Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    60 x 1 = 60
  1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

    (a)

    சமூகக் கணக்கியல்

    (b)

    காரியதரிசிகளின் கணக்கியல்

    (c)

    மேலாண்மைக் கணக்கியல்

    (d)

    பொறுப்பு கணக்கியல்

  2. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  3. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய ஆவணத்தினை அழைப்பது. 

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  4. லூகா பாசியோலி என்ற இத்தாலியர், இரட்டைப் பதிவு முறை கணக்கினை மேம்படுத்திய ஆண்டு.

    (a)

    1949

    (b)

    1449

    (c)

    1494

    (d)

    1446

  5. கணக்கியல் சூழலில் _______ தயார் செய்வது இறுதி படிநிலையாகும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    வியாபாரக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    இலாப நட்டக் கணக்கு 

  6. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  7. GAAP என்பது:

    (a)

    பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

    (b)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

    (c)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  8. நிறுவனத் தொடர்ச்சி அனுமானத்தின்படி நிறுவனத்தின் ஆயுள்

    (a)

    மிக குருக்கலானது என்று கூறுகின்றது

    (b)

    மிக நீளமானது என்று கூறுகின்றது

    (c)

    நீடித்த வாழ்வு இல்லை என்று கூறுகின்றது

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  9. இரட்டைத் தன்மைக் கருத்துப்படி ஒவ்வொரு வணிக நடவடிக்கையும்

    (a)

    மூன்று தன்மைகளை கொண்டுள்ளது

    (b)

    ஒரு தன்மையுடையது

    (c)

    இரு தன்மையுடையது

    (d)

    ரொக்கத் தன்மையுடையது

  10. உண்மை உணர்த்தும் கொள்கை முக்கியமான தகவல்களை _______________ 

    (a)

    வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்

    (b)

    வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்

    (c)

    கட்டாயம் தெரிவிக்க கூடியதாய் இருக்க வேண்டும்

    (d)

    இவை ஏதுமில்லை

  11. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________

    (a)

    ரூ 1,60,000

    (b)

    ரூ 60,000

    (c)

    ரூ 1,00,000

    (d)

    ரூ 40,000

  12. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

    (a)

    சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

    (b)

    சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

    (c)

    பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    (d)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

  13. நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

    (a)

    குறிப்பேடு

    (b)

    ஆதார ஆவணங்கள்

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  14. சீனிவாசன் அவர்களுக்கு சரக்கு விற்பனை செய்ததற்கு பற்று வைக்க வேண்டிய கணக்கு. 

    (a)

    ரொக்கக் க/கு

    (b)

    சீனிவாசன் க/கு

    (c)

    விற்பனை க/கு

    (d)

    கடன் க/கு

  15. ரூ.50 மதிப்புள்ள சரக்குகளை அறநிதிக்கு கொடுத்ததை எந்த கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

    (a)

    அறநிதிக் கணக்கு 

    (b)

    விற்பனைக் கணக்கு 

    (c)

    கொள்முதல் கணக்கு 

    (d)

    ரொக்கக் கணக்கு 

  16. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  17. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  18. நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர். 

    (a)

    சரிக்கட்டுப்பதிவு 

    (b)

    இறுதிப் பதிவு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    குறிப்பேடு 

  19. குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    குறிப்பேட்டில் பதிதல்

    (c)

    இருப்பு கட்டுதல்

    (d)

    எடுத்தெழுதுதல்

  20. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  21. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

    (a)

    அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

    (b)

    அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

    (c)

    ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

    (d)

    ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  22. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

    (a)

    குறிப்பேடு

    (b)

    நாளேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு

  23. பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.

    (a)

    திருத்தப் பதிவுகள்

    (b)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (c)

     விதிப்பிழைகள்

    (d)

    இவை எதுவுமில்லை

  24. பதியப்பட்டுள்ள நடவடிக்கைகளின் கணக்குகளின் சரித்தன்மையைச் சோதிக்க தயாரிக்கப்படும் அறிக்கை _____ எனப்படும்.

    (a)

    இருப்புநிலைக் குறிப்பு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    குறிப்பேடு

    (d)

    பேரேடு

  25. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  26. கொள்முதல் திருப்ப ஏடு பதிவு செய்வது

    (a)

    சரக்களித்தோருக்கு, உடனடியாக பணம் பெறாமெறாமல் திருப்பிய சரக்கு

    (b)

    அளித்தவரிடம் உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சொத்துகள்

    (c)

    உடனடியாக பணம் பெற்றுக் கொண்டு சொத்து வாங்கியவரிடம் திருப்பியது

    (d)

    மேற்கண்டஏதுமில்லை

  27. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

    (a)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

    (b)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (c)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (d)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

  28. எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    முறையான குறிப்பேடு 

    (d)

    எந்திரம் கணக்கு

  29. ஜனவரி 1,2017 அன்று சூரியா, சுந்தர் மீது ஒரு மூன்று மாதகால மாற்றுச் சீட்டினை எழுதினார்.அம்மாற்றுச் சீட்டின் தவணை நாள்.

    (a)

    மார்ச் 31,2017

    (b)

    ஏப்ரல்1,2017

    (c)

    ஏப்ரல் 30,2017

    (d)

    ஏப்ரல் 4, 2017

  30. மாற்றுச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள தொகையைப் பெறுபவர் ______.

    (a)

    எழுதுப் பெறுநர்

    (b)

    எழுதுநர்

    (c)

    செலுத்தப் பெறுநர்

    (d)

    உரிமையர்

  31. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  32. முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு

    (a)

    ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்

    (b)

    ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்

    (c)

    வங்கிப்பத்தி பற்றுப்பக்கம்

    (d)

    வங்கிப்பத்தி வரவுப்பக்கம்

  33. முப்பத்தி ரொக்க ஏட்டில் அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது தோன்றுவது 

    (a)

    ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் மட்டும் 

    (b)

    ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் மட்டும் 

    (c)

    ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  34. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  35. ரொக்க ஏடு பராமரிக்கப்படும் போது, தனியாக ரொக்கக் கணக்கு மற்றும்  ________ கணக்கு பேரேட்டில் தயாரிக்க வேண்டியதில்லை.

    (a)

    ரொக்கக் கணக்கு 

    (b)

    வங்கி கணக்கு 

    (c)

    எடுப்பு கணக்கு 

    (d)

    தள்ளுபடி கணக்கு 

  36. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.

    (a)

    வங்கியரால்

    (b)

    வணிகத்தால்

    (c)

    வணிகத்தின் கடனாளிகளால்

    (d)

    வணிகத்தின் கடனீந்தோரால்

  37. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல

    (a)

    காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு

    (b)

    சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

    (c)

    வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது

    (d)

    சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

  38. ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.    

    (a)

    கழிக்கப்பட வேண்டும் 

    (b)

    கூட்டப்படவேண்டும்  

    (c)

    இரண்டும் இல்லை 

  39. செல்லேட்டின் நகல்   

    (a)

    வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி   

    (b)

    வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி 

    (c)

    வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு     

    (d)

    இவை எதுவுமில்லை 

  40. ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு  ரூ 12,000 காசோலை விடுத்தும் வங்கியில் முன்னிலைப்படுத்தாதவை  ரூ 2,000 எனில் வங்கி  அறிக்கையின்படி இருப்பு.        

    (a)

    14,000 வரவு இருப்பு 

    (b)

    14,000 பற்றிருப்பு    

    (c)

    10,000 பற்றிருப்பு    

    (d)

    10,000 வரவிருப்பு  

  41. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

    (c)

    குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

    (d)

    பகுதி விடு பிழைகள்

  42. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  43. கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.

    (a)

    முழுவிடு

    (b)

    தூக்கி எழுதுதல் பிழை

    (c)

    கூட்டல் பிழை

    (d)

    கழித்தல் பிழை

  44. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  45. இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை  _________________ வெளிப்படுத்துவதில்லை.

    (a)

    குறிப்பேடு

    (b)

    பேரேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இறுதிக்கணக்குகள்

  46. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

    (a)

    காலப்போக்கு

    (b)

    பயன்பாடு

    (c)

    வழக்கொழிவு

    (d)

    அ, ஆ மற்றும் இ

  47. ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?

    (a)

    காலப்போக்கு

    (b)

    தேய்வு மற்றும் உராய்வு

    (c)

    தொழில்நுட்ப மாற்றங்கள்

    (d)

    மேற்கூறியவற்றில் ஏதுமில்லை

  48. நற்பெயர், புனையுரிமை மற்றும் தொடக்கச் செலவுகள் போன்ற புலனாகாச் சொத்துக்களின் மதிப்பு குறைதலைக் குறிப்பது________.

    (a)

    வெறுமையாதல் 

    (b)

    போக்கெழுதுதல் 

    (c)

    வழக்கொழிவு 

    (d)

    இவை எதுவுமில்லை 

  49. ஒரு நிலைச் சொத்தின் மதிப்பு ரூ. 20,000 ஆகும். அதன் மீது குறைந்து செல் இருப்பு முறையில் 10% தேய்மானம் நீக்கினால் மூன்றாவது வருடக் கடைசியில் நிலைச் சொத்தின் மதிப்பு _________ஆகும்.

    (a)

    ரூ. 7290

    (b)

    ரூ. 14580

    (c)

    ரூ. 1620

    (d)

    ரூ. 12890

  50. சொத்தின் ஆரம்ப அடக்கவிலை ரூ.1,00,000 எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் =5; எதிர்நோக்கும் இறுதி மதிப்பு =ரூ.2,000. நேர்க்கோட்டு முறையில் மூன்றாம் ஆண்டு தேய்மானத் தொகை எவ்வளவு?

    (a)

    ரூ.12,800

    (b)

    ரூ.19,600

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.20,400

  51. வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.

    (a)

    அடிக்கடி நிகழும் தன்மை

    (b)

    அடிக்கடி நிகழாத் தன்மை

    (c)

    நிலையானது

    (d)

    இவை எதுவுமில்லை

  52. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  53. விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (d)

    முதலின வரவு

  54. இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் __________ காண்பிக்கிறது.

    (a)

    இலாபத்தினை

    (b)

    நிதி நிலையினை

    (c)

    விற்பனையை

    (d)

    கொள்முதலை

  55. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  56. பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்? 

    (a)

    பற்றுப் பக்கத்தில் 

    (b)

    பொறுப்புக்கள் பக்கத்தில் 

    (c)

    சொத்துக்கள் பக்கத்தில் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  57. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  58. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  59. PASCAL மற்றும் COBOL போன்றவை _______ க்கு உதாரணம். 

    (a)

    இயக்கமுறைமை 

    (b)

    நிரலாக்க மென்பொருள் 

    (c)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (d)

    இவை எதுவுமில்லை 

  60. ________ குறிமுறைகள்,காசோலை,இடாப்பு போன்ற பல மூல ஆவணங்கள் முதன்மையாக குறிப்பிடப்படுகிறது.  

    (a)

    தொடர்ச்சியான 

    (b)

    தொகுப்புக் 

    (c)

    மதியோட்டு 

    (d)

    இவை அனைத்தும் 

  61. Section - B

    41 x 2 = 82
  62. கணக்கியலை வரையறு.

  63. கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.

  64. "சரக்கு" என்றால் என்ன? 

  65. குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர் 

  66. கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

  67. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

  68. கணக்கியல் என்றால் என்ன?

  69. நடவடிக்கைகளை பதிவு செய்வதில் பின்பற்றப்படும் அணுகுமுறைகள் யாவை?

  70. குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?

  71. பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.

  72. ரொக்கச் சீட்டு என்றால் என்ன (Cash Memo)?

  73. குறிப்பேட்டு பதிவுகளை தருக.
    (அ) சார்லஸ் தொழில் தொடங்கியது ரூ.1,00,000/-
    (ஆ) ஹரியிடமிருந்து பெற வேண்டிய தொகை மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது.

  74. பேரேடு என்றால் என்ன?

  75. பற்று இருப்பு என்றால் என்ன?

  76. இறுதி இருப்பு என்றால் என்ன?

  77. இருப்பாய்வு என்றால் என்ன? 

  78. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  79. இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.

  80. கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?

  81. மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.

  82. மறுக்கப்படுதல் என்றால் என்ன? 

  83. மாற்றுப் பதிவுகள் என்றால் என்ன?  

  84. ரொக்க ஏடு என்றால் என்ன?

  85. இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன

  86. சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`

  87. பாகுப்படுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

  88. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  89. ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக

  90. கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

      விவரம் ரூ
    (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
    (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
    (iii) வங்கி வசூலித்த வட்டி 100
    (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
    (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
  91. வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?  

  92. பிழை என்றால் என்ன?

  93. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.

    ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ரூ. 1,00,000
    ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ரூ. 1,000
    ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் ரூ. 9,000
    இறுதி மதிப்பு ரூ. 5,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள்
  94. ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?

  95. பின்வரும் செலவினங்கள் முதலினம், வருவாயினம், மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளா எனக் கூறுக.
    (i) புதிய இயந்திரம் வாங்கியதற்கான ஏற்றிச்செல் கட்டணம், மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 1,000
    (ii) அலுவலக வாடகைச் செலுத்தியது ரூ 2,000
    (iii) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ரூ 5,000
    (iv) ஐந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் மீதான வாடகை, ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படுகிறது.

  96. முதலினச் செலவு என்றால் என்ன?

  97. பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?

  98. இலாப நட்டக் கணக்கு தயாரித்தலின் தேவை என்னன்ன?

  99. சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன?

  100. கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?

  101. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  102. குறிமுறை என்றால் என்ன?

  103. Section - C

    21 x 3 = 63
  104. கணக்கியலின் பொருளை விளக்குக.

  105. குறிப்பு வரைக,
    (i) கொள்முதல் திருப்பம்
    (ii) விற்பனைத் திருப்பம்

  106. பொருத்துகை கருத்து என்றால் என்ன? ஏன் ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப் பின்பற்ற வேண்டும்?

  107. குறிப்பு வரைக: (i) அடக்கவிலைக் கருத்து
    (ii) வருவாய் தீர்வு கருத்து

  108. இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?

  109. கீழ்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
    சுந்தர் என்பவர் புத்தகங்களை வாங்கி விற்கும் ஒரு வியாபாரத்தை ரூ.2,00,000 ரொக்கத்தை தொடக்க முதலீடாக வைத்து ஆரம்பித்தார். அதிலிருந்து அவர் ரூ.80,000 மதிப்பிற்கு புத்தகங்களை வாங்கினார். அவர் ஒரு எழுத்தரை தன்னுடைய அலுவலகத்திற்காக நியமித்தார். அந்த மாத இறுதியில் அவருக்கு சம்பளமாக ரூ.6,000 கொடுத்தார். வாங்கிய புத்தகங்களிருந்து சிலவற்றை ரூ.90,000 மதிப்பளவிற்கு ரொக்கத்திலிருந்து விற்பனை செய்துள்ளார் மற்றும் மேலும் சில புத்தகங்களை ரூ.25,000க்கு ரவி என்பவருக்கு விற்றார்.
    வினாக்கள்:
    (i) எவ்வளவு தொகையை முதலாக போட்டு சுந்தர் தொழில் தொடங்கினார்?
    (ii) அவர் கொள்முதல் செய்த சரக்குகளின் மதிப்பு எவ்வளவு?
    (iii) என்ன சொத்து அவர் வாங்கினார்?
    (iv) அவருக்கு கடனாளியாக இருப்பவர் யார்? அவர் தரவேண்டிய தொகை எவ்வளவு?

  110. தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.

    2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.3,00,000
    2 வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது ரூ.2,00,000
    5 சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது ரூ.10,000
    15 புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது ரூ.5,000
    22 சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது  
    25 Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது ரூ.30,000
  111. “இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்” என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.

  112. அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?

  113. பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
    (அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
    (ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
    (இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
    (ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
    (உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
    (ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது

  114. குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  

  115. சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.

  116. ரொக்க ஏட்டின்  நன்மைகள் யாவை?

  117. ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை? 

  118. இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை? 

  119. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
    15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.

  120. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.

  121. நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

  122. இறுதிப் பதிவுகள் என்றால் என்ன? அவை ஏன் பதிவு செய்யப்படுகின்றன?

  123. வாரா ஐயக்கடன் ஒதுக்கு என்றால் என்ன? ஏன் அது உருவாக்கப்பட வேண்டும்?

  124. பல்வேறு வகையான குறிமுறையாக்க முறைகளைக் குறிப்பிடுக.

  125. Section - D

    14 x 5 = 70
  126. கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.

  127. கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  128. ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

     ஜனவரி
    2018 
       ரூ 
     1  ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது    80,000
    2  வங்கியில் செலுத்திய ரொக்கம் 40,000
    3  ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 5,000
    4  லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது 10,000
    5 ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  

     

  129. கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு.இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.

    2017 ஜூன்    ரூ 
    1 இரவி தொழில் தொடங்க முதலீடு செய்தது  5,00,000
    3 வங்கியில் செலுத்தியது  80,000
    5 கட்டம் வாங்கியது  3,00,00
    7 சரக்கு வாங்கியது  70,000
    10 சரக்கு விற்றது  80,000
    15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது  10,000
    25 மின்கட்டணம் செலுத்தியது  3,000
    30 ஊதியம் வழங்கியது  15,000
  130. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.​​​​​​​

    31.3.2017 ஆம் நாளன்றைய இருப்பாய்வு
    வ.எண் கணக்கின் பெயர் பே.ப.எண் பற்று இருப்பு ரூ. வரவு இருப்பு ரூ.
    1. கட்டடம்   60,000  
    2. இயந்திரம்   17,000  
    3. கொள்முதல் திருப்பம்   2,600  
    4. வாராக்கடன்   2,000  
    5. ரொக்கம்   400  
    6. பெற்றத் தள்ளுபடி   3,000  
    7. வங்கி மேல்வரைப்பற்று   10,000  
    8. கடனீந்தோர்   5,000  
    9. கொள்முதல்   1,00,000  
    10. முதல்     72,800
    11. பொருத்துகைகள்     5,600
    12. விற்பனை     1,04,000
    13. கடனாளிகள்     60,000
    14. வட்டிபெற்றது     2,600
      மொத்தம்   2,45,000 2,45,000
  131. கீழே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு திரு.சங்கர் அவர்களின் ஜூலை 2015-ம் ஆண்டுக்குரிய விற்பனை ஏடு தயார் செய்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்தெழுதுக.

    2015 ஜீலை 5 எஸ் எஸ் டிரேடர்ஸ்க்கு கடனுக்கு விற்றது 
      10 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம் 
      10 மேஜைகள் ஒன்று ரூ 850 வீதம் 10% தள்ளுபடி அனுமதிக்கவும் 
    8  இராஜாவிற்கு  ரொக்கத்திற்கு விற்ற சரக்கு    
      15 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம் 
    20 மோகன் & கோவிற்கு விற்றது 
      5 அலமாரிகள் ஒன்று ரூ 2200 வீதம்  
      10 மேஜைகள் ஒன்று ரூ 850 வீதம் 
    23 நாராயனுக்கு பழைய கணிப்பொறிகளை கடனுக்கு விற்றது ரூ 5,000
    28 குமரனுக்கு ரொக்க விற்பனை 
      10 நாற்காலிகள் நாற்காலி ஒன்று ரூ 250 வீதம் 
  132. பின்வரும் நடவடிக்கைகளை திருமதி.கனிமொழி அவர்களின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2016 ஆகஸ்ட்  1 கையிருப்பு ரொக்கம்  ரூ. 23,000
    2016 ஆகஸ்ட் 3 வங்கியில் செலுத்தியது  ரூ. 6,000
    2016 ஆகஸ்ட் 4 ரொக்க விற்பனை  ரூ. 12,000
    2016  ஆகஸ்ட் 5 குமரனுக்கு கடன் விற்பனை  ரூ. 1,500
    2016 ஆகஸ்ட் 7 அச்சக கட்டணம்  ரூ.1,500
    2016 ஆகஸ்ட் 9 நரேனிடம் காசோலை பெற்றது  ரூ. 4,000
    2016 ஆகஸ்ட் 12 பங்காதாயம் பெற்றது  ரூ.1,000
    2016 ஆகஸ்ட் 14 கணிப்பொறி வாங்கியது  ரூ.17,500
    2016 ஆகஸ்ட் 17 குமரனிடம் ரொக்கம் பெற்றது. ரூ.1,500
    2016 ஆகஸ்ட் 24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது  ரூ.1,000
    2016 ஆகஸ்ட் 24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது  ரூ.1000
  133. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
    [அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
    [ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
    [இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
    [ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20    

  134. கீழ்க்காணும் பிழைகளின் திருத்தத்துக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
    அ] தேவியிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 25,000 தவறுதலாக விற்பனை ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
    ஆ] இராஜனுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ 30,000 தவறுதலாக கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
    இ] அறைகலன் வாங்கியது ரூ 8,000 கொள்முதல் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
    ஈ] கட்டடம் கட்ட கூலி கொடுத்தது ரூ 1,00,000 கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    உ] மஞ்சுளா திருப்பிய சரக்கு ரூ 5,000, எதிலும் பதிவு செய்யப்படவில்லை.    

  135. ஜுலை 1, 2015 ஒரு நிறுவனம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.

  136. இராஜீ என்பவர் 2018 ஆம் ஆண்டு தன் தொழில் செலவிடப்பட்ட செலவுகளைத் தருகிறார். அவை எவ்வகைச் செலவினத்தைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக.
    1. காப்புரிமை பெறச் செலவு செய்தது ரூ 12,000.
    2. புதிய இயந்திரம் கொண்டு வர வண்டிச் சத்தம் செலுத்தியது ரூ 700.
    3. அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ 515.
    4. அரசாணையின்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்ய செலவு ரூ 5,000
    5. விளம்பரச் செலவு அதிகமாகச் செய்தது ரூ 7,500.  

  137. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
    உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
    மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
    ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
    ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
    கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
    உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
    வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
    நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
  138. ராஜேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளன.

     பற்று இருப்பு   ரூ   வரவு இருப்பு   ரூ 
      எடுப்புகள்     44,000   முதல்     1,76,000
      பொறி மற்றும் இயந்திரம்      1,00,000   ரொக்க விற்பனை     1,72,000
      தொடக்கச் சரக்கிருப்பு 20,000   வாரா ஐயக்கடன் ஒதுக்கு    2,000
      கொள்முதல்  2,70,000   வங்கி மேல்வரைப்பற்று 20,000
      கூலி 62,000   தள்ளுபடி பெற்றது 6,000
      சம்பளம் 70,000   கடன் விற்பனை 3,00,000
       காப்பீடு 45,000   பற்பல கடனீந்தோர் 24,000
      வாடகையும், வரியும் 17,000     
      பற்பல கடனாளிகள் 50,000    
      அனாமத்துக் கணக்கு 22,000    
      7,00,000   7,00,000

    கீழ்க்காணும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
    (அ) 2016 டிசம்பர் 31 அன்று சரக்கிருப்பின் மதிப்பு ரூ 28,000
    (ஆ) காலாவதி ஆகாத காப்பீட்டு முனைமம் ரூ 15,000
    (இ) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    (ஈ) பொறி மற்றும் இயந்திரம் மீது 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
    2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  139. கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகளை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Accountancy Important Question )

Write your Comment