All Chapter 5 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 04:00:00 Hrs
Total Marks : 260
    Answer All The Following Questions:
    52 x 5 = 260
  1. கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.

  2. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  3. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  4. கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  5. பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டினை தயார் செய்க.
    (அ) முருகன் ரூ 80,000 பணத்துடன் தொழிலைத் தொடங்கினார் .
    (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ 30,000.
    (இ) ரொக்கமாக வழங்கிய சம்பளம் ரூ 5,000.
    (ஈ) குமாரிடமிருந்து சரக்கு வாங்கியதற்கு, பணம் வைப்பு இயந்திரம் மூலமாக செலுத்தப்பட்டது ரூ 5,000.
    (உ) கூடுதல் முதல் இட்டது ரூ 10,000.

  6. விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஹரியின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்குரிய குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

     2017
     ஜனவரி 
       ரூ 
    1  தொழில் தொடங்குவதற்கு இட்ட தொகை    50,000
    2  சுபாஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது     20,000
    4  இராமுவிற்கு, கடனுக்கு சரக்கு விற்றது 15,000
    8  இராமு காசோலை மூலம் கடனைத் தீர்த்தார்   
    10  இராமுவிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில் வசூலுக்கு செலுத்தப்பட்டது.  
    15  விளையாட்டு உபகரணங்கள் கோபாலிடமிருந்து
    கடனுக்கு வாங்கியது
    10,000
    18  கட்டட உரிமையாளரான ஹரிக்கு வாடகைச் செலுத்தியது 1,500
    20  கோபாலிற்கு 5% தள்ளுபடியுடன் பணம் கொடுத்து கணக்கு தீர்க்கப்பட்டது   
    25  சுபாஷிற்கு செலுத்தியது ரூ 4,750 தள்ளுபடி பெற்றது  250
    28  ரொக்கம் வழங்கப்பட்ட கூலி ரூ 500; மின் கட்டணம் ரூ 3,000 மற்றும் வியாபாரச் செலவுகள் ரூ 1,000  
  7. குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

    ரொக்கம் ரூ 2,000
    இயந்திரம் ரூ 50,000
    அறைகலன் ரூ 5,000
    கடனீந்தோர்கள் ரூ 13,000
    கடனாளிகள் ரூ 18,000
  8. ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

     ஜனவரி
    2018 
       ரூ 
     1  ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது    80,000
    2  வங்கியில் செலுத்திய ரொக்கம் 40,000
    3  ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 5,000
    4  லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது 10,000
    5 ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  

     

  9. 2017, ஏப்ரல் 1 அன்று குமரன் என்பவரது ஏடுகளில் பின்வரும் இருப்புகள் இருந்தன.
    சொத்துகள்: ரொக்கம் ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.40,000; ரோஹித் என்பவரிடமிருந்து தொகை பெற வேண்டியது ரூ.10,000; அறைகலன் ரூ.10,000; பொறுப்புகள்: அனுஷ் என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.40,000; குமரன் முதல் கணக்கு ரூ.1,20,000 மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடக்கப்பதிவுகளை பேரேட்டில் எடுத்தெழுதுக.

  10. பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாக பேரேட்டில் எடுத்து எழுதவும்.

    2017 ஜூலை 1 சங்கர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.1,00,000
    5 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    9 கூலி ரொக்கமாக கொடுத்தது ரூ.6,000
    19 சம்பளம் ரொக்கமாக கொடுத்தது ரூ.8,000
    23 விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது ரூ.4,000
  11. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

    2018
    ஜனவரி
      ரூ
    1 இரமெஷிடமிருந்து பெற்றது  1,60,000
    5 சரக்கு வாங்கியது  60,000
    6 சுரேஷிற்கு விற்பனை செய்தது  30,000
    15 தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது  40,000
    18 கணேசனுக்கு விற்பனை செய்தது  50,000
    20 சொந்தப் பயனுக்கு எடுத்தது  18,000
    25 கழிவு பெற்றது  20,000
    30 வாடகை செலுத்தியது  5,000
    31 ஊதியம் வழங்கியது  10,000
  12. பின்வரும் விவரங்களிலிருந்து திரு. குமார் கணக்கினை தயார் செய்யவும்.

    2017 மார்ச் 1 குமார் கணக்கின் வரவு இருப்பு ரூ.6000
    2017 மார்ச் 5 குமாருக்கு செலுத்திய ரொக்கம் ரூ.2900
      அவர் அளித்த தள்ளுபடி ரூ.100
    2017 மார்ச் 7 குமாரிடமிருந்து கடன் பேரில் சரக்குகளை வாங்கியது ரூ.12000
    2017 மார்ச் 10 குமாருக்கு காசோலை மூலம் பணம் செலுத்தியது ரூ 6500
  13. பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    முதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000
    கூலி 800 கணிப்பொறி 20,000
    எடுப்புகள் 4,000 விற்பனை 72,000
    கொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200
  14. பின்வரும் இருப்பாய்வினை சரி செய்யவும்.

    விவரம் பற்று இருப்புகள் ரூ வரவு இருப்புகள் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 1,00,000  
    சம்பளம் 36,000  
    கடனீந்தோர் 1,32,000  
    வங்கி 35,000  
    உள் ஏற்றிச் செல் செலவு 18,000  
    பெற்ற வாடகை 9,000  
    அளித்த தள்ளுபடி 6,000  
    கொள்முதல் 3,48,000  
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000  
    கடனாளிகள்   45,000
    வெளித்தூக்குக் கூலி   15,000
    முதல்   1,63,000
    உள் திருப்பம்   9,000
    பெற்ற தள்ளுபடி   12,000
    வியாபாரச் செலவுகள்   18,000
    விற்பனை   3,68,000
    கட்டடம்   1,14,000
    மொத்தம் 7,44,000 7,44,000
  15. அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

      ரூ.   ரூ.
    கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600
    கடனாளிகள் 20,000 முதல் 40,000
    வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000
    வாடகைப் பெற்றது 5,000 மோட்டார் வாகனம் 5,000
    நன்கொடை அளித்தது 2,500 புனையுரிமை  2,000
    பெற்ற கடன் 42,000 நற்பெயர் 3,000
    காப்பீடு செலுத்தியது 1,600    
  16. பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31.12.2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.

      ரூ.   ரூ.
    முதல் 2,20,000 பழுதுபார்ப்புச் செலவு 2,400
    எடுப்புகள் 24,000 அலுவலக மின்கட்டணம் 2,600
    அறைகலன் 63,500 அச்சு எழுதுபொருள் செலவு 2,700
    தொடக்கச் சரக்கிருப்பு 62,050 வங்கிக் கடன் 7,500
    பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு 9,500 கணிப்பொறி 25,000
    செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு 88,100 கைரொக்கம் 15,000
    கொள்முதல் 88,100 கைரொக்கம் 15,000
    விற்பனை 1,35,450 வங்கி ரொக்கம் 27,250
    தள்ளுபடி அளித்தது 7,100 பொதுச் செலவுகள் 7,100
    தள்ளுபடி பெற்றது 3,500 கடனீந்தோர் 7,600
  17. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மகேஷின் உள் திருப்ப ஏட்டில் பதிவு செய்க.

    2017
    ஏப்ரல் 6
    தரம் குறைவு என சங்கர் ஒரு சட்டை ரூ. 150 வீதம் 30 சட்டைகளை திருப்பி அனுப்பினார்.
    ஏப்ரல் 8 ஆணைப்படி இல்லாததால் அமர் தையலகம், ஒரு பனியன் ரூ. 100 வீதம் 10 பனியன்களை திருப்பி அனுப்பியது
    ஏப்ரல் 21 ஆணையின் படி இல்லையென பிரேமா துணியகம், ஒன்று ரூ. 200 வீதம்,
    12 சுடிதார்களை திருப்பி அனுப்பியது
  18. பின்வரும் நடவடிக்கைகளை 2017 டிசம்பர் மாதத்திற்கான, கண்ணனின் கொள்முதல் மற்றும் விற்பனை ஏடுகளில் பதிவு செய்க.

    2017   ரூ
    டிசம்பர் 1 சுமதியிடமிருந்து சரக்கு கடனுக்கு வாங்கியது 17,800
    டிசம்பர் 4 இராணிக்கு கடனுக்கு சரக்கு விற்றது 15,200
    டிசம்பர் 6 மணியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது 7,000
    டிசம்பர் 10 சரண்யாவிற்கு கடனுக்கு சரசரக்கு விற்றது 12,500
    டிசம்பர் 17 ஹூசேனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது 13,250
    டிசம்பர் 21 இரகுநாதனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 10,000
    டிசம்பர் 26 ஷியாமிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 3,000
  19. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
    5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
    12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
    18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
    20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
  20. திரு.ராஜசேகரின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்கணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2017 மே 10 இராமனிடமிருந்து வாங்கிய சரக்கு ரூ.75,000
    2017 மே 14 இராமனுக்குத் திருப்பிய சரக்கு ரூ.2,500
    2017 மே 18 சேகரிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.50,000
    2017 மே 20 பிரதீப் நமக்கு சரக்கு விற்றது ரூ.20,000
    2017 மே 24 சரக்கு அனுப்புகையில் சேதம் ஏற்பட்டதால்
    சேகருக்கு அனுப்பிய பற்று குறிப்பு
    ரூ.5,000
  21. 2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    மே   ரூ 
    1 கையிருப்பு ரொக்கம்  40,000
    5 ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம்  4,000
    7 கூலி ரொக்கமாக  கொடுத்தது 2,000
    10 சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 6,000
    15 ரொக்கத்திற்கு விற்பனை செய்த 9,000
    18 கணிப்பொறி வாங்கியது 15,000
    22 சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது 5,000
    28 சம்பளம் கொடுத்தது 2,500
    30 வட்டிப் பெற்றது 500
  22. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

    2017 ஜூலை    ரூ
    1 காசாளரிடமிருந்து முன்பணம் பெற்றது 2,000
    7 மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது 100
    8 வெள்ளைவெள்ளைத் தாள்கள் வாங்கியது 50
    10 ஆட்டோ ரிக்ஷா கட்டணம் கொடுத்தது 200
    15 கூலி கொடுத்தது 300
    18 தபால் செலவுகள் செய்தது 100
    21 எழுது பெருள்கள் வாங்கியது 450
    23 தேநீர் செலவுகள் செய்தது 60
    25 துரித அஞ்சல் செலவு செய்தது 150
    27 சிற்றுண்டி செலவுகள் செய்தது 250
    31 ஏற்றிச் செல் செலவுகள் செய்தது 150
  23. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் கொண்டு திரு.சுந்தரின் முப்பத்தி ரொக்க ஏட்டினைத் தயார் செய்க. 

    2018 மார்ச்1 சுந்தர் ரூ 2,00,000 ரொக்கத்துடன் தொழில் தொடங்கினார்.  
    2 வங்கியில் செலுத்தியது ரூ 50,000
    4 ரொக்கக் கொள்முதல் ரூ 5,000
    5 காசோலை விடுத்து சரக்கு வாங்கியது ரூ 6,000
    6 நாதனுக்கு சரக்கு கடனுக்கு விற்றது ரூ 5,000
    6 மனோவிடமிருந்து காசோலை பெற்றது  ரூ 490
      தள்ளுபடி அளித்தது ரூ 10
    10 வண்டிச் சத்தம் கொடுத்தது  ரூ 1,000
    12 அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ 10,000
    15 சுந்தருக்குச் செலுத்திய ரொக்கம்  ரூ 4,960
      அவர் அளித்த தள்ளுபடி ரூ 40
    20 ரூ 4,950 க்கு காசோலை நாதனிடமிருந்து பெறப்பட்டு அவர் கணக்கு தீர்க்கப்பட்டது அக்காசோலை உடனே வங்கியில் செலுத்தப்பட்டது.  
  24. திரு.இராஜவேல் என்பவரின்  ரொக்க ஏட்டில், கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2016 மே 1 ரொக்க இருப்பு ரூ.6,000
    2016 மே 2 வங்கி இருப்பு ரூ.4,000
    2016 மே 3 அருள்குமார் நமது வங்கி கணக்கில் நேரடியாகக் கட்டியது ரூ.2,000
    2016 மே 4 தன்யகுமார் என்பவரிடமிருந்து பெறப்பட்ட ரூ.5000% க்கான காசோலை வங்கிக்கு
    அனுப்பப்பட்டது.
    2016 மே 7 இரகுவரனுக்கு சரக்கு விற்று பெற்ற காசோலை ரூ.8,000
    2016 மே 8 சுகுமாரிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ.2,800
    2016 மே 10 இரகுவரனின் காசோலை வசூலுக்காக வங்கிக்கு அனுப்பப்பட்டது.
    2016 மே 14 பாலனுக்கு காசோலை வழங்கியது ரூ.13,900 பெற்ற தள்ளுபடி ரூ.100
    2016 மே 17 சொந்த தேவைக்காக எடுத்த ரொக்கம் ரூ.1,500
    சொந்த தேவைக்காக காசோலை விடுத்தது ரூ.12,500
    2016 மே 27 வாடகை செலுத்தியது ரூ.2,000
  25. பின்வரும் விவரங்களிலிருந்து குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.7,130
    (ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ.1,000
    (இ) வாடிக்கையாளர் நேரநேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ.800

