திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________ 

    (a)

    தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம் 

    (b)

    சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

    (a)

    முக்கியத்துவ மரபு

    (b)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிகழ்வு தீர்வு / கருத்து

  3. _______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.

    (a)

    ஒற்றைப்பதிவு முறை

    (b)

    இரட்டைப்பதிவு முறை

    (c)

    கணக்கேடுகள் பராமரிப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    சொத்துக் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  5. குமார் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _______ 

    (a)

    தனி நபர் ஆள்சார் க/கு

    (b)

    சட்டமுறை அமைப்பு ஆள்சார்

    (c)

    பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை.

  6. சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது.

    (a)

    பற்றிருப்புகள்

    (b)

    வரவிருப்புகள்

    (c)

    பற்று/வரவு இருப்புகள்

    (d)

    இருப்புகள் இன்மை

  7. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

    (a)

    ஆண்டு இறுதியில்

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளில்

    (c)

    ஒரு பருவ காலம் முடிந்தது

    (d)

    இவை ஏதும் இல்லை

  8. ஜூலை 12, 2015 ஆண்டு சுபா, மஞ்சுளா மீது ஒரு மாத கால சீட்டின் எழுதினார். அம்மாற்றுச்சீட்டின் தவணை நாள்

    (a)

    ஆகஸ்ட் 12, 2015

    (b)

    ஆகஸ்ட் 15, 2015

    (c)

    ஆகஸ்ட் 16, 2015

    (d)

    ஆகஸ்ட் 14, 2015

  9. சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  10. ரொக்க ஏடு பராமரிக்கப்படும் போது, தனியாக ரொக்கக் கணக்கு மற்றும்  ________ கணக்கு பேரேட்டில் தயாரிக்க வேண்டியதில்லை.

    (a)

    ரொக்கக் கணக்கு 

    (b)

    வங்கி கணக்கு 

    (c)

    எடுப்பு கணக்கு 

    (d)

    தள்ளுபடி கணக்கு 

  11. எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது

    (a)

    ரொக்க  ஏட்டின் படி ரொக்க  பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க  ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (b)

    ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (c)

    ரொக்க  ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (d)

    சில்லறை ரொக்க  ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க  ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

  12. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  13. கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும். 

    (a)

    விடுபிழை 

    (b)

    பகுதி விடுபிழை

    (c)

    முழுவிடுபிழை

    (d)

    இருமுறை பதிந்தபிழை

  14. சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது?

    (a)

    நேர்கோட்டு முறை

    (b)

    குறைந்து செல் இருப்பு முறை

    (c)

    தேய்மான நிதி முறை

    (d)

    ஆண்டுத் தொகை முறை

  15. சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் போன்ற இயற்க்கை வளங்களின் மதிப்புக் குறைதல் ________எனப்படும்.

    (a)

    போக்கெழுதல் 

    (b)

    வழக்கொழிவு 

    (c)

    வெறுமையாதல் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  16. ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு. 

    (a)

    ரூ 8,000

    (b)

    ரூ 8,500

    (c)

    ரூ 500

    (d)

    ரூ 16,500

  17. இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் __________ காண்பிக்கிறது.

    (a)

    இலாபத்தினை

    (b)

    நிதி நிலையினை

    (c)

    விற்பனையை

    (d)

    கொள்முதலை

  18. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

    (a)

    வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (b)

    பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (c)

    வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

    (d)

    இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  19. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  20. பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

    (a)

    உள்ளீட்டு அலகு

    (b)

    வெளியீட்டு அலகு

    (c)

    தரவு

    (d)

    மையச் செயல்பாட்டு அலகு

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. குறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை
    (ii) கடன் நடவடிக்கை

  23. கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.

  24. மறுக்கப்படுதல் என்றால் என்ன? 

  25. சாதாரண ரொக்க ஏடு என்றால் என்ன?

  26. விதிப்பிழை என்றால் என்ன?

  27. நிலைத் தவணை முறை என்றால் என்ன? 

  28. பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
    (ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
    (iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000.

  29. பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?

  30. இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை? 

  31. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?

  34. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
    (அ) முதல்
    (ஆ) கட்டட ம்
    (இ) உள் ஏற்றிச் செல் செலவு
    (ஈ) ரொக்கம்
    (உ) தள்ளுபடிப் பெற்றது
    (ஊ) வங்கி
    (எ) கொள்முதல்
    (ஏ) சந்துரு
    (ஐ) கொடுபட வேண் டிய கூலி.

  35. தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.

    2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.3,00,000
    2 வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது ரூ.2,00,000
    5 சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது ரூ.10,000
    15 புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது ரூ.5,000
    22 சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது  
    25 Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது ரூ.30,000
  36. இருப்பாய்வின் இயல்புகள் யாவை?

  37. சிறு குறிப்பு வரைக
    (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
    (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

  38. எப்போது வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது?  

  39. கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.

  40. திரு.அப்துல் 2001 ஏப்ரல் 1,அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கினார். மூன்று ஆண்டுகள் அவ்வியந்திரம் பயன்படுத்தப்பட்ட பிறகு ரூ.1,60,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் 10% குறைந்து செல் இருப்புமுறையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கேடுகள் மார்ச் 31அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் விற்பனை மீதான இலாபம் அல்லது நட்டம் காண்க.

  41. முதலினச் செலவின் இயல்புகள் யாவை? 

  42. இறுதிக் கணக்குகளில் இறுதிச் சரக்கிருப்பு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை விளக்கவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.

    2. டெக் நிறுவனத்தின் 2016-2017 க்கான மொத்தத்த விற்பனைத் தொகை  (பொருட்கள்   வாரியாக) கீழே கொக்கப்பட்டுள்ளன

      Product Sales ரூ
      Toothpaste 22,000
      Toothbrush 11,000
      Hair Oil 9,000
      Shampoo 13,000
      Toilet Soap 9500
      Bath Soap 6500

      (அ) தரவுகளை தூண் விளக்கப்படத்தில் வழங்கவும்.
      (ஆ) தூண் வரைபடத்திலிருந்து வரி விளக்கப்படத்திற்கு மாற்றவும்

    1. திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

    2. திரு.ஜான் அவர்களின் பின்வரும் இருப்பாய்வினைக் கொண்டு 31.1.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கனா வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கிணைத் தயாரிக்கவும்.         

      விவரம் தொகை (ரூ) விவரம்  தொகை (ரூ)
      கொள்முதல்  5,40,000 விற்பனை  10,40,000
      சம்பளம் மற்றும் கூலி  3,50,000 வெளித்திருப்பம்    12,000
      அலுவலகச் செலவுகள்    4,000 தள்ளுபடி பெற்றது  6,000
      வியாபார செலவுகள்  8,000 வட்டி பெற்றது  3,000
      தொழிற்சாலை செலவுகள்  11,000 முதல்  1,78,000
      வருமான வரி  8,000    
      உள் திருப்பம்  12,000    
      தள்ளுபடி அளித்தது     4,000    
      கழிவு  2,000    
      சரக்கிருப்பு  60,000    
      வருமான வரி  40,000    
      கையிருப்பு ரொக்கம்    2,00,000    
        12,39,000   12,39,000

      இறுதி சரக்கிருப்பு ரூ1,35,000 என கனக்கிடப்பட்டுள்ளது       

    1. கீழ்க்காணும் நடவடிக்கைகளை அகமது என்பவரின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

      2017 அக்   ரூ
      1 ரொக்க இருப்பு 37,500
      3 ரொக்க விற்பனை 33,000
      7 வேலனுக்கு செசெலுத்திய ரொக்கம்ரூ 15,850 அவர் அனுமதித்த தள்ளுபடி 150
      13 பெருமாள் என்பன்பவருக்கு கடனுக்கு விற்ற சரக்கு 19,200
      15 சொந்த செலவுகளுக்காகப் பணம் எடுத்தது 4,800
      16 சுப்பிரமணியனிடமிருந்து சரக்குகள் கடனுக்கு வாங்கியது 14,300
      22 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 22,700
      25 பெருமாளிடம் ரொக்கம் பெற்று அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டது 19,000
      26 அலுவலக செலவிற்காக காசோலை மூலம் ரொக்கம் எடுத்தது 17,500
      27 கோபால கிருஷ்ணனுக்கு ரொக்கம் செலுத்தியது  2,950
        அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி 50
      28 சுப்பிரமணியனுக்கு ரொக்கம் செலுத்தி அவர் கணக்கு
      முழுவதும் தீர்க்கப்பட்டது
      14,200
      29 ரொக்கக் கொள்முதல் 13,500
      30 விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது 1,500
    2. பின்வரும் பிழைகள் இருப்பா்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டவை. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
      (அ) அனிதாவுக்கு ரூ.50 செலுத்தியது தவறாக வனிதாவின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) ரூ.500-க்கு அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (இ) நடராஜனிடமிருந்து கடனுக்கு ரூ.750-க்கு சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
      (ஈ) இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

    1. பின்வரும் நடவடிக்கைகளை அறைகலன் விற்பனை செய்யும் கமலா அறைகலன் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.

      2017  
      மே 2 திருச்சி, நவீன் நிறுவனத்திற்கு ஒன்று ரூ. 1,750 வீதம் 5 கனிணி மேசைகள் கடனுக்கு விற்றது
      மே 9 மதுரை, தீபா உணவகத்திற்கு 6 உணவு மேசைகள் ஒன்று ரூ. 1,900 வீதம் கடனுக்கு விற்றது.
      மே 15 இராஜேஷிற்கு ஒன்று ரூ. 2,750 வீதம் 10 அலங்கார மேசைகள்
      கடனுக்கு விற்றது.
      மே 24 அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 1,250 வீதம் 5 மர மேசைகள் கடனுக்கு விற்றது.
      மே 27 கோபிக்கு ஒன்று ரூ. 3,500 வீதம் மூன்று பழைய கணினிகள் விற்றது.
      மே 29 அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 275 வீதம் 50 நாற்காலிகள் ரொக்கத்திற்கு விற்றது
    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
      [அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
      [ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
      [இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
      [ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20    

    1. திரு .இராம கிருஷ்ணன் அவர்களின் 2015 மார்ச் 31-ம் நாளன்றைய பேரேட்டுக் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் கொண்டு, இருப்பாய்வு தயாரிக்க.

        ரூ.
      முதல் 2,40,000
      எடுப்புகள் 60,000
      பற்பல கடனீந்தோர் 4,30,000
      செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள் 40,000
      பற்பல கடனாளிகள் 5,00,000
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் 52,000
      பொறிவகைத் தொழுகுப்பு 45,000
      தொடக்கச் சரக்கிருப்பு 3,70,000
      கை ரொக்கம் 9,000
      சம்பளம் 95,000
      விற்பனைத் திருப்பம் 10,000
      கொள்முதல் திருப்பம் 11,000
      கழிவு செலுத்தியது 1,000
      வியாபாரச் செலவுகள் 25,000
      தள்ளுபடி பெற்றது 5,000
      வாடகை 26,000
      வங்கி கடன் 60,000
      கொள்முதல் 7,48,000
      விற்பனை 11,80,000
      வங்கி வச ரொக்கம் 25,000
    2. திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

          ரூ 
      2017
      செப்டம்பர் 1
      கையிருப்பு ரொக்கம்  19,000
      3 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  10,000
      4 வெங்கட்டிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது  18,000
      6 மோகனிடமிருந்து பெற்றது 4160,தள்ளுபடி அளித்தது  40
      8 மின்கட்டணம் செலுத்தியது  850
      9 வங்கியில் பணம் செலுத்தியது  20,000
      14 வெங்கட்டிற்கு ரூ. 17,600 செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. 4,800
      24 வேல்முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது  4,000
      26 சம்பளம் கொடுத்தது  4,000
      28 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 5,000
    1. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

    2. பின்வரும் விவரங்களிலிருந்து ரொக்க கணக்கினைத் தயாரிக்கவும்.

      2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ10000
      2018 ஜன 3 வங்கியில் கணக்கு துவங்கியது ரூ.10000
      2018 ஜன 5 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ.25000
      2018 ஜன 7 ரமேஷ் என்பவருக்கு சரக்கு விற்றது ரூ.8000
      2018 ஜன 12 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.12000
      2018 ஜன 15 குமார் என்பவரிடம் சரக்கு விற்ற காசோலை பெற்றது ரூ.7000
      2018 ஜன 20 சிவா என்பவரிடம் சரக்கு வாங்கி காசோலை விடுத்தது ரூ.15000
      2018 ஜன 30 வாடகை செலுத்தியது ரூ.3000
      2018 ஜன 1 ஊதியம் வழங்கியது ரூ.5000

       

    1. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

    2. பின்வரும் நடவடிக்கைகளுக்கு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்குக.
      (i) இராகேஷ் ரூ 1,50,000 முதலுடன் தொழில் தொடங்கினார்.
      (ii) வங்கியில் இட்ட தொகை ரூ 80,000.
      (iii) மகேஷிடமிருந்து கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது ரூ 25,000.
      (iv) 10,000 மதிப்புள்ள சரக்குகள் ரூ 14,000க்கு மோகனிடம் விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்தினார் .
      (v) காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு ரூ 2,000 உடனடியாக வங்கியில் வசூலிப்பதற்காக செலுத்தப்பட்டது.
      (vi) அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது ரூ 6,000.
      (vii) இராமனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு ரூ 15,000-ல், ரூ 5,000 உடனடியாக பணமாகப் பெறப்பட்டது.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Accountancy - Revision Model Question Paper 2 )

Write your Comment