12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

  பகுதி I

  50 x 1 = 50
 1. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
  உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
  காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

  (a)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (b)

  ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (c)

  'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

  (d)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

 2. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

  (a)

  விதைப்பை 

  (b)

  ஆண்குறி 

  (c)

  சிறுநீர் வடிகுழல் 

  (d)

  விந்தகம் 

 3. பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
  கூற்று (A) மற்றும் காரண ம் (R)
  அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
  இ) A உண்மை , R பொய் 
  ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்
  A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
  R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

  (a)

  Aமற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்

  (b)

  A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை

  (c)

  A உண்மை, R பொய் 

  (d)

  A மற்றும் R இரண்டுமே பொய் 

 4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
  கூற்று அ: இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
  கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

  (a)

  கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்காற்கான சரியான விளக்கமாகும்.

  (b)

  கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்காற்கான சரியான விளக்கமில்லை.

  (c)

  கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

  (d)

  கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

 5. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

  (a)

  A மற்றும் B மட்டும்

  (b)

  A,B மற்றும் AB மட்டும்

  (c)

  AB மட்டும்

  (d)

  A, B, AB மற்றும் O

 6. ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.

  (a)

  மீன்கள்

  (b)

  ஊர்வன

  (c)

  பறவைகள்

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 7. 15N ஊகத்தில் வளர்க்கப்படும் எ.கொலை 14N ஊகடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பாக்கலாம்?

  (a)

  ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை

  (b)

  ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை

  (c)

  ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை

  (d)

  ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.

 8. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

  (a)

  லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நாடடைபெறுதல் 

  (b)

  அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

  (c)

  அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

  (d)

  ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

 9. புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது?

  (a)

  மின்னணு நுண்ணோக்கி

  (b)

  புதைபடிவங்களின் எடை

  (c)

  கார்பன் முறை வயது கண்டறிதல்

  (d)

  படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்

 10. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

  (a)

  உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

  (b)

  திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

  (c)

  வலசை போதல் இல்லாத நிலையில்

  (d)

  இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

 11. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு

  (a)

  ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி

  (b)

  லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு போதை மருந்து

  (c)

  ஹெராயின் - உளவியல் மருந்து

  (d)

  பென்சோடைஅசபைன் - வலி நீக்கி

 12. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் – என அழைக்கப்ப டுகிறது.

  (a)

  வேற்றிடப் பரவல்

  (b)

  ஆன்கோஜீன்கள்

  (c)

  புரோட்டா  – ஆன்கோஜீன்கள்

  (d)

  மாலிக்னன்ட் நியோப்ளாசம்

 13. கார்பன் டை ஆக்க்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.

  (a)

  ஆல்கஹாலிக் நொதித்தல் 

  (b)

  லாக்டேட் நொதித்தல் 

  (c)

  விலங்குகளில் நடைபெடைபெறும் காற்றுச் சுவாசம்

  (d)

  தாவரங்களில் நடைபெடைபெறும் காற்றுச் சுவாசம்

 14. அடினோசின்டி அமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு 

  (a)

  ADA ,DNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்டுகளை கால இடைவெளியில் உட்செலுத்துதல் 

  (b)

  அடினோசின் அமினேஸ் தூண்டிகளை அளித்தல் 

  (c)

  ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல் 

  (d)

  நொதி இடமாற்ற சிகிச்சை

 15. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொ ண்டுள்ள து

  (a)

  சில செல்க ளில் அயல் டி.என்.ஏ

  (b)

  அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ

  (c)

  சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ

  (d)

  அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ

 16. வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?

  (a)

  (+, +)

  (b)

  (+, 0)

  (c)

  (-, -)

  (d)

  (+, -)

 17. கீழ்க்கண்டவற்றும் r-வகை தேர்வுசெய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்

  (a)

  அதிக எண்ணிக்கையில் சத்ததிகள் மற்றும் சிறிய உருவம்

  (b)

  அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

  (c)

  குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்

  (d)

  குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

 18. பின்வருவனவற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?

  (a)

  மேற்கு தொடர்ச்சி மலை

  (b)

  இந்திய - கங்கை சமவெளி

  (c)

  கிழக்கு இமையமலை தொடர்

  (d)

  அ மற்றும் இ

 19. 'சுத்தமான குடிநீர்ப் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

  (a)

  பிரிவு 12

  (b)

  பிரிவு 21

  (c)

  பிரிவு 31

  (d)

  பிரிவு 41

 20. புகைப்பனி எதிலிருந்து பெறப்படுகிறது?

  (a)

  புகை

  (b)

  மூடுபனி

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  அ மட்டும்

 21. சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க..