  26. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சிவா நிறுவனத்தின் டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படியான வரவிருப்பு ரூ 12,000
    (ஆ) ரூ  1,200 மதிப்புள்ள காசோலை  விடுத்து செலுத்துகைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது தவறுதலாக ரொக்க ஏட்டில் ரூ  2,100 என வரவு வைக்கப்பட்டது.
    (இ) வங்கி அறிக்கையின் பற்றுப் பக்கம் ரூ  100 குறைவாகக் கூட்டப்பட்டது

  27. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
    [அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
    [ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
    [இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
    [ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20    

  28. பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
    [அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
    [ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
    [இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
    [ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
    [உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
    [ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.         

  29. பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    (ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
    ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை

  30. இராமனின் ஏடுகள் சமன்படவில்லை. இருப்பாய்வின் வித்தியாசத் தொகையாகிய ரூ.1,270-ஐ கணக்காளர் அனாமத்துக் கணக்கில் பற்று வைத்தார். பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.
    (அ) உரிமையாளரால் சொந்த உபயோகத்திற்காக ரூ.75 மதிப்புள்ள சரக்கு எடுக்கப்பட்டது ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
    (ஆ) சண் சண்முகத்திற்கு கடனுக்கு ரூ.430 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.340 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது
    (இ) விவேக்கிடமிருந்து கடனுக்கு ரூ.400 க்கு சரக்கு வாங்கியது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆயினும், விவேக்கின் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
    (ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகைகை ரூ.300 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை

  31. திரு. கணேசன் என்பவரின் ஏடுகளில் கண்டுபிடிக்கப்பட கீழ்க்காணும் பிழைகளைத் திருத்துக.
    அ] கொள்முதல் திருப்ப ஏடு ரூ 1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    ஆ] சங்கரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 2,000 அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    இ] விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ 1,500 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
    ஈ] கீதாவிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 1,500 ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. ஆனால் கீதா கணக்கில் எழுத்தெழுதப்படவில்லை.
    உ] அரைகலன் விற்றது ரூ 2,000 சரக்கு விற்றது என பதியப்பட்டுள்ளது.  

  32. கணக்காளரால்  இருப்பாய்வை சமன்படுத்த முடியவில்லை இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்காக வேற்றுமைத் தொகை ரூ 5,180 [வரவு], அனாமத்துக் கணக்கைத் தோற்றுவித்து பதிவு செய்துள்ளார். பின்னர் கீழ்க்கண்ட பிழைகளைக் கண்டறிந்துள்ளார்.
    அ] கழிவு செலுத்தியது ரூ 500 அளித்த தள்ளுபடி கணக்கு, கழிவு கணக்கு என இரண்டு கணக்குகளில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
    ஆ] விற்பனை ஏட்டில் ரூ 1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    இ] ரோஜாவிற்கு கடனாக விற்றது ரூ 2,780 அவர் கணக்கில் ரூ 3,860 என தவறாக எடுத்தெழுதப்பட்டுள்ளது .
    ஈ] நடராஜனிடம் கடனாக வாங்கியது ரூ 1,500, அவர் கணக்கில் தவறாக பற்று வைக்கப்பட்டுள்ளது.
    உ] ரொக்க ஏட்டின் செலுத்துதல் பக்கத்தில் தள்ளுபடி பத்தியில் ரூ 2,400 தவறாக ரூ 2,800 என கூட்டப்பட்டுள்ளது.
    தக்க திருத்தப் பதிவுகளைத் தந்து, அனாமத்துக் கணக்கைத் தயாரிக்க.   

  33. இராமு நிறுவனம் ஜூலை 1, 2016-ல் இயந்திரம் ஒன்றை ரூ. 14,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ரூ. 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணை முறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தந்து இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மான கணக்கினைத் தயாரிக்கவும்.

  34. ஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.

  35. கணேஷ் அன்ட் கோ 2010 அக்டோபர் 1,அன்று ரூ. 3,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ.20,000 செலவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன.
    இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்யவும்.

  36. குமரன் பிரதர்ஸ்  நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.

  37. பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
    (i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
    (ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
    (iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு.

  38. பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
    (i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
    (ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
    (iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.

  39. கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
    1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
    2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
    3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
    4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
    5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250.

  40. பேஷன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பின்வரும் நடவடிக்கைளை, முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
    1. லாரிக்கு டயர் வாங்கியது ரூ 2,500.
    2. ரூ 10,000 மதிப்புள்ள பழைய இயந்திரத்தை ரூ 9,500 க்கு விற்றது.
    3. பங்குகளில் முதலீடு செய்ததிலிருந்து பங்காதாயம் பெற்றது ரூ 5,000.
    4. ரூ 1,200 அடக்கவில்லை கொண்ட டிசர்ட்கள் ரூ 1,500 க்கு விற்பனை செய்தது.
    5. மின்சாரம் பயன்பாட்டைக்குறைக்கு புதியவகை இயந்திரம் மாற்றியது ரூ 600  

  41. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
    உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
    மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
    ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
    ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
    கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
    உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
    வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
    நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
  42. கணேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    சரக்கிருப்பு (01.01.2017) 8,000 வாராக்கடன் 1,200
    கொள்முதல் 22,000 வியாபாரச் செலவுகள் 1,200
    விற்பனை 42,000 அளித்த தள்ளுபடி 600
    கொள்முதல் மீதான செலவுகள் 2,500 கழிவு கொடுத்தது 1,100
    நிதிசார் செலவுகள் செலுத்தியது 3,500 விற்பனைச் செலவுகள் 600
    விற்பனை மீதான செலவுகள் 1,000 அலுவலக வாகனங்கள் மீதான
    பழுதுபார்ப்புச் செலவுகள்
    600

    2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,500

  43. திரு.ஜான் அவர்களின் பின்வரும் இருப்பாய்வினைக் கொண்டு 31.1.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கனா வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கிணைத் தயாரிக்கவும்.         

    விவரம் தொகை (ரூ) விவரம்  தொகை (ரூ)
    கொள்முதல்  5,40,000 விற்பனை  10,40,000
    சம்பளம் மற்றும் கூலி  3,50,000 வெளித்திருப்பம்    12,000
    அலுவலகச் செலவுகள்    4,000 தள்ளுபடி பெற்றது  6,000
    வியாபார செலவுகள்  8,000 வட்டி பெற்றது  3,000
    தொழிற்சாலை செலவுகள்  11,000 முதல்  1,78,000
    வருமான வரி  8,000    
    உள் திருப்பம்  12,000    
    தள்ளுபடி அளித்தது     4,000    
    கழிவு  2,000    
    சரக்கிருப்பு  60,000    
    வருமான வரி  40,000    
    கையிருப்பு ரொக்கம்    2,00,000    
      12,39,000   12,39,000

    இறுதி சரக்கிருப்பு ரூ1,35,000 என கனக்கிடப்பட்டுள்ளது       

  44. திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

    பற்று இருப்பு  ரூ  வரவு இருப்பு ரூ
    கொள்முதல்  70,000 முதல் கணக்கு  56,000
    விற்பனைத் திருப்பம்  5,000 விற்பனை  1,50,000
    தொடக்கச் சரக்கிருப்பு   20,000 கொள்முதல் திருப்பம்  4,000
    தள்ளுபடி கொடுத்தது   2,000 தள்ளுபடி பெற்றது  1,000
    வங்கி கட்டணம்  500 கடனீந்தோர்      30,000
    சம்பளம்  4,500    
    கூலி  5,000    
    உள் ஏற்றிச் செல் செலவு  4,000    
    வெளி  ஏற்றிச் செல் செலவு 1,000    
    வாடகை மற்றும் வரி  5,000    
    ரொக்க கையிருப்பு    1,000    
    பொறியும் பொறித் தொகுதியும்   50,000    
    பற்பல கடனாளிகள்  60,000    
    வங்கியிருப்பு     7,000    
    விளம்பரம்  6,000    
      2,41,000   2,41,000
  45. நாகராஜன் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 2016, மார்ச் 31ஆம் நாளைய இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

     பற்று இருப்பு   ரூ   வரவு இருப்பு   ரூ 
      கொள்முதல்         10,000   விற்பனை    15,100
      கூலி  600   பெற்ற கழிவு     1,900
      உள் ஏற்றிச்செல் செலவு    750   வாடகை பெற்றது     600
      விளம்பரம் 500   கடனீந்தோர் 2,400
      வெளித் தூக்குக்கூலி 400   முதல் 5,000
      ரொக்கம்  1,200    
      இயந்திரம்  8,000    
      கடனாளிகள்  2,250    
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு    300    
      சரக்கிருப்பு (01.01.2016) 1,000    
      25,000   25,000

    2016, மார் ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
    சரிக்கட்டுதல்கள்:
    (அ) முன் கூட்டிப் பெற்ற கழிவு ரூ 400
    (ஆ) முன் கூட்டிச் செலுத்திய விளம்பரம் ரூ 150
    (இ) கொடுபட வேண்டிய கூலி ரூ 200
    (ஈ) 31.03.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 2,100.

  46. எட்வர்ட் என்பவரின் ஏடுகள் கீழ்க்கண்ட இருப்புகளைக் காட்டுகிறது. 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    எடுப்புகள் 5,000 முதல் 1,31,500
    பற்பல கடனாளிகள் 60,000 கடன் (வட்டி 6% ஆண்டுக்கு) 20,000
    நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் 10,500 விற்பனை 3,56,500
    உள் திருப்பம் 2,500 முதலீடுகள் மீது வட்டி 2,550
    கொள்முதல் 2,56,500 பற்பல கடனீந்தோர் 40,000
    சரக்கிருப்பு (1.1.2016) 89,700    
    பயணச் செலவுகள் 51,250    
    கடன் மீது வட்டி செலுத்தியது 300    
    சில்லறை ர�ொக்கம் 710    
    பழுது பார்ப்புச் செலவுகள் 4,090    
    முதலீடுகள் 70,000    
      5,50, 550   5,50,550

    சரிக்கட்டுதல்கள்:
    (அ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 1,30,000
    (ஆ) பற்பல கடனாளிகள் மீது 5 % வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக
    (இ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக
    (ஈ) 9 மாதங்களுக்குரிய கடன் மீது வட்டி கொடுபட வேண்டியுள்ளது

  47. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
    சரிக்கட்டுதல்கள்:
     1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
    2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
    3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
    சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.      

  48. கீழே தரப்பட்டுள்ள திரு.சலீம் அவர்களின் 31.12.2012 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து.2012 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கையும்,அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க

    இருப்பாய்வு
    பற்று இருப்புகள்  ரூ  வரவு இருப்புகள்  ரூ 
    காய் ரொக்கம்  1,500 முதல்  80,000
    கொள்முதல் 1,20,000 வங்கிக் கடன் 4%  20,000
    தொடக்கச் சரக்கிருப்பு  40,000 செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்  25,000
    பற்பல கடனாளிகள்  60,000 பற்பல கடனீந்தோர்  25,000
    பொறியும்,பொறித் தகுதியும்   50,000 விற்பனை  2,00,000
    அறைகலன்  20,000 வாரா ஐயக்கடன் ஒதுக்கு   1,500
    பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்  15,000 வட்டி  1,000
    கூலி  16,000    
    சம்பளம்  20,000    
    வாடகையும் வரிகளும்  10,000    
      3,52,00   3,52,300

    கூடுதல் தகவல்கள் :

    1. இறுதிச் சரக்கிருப்பு  ரூ 50,000
    2. கீழ்க்கண்ட கொடுபட வேண்டியவைகளுக்கு 
    வகை செய்க. 
     
      வாடகையும் வரியும்   ரூ 2,000
      கூலி  ரூ 3,000
      சம்பளம்  ரூ 4,000
    3. பொறியும்,பொறித் தொகுதியும் மீது 5%
    மற்றும் அறைகலன் மீது 10% தேய்மானம் 
    நீக்குக.   
     
    4. வங்கிக் கடனுக்கு 4% வட்டி அனுமதிக்க.    
    5. வாராக்கடன் ரூ 2,000 போக்கெழுதுக.   
  49. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம்
    i) CONCATENATE செயற்கூற்றைக் கொண்டு B3 ல் முகவரியை நிரப்பவும்.
    ii) C2 வில் கொடுக்கப்பட்டுள்ள KAMARAJAR SALAI என்பதனை C3 ல் சிறிய எழுத்துக்களாக மாற்றவும்
    iii) D2வில் கொடுக்கப் பட்டுள்ள Chennai என்பதனை D3ல் பெரிய எழுத்துக்களாக மாற்றவும்.

  50. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்

      A B C D E F
    1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years
    2 Machinery 200000 20000 5000 25000 10
    3 Furniture 50000 4000 2000 5000 8
  51. கணினி அமைப்புடன் தொடர்புடைய ஆட்கள் பற்றி குறிப்பு வரைக. 

  52. கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகளை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment