii) பரப்பிற்கு இடமாக 30 cm தொலைவில் 0 உள்ளபோது.

  11. லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாட்டை வருவித்து, அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

  12. யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.

  13. நிறமாலைமானியைக் கொண்டு, முப்பட்டகப் பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் காணும் சோதனையை விவரி.

  14. 3 x 5 = 15
  15. யங் இரட்டைப்பிளவு ஆய்வில், இரண்டு பிளவுகள் 0.15 mm தொலைவில் பிரித்துவைக்கப்பட்டுள்ளன, அப்பிளவுகளிலிருந்து 2 m தொலைவில் திரை அமைந்துள்ளது. பயன்படுத்தப்படும் ஒளியின் அலை நீளம் 450 nm எனில், பின்வருவனவற்றைக் கண்டுபிடி
    (i) மையப் பொலிவுப்பட்டையிலிருந்து, இரண்டாவது பொலிவுப்பட்டையின் தொலைவு மற்றும் மூன்றாவது கரும்பட்டையின் தொலைவு ஆகியவற்றைக் காண்க.
    (ii) பட்டை அகலத்தைக் காண்க
    (iii) பிளவுகளை விட்டு, திரையைத் தூரமாக நகர்த்தும் போது குறுக்கீட்டுப் பட்டை அமைப்பில் என்ன மாற்றம் நிகழும்?
    (iv) இம்முழு அமைப்பையும் 4/3 ஒளிவிலகல்எண் கொண்ட நீரில் மூழ்கவைக்கும் போது, பட்டை அகலத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?

  16. 5000 Å அலை நீளமுடை ய ஒற்றை நிற ஒளி, ஒற்றைப்பிளவின் வழியே சென்று விளிம்பு விளைவடை ந்து படத்தில் காட்டியுள்ளவாறு மையப்பெருமத்தை ஏற்படுத்துகிறது. விளிம்பு விளைவை ஏற்படுத்தும் பிளவின் தடிமனைக் காண்க.

  17. ஈரில்லாத் தொலைவில் பிம்பம் தோன்றும் கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறன் 100. பொருளருகு லென்சின் குவியத் தொலைவு 0.5 cm மற்றும் குழலின் நீளம் 6.5 cm என இருந்தால், கண்ணருகு லென்சின் குவியத்தூரத்தின் மதிப்பு என்ன? 

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - ஒளியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Optics Model Question Paper )

Write your Comment