  (a)

  கிழங்கு - அல்லியம் சீப்பா

  (b)

  தரைகீழ் உந்துதண்டு - பிஸ்டியா

  (c)

  மட்ட நிலத் தண்டு - மியூசா

  (d)

  வேர்விடும் ஓடுதண்டு - ஜிஞ்ஜிஃபெர்

 22. தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.

  (a)

  ஸ்போரோபொலினின் - மகரந்தத்துகளின் எக்சைன்

  (b)

  டபீட்டம் - நுண்வித்துகளின் வளர்ச்சிக்கான ஊட்டத்திசு

  (c)

  சூல் திசு - வளரும் கருவிற்கான ஊட்டத்திசு

  (d)

  வழி நடத்தி -  சூல்துளை நோக்கி மகரந்தக் குழாய் வழி நடத்துதல்

 23. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?

  (a)

  விதை உள்ளுறை

  (b)

  முளைவேர்

  (c)

  விதையிலை மேல்தண்டு

  (d)

  விதைத்தழும்பு

 24. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகை யான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது

  (a)

  aaBB

  (b)

  AaBB

  (c)

  AABB

  (d)

  aabb

 25. பட்டாணித் தாவரத்தில் மஞ்சள் நிற விதைகள், பச்சை நிற விதைகளுக்கு ஓங்குத்தன்மையுடனும், கலப்புயிரி மஞ்சள் நிற விதைத் தாவரம் பச்சை நிற விதை கொண்ட தாவரத்துடன் கலப்பு மேற்கொள்ளும்பட்சத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற விதைகள் கொண்ட தாவரங்கள் முதலாம் சந்த தியில் (F1) எவ்விகிதத்தில் கிடைக்க ப்பெறும்?

  (a)

  9:1

  (b)

  1:3

  (c)

  3:1

  (d)

  50:50

 26. இருபண்புக் கலப்பு 9:3:3:1 இடை ப்பட்ட AaBb Aabb என்று மாறுபாடடைந்த ஓங்கிய மறைத்தல் விளைவானது

  (a)

  இரு அமைவிடத்திலுள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை கொண்டதாக உள்ளது

  (b)

  இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள்

  (c)

  ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை உடையதாக உள்ளது

  (d)

  அல்லீல்களின் இடைச்செயல்களுக்கு இடையே ஒரே அமைவிடத்தில் நிகழ்வது.

 27. மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடு?

  (a)

  1856 - 1863

  (b)

  1850 - 1870

  (c)

  1857 - 1869

  (d)

  1870 - 1877

 28. பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?
  1. முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர்  சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெ ளிப்படுத்துகின்றன.
  2. முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
  3. முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம் .
  4. முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.

  (a)

  1 மற்றும் 2

  (b)

  2 மற்றும் 3

  (c)

  3 மற்றும் 4

  (d)

  1 மற்றும் 4

 29. பிளாஸ்மிட் என்பது 

  (a)

  வட்டவடிவ புரத மூலக்கூறுகள் 

  (b)

  பாக்டீரியாவினால் தேவைப்படுவது 

  (c)

  நுண்ணிய பாக்டீரியங்கள் 

  (d)

  உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க 

 30. pBR 322, BR என்பது 

  (a)

  பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு 

  (b)

  பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம் 

  (c)

  பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

  (d)

  பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

 31. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.

  (a)

  மின்னற்பிரிப்பு 

  (b)

  ஒற்றியெடுப்பு முறை 

  (c)

  கதிரியக்க புகைப்படமுறை 

  (d)

  பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை 

 32. தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

  (a)

  10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125o

  (b)

  15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121o

  (c)

  15 முதல் நிமிடங்கள் மற்றும் 125o

  (d)

  10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121o

 33. வைரஸ் அற்ற தாவரங்கள் _______ இருந்து உருவாக்கப்படுகின்றன.

  (a)

  உறுப்பு வளர்ப்பு 

  (b)

  ஆக்குத்திசு வளர்ப்பு 

  (c)

  புரோட்டோபிளாச வளர்ப்பு 

  (d)

  செல் வளர்ப்பு 

 34. ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
  i. குழும சூழ்நிலையியல் 
  ii. சுயச் சூழ்நிலையியல் 
  iii. சிற்றினச் சூழ்நிலையியல் 
  iv. கூட்டு சூழ்நிலையியல் 

  (a)

  i மட்டும் 

  (b)

  ii மட்டும் 

  (c)

  i மற்றும் iv மட்டும் 

  (d)

  ii மற்றும் iii மட்டும் 

 35. கீழ்கணட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது. 

  (a)

  புவியீர்ப்பு நீர் 

  (b)

  வேதியியல் பிணைப்பு நீர் 

  (c)

  நுண்புழை நீர் 

  (d)

  ஈரப்பத நீர் 

 36. எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீரிலும், பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

  (a)

  வறண்ட நிலத் தாவரங்கள் 

  (b)

  வளநிலத் தாவரங்கள் 

  (c)

  நீர்வாழ் தாவரங்கள் 

  (d)

  உவர் சதுப்புநிலத் தாவரங்கள் 

 37. பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது?

  (a)

  தொல்லுயிரி படிவம் 

  (b)

  நீர் 

  (c)

  உயிரித்தொகை 

  (d)

  மண் 

 38. கீழ்கண்டவற்றில் எது/எவை இயற்கை சூழல்மண்டலம் அல்ல 

  (a)

  வனச் சூழல்மண்டலம் 

  (b)

  நெல்வயல் 

  (c)

  புல்வெளி சூழல்மண்டலம் 

  (d)

  பாலைவன் சூழல்மண்டலம் 

 39. எந்த ஒன்று, உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும்.

  (a)

  உற்பத்தியாளர்கள் \(\rightarrow\) இரண்டாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) மூன்றாம்நிலை நுகர்வோர்கள் 

  (b)

  மூன்றாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) முதல்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) இரண்டாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) உற்பத்தியாளர்கள் 

  (c)

  மூன்றாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) இரண்டாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) முதல்நிலை நுகர்வோர்கள் 

  (d)

  மூன்றாம்நிலை நுகர்வோர்கள் \(\rightarrow\) உற்பத்தியாளர்கள் \(\rightarrow\) இரண்டாம்நிலை நுகர்வோர்கள் 

 40. கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல.

  (a)

  நைட்ரஜன் சுழற்சி 

  (b)

  பாஸ்பரஸ் சுழற்சி 

  (c)

  சல்பர் சுழற்சி 

  (d)

  கால்சியம் சுழற்சி 

 41. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?

  (a)

  அம்மோனியா 

  (b)

  மீத்தேன் 

  (c)

  நைட்ரஸ் ஆக்ஸைட் 

  (d)

  ஓசோன் 

 42. காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது

  (a)

  காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்

  (b)

  காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்

  (c)

  குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்

  (d)

  தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்

 43. கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப்பொருட்களைத்  தருகின்றன.
  காரணம்: மரபணுவிய வேறுபாடுகள்  ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன.

  (a)

  கூற்று சரி காரணம் தவறு 

  (b)

  கூற்று தவறு காரணம் சரி 

  (c)

  கூற்று மற்றும் காரணம் சரி 

  (d)

  கூற்று மற்றும் காரணம் தவறு

 44. பயிர் பெருக்கத்தில் வேகமான முறை

  (a)

  அறிமுகப்படுத்துதல்

  (b)

  தேர்ந்தெடுத்தல்

  (c)

  கலப்பினமாதல்

  (d)

  சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்

 45. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது

  (a)

  நகலாக்கம்

  (b)

  கலப்பின வீரியம்

  (c)

  தேர்ந்தெடுத்தல்

  (d)

  அறிமுகப்படுத்துதல்

 46. கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது

  (a)
  இரகங்கள் நோய் எதிர்க்கும் திறன்
  பூசா கோமல் பாக்டீரிய அழுகல்
  (b)
  இரகங்கள் நோய் எதிர்க்கும் திறன்
  பூசா சடபஹர் வெண் துரு
  (c)
  இரகங்கள் நோய் எதிர்க்கும் திறன்
  பூசா சுப்ரா மிளகாய் தேமல் வைரஸ்
  (d)
  இரகங்கள் நோய் எதிர்க்கும் திறன்
  பிராசிகா  பூசா சுவர்னியம்
 47. கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்.
  காரணம்: காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.

  (a)

  கூற்று சரி காரணம் தவறு.

  (b)

  கூற்று தவறு காரணம் சரியானது

  (c)

  இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

  (d)

  இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல .

 48. கூற்று I: கா ஃபி கா ஃபின் கொண்டது.
  கூற்று II: கா ஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்

  (a)

  கூற்று I சரி, கூற்று II தவறு

  (b)

  கூற்று I, II – இரண்டும் சரி

  (c)

  கூற்று I தவறு, கூற்று II சரி

  (d)

  கூற்று I, II – இரண்டும் தவறு

 49. கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
  காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது

  (a)

  கூற்று சரி, காரணம் தவறு

  (b)

  கூற்று தவறு, காரணம் சரி

  (c)

  கூற்று, காரணம் - இரண்டும் சரி

  (d)

  கூற்று, காரணம் – இரண்டும் தவறு

 50. புதிய உலகிலிருந்து உருவான தும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?

  (a)

  ஒரைசா சட்டைவா

  (b)

  டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

  (c)

  டிரிட்டிக்கம் டியூரம்

  (d)

  ஜியா மேய்ஸ்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment