தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60
    8 x 1 = 8
  1. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________ 

    (a)

    நிலையான சொத்து

    (b)

    நடப்புச் சொத்து

    (c)

    கற்பனைச் சொத்து

    (d)

    புலனாகாச் சொத்து

  2. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?

    (a)

    வியாபாரக் கணக்கில்

    (b)

    இலாப நட்டக் கணக்கில்

    (c)

    கடன் பக்கத்தில்

    (d)

    சொத்து பக்கத்தில்

  3. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

    (a)

    கொள்முதலோடு கூட்டப்படும்

    (b)

    கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

    (c)

    முதலோடு கூட்டப்படும்

    (d)

    முதலிலிருந்து கழிக்கப்படும்

  4. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

    (a)

    ரொக்கம்

    (b)

    சரக்கிருப்பு

    (c)

    அறைகலன்

    (d)

    முன்கூட்டிச் செலுத்திய செலவு

  5. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  6.  ______ அறிக்கை ஒரு கணக்கியல் காலத்திற்கு எவ்வாறு இலாபம் அல்லது நட்டம் கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது          

    (a)

    வருமான 

    (b)

    இலாப நட்ட  

    (c)

    செலவின 

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  7. கூலி என்பது உதாரணமாக இருப்பது.________   

    (a)

    முதலினச் செலவிற்கு  

    (b)

    மறைமுகச் செலவிற்கு 

    (c)

    நேரடி செலவிற்கு

    (d)

    இவை எதுவுமில்லை 

  8. நடப்புப் பொறுப்புகள் இருப்பு நிலைக் குறிப்பில்   

    (a)

    இடம் பெறாது 

    (b)

    பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் பதிய வேண்டும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  9. 5 x 1 = 5
  10. முதலீடு

  11. (1)

    இலாப நட்டக் கணக்கு

  12. கடன் மீது வட்டி

  13. (2)

    இலாப நட்ட கணக்கின் வரவு

  14. தொடக்க சரக்கிருப்பு

  15. (3)

    மொத்த கடனீந்தோர்

  16. நிகர லாபம்

  17. (4)

    வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம்

  18. கடன் கொள்முதல்

  19. (5)

    பொறுப்புகள் பக்கம்

    7 x 2 = 14
  20. வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.

  21. நிலைச் சொத்துகள் என்றால் என்ன?

  22. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?

  23. ஏதேனும் இரண்டு நேரடிச் செலவுகள் மற்றும் மறைறைமுகச் செலவுகளை குறிப்பிடுக

  24. இலாப நட்டக் கணக்கு தயாரித்தலின் தேவை என்னன்ன?

  25. இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?   

  26. முதலீடுகள் என்றால் என்ன?    

  27. 6 x 3 = 18
  28. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    மொத்த இலாபம் கீ/கொ 1,50,000 விளம்பரச் செலவுகள் 3,800
    வெளித் தூக்குக்கூலி 25,500 வாராக்கடன் 8,500
    அலுவலக வாடகை 7,000 பங்காதாயம் பெற்றது 9,000
    அலுவலக எழுதுபொருள் 3,500 பெற்ற தள்ளுபடி 4,600
    வழங்கல் செலவுகள் 2,000 பெற்ற வாடகை 7,000
  29. நிரூபனின் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் பற்று ரூ வரவு ரூ
    பொறி மற்றும் இயந்திரம் 8,00,000  
    நிலம் மற்றும் கட்டடம் 6,00,000  
    அறைகலன் 1,50,000  
    கைரொக்கம் 20,000  
    வங்கி மேல்வரைப்பற்று   1,80,000
    கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் 3,20,000 2,40,000
    பெறுதற்குரிய மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,00,000 60,000
    இறுதிச் சரக்கிருப்பு 4,00,000  
    குறுகிய கால முதலீடுகள் 80,000  
    முதல்   15,00,000
    எடுப்புகள் 1,30,000  
    நிகர இலாபம்   6,20,000
      26,00,000 26,00,000
  30. இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?

  31. மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன?

  32. “இருப்பு நிலைக் குறிப்பு ஓர் கணக்கல்ல” – விளக்குக

  33. இருப்பு நிலைக் குறிப்பு தயாரித்தலின் நன்மைகள் யாவை?

  34. 3 x 5 = 15
  35. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
    உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
    மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
    ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
    ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
    கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
    உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
    வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
    நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
  36. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

    விவரம் ரூ விபரம் ரூ
    மொத்தம் இலாபம் 50,000 வட்டி பெற்றது 2,000
    அலுவலக வாடகை 10,000 தள்ளுபடி பெற்றது 3,000
    அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் 8,000 வெளிதூக்குக் கூலி 2,500
    தள்ளுபடி கொடுத்தது 12,000 அலுவலக கட்டடம் மீதான காப்பீடு 3,500
    விளம்பரம் 4,000 பொதுச் செலவுகள் 3,000
    தணிக்கைக் கட்டணம் 1,000 உள் ஏற்றிச் செல் செலவு 1,000
  37. 2018, மார்ச் 31 ஆம் நாளன்று டெரி என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    சரக்கிருப்பு 10,000 விற்பனை 1,22,500
    ரொக்கம்  2,500 கடனீந்தோர் 5,000
    வங்கி 5,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000
    உள்ஏற்றிச் செல் செலவு 750 முதல் 1,00,000
    கொள்முதல் 95,000    
    எடுப்புகள் 4,500    
    கூலி 27,500    
    இயந்திரம் 50,000    
    கடனாளிகள் 13,500    
    அலுவலக அஞ்சல் செலவுகள் 150    
    பல்வகைச் செலவுகள் 850    
    வாடகை கொடுத்தது 2,500    
    அறைகலன் 17,250    
      2,29,500   2,29,500

    இறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ.8,000. 

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Accountancy - Final Accounts of Sole Proprietors - I Model Question Paper )

Write your Comment