12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

  பகுதி I

  50 x 1 = 50
 1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

  (a)

  விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

  (b)

  கருபதிதல், கருவுறுதல், விந்து உள்ளேற்றம், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

  (c)

  கருபதிதல், விந்து உள்ளேற்றம், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

  (d)

  விந்து உள்ளேற்றம், கருவுறுதல், கருபதிதல், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

 2. ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.

  (a)

  ஸ்கீன்ஸ் சுரப்பி 

  (b)

  பர்த்தோலின் சிறப்பு 

  (c)

  பால் சுரப்பி 

  (d)

  வியர்வைச் சுரப்பி 

 3. இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.

  (a)

  அண்டகம் 

  (b)

  அண்ட நாளம் 

  (c)

  கருப்பை 

  (d)

  கருப்பை முகப்பு 

 4. கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
  காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

  (a)

  கூற்றும், காரணமும் சரி.

  (b)

  இரண்டும் தவறு 

  (c)

  கூற்று சரி, காரணம் தவறு.

  (d)

  கூற்றுதவறு, காரணம் சரி 

 5. தாய்சேய் இணைப்புத் திசு திசுவினின்று வராதது.

  (a)

  ஈஸ்ட்ரோஜன் 

  (b)

  புரோஜெஸ்டிரான் 

  (c)

  ரிலாக்ஸின் 

  (d)

  ஆக்சிடோவின் 

 6. ஆண் ட்ரம் என்ற திரவம் நிரம்பியவை ________ செல்கள் 

  (a)

  முதல் நிலை நுண்பை 

  (b)

  இரண்டாம் நிலை நுண்பை 

  (c)

  மூன்றாம் நிலை நுண்பை 

  (d)

  முதிர்ந்த கிராபியன் பாலிக்கிள் 

 7. கார்பஸ் லூட்டியம் எண்டோமெட்ரியத்தைப் பராமரிக்க உதவும்_________ ஹார்மோனைச் சுரக்கும் 

  (a)

  புரோஜெஸ்டிரான் 

  (b)

  ஈஸ்ட்ரோஜன் 

  (c)

  ஆக்ஸிடாஸின் 

  (d)

  ரிலாக்ஸின் 

 8. _______விந்து செல்கள் ஒரு நாளில் உற்பத்தியாகின்றன.

  (a)

  100 மில்லியன் 

  (b)

  200 மில்லியன் 

  (c)

  300 மில்லியன் 

  (d)

  500 மில்லியன் 

 9. இவை வாய்வழி கருத்தடை மாத்திரைகளில் அடங்கியுள்ள பொருட்கள்

  (a)

  FSH, புரோலாக்டின்

  (b)

  TSH, புரோலாக்டின்

  (c)

  FSH & TSH

  (d)

  FSH & LH

 10. கூற்று : இனப்பெருக்க உறுப்புகளில் யானைக்கால் நோய்.
  காரணம்: இது கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் கிருமியால் வரும்.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி 

  (b)

  கூற்று சரி, காரணம் தவறு 

  (c)

  கூற்றுதவறு, காரணம் சரி 

  (d)

  கூற்று, காரணம் இரண்டும் தவறு 

 11. கூற்று : பாலூட்டும் கால மாதவிடாயின்மை இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை 
  காரணம் : இது இயல்பான அண்ட செல்லாகத் சுழற்சியை மாதங்கள் தாமதமாக்கும்.

  (a)

  கூற்று: சரி, காரணம் தவறு 

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி 

  (c)

  கூற்று, காரணம் இரண்டும் தவறு 

  (d)

  கூற்று தவறு, காரணம் சரி 

 12. டிரைகோமோனியாஸின் அறிகுறி அல்ல.

  (a)

  கலவிக்கால்வாய் அழற்சி 

  (b)

  சிறுநீர் வடிகுழல் அழற்சி 

  (c)

  புராஸ்டேட் சுரப்பி அழற்சி 

  (d)

  உள்கருப்பை வாய் அழற்சி 

 13. குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் தொடங்கிய ஆண்டு 

  (a)

  1951

  (b)

  1915

  (c)

  1905

  (d)

  1961

 14. பொதுவாக கருமுட்டைகள் ________ நிலையில் மாற்றப்படும்.

  (a)

  6 செல்கள் 

  (b)

  7 செல்கள் 

  (c)

  8 செல்கள் 

  (d)

  9 செல்கள் 

 15. ஹீமாபிலியா ஜீன்களுக்கு தாங்கிகளாக விளங்குகின்ற பெண்கள் _________ %

  (a)

  100

  (b)

  50

  (c)

  70

  (d)

  25

 16. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறி அல்ல 

  (a)

  துருத்திய நாக்கு 

  (b)

  மனவளர்ச்சி குறை 

  (c)

  குறைபாடுடைய காது 

  (d)

  உயர்ந்த கீச்சுக்குரல் 

 17. பார் உறுப்பு முதன் முதலில் எப்பொழுது கண்டறியப்பட்டது 

  (a)

  1994

  (b)

  1949

  (c)

  1499

  (d)

  1944

 18. எக்ஸ் - கதிரியக்க சிதறல் வழி பெறப்பட்ட படங்களின் ஆய்வினை மேற்கொண்டவர்கள்

  (a)

  ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் 

  (b)

  பிராங்கெல் கான்ராட் மற்றும் சிங்கர் 

  (c)

  மௌரில் வில்கின்ஸ் மற்றும் ரோசலிண்ட் ப்ராங்களின் 

  (d)

  கில்பர்ட் மற்றும் ரூஸ்வெல்ட்

 19. RNA வை மரபுப் பொருளாகக் கொண்ட சில வைரஸ்களில் RNA வை வார்ப்புருவாகக் கொண்டு DNA தயாரிக்கப்படுகிறது. அத்தகைய DNA க்கள் ___________________ எனப்படும்.

  (a)

  A - DNA 

  (b)

  B - DNA 

  (c)

  c DNA 

  (d)

  d DNA 

 20. சரியான கூற்றைக் கண்டறி 

  (a)

  பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.

  (b)

  பறவைகளின் இறக்கைகளும் பூச்சிகளின் இறக்கைகளும் தகவமைப்புப் பரவலுக்கு உதாரணமாகும்.

  (c)

  குழந்தைகளில் வால் ஒரு எச்ச உறுப்பாகும்.

  (d)

  நிக்டேட்டிங் சவ்வு ஒரு முது மரபு உறுப்புகள் மீட்சிக்கு உதாரணம் ஆகும்.

 21. காலாபாகஸ் தீவுகளில் காணப்பட்ட டார்வீனின் குருவிகளின் அலகின் அளவும் விதைகளின் அளவும் ________ தேர்விற்கு உதாரணம் ஆகும்.

  (a)

  நிலைப்படுத்துதல் 

  (b)

  இலக்கு நோக்கிய 

  (c)

  உடைப்பு முறை 

  (d)

  தொகுப்பு முறை 

 22. _______ பெருங்காலம் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது 

  (a)

  பேலியோசோயிக் 

  (b)

  மீசோசோயிக் 

  (c)

  சீனோசோயிக் 

  (d)

  முன்கேம்பிரியன் 

 23. விலங்கியல் தத்துவம் என்ற நூலை எழுதியவர் 

  (a)

  டார்வின் 

  (b)

  மெண்டல் 

  (c)

  லாமார்க் 

  (d)

  டிவிரிஸ் 

 24. ஹீமோசோயின் என்பது

  (a)

  ஹீமோகுளோபினின் முன்னோடி

  (b)

  ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு

  (c)

  பிளாஸ்மோடியம் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

  (d)

  ஹீமோஃபைல்ஸ் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

 25. இன்ட ர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?

  (a)

  செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள்

  (b)

  வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது

  (c)

  இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது.

  (d)

  இது தொ ற்றுகளை ஏற்படுத்தும்

 26. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் கிரைடாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?

  (a)

  கொசுக்கள் 

  (b)

  ஈக்கள் 

  (c)

  நெமட்டோடுகள் (நூற்புழுக்கள்)

  (d)

  காய்ப் புழுக்கள் 

 27. யோகர்ட் உருவாக்கத்தில் உற்பத்தியாகும் துணைப் பொருள்

  (a)

  எத்தில் ஆல்கஹால்

  (b)

  கார்பன்-டை-ஆக்ஸைடு

  (c)

  கேசின்

  (d)

  லாக்டிக் அமிலம்

 28. பூச்சிக்கொல்லியாக பயன்படும் ஒரு வைரஸ் பேரினம்

  (a)

  கிரிப்டோஸ் போரிடியம்

  (b)

  டீகுளோரோமோனாஸ்

  (c)

  நியூக்ளியோ பாலிஹெட்ரோ வைரஸ்

  (d)

  பெஸ்டலோடியாப்ஸ் மைக்ரோஸ்போரா

 29. பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

  (a)

  விலங்கு நகலாக்கம் 

  (b)

  PCR 

  (c)

  எலைசா 

  (d)

  டி.என்.ஏ மறுசேர்க்கை 

 30. 1957 ல் அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லிண்ட்மேன் என்பவர்களால் கீழ்கண்ட எந்த ஒன்று கண்டறியப்பட்டது?

