முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 43

    பகுதி I

    43 x 1 = 43
  1. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.

    (a)

    முட்டையிடுபவை 

    (b)

    தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

    (c)

    குட்டி ஈனுபவை 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  2. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  3. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

    (a)

    விதைப்பை 

    (b)

    ஆண்குறி 

    (c)

    சிறுநீர் வடிகுழல் 

    (d)

    விந்தகம் 

  4. சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  5. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
    R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  6. ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?

    (a)

    அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்

    (b)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்

    (c)

    FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்

    (d)

    அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்

  7. மனிதனின் ABO  இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது ____.

    (a)

    பல்கூட்டு அல்லீல்கள்

    (b)

    கொல்லி மரபணுக்கள்

    (c)

    பால் சார்ந்த மரபணுக்கள் 

    (d)

    Y – சார்ந்த மரபணுக்கள்

  8. ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?

    (a)

    O மற்றும் Rh-

    (b)

    O மற்றும் Rh+

    (c)

    B மற்றும் Rh-

    (d)

    AB மற்றும் Rh+

  9. பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே_______ மற்றும் _______ ஆகும்.

    (a)

    AB, O

    (b)

    O, AB

    (c)

    A, B

    (d)

    B, A

  10. டி.என்.ஏ மறறும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.

    (a)

    தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.

    (b)

    ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.

    (c)

    சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்

    (d)

    பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்

  11. புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.

    (a)

    படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்

    (c)

    நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்

    (d)

    இரட்டிப்பாதல், படியெடுத்தல்,மொழிபெயர்த்தல்

  12. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

    (a)

    லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் 

    (b)

    அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

    (c)

    அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

    (d)

    ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

  13. வளர்கரு பி்ளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

    (a)

    டார்வின்

    (b)

    ஆகஸ்ட் வீஸ்மேன்

    (c)

    லாமார்க்

    (d)

    ஆல்ஃப்ரட் வாலாஸ்

  14. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

    (a)

    உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

    (b)

    திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

    (c)

    வலசை போதல் இல்லாத நிலையில்

    (d)

    இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

  15. பி.வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ______ ல் உருவாக்கப்பட்டது.

    (a)

    கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்) 

    (b)

    ஸ்போரோபிளாஸ்ட்டுகள் 

    (c)

    ஊசிஸ்டுகள்

    (d)

    ஸ்போர்கள்

  16. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.

    (a)

    நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

    (b)

    மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்

    (c)

    நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்

    (d)

    பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்

  17. பாராடோப் என்பது _____.

    (a)

    மாறுபடும் பகுதிகளில் உளை எதிர்ப்பொருள் இணயும் பகுதி

    (b)

    கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி

    (c)

    மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இடையும் பகுதி

    (d)

    கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி

  18. கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ் இல்லை?

    (a)

    மோனோசைட்டுகள்

    (b)

    மைக்ரோகிளியா

    (c)

    குப்ஃபர் செல்

    (d)

    லிம்பபோசைட் டுகள்

  19. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள் ______.

    (a)

    சோயா மாவு

    (b)

    நிலக்கடலை 

    (c)

    கரும்பலைக் கழிவுகள் 

    (d)

    சோள உணவு

  20. அடினோசின்டி அமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு ____.

    (a)

    நொதி இடமாற்ற சிகிச்சை

    (b)

    ADA ,DNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்டுகளை கால இடைவெளியில் உட்செலுத்துதல் 

    (c)

    அடினோசின் அமினேஸ் தூண்டிகளை அளித்தல் 

    (d)

    ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல் 

  21. வெப்பநிலையில் ஏற்படும் மறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ______ என அழைக்கப்படும்.

    (a)

    எக்டோதெர்ம்கள் 

    (b)

    மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்

    (c)

    எண்டோதெர்ம்கள்

    (d)

    ஸ்டீனோதெர்ம்கள்

  22. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு _______.

    (a)

    போட்டி

    (b)

    உதவி பெறும் வாழ்க்கை

    (c)

    வேட்டையாடும் வாழ்க்கை

    (d)

    ஒட்டுண்ணி வாழ்க்கை

  23. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.

    (a)

    இலையுதிர் காடுகள்

    (b)

    வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்

    (c)

    ஊசியிலைக் காடுகள்

    (d)

    அமேசான் காடுகள்

  24. 2017ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் நாடு எது?

    (a)

    அமெரிக்கா

    (b)

    சீனா

    (c)

    கத்தார்

    (d)

    சவுதி அரேபியா

  25. மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.

    (a)

    J.G.கோல்ரூட்டர்

    (b)

    G.B. அமிசி

    (c)

    E. ஸ்டிராஸ்பர்கர்

    (d)

    E. ஹேன்னிங்

  26. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.

    (a)

    சூல்

    (b)

    கருப்பை

    (c)

    சூல்திசு

    (d)

    கருவூண் திசு

  27. கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை.

    (a)

    எண்டோகார்ப்

    (b)

    எப்பிகார்ப்

    (c)

    மீசோகார்ப்

    (d)

    விதை

  28. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  29. சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பில் ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகப் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம் உருவாக்கப்படுவது. இது எதைக் குறிக்கிறது?

    (a)

    இரு வேறுபட்டக் குரோமோசோம்களில்  காணப்படும் இரு மரபணுக்கள்

    (b)

    குன்றல்பகுப்பின் போது பிரிவுறாக் குரோமோசோம்கள்

    (c)

    ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள்

    (d)

    இரு பண்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் கட்டுப்படுத்த ப்படுவது

  30. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றகளில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்

    (a)

    25 AB, 25 ab, 25 Ab, 25 aB

    (b)

    10 AB, 10 ab

    (c)

    45 AB, 45 ab

    (d)

    45 AB, 45 ab, 5 Ab, 5 aB

  31. ஒரே ககுரோமோசோமில்  G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
    வரிசையை எழுதுக.

    (a)

    G H S L

    (b)

    S H G L

    (c)

    S G H L

    (d)

    H S L G

  32. மரபணுப் பொறியியல் ______.

    (a)

    செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.

    (b)

    ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல் 

    (c)

    நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி 

    (d)

    ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல் 

  33. பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.

    (a)

    Ti பிளாஸ்மிட் வாழையில் உச்சிக் கொத்து நோயை உருவாக்குகிறது.

    (b)

    பல நகலாக்க களங்கள் பல இணைப்பான் எனப்படும் 

    (c)

    செல்லில் உட்கரு அமிலத்தின் ஊடுதொற்றல் வைரஸ் அற்ற முறையாகும்.

    (d)

    பாலிலாக்டிக் என்பது ஒரு வகை உயிரி சிதைவடையும் மற்றும் உயிரி செயல் மிகு வெப்பபிளாஸ்டிக் 

  34. தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

    (a)

    10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125o

    (b)

    15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121o

    (c)

    15 முதல் நிமிடங்கள் மற்றும் 125o

    (d)

    10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121o

  35. ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பனியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு _____.

    (a)

    புவி வாழிடம் 

    (b)

    செயல் வாழிடம் 

    (c)

    நிலத்தோற்றம் 

    (d)

    உயிர்மம் 

  36. எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீரிலும், பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

    (a)

    வறண்ட நிலத் தாவரங்கள் 

    (b)

    வளநிலத் தாவரங்கள் 

    (c)

    நீர்வாழ் தாவரங்கள் 

    (d)

    உவர் சதுப்புநிலத் தாவரங்கள் 

  37. கீழ்க்கண்டவற்றில் எது சூழல்மண்டலத்தின் உயிரற்ற கூறு அல்ல?

    (a)

    பாக்டீரியாங்கள் 

    (b)

    கருமையான படிக உருவமற்ற மட்கு 

    (c)

    கரிமக்கூறுகள் 

    (d)

    கனிமக்கூறுகள் 

  38. உணவு வலையின் முக்கியத்துவம்?

    (a)

    இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை 

    (b)

    இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது 

    (c)

    சிற்றினங்களிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது 

    (d)

    ஆ மற்றும் இ

  39. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை
    கூற்று I – தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.
    கூற்று II – இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.

    (a)

    கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது

    (b)

    கூற்று I மற்றும் II - இரண்டு கூறுகளும் சரியானது

    (c)

    கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது

    (d)

    கூற்று I மற்றும் II – இரு கூறுகளும் தவறானது

  40. வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று ______.

    (a)

    தோற்ற மையங்கள்

    (b)

    வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படும் மையங்கள்

    (c)

    கலப்புயிரியின் மையங்கள்

    (d)

    வேறுபாட்டின் மையங்கள்

  41. அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் வழித்தோன்றல் ______.

    (a)

    தூயவழி

    (b)

    சந்ததிவழி

    (c)

    உட்கலப்புவழி

    (d)

    கலப்பினவீரிய வழி

  42. கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்.
    காரணம்: காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.

    (a)

    கூற்று சரி காரணம் தவறு.

    (b)

    கூற்று தவறு காரணம் சரியானது

    (c)

    இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

    (d)

    இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல .

  43. கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
    காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது

    (a)

    கூற்று சரி, காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு, காரணம் சரி

    (c)

    கூற்று, காரணம் - இரண்டும் சரி

    (d)

    கூற்று, காரணம் – இரண்டும் தவறு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment