XI Full Test Model Question

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  I. பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

  20 x 1 = 20
 1. பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  மார்ஷல்

  (c)

  ராபின்ஸ்

  (d)

  ராபர்ட்சன்

 2. நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  (a)

  சிறிய 

  (b)

  பெரிய 

  (c)

  ஒட்டுமொத்த 

  (d)

  அனைத்தும் 

 3. சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  (a)

  சம நோக்கு வளைகோடுகள

  (b)

  இயல்பெண் ஆய்வு

  (c)

  தேவை விதி

  (d)

  அளிப்பு விதி

 4. மேல்நிலையில் அமைந்துள்ள சமநோக்கு வளைகோடு ______பெறும்.

  (a)

  அதிக அளவு மனநிறைவை 

  (b)

  அதிக செலவை 

  (c)

  குறைந்த செலவை 

  (d)

  கரைந்த அளவு மனநிறைவை 

 5. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

  (a)

  உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

  (b)

  உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (c)

  உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (d)

  உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

 6. உற்பத்திப் பாதையில் ________ என்பது மனித இடுபொருள் ஆகும்.

  (a)

  உழைப்பு 

  (b)

  வேலை பகுப்புமுறை 

  (c)

  தொழில்முனைவோர் 

  (d)

  புத்தாக்கம் புனைவோர் 

 7. ஒரு அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு

  (a)

  மாறும் செலவு

  (b)

  மாறாச் செலவு

  (c)

  இறுதிநிலைச் செலவு

  (d)

  மொத்தச் செலவு

 8. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காடியில் நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?

  (a)

  நிறைவு போட்டி

  (b)

  முற்றுரிமை

  (c)

  முற்றுரிமையாளர் போட்டி

  (d)

  சில்லோர் முற்றுரிமை

 9. நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.  

  (a)

  திருமதி.ஜான் ராபின்சன்  

  (b)

  E.H.சேம்பர்ஸின்   

  (c)

  மார்ஷல் 

  (d)

  ஆடம் ஸ்மித் 

 10. எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

  (a)

  மூலதனம்

  (b)

  உழைப்பாளி

  (c)

  நிலம்

  (d)

  அமைப்பு

 11. ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.

  (a)

  போம் போகுவர்க் 

  (b)

  பென்ஹாம் 

  (c)

  வாக்கர்

  (d)

  நட் விக்செல்

 12. "மொத்த நாடுகள் மகிழ்ச்சிக் குறியீடு"(GNHI)என்ற தொடரை உருவாக்கியவர்________.

  (a)

  பூடானின் முதல் மன்னர்-மார்ஷல் 

  (b)

  பூடானின் இரண்டாவது மன்னர் -J.M.கீன்ஸ் 

  (c)

  பூடானின் மூன்றாவது மன்னர் -ஷாஜஹான் 

  (d)

  பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக் 

 13. முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

  (a)

  1914

  (b)

  1814

  (c)

  1941

  (d)

  1841

 14. GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)

  (a)

  18%

  (b)

  24%

  (c)

  28%

  (d)

  32%

 15. மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

  (a)

  திறந்த

  (b)

  மறைமுக

  (c)

  பருவ கால

  (d)

  ஊரக

 16. _____ இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.

  (a)

  தொழிற்துறை

  (b)

  வேளாண்மை

  (c)

  சுரங்கம்

  (d)

  வாணிபம்

 17. கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?

  (a)

  மதுரை

  (b)

  திருச்சி

  (c)

  தூத்துக்குடி

  (d)

  கோயம்புத்தூர்

 18. பூ கோள ரீதியாக தமிழ்நாடு _________________ வது பெரிய மாநிலமாகும். 

  (a)

  பத்தாவது

  (b)

  பதினொன்னாவது

  (c)

  முதல்

  (d)

  ஆறாவது

 19. n என்பதன் வகையீட்டுக்கெழு _____________ ஆகும்.

  (a)

  nx(n-1)

  (b)

  nx (n+1)

  (c)

  பூஜ்யம்

  (d)

  ஒன்று

 20. இறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______ 

  (a)

  \(\eta d={-p\over x}{dx\over dp}\)

  (b)

  xn என்பது \({x^{n+1}\over n+1}+c\)

  (c)

  \({dq \over dp}\)

  (d)

  Qd=Qs

 21. II. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

  7 x 2 = 14
 22. பொருளியல் என்றால் என்ன?

 23. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

 24. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

 25. சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன? 

 26. ரிகார்டோ வாரக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

 27. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

 28. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.

 29. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

 30. சாதகமான பாலின விகிதம் கொண்ட இரண்டு மாவட்டங்களைக் கூறுக. விகிதங்களையும் குறிப்பிடுக

 31. MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?

 32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

  7 x 3 = 21
 33. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

 34. மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.

 35. வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

 36. புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக

 37. மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.

 38. சிறிய அளவிலான தொழ்ற்சாலைகள் பற்றி எழுதுக. 

 39. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

 40. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

 41. தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு போக்குவரத்தினைப் பற்றி விவரி. 

 42. பொருளியல் கணித முறையில் பயன்படுத்தும் பல்வேறுவகையான சூத்திரம் யாவை?

 43. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

  7 x 5 = 35
  1. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  2. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  1. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  2. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  1. முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

  2. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  1. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

  2. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

  1. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  2. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

  1. ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.

  2. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
   அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
   ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
   இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
   [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

  1. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

  2. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
   (i) P = 0
   (ii) P=20
   (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் முழுத் தேர்வு ( 11th Standard Economics Full Test )

Write your Comment