  (a)

  இன்சுலின் 

  (b)

  இன்டர்ஃபெரான் 

  (c)

  காரணி VIII 

  (d)

  டி.என்.ஏ தடுப்பூசிகள்

 31. பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் _______________ எனப்படும்.

  (a)

  தண்டு செல்கள் 

  (b)

  உடல் செல்கள் 

  (c)

  ஒற்றைமைய செல்கள் 

  (d)

  பல்மய செல்கள் 

 32. சார்பின் வகை  எடுத்துக்காட்டு 
  ஒட்டுண்ணி வாழ்க்கை  பூனை மற்றும் எலி 
  ii  உதவி பெறும் வாழ்க்கை  அஸ்காரிஸ் மற்றும் மனிதன் 
  iii  கேடு செய்யும் வாழ்க்கை  முதலை மற்றும் பறவை 
  iv  பகிர்ந்து வாழுதல்  உறிஞ்சு மீன் மற்றும் சுறா மீன் 
  (a)

  i -a,ii-c,iii-b,iv-d 

  (b)

  i-c,ii-a,iii-d,iv-b 

  (c)

  i -b,ii-d,iii-a,iv-c 

  (d)

  i-d,ii -b,iii-c,iv-a 

 33. வால்வாக்ஸில் காணப்படக்கூடிய நகர்வு ________ ஆகும்.

  (a)

  நேர்மறை ஒளிர்ச்சார்பியக்கம் 

  (b)

  எதிர்மறை ஒளிச்சார்பியக்கம் 

  (c)

  நேர்மறை ஒளிநாட்டம் 

  (d)

  எதிர்மறை ஒளிநாட்டம் 

 34. ஒரு குறிப்பிட்ட பரப்பில், குறிப்பிட்ட மணி நேரத்தில் கண்டறியக் கூடிய பறவைகளின் எண்ணிக்கை எதற்கு எடுத்துக்காட்டாகும்.

  (a)

  சுற்றுச்சூழல் அடர்த்தி 

  (b)

  இனக் கூட்ட அடர்த்தி 

  (c)

  கச்சா அடர்த்தி 

  (d)

  ஒப்பீட்டுப் பெருக்கம் 

 35. ஒரு சிங்கத்தின் தனிப்பட்ட வாழிட பரப்பின் தேவை _________ ச.கி.மீ. ஆகும்.

  (a)

  100

  (b)

  150

  (c)

  200

  (d)

  250

 36. உயிரிய பல்வகைத் தன்மை என்ற சொல்லை பிரபலப்படுத்தியவர் ______

  (a)

  வால்டர் ரோசன்

  (b)

  எட்வர்ட் வில்சன்

  (c)

  அலெக்ஸ்சாண்டர்

  (d)

  நார்மன் மையர்ஸ்

 37. _________ தேசிய பூங்கா ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு என பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

  (a)

  காசிரங்கா

  (b)

  கிண்டி

  (c)

  முதுமலை 

  (d)

  முக்குர்த்தி

 38. ஹைட்ரோ குளோரோ புளோரா கார்பன் சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும்  மூலக்கூறு எது?

  (a)

  ஹைட்ரஜன்

  (b)

  கார்பன்

  (c)

  குளோரின்

  (d)

  புளாரின்

 39. வெளியிலிருந்த உள்ளநோக்கி வரிசைப்படுத்து 

  (a)

  எண்டோதீசியம், இடையருக்கு, டபீட்டம் 

  (b)

  டபீட்டம், இடையருக்கு, எண்டோதீசியம்

  (c)

  எண்டோதீசியம், டபீட்டம், இடையருக்கு

  (d)

  டபீட்டம், எண்டோதீசியம், இடையருக்கு

 40. ஜாஸ்மினத்தில் உள்ளது 

  (a)

  மொட்டு ஒட்டு 

  (b)

  அணுகு ஒட்டு 

  (c)

  நுனி ஒட்டு 

  (d)

  எவையுமல்ல 

 41. ஒரு உயிரினத் தொகையில் சில பண்புகளில் குறிப்பிட்ட அளவு வேறுபாடுகள் காணப்படுதல்

  (a)

  ஓங்கு வேறுபாடு

  (b)

  தொடர்ச்சியான வேறுபாடு

  (c)

  தொடர்ச்சியற்ற வேறுபாடு

  (d)

  ஒடுங்கு வேறுபாடு

 42. முப்புள்ளி சோதனைக்  கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரை ய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால்

  (a)

  ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (b)

  இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (c)

  பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (d)

  மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

 43. உயிருள்ள செல்களில் செயல்படும் செயற்கை மரபணுவை உருவாக்கியவர்,

  (a)

  H.G. கோரானா 

  (b)

  அயன் வில்மெட் 

  (c)

  சர்-ராபர்டு 

  (d)

  ஜி.எட்வர்டுஸ் 

 44. PCR குறிப்பிடுவது 

  (a)

  DNA வின் குறிப்பிட்ட பகுதியை பல மில்லியன் நகல் எடுக்கும் ஆய்வக முறையாகும்.

  (b)

  DNA இழைகளை இரட்டிப்படையச் செய்யும் ஒரு உயிரி தொழில் நுட்ப முறையாகும்.

  (c)

  DNA மூலக்கூறுகளை நீரால் பகுத்து பல சிறிய துண்டுகளாக்கவும் முறையாகும்.

  (d)

  மரபணு குறைபாடுகளைக் கண்டறியும் சோதனை ஆகும்.

 45. nPt என்பது எந்த ஆண்டிபயாடிக்கிற்கு எதிரான தன்மையுடையது?

  (a)

  குளோராம் பெனிகால் 

  (b)

  பென்சிலின் 

  (c)

  டெட்ராசைக்க்கிளின் 

  (d)

  கேனாமைசின் 

 46. மெல்ச்சர் மற்றும் குழுவினர் உருவாக்கியது 

  (a)

  நிக்கோட்டியானா சிற்றினத்தின் உடல கலப்பியம் 

  (b)

  உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான 'போமாட்டோ'

  (c)

  நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி

  (d)

  பூக்கும் தாவரங்களில் ஆய்வுக்குழாய் (Invitro) கருவுறுதல்

 47. பின்வரும் கூற்றில் எது ஒருங்குயிரி நிலையுடன் தொடர்புடையது அல்ல.

  (a)

  அனபினா என்னும் பாசி சைகஸ் (ஜிம்னோஸ்பெர்ம்) 

  (b)

  அத்தி பழங்களில் காணப்படும் குளவிகள்

  (c)

  ஆந்தோசொராஸ் உடலத்தில் காணப்படுகிற சயனோ பாக்டீரியம்

  (d)

  டில்லான்ஷியா பைன் மரப்பட்டைகளின் மேலே வளர்தல்.

 48. நீல கார்பன் சூழல் மண்டலங்கள் இதனுடன் தொடர்புடையவை _________.

  (a)

  கார்பன் சேகரிக்கும் திறன் 

  (b)

  உற்பத்திதிறன் 

  (c)

  பாஸ்பரஸ் சுழற்சி 

  (d)

  தெரிதல் நிலை 

 49. உயிரி புவி வேதிச்சுழற்சி என்பது எதைக் குறிக்கிறது 

  (a)

  ஊட்ட பரிமாற்றம் 

  (b)

  உயிரினங்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையே நிகழும் ஊட்ட பரிமாற்றம் 

  (c)

  நீரின் சுழற்சி 

  (d)

  வேதிப்பொருட்களின் சுழற்சி 

 50. தாவரவியல் தோட்டங்கள், விலங்கியல் பூங்காக்கள், அகவளர் முறை பாதுகாப்பு, உறை குளிர் பாதுகாப்புக்கு நாற்றுகள், திசு வளர்ப்பு, மற்றும் DNA வங்கிகள் ________ தொடர்புடையது.

  (a)

  கோயில் காடுகள் 

  (b)

  அக வாழிடப் பேணுகை 

  (c)

  புறவாழிடப் பேணுகை 

  (d)

  அப்பிக்கோ இயக்கம் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment