முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

  (a)

  முதலினச் செலவு

  (b)

  வருவாயினச் செலவு

  (c)

  நீள்பயன் வருவாயினச் செலவு

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை

 2. வங்கி வைப்புகள் மீதான வட்டி

  (a)

  முதலின வரவு

  (b)

  வருவாயின வரவு

  (c)

  முதலினச் செலவு

  (d)

  வருவாயினச் செலவு

 3. நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.

  (a)

  முதலினச் செலவுகள்

  (b)

  வருவாயினச் செலவுகள்

  (c)

  வருவாயின வரவுகள்

  (d)

  முதலின வரவுகள்

 4. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

  (a)

  கடந்த காலத்திற்கு

  (b)

  எதிர் காலத்திற்கு

  (c)

  நடப்பு காலத்திற்கு

  (d)

  எந்த காலத்திற்கும்

 5. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

  (a)

  வருவாயினச் செலவுகள்

  (b)

  முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

  (c)

  நீள்பயன் வருவாயினச் செலவுகள்

  (d)

  முதலினச் செலவுகள்

 6. வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.

  (a)

  அடிக்கடி நிகழும் தன்மை

  (b)

  அடிக்கடி நிகழாத் தன்மை

  (c)

  நிலையானது

  (d)

  இவை எதுவுமில்லை

 7. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

  (a)

  முதலினச் செலவு

  (b)

  வருவாயினச் செலவு

  (c)

  நீள்பயன் வருவாயினச் செலவு

  (d)

  இவை எதுவுமில்லை

 8. வருவாயினச் செலவு பயன்தருவது_________________ 

  (a)

  அடுத்த ஆண்டுக்கு

  (b)

  முந்தைய ஆண்டுக்கு

  (c)

  நடப்பு ஆண்டுக்கு

  (d)

  இவை எதுவுமில்லை

 9. ரூ 1,00,000 மதிப்புள்ள ஒரு சொத்து ரூ 85,000 க்கு விற்கப்பட்டால், முதலின நட்டம்_______________ 

  (a)

  ரூ 85,000

  (b)

  ரூ 1,00,000

  (c)

  ரூ 15,000

  (d)

  ரூ 1,85,000

 10. தொழிலில் கிடைக்கப் பெற்ற நிகர நட்டம், ஒரு 

  (a)

  வருவாயின நட்டம்

  (b)

  முதலின நட்டம்

  (c)

  முதலின வரவு

  (d)

  வருவாயின வரவு

 11. 4 x 1 = 4
 12. முதலினச் செலவு

 13. (1)

  கட்டடம் வாங்குவதற்கானச் செலவு

 14. வருவாயினச் செலவு

 15. (2)

  உற்பத்திச் செலவுகள்

 16. நீள்பயன் வருவாயினச் செலவு

 17. (3)

  சிறப்பு நன்கொடை பெற்றது.

 18. முதலின வரவு

 19. (4)

  பழுதுபார்ப்புச் செலவு

  7 x 2 = 14
 20. பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
  (i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
  (ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
  (iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000.

 21. பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
  (i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
  (அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
  (ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
  (ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.

 22. வருவாயினச் செலவு என்றால் என்ன?

 23. முதலினச் செலவு என்றால் என்ன?

 24. முதலின வரவு என்றால் என்ன?

 25. நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?

 26. செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.

 27. 4 x 3 = 12
 28. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.

 29. முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.

 30. முதலினச் செலவின் இயல்புகள் யாவை? 

 31. நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

 32. 2 x 5 = 10
 33. பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
  (i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
  (ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
  (iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.

 34. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
  (i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
  (ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
  (iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
  (iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
  (v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Model Question Paper )

Write your Comment