Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    60 x 1 = 60
  1. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

    (a)

    நிதிநிலைக் கணக்கியல்

    (b)

    மேலாண்மைக் கணக்கியல்

    (c)

    மனிதவளக் கணக்கியல்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  2. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

    (a)

    குறிப்பேடு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு

    (d)

    பேரேடு

  3. பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.  

    (a)

    செலவுகள்

    (b)

    வருவாய் 

    (c)

    ஆதாயம்

    (d)

    முதலீடு

  4. திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

    (a)

    சொத்துகள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    பற்று

    (d)

    வரவு

  5. ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை _________ 

    (a)

    சொத்து 

    (b)

    பொறுப்பு 

    (c)

    முதல் 

    (d)

    எடுப்பு 

  6. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  7. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  8. _______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.

    (a)

    ஒற்றைப்பதிவு முறை

    (b)

    இரட்டைப்பதிவு முறை

    (c)

    கணக்கேடுகள் பராமரிப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  9. கணக்கியலின் ஆதாரத் தூண்களாக விளங்குபவை _________________ 

    (a)

    அடிப்படை அனுமானங்கள்

    (b)

    எதிர்பார்க்கும் நட்டங்கள் 

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    கணக்கியல் கருத்துகள்

  10. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனக்குழு ________ ஆண்டில் கணக்கியல் தரநிலை வாரியத்தை ஏற்படுத்தி இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளின் தேவையை வலியுறுத்தியது.

    (a)

    21 ஏப்ரல் 1997

    (b)

    21 ஏப்ரல் 1977

    (c)

    21 ஏப்ரல் 1987

    (d)

    21 ஏப்ரல் 2007

  11. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

    (a)

    சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

    (b)

    சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

    (c)

    பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

    (d)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

  12. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

    (a)

    எடுப்புகள் கணக்கு

    (b)

    ரொக்கக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    கொள்முதல் கணக்கு

  13. கொடுப்பதா வேண்டிய வாடகை கணக்கு எடுத்துகாட்டாக விளங்குவது

    (a)

    பெயரளவு கணக்கிற்கு

    (b)

    சொத்துக் கணக்கிற்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு

  14. கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

    (a)

    முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்

    (b)

    முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

    (c)

    சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்

    (d)

    சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

  15. RTGS என்பது ________ குறிக்கிறது.

    (a)

    நிகழ்நேர மொத்த தீர்வகம் 

    (b)

    தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் 

    (c)

    கடன் அட்டை 

    (d)

    எடுப்பு அட்டை 

  16. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  17. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  18. குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறைக்கு _______ என்று பெயர்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    குறிப்பேட்டில் பதிதல்

    (c)

    இருப்பு கட்டுதல்

    (d)

    எடுத்தெழுதுதல்

  19. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  20. குறிப்பேட்டில் பேரேட்டுகப் பக்க பத்தி போது நிரப்பப்படும்.

    (a)

    கூட்டும் போது

    (b)

    இருப்பு காட்டும் போது

    (c)

    உடனடியாக

    (d)

    எடுத்தெழுதும் போது

  21. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  22. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

    (a)

    அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

    (b)

    அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

    (c)

    ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

    (d)

    ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  23. பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.

    (a)

    திருத்தப் பதிவுகள்

    (b)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (c)

     விதிப்பிழைகள்

    (d)

    இவை எதுவுமில்லை

  24. வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது ______ 

    (a)

    மணி கணக்கு

    (b)

    சில்லறை வருமானக் கணக்கு

    (c)

    திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு

    (d)

    ரொக்கக் கணக்கு

  25. அனாமத்து கணக்கின் பற்று இருப்பு தோன்றுமிடம்

    (a)

    இலாப நட்டக் கணக்கு பற்று பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கு வரவு பக்கம்

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு சொத்து பக்கம்

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு பொறுப்பு பக்கம்

  26. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

    (a)

    விற்பனை கணக்கு

    (b)

    ரொக்க கணக்கு

    (c)

    கொள்முதல் கணக்கு

    (d)

    உரிய குறிப்பேடு

  27. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

    (a)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

    (b)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (c)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (d)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

  28. ஒரு மாற்றுச்சிட்டு ஏற்கப்படும் போது அந்த நடவடிக்கையை ஏற்பவர் ______ ஏட்டில் பதிகிறார்.

    (a)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 

    (b)

    மாற்றுசீட்டு

    (c)

    செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    குறிப்பேட்டில்

  29. எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.

    (a)

    குறிக்கை 

    (b)

    எடுத்தெழுதல்

    (c)

    மேலெழுதல்

    (d)

    அவமதிப்பு

  30. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

    (a)

    மொத்த கொள்முதல்

    (b)

    ரொக்கக் கொள்முதல் மட்டும்

    (c)

    கடன் கொள்முதல் மட்டும்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  31. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  32. முப்பத்தி ரொக்க ஏட்டில் முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு

    (a)

    ரொக்கப்பத்தி பற்றுப்பக்கம்

    (b)

    ரொக்கப்பத்தி வரவுப்பக்கம்

    (c)

    வங்கிப்பத்தி பற்றுப்பக்கம்

    (d)

    வங்கிப்பத்தி வரவுப்பக்கம்

  33. ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு 

    (a)

    ரொக்க ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு 

    (c)

    முதற்குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  34. நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு 

    (a)

    சரக்கீந்தோர் க/கு 

    (b)

    வாடிக்கையாளர் க/கு 

    (c)

    உரிமையர் க/கு 

    (d)

    வங்கி க/கு 

  35. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  36. வங்கி அறிக்கை என்பது

    (a)

    ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்

    (b)

    ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்

    (c)

    வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்

    (d)

    வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்

  37. எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது

    (a)

    ரொக்க  ஏட்டின் படி ரொக்க  பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க  ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (b)

    ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (c)

    ரொக்க  ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

    (d)

    சில்லறை ரொக்க  ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க  ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு

  38. வங்கிக் கணக்கறிக்கை ரூ 2,000 மேல்வரைப் பற்று காட்டுகிறது.கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ 500 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு.    

    (a)

    ரூ 1,500 

    (b)

    ரூ 2,500 (மேல் வரை)

    (c)

    ரூ 2,500

    (d)

    ரூ 7,500

  39. ரொக்க  ஏட்டின்படி இருப்பு ஆரம்ப  நிலையாக  இருக்கும் பொழுது, வங்கியில்  நேரடியாக  செலுத்துபவை      

    (a)

    கூட்டப்பட வேண்டும்   

    (b)

    கழிக்கப்பட வேண்டும்    

    (c)

    சரிகட்ட வேண்டும் 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை 

  40. ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு  ரூ 12,000 காசோலை விடுத்தும் வங்கியில் முன்னிலைப்படுத்தாதவை  ரூ 2,000 எனில் வங்கி  அறிக்கையின்படி இருப்பு.        

    (a)

    14,000 வரவு இருப்பு 

    (b)

    14,000 பற்றிருப்பு    

    (c)

    10,000 பற்றிருப்பு    

    (d)

    10,000 வரவிருப்பு  

  41. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

    (c)

    குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

    (d)

    பகுதி விடு பிழைகள்

  42. கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

    (a)

    கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

    (b)

    நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.

    (c)

    அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    (d)

    ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது

  43. விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    செய்பிழைகள்

    (c)

    பிழைகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  44. இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை  _________________ வெளிப்படுத்துவதில்லை.

    (a)

    குறிப்பேடு

    (b)

    பேரேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இறுதிக்கணக்குகள்

  45. பிழைகளைக் கண்டறிந்து அவற்றைத் திருத்தும் வரை _______________ ஏடுகளில் இருக்கும். 

    (a)

    முதல் கணக்கு

    (b)

    பேரேட்டுக் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    இவை எதுவுமில்லை

  46. பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது

    (a)

    பொறி மற்றும் பொறி இயந்திரம்

    (b)

    சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்

    (c)

    கட்டடங்கள்

    (d)

    வணிகக்குறி

  47. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

    (a)

    சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

    (b)

    சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

    (c)

    சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

    (d)

    சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

  48. நற்பெயர், புனையுரிமை மற்றும் தொடக்கச் செலவுகள் போன்ற புலனாகாச் சொத்துக்களின் மதிப்பு குறைதலைக் குறிப்பது________.

    (a)

    வெறுமையாதல் 

    (b)

    போக்கெழுதுதல் 

    (c)

    வழக்கொழிவு 

    (d)

    இவை எதுவுமில்லை 

  49. ஒரு பொறிவகையின் மதிப்பு ரூ.10,000 பயனளிப்புக் காலம் ஆண்டுகள், ஏறி மதிப்பு ரூ.1000 என்றால் நேர்கோட்டு முறையின் தேய்மான விகிதம்  _______ஆகும்.

    (a)

    9.5%

    (b)

    9%

    (c)

    10%

    (d)

    12%

  50. சொத்தின் ஆரம்ப அடக்கவிலை ரூ.1,00,000 எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் =5; எதிர்நோக்கும் இறுதி மதிப்பு =ரூ.2,000. நேர்க்கோட்டு முறையில் மூன்றாம் ஆண்டு தேய்மானத் தொகை எவ்வளவு?

    (a)

    ரூ.12,800

    (b)

    ரூ.19,600

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.20,400

  51. ஓராண்டிற்கு மேல் தொழிலுக்கு பயன்தரும் நடவடிக்கை

    (a)

    முதலின நடவடிக்கை

    (b)

    வருவாயின நடவடிக்கை

    (c)

    'அ' மற்றும் 'ஆ'

    (d)

    இவை எதுவுமில்லை

  52. விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (d)

    முதலின வரவு

  53. தொழிலில் கிடைக்கப் பெற்ற நிகர நட்டம், ஒரு 

    (a)

    வருவாயின நட்டம்

    (b)

    முதலின நட்டம்

    (c)

    முதலின வரவு

    (d)

    வருவாயின வரவு

  54. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

    (a)

    ரொக்கம்

    (b)

    சரக்கிருப்பு

    (c)

    அறைகலன்

    (d)

    முன்கூட்டிச் செலுத்திய செலவு

  55. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  56. நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது? 

    (a)

    இலாபத்திலிருந்து 

    (b)

    முதலிலிருந்து 

    (c)

    எடுப்பிலிருந்து 

    (d)

    கை ரொக்கத்திலிருந்து 

  57. உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______. 

    (a)

    ரூ 56,000 

    (b)

    ரூ 5,600

    (c)

    ரூ5,60,000

    (d)

    ரூ 7,00,000

  58. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  59. ______ முறையானது கொள்முதல், விற்பனை நிதி,சரக்கு மற்றும் உற்பத்தி போன்ற அணைத்து வணிக செயற்பாடுகளை தானியங்கியாகவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

    (a)

    கணினிமயக் கணக்கியல்  

    (b)

    வணிகவியல் 

    (c)

    நிதியியல் 

    (d)

    பொருளியல் 

  60. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  61. Section - B

    41 x 2 = 82
  62. கணக்கியல் செயல்பாட்டிலுள்ள படிநிலைகள் யாவை?

  63. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

  64. முதல் என்றால் என்ன?

  65. எடுப்பு என்றால் என்ன?

  66. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

  67. தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க

  68. கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.

  69. கணக்குப் பதிவியல் என்றால் என்ன?

  70. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

  71. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

  72. செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?

  73. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரவு கணக்கு என்று வகைப்படுதுக.
    [அ] முதல்
    [ஆ] பெற்ற கழிவு
    [இ] கட்டிடம்
    [ஈ] கொடுபட வேண்டிய கூலி

  74. வரவு இருப்பு என்றால் என்ன?

  75. கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?

  76. இறுதி இருப்பு என்றால் என்ன?

  77. கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
    அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி

  78. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  79. இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  80. மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.

  81. இடாப்பு என்றால் என்ன?

  82. மாற்றுச் சீட்டை ஒய்வுபடுத்துதல் பற்றி குறிப்பு எழுதுக.

  83. மாற்றுச் சீட்டைப் புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.

  84. ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?

  85. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

  86. முப்பத்தி ரொக்க ஏட்டின் மாதிரிப் படிவம் தருக.

  87. சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`

  88. வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

  89. நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பெறும் ஏதேனும் இரண்டு செலவுகளை தருக

  90. வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?  

  91. செல்லேட்டில் அதிகமான இருப்பினை  விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை  வரிசைப்படுத்துக.       

  92. விடுபிழை என்றால் என்ன?

  93. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.

    ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ரூ. 1,00,000
    ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ரூ. 1,000
    ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் ரூ. 9,000
    இறுதி மதிப்பு ரூ. 5,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள்
  94. ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்

  95. முதலினச் செலவு என்றால் என்ன?

  96. நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?

  97. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?

  98. இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக

  99. கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?

  100. கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?

  101. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  102. மென்பொருள் என்றால் என்ன?

  103. Section - C

    21 x 3 = 63
  104. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? (அ) முதலீட்டாளர்கள்  (ஆ) அரசு

  105. கீழ்க்காணும் குறுங்கட்டுரையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். கணக்கியல் வணிகத்தின் மொழியாகும். ஒரு மொழியின் முக்கியமான பணி. அது தகவல் தொடர்புக்கு உதவுவதாக இருக்க வேண்டும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதித் தகவல்களிலிருந்து, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதிநிலைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயனீட்டாளர்களுக்கு இத்தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
    (i) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு புறபயனீட்டாளர்கள் யாவர்?
    (ii) கணக்கியல் தகவல்களை பயன்படுத்தும் ஏதேனும் இரண்டு அகப்பயனீட்டாளர்கள் யாவர்?
    (iii) ஏன் அவர்களுக்கு அந்த கணக்கியல் தகவல்கள் தேவைப்படுகிறது?

  106. ‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.

  107. கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?

  108. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

  109. கீழ்கண்டவைகளுக்கு ஏதேனும் ஒரு தொகையுடன் நடவடிக்கைகளைத் தருக.
    அ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு கூடுதல்.
    ஆ] சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் குறைதல்
    இ] சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு கூடுதல்.
    ஈ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு குறைதல். 

  110. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  111. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  112. இருப்பாய்வின் இயல்புகள் யாவை?

  113. துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

  114. வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  115. ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  116. சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?

  117. பின்வரும் விவரங்களிலிருந்து  திரு.ஜோசப்  அவர்களின்  வங்கி அறிக்கையின்  படியான  இருப்பினை  2018 மார்ச்  31 -ல் காண்க.
    1. 2018 மார்ச்  31 - ல் ரொக்க  ஏட்டின் படியான வங்கியிருப்பு  ரூ 11,500
    2. விடுத்த காசோலைகள்  பணமாக்கப்படாதவை  ரூ 1,750
    3. வங்கியில்  செலுத்திய  காசோலைகள்  31 மார்ச்  2018 - ல் தீர்வு செய்யப்படாது  ரூ 2,150.
    4. வாங்கி வசூல் செய்த  முதலீடுகள்  மீது வட்டி  ரூ 275 குறித்து  ரொக்க  ஏட்டில்  பதிவு இல்லை.
    5. உள்ளுர்  காசோலை  நேரடியாக வங்கியில்  செலுத்தியது. ரூ 250 குறித்து  எட்டில்  பதிவு இல்லை .
    6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/                         

  118. கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.

  119. குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.

  120. முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.

  121. நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?

  122. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சரக்கு விற்பனைக்கான அடக்கத்தினை கணக்கிடவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 10,000 மறைமுகச் செலவுகள் 5,000
    கொள்முதல் 80,000 இறுதிச் சரக்கிருப்பு 15,000
    நேரடிச் செலவுகள் 7,000    
  123. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  124. மாணவர் பட்டியலும் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதமும் பின்வருமாறு இருந்தன. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 50% எடுத்திருந்தால், அவர் தேர்ச்சியடைந்ததாகவும் இல்லையெனில் தேர்ச்சியடையவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.

    Student Percentage of marks
    1 59
    2 60
    3 65
    4 45
    5 35
  125. Section - D

    14 x 5 = 70
  126. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  127. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  128. கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.

    அ] ரொக்கக் க/கு
           அறைகலன் க/கு   
    ஆ] வாடகை க/கு
            ரொக்கக் க/கு  
    இ] வங்கி க/கு
           ரொக்கக் க/கு  
    ஈ) தமிழ்ச் செல்வி க/கு
            விற்பனை க/கு  
  129. பின்வரும் விவரங்களிலிருந்து ரொக்க கணக்கினைத் தயாரிக்கவும்.

    2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ10000
    2018 ஜன 3 வங்கியில் கணக்கு துவங்கியது ரூ.10000
    2018 ஜன 5 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ.25000
    2018 ஜன 7 ரமேஷ் என்பவருக்கு சரக்கு விற்றது ரூ.8000
    2018 ஜன 12 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.12000
    2018 ஜன 15 குமார் என்பவரிடம் சரக்கு விற்ற காசோலை பெற்றது ரூ.7000
    2018 ஜன 20 சிவா என்பவரிடம் சரக்கு வாங்கி காசோலை விடுத்தது ரூ.15000
    2018 ஜன 30 வாடகை செலுத்தியது ரூ.3000
    2018 ஜன 1 ஊதியம் வழங்கியது ரூ.5000

     

  130. திரு. செந்தில் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31.03.2018-ம் நாளின் இருப்பாய்வுத் தயாரிக்கவும்.

      ரூ.
    முதல் 52.000
    விற்பனை 1.01.200
    கொள்முதல் திருப்பம் 1.900
    துவக்கச் சரக்கிருப்பு 22.000
    அறைகலன்கள் 5.500
    பற்பல கடனீந்தோர் 6.000
    முதலீடுகள் 16.700
    சம்பளம் 1.800
    கூலி 1.300
    விற்பனைத் திருப்பம் 5.200
    அச்சு எழுது பொருள் 240
    பற்பல கடனாளிகள் 31.000
    கொள்முதல் 72.000
    வாடகை 560
    உள்சுமை கூலி 390
    வாரக் கடன் 160
    அஞ்சல் மற்றும் தந்தி 210
    பயணச் செலவுகள் 770
    வங்கி ரொக்கம் 3270
  131. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
    5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
    12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
    18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
    20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
  132. திரு. செந்தில் அவர்களின் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினை கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் கொண்டு தயார் செய்க.
    ஏப்ரல் 1, 2016 அன்று ரூ 1500 முன்பண மீட்புத் தொகையுடன் சில்லறைக் காசாளர் ரொக்க ஏட்டைத் தொடங்கினார்.

    2016 ஏப்ரல்   ரூ
    1 அஞ்சல் தலைகள் வாங்கியது 50
    2 சுத்தம் செய்யும் தொழிலளிக்குக் கொடுத்தது 25
    3 மேலாளரின் பயணச் செலவு 457
    6 மும்பைக்கு அனுப்பிய தந்தி 44
    7 எழுதுபொருள் வாங்கியது 68
    10 சரக்கை அனுப்பியதற்கான வண்டிச் சத்தம் 250
    13 வாங்கிய சரக்கிற்க்கான வண்டிச் சத்தம் 75
    18 மிதிவண்டி பழுதுபார்ப்பு  30
    19 தட்டச்சு எந்திரத்தை பழுது பார்த்தது 75
    22 மை மற்றும் கோந்து வாங்கியது 23
    24 விளம்பரச் செலவுகள் 100
    27 'தி இந்து' நாளிதழுக்கு சந்தா 125
    28 வாடிக்கையாளருக்கு அளித்த தேநீர் 12
  133. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
    [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
    [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
    [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

  134. கீழ்க்காணும் பிழைகளின் திருத்தத்துக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
    அ] தேவியிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 25,000 தவறுதலாக விற்பனை ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
    ஆ] இராஜனுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ 30,000 தவறுதலாக கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
    இ] அறைகலன் வாங்கியது ரூ 8,000 கொள்முதல் கணக்கில் பதியப்பட்டுள்ளது.
    ஈ] கட்டடம் கட்ட கூலி கொடுத்தது ரூ 1,00,000 கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    உ] மஞ்சுளா திருப்பிய சரக்கு ரூ 5,000, எதிலும் பதிவு செய்யப்படவில்லை.    

  135. இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.

  136. இராஜீ என்பவர் 2018 ஆம் ஆண்டு தன் தொழில் செலவிடப்பட்ட செலவுகளைத் தருகிறார். அவை எவ்வகைச் செலவினத்தைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக.
    1. காப்புரிமை பெறச் செலவு செய்தது ரூ 12,000.
    2. புதிய இயந்திரம் கொண்டு வர வண்டிச் சத்தம் செலுத்தியது ரூ 700.
    3. அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ 515.
    4. அரசாணையின்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்ய செலவு ரூ 5,000
    5. விளம்பரச் செலவு அதிகமாகச் செய்தது ரூ 7,500.  

  137. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
    உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
    மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
    ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
    ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
    கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
    உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
    வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
    நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
  138. அருண் நிறுவன ஏடுகளிலிருந்து பெறப்பட்ட 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் தரப்பட்டுள்ளன

    விவரம் பற்று வரவு
    கட்டடம் 17,500  
    பொறி மற்றும் இயந்திரம் 12,000  
    ரொக்கக் கொள்முதல் 30,000  
    கடன் கொள்முதல் 8,500  
    விற்பனை   63,250
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,750  
    நிலக்கரி மற்றும் நீர் 1,625  
    அலுவலகச் செலவுகள் 5,250  
    பெற்ற  வாடகை   1,750
    வெளித் தூக்குக்கூலி 2,875  
    பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் 500  
    கூலி 9,250  
    கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் 9,000 8,500
    ரொக்க  2,000  
    முதல்   44,750
    தொடக்கச் சரக்கிருப்பு 13,000  
      1,18,250 1,18,250

    கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களை கவனத்தில் கொண்டு 2018, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
    சரிக்கட்டுதல்கள்:
    (அ) பொறி மற்றும் இயந்திரத்தின் மீதான தேய்மானம் 20%
    (ஆ) கொடுபட வேண்டிய கூலி ரூ 750
    (இ) செலுத்திய பழுதுபார்ப்புச் செலவில் பாதி அடுத்த ஆண்டிற்குரியது
    (ஈ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 15,000

  139. கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.  

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter Accountancy Important Question )

Write your Comment