பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  (a)

  பொறுப்பாகும்

  (b)

  செலவாகும்

  (c)

  வருமானமாகும்

  (d)

  கடனீந்தோர் ஆவர்

 2. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  (a)

  வணிக தனித்தன்மை கருத்து

  (b)

  நிறுவன தொடர்ச்சி கருத்து

  (c)

  கணக்கியல் கால அனுமானம்

  (d)

  முன்னெச்சரிக்கை கொள்கை

 3. தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்

  (a)

  உரிமையாளர்

  (b)

  வங்கியர்

  (c)

  கடனீந்தோர்

  (d)

  அரசு

 4. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

  (a)

  சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

  (b)

  சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

  (c)

  பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

  (d)

  முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

 5. நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது

  (a)

  ஆதார ஆவணங்கள்

  (b)

  குறிப்பேடு

  (c)

  கணக்கியல் சமன்பாடு

  (d)

  கணக்கியல் கருத்துக்கள்

 6. நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர். 

  (a)

  சரிக்கட்டுப்பதிவு 

  (b)

  இறுதிப் பதிவு 

  (c)

  தொடக்கப் பதிவு 

  (d)

  குறிப்பேடு 

 7. கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

  (a)

  அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.

  (b)

  இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

  (c)

  கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

  (d)

  (அ), (ஆ) மற்றும் (இ)

 8. இயந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

  (a)

  விற்பனை ஏடு

  (b)

  கொள்முதல் ஏடு

  (c)

  கொள்முதல் திருப்ப எடு

  (d)

  முறையான குறிப்பேடு

 9. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது

  (a)

  எதிர்ப்பதிவு

  (b)

  கூட்டுப் பதிவு

  (c)

  ஒற்றைப் பதிவு

  (d)

  சாதாரணப் பதிவு

 10. ஜனவரி 1,2018 அன்று சில்லறைக் காசாளரிடம் ரூ.1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ.860 செலவழித்தார் பிப்ரவரி 1அன்று அவர் முன் பண மீட்புக்காக பெறும் காசோலையின் தொகை ரூ.________ .

  (a)

  1000

  (b)

  860

  (c)

  1860

  (d)

  140

 11. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

  (a)

  வங்கி அறிக்கை

  (b)

  ரொக்க ஏடு

  (c)

  வங்கி அறிக்கை மற்றும் ரொக்க  ஏட்டின் வங்கி பத்தி

  (d)

  சில்லறை  ரொக்க  ஏடு

 12. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

  (a)

  கொள்முதல் கணக்கு

  (b)

  அனாமத்துக் கணக்கு

  (c)

  கடனீந்தோர் கணக்கு

  (d)

  மேற்கண்டது ஏதும் இல்லை

 13. அறைகலன் 750-க்கு விற்றது, விற்பனைக்கு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவனவற்றில் எது சரியானது?

  (a)
  விற்பனை கணக்கு  ப 
        அறைகலன் கணக்கு   
  (b)
  அறைகலன் கணக்கு  ப 
       விற்பனை கணக்கு   
  (c)
  ரொக்கக் கணக்கு  ப 
       விற்பனை கணக்கு   
  (d)
  கொள்முதல் கணக்கு  ப 
       விற்பனை கணக்கு   
 14. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

  (a)

  சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

  (b)

  சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

  (c)

  சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

  (d)

  சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

 15. ஒரு பொறிவகையின் மதிப்பு ரூ.10,000 பயனளிப்புக் காலம் ஆண்டுகள், ஏறி மதிப்பு ரூ.1000 என்றால் நேர்கோட்டு முறையின் தேய்மான விகிதம்  _______ஆகும்.

  (a)

  9.5%

  (b)

  9%

  (c)

  10%

  (d)

  12%

 16. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

  (a)

  முதலினச் செலவு

  (b)

  வருவாயினச் செலவு

  (c)

  நீள்பயன் வருவாயினச் செலவு

  (d)

  இவை எதுவுமில்லை

 17. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

  (a)

  ரொக்கம்

  (b)

  சரக்கிருப்பு

  (c)

  அறைகலன்

  (d)

  முன்கூட்டிச் செலுத்திய செலவு

 18. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

  (a)

  வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (b)

  பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (c)

  வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

  (d)

  இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

 19. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

  (a)

  ரூ 30,000

  (b)

  ரூ 5,00,000

  (c)

  ரூ 4,70,000

  (d)

  ரூ 5,30,000

 20. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்

  (a)

  சுட்டி

  (b)

  அச்சுப்பொறி

  (c)

  ஒளியியல் வருடி

  (d)

  விசைப் பலகை

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 x 2 = 14
 22. கணக்கு என்றால் என்ன?

 23. கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.

 24. பின்வரும் தகவல்களை கொண்டு அதன் செலுத்தும் நாட்களை கணக்கிடுக.

  மாற்றுச் சீட்டின் நாள் தவணைக் காலம் சலுகை நாட்கள் செலுத்தற்குரிய நாள்
  1வது மார்ச் 2 மாதங்கள் 3 ?
  12வது ஜுலை 1 மதம்  3 ?
 25. ரொக்க ஏடு என்றால் என்ன?

 26. இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
  (அ) கொள்முதல் ஏட்டில் ரூ.10,000 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
  (ஆ) அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ.500 அறைகலன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
  (இ) அகில் நிலவனுக்கு கடனுக்கு ரூ.456 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.654 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது

 27. குறைந்து செல் மதிப்பு முறை என்றால் என்ன?

 28. பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
  (i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
  (ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
  (iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
  (iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
  (v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.

 29. வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.

 30. முதலீடுகள் மீது பெற வேண்டிய வட்டி என்றால் என்ன? 

 31. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

 32. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  7 X 3 = 21
 33. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

 34. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

 35. நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?

 36. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.

 37. கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.

 38. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச்  31 - ல்  திரு முத்து அவர்களின்  ரொக்க ஏடு உணர்த்தும்  வங்கியிருப்பை கண்டுபிடி.
  1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு  ரூ 5,000
  2. வங்கிக் கட்டணம்  ரூ 120 ரொக்க ஏட்டில்  பதியப்படவில்லை.
  3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு  செலுத்திய  காசோலைகளில்  ரூ 2, 000 காசோலை  இன்னும்  வங்கியாளரால்  வரவு வைக்கப்படவில்லை.
  4. ஏற்கனவே  ரூ 9,000 - க்கு  விடுத்த காசோலைகளில்  ரூ 7,600 - க்கான  காசோலைகள்  மட்டுமே  வங்கியில்  முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
  5. வாங்கியாளர்  நேரடியாக  வசூலித்த  பங்கா தாயம்  ரூ 800 இன்னும் ரொக்க  ஏட்டில்  பதியப்படவில்லை.
  6. 31.03.08 - க்கு  முன்னர் காசோலை  அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க  ஏட்டில்  பதியவில்லை.                                            

 39. இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை? 

 40. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.

  இயந்திரத்தின் அடக்கவிலை  ரூ. 2,30,000
  நிறுவுவதற்கான செலவுகள்  ரூ. 20,000
  பயனளிப்புக் காலம்  10 ஆண்டுகள் 
  ஏறி மதிப்பு  ரூ. 50,000
 41. நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

 42. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
  (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
  (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
  (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
  (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
  (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

  7 x 5 = 35
  1. இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.

  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம்
   i) CONCATENATE செயற்கூற்றைக் கொண்டு B3 ல் முகவரியை நிரப்பவும்.
   ii) C2 வில் கொடுக்கப்பட்டுள்ள KAMARAJAR SALAI என்பதனை C3 ல் சிறிய எழுத்துக்களாக மாற்றவும்
   iii) D2வில் கொடுக்கப் பட்டுள்ள Chennai என்பதனை D3ல் பெரிய எழுத்துக்களாக மாற்றவும்.

  1. பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. லலிதாவின் தனிப்பத்தி ரொக்க எட்டில் பதிவு செய்க.

       ரூ 
   2016
   ஆகஸ்ட் 1
   கையிருப்பு ரொக்கம்  46,000
   3 வங்கியில் செலுத்தியது  12,000
   4 ரொக்க விற்பனை  24,000
   5 மணி என்பவருக்கு கடனுக்கு விற்பனை செய்தது.  3,000
   7 அச்சுக்கட்டணம்   3,000
   9 நடேசனிடமிருந்து காசோலை பெற்றது  8,000
   12 பங்காதாயம் பெற்றது  2,000
   14 கணிப்பொறி வாங்கியது  35,000
   17 மணியிடமிருந்து ரொக்கம் பெற்றது  3,000
   24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது  2,000
  2. திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

   பற்று இருப்பு  ரூ  வரவு இருப்பு ரூ
   கொள்முதல்  70,000 முதல் கணக்கு  56,000
   விற்பனைத் திருப்பம்  5,000 விற்பனை  1,50,000
   தொடக்கச் சரக்கிருப்பு   20,000 கொள்முதல் திருப்பம்  4,000
   தள்ளுபடி கொடுத்தது   2,000 தள்ளுபடி பெற்றது  1,000
   வங்கி கட்டணம்  500 கடனீந்தோர்      30,000
   சம்பளம்  4,500    
   கூலி  5,000    
   உள் ஏற்றிச் செல் செலவு  4,000    
   வெளி  ஏற்றிச் செல் செலவு 1,000    
   வாடகை மற்றும் வரி  5,000    
   ரொக்க கையிருப்பு    1,000    
   பொறியும் பொறித் தொகுதியும்   50,000    
   பற்பல கடனாளிகள்  60,000    
   வங்கியிருப்பு     7,000    
   விளம்பரம்  6,000    
     2,41,000   2,41,000
  1. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
   [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
   [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
   [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
   [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
   [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
   [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

  2. குமரன் பிரதர்ஸ்  நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.

  1. சந்திரனின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பதிவு செய்க.

   2017 நவ   ரூ
   1 ரொக்க இருப்பு 22,000
   2. ரொக்க விற்பனை 14,000
   3. கோவிந்தனுக்கு கடனுக்கு விற்றது 12,000
   4 பலராமனிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது 27,000
   5 ரொக்கக் கொள்முதல் 8,800
   8 கோவிந்தனிடமிருந்து 2% ரொக்க தள்ளுபடி கழித்தது
   போக மீதி தொகைப் பெறப்பட்டது
    
   12 பலராமனுக்கு ரூ 26,800 பணம் செலுத்தி அவர்
   கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது
    
   15 சொந்த தேவைக்கு பணம் எடுத்தது 4,000
   28 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000
   29 மதன் தரவேண்டியது ரூ 5,000. ரூ 4,800 செலுத்தி அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டார்.   
   30 சம்பளம் ரொக்கமாக அளித்தது  4,000
  2. (அ) கடனுக்கு மேகலாவுக்கு ரூ.102-க்கு சரக்கு விற்றதற்கான பதிவு பேரேட்டில் மேகலாவின் கணக்கில் ரூ.120 என எடுத்து எழுதப்பட்டது.
   (ஆ) அளித்த தள்ளுபடிப் பத்தியின் மாதக் கூட்டுத்தொகை ரூ.100 பேரேட்டில் பெற்ற தள்ளுபடிக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டது..
   (இ) மன்னன் ரூ.275 செலுத்தியது கண்ணன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
   (ஈ) அலுவலக உபயயோகத்திற்காக எழுதுபொருள் வாங்க ரூ.26 ரொக்கம் செலுத்தியதற்கான ரொக்க ஏட்டில் உள்ள பதிவு பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
   (உ) கொள்முதல் ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

  1. பின்வரும் விவரங்களிருந்து விற்பனை கணக்கினை தயார் செய்யவும்.
    

   2015 மார்ச் 1 ரமேஷ் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது. ரூ.10000
   2015 மார்ச் 5 கணேஷ் என்பவரிடம் கடன் பேரில் சரக்கு விற்றது. ரூ.5000
   2015 மார்ச் 8 ரொக்க விற்பனை ரூ.15000
   2015 மார்ச் 10 குமரன் என்பவரிடம் சரக்கு விற்று காசோலைபெற்று வங்கியியல் செலுத்தியது. ரூ.8000

    

  2. பின்வரும் விவரங்களிலிருந்து இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

     ரூ.
   முதல் 70,000
   எடுப்புகள் 45,000
   பற்பல கடனீந்தோர் 3,000
   பெற்ற தள்ளுபடி 5,450
   பற்பல கடனாளிகள் 20,000
   கழிவு (ப) 1,000
   இயந்திரம் 10,000
   வரிவீதங்கள் 2,450
  1. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  2. பின்வரும் நடவடிக்கைகளை இராஜா அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏடுகளில் பதிவு செய்க.

   2017  
   மே 4 கன்னியாகுமரி, காசி அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
     10 நாற்காலிகள் ஒன்று ரூ.300 வீதம்
     4 மேசைகள் ஒன்று ரூ.800 வீதம்
   மே 6 வேலூர், வெல்கம் அறைகலன் நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது
     2 அலமாரிகள் ஒன்று ரூ 2,000 வீதம்
     4 நாற்காலிகள் ஒன்று ரூ 200 வீதம்
     கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 5%
   மே 10 நாகப்பட்டினம், முருகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து அறைகலன்கள் வாங்கியது
     10 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம்
     5 மேசைகள் ஒன்று ரூ 750 வீதம்
     கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ150
   மே 10 அடையாறு, ஆனந்தன் நிறுவனத்திடமிருந்து அலுவலகப் பயன்பாட்டிற்காக
   இரண்டு கணிப்பொறிகள் ஒன்று ரூ.15,550 வீதம் கடனுக்கு வாங்கியது.
   மே 25 சென்னை, கௌதம் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
     10 நாற்காலிகள் ஒன்று ரூ. 550 வீதம் 
     15 அலமாரிகள் ஒன்று ரூ. 2,000 வீதம்
     அனுப்புகைச் செலவு ரூ. 200
     கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 10%
  1. கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  2. பின்வரும் நடவடிக்கைகளை இராஜா ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

    ஜனவரி     ரூ 
   1   ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       3,00,000
   2   ராஜுவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது     1,00,000
   3   வங்கியில் ரொக்கம் செலுத்தியது 2,00,000
   20   வங்கியில் கடன் பெற்றது  1,00,000
   22   சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது   800
   23   ராஜுவிற்கு தேசிய மின்னனு பணப்பரிமாற்றம் மூலமாக ரொக்கம் செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது 99,000
   25   உரிமையாளரின் சங்க உறுப்பினர் சந்தா காசோலை மூலம் செலுத்தியது   200
   26   உரிமையாளரின் வீட்டிற்கான மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது 2,000
   31   அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது 1,000
   31   வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை 1,000

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Accountancy - Model Question Paper 2019 - 2020 )

Write your Comment