பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.

    (a)

    பழைய கற்காலப்

    (b)

    புதிய கற்காலப்

    (c)

    இடைக்கற்காலப்

    (d)

    செம்புக்காலப்

  2. வேதங்களில் பழைமையானது _______ வேதம்.

    (a)

    ரிக் 

    (b)

    யஜீர் 

    (c)

    சாம 

    (d)

    அதர்வண 

  3. பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் _____

    (a)

    திருச்சி

    (b)

    திருநெல்வேலி

    (c)

    மதுரை

    (d)

    திருவண்ணாமலை

  4. ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.

    (a)

    மெளரிய

    (b)

    கனிஷ்க்

    (c)

    வர்த்தன

    (d)

    சிசுநாக

  5. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  6. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

    (a)

    ரோமானிய

    (b)

    கிரேக்க

    (c)

    குப்த

    (d)

    சாதவாகன

  7. பொருத்துக

    இலக்கியப் படைப்பு எழுதியவர்
    1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
    2. அமரகோஷா வராஹமிகிரா
    3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
    4.ஆயுர்வேதா அமரசிம்மா
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    4, 2, 1, 3

    (d)

    4, 3, 2, 1

  8. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

    (a)

    கிரகவர்மன்

    (b)

    அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

    (c)

    பிரபாகரவர்த்தனர்

    (d)

    போனி

  9. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________ 

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    பெரியபுராணம்

    (d)

    வேதாந்தம்

  10. அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________ 

    (a)

    முபாரக் ஷா

    (b)

    ஆலம் கான்

    (c)

    கிசர் கான்

    (d)

    துக்ரில் கான்

  11. கெடா __________________ இல் உள்ளது

    (a)

    மலேசியா

    (b)

    சிங்கப்பூர்

    (c)

    தாய்லாந்து

    (d)

    கம்போடியா

  12. விஜயநகர அரசின் அரசு முத்திரை _______ 

    (a)

    பன்றி

    (b)

    புலி

    (c)

    மீன்

    (d)

    வில்

  13. பந்தர்பூர் விட்டலாவின் புகழைப் பாடும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டனர்_____ ஆவார்.

    (a)

    மீராபாய் 

    (b)

    துக்காராம் 

    (c)

    சூர்தாஸ் 

    (d)

    கபீர் 

  14. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்து முதல் அரசர் _________ ஆவார்.

    (a)

    அக்பர் 

    (b)

    ஷாஜகான் 

    (c)

    ஷெர்ஷா 

    (d)

    பாபர் 

  15. சிவாஜியின் தந்தை______________ஆவார்.

    (a)

    ஷாஜி போன்ஸ்லே

    (b)

    தத்தாஜி கொண்டதேவ்

    (c)

    முதலாம் பாஜிராவ்

    (d)

    பாலாஜிவிஸ்வநாத்

  16. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியில் தலைமையிடம் _________________ ஆகும்.

    (a)

    காரைக்கால்

    (b)

    புலிகாட்

    (c)

    மசூலிப்பட்டினம்

    (d)

    மதராஸ்

  17. குற்றப் பழங்குடியினர் சட்டம் ______ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.        

    (a)

    1871

    (b)

    1771

    (c)

    1671

    (d)

    1673

  18. திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.

    (a)

    கள்ளிக்கோட்டை 

    (b)

    குடுகு 

    (c)

    கொடுங்களூர் 

    (d)

    திண்டுக்கல் 

  19. 73- கிளர்ச்சியாளர்கள் ______ ஆம் ஆண்டு மலேசியாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 

    (a)

    1801

    (b)

    1806

    (c)

    1804

    (d)

    1802

  20. அனைத்து மதக்கருத்துகளும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் எனக் கூறியவர்.______ 

    (a)

    இராமகிருஷ்ண பரம்ஹம்சர் 

    (b)

    சுவாமி விவேகானந்தர் 

    (c)

    சுவாமி தயானந்தசரஸ்வதி 

    (d)

    ஜோதிபாபூலே 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

  23. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  24. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

  25. குறிப்பு வரைக.பிந்துசாரர்

  26. மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?

  27. காந்தார கலையை பற்றி கூறுக.

  28. ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?

  29. ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?

  30. சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?

  31. இந்தியாவை பற்றிய பாபாரின் கருத்து என்ன என்பதை விவரி.

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 X 3 = 21
  33. பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.

  34. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

  35. கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள் .

  36. கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?

  37. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.

  38. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.

  39. குதுப்பினாரைப் பற்றி கூறுக.

  40. தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?

  41. பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது?யாரால் நிறுவப்பட்டது?

  42. கல்வித் துரையின் முன்னோடியாக சரபோஜி யாரைக் கருதினார். அவர் மேற்கொண்ட சீர் திருத்தங்கள் யாவை?

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    7 x 5 = 35
    1. வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .

    2. தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.

    1. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

    2. நீர்பாசன வசதிகள்  குறித்து  கட்டுரை வரைக.  

    1. சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.

    2. பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.

    1. ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி

    2. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

    1. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

    2. சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.

    1. அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.

    2. அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்

    1. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

    2. பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th History - Model Public Question Paper 2019 - 2020 )

Write your Comment