12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  2. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  3. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  4. அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

    (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

  5. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  6. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  7. பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?

  8. கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக.

  9. எ.கோலையில் உள்ள மூன்று நொொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை – விளக்குக.

  10. குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துகாட்டுடன் வேறுபடுத்துக

  11. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

  12. டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?

  13. கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.

    நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்று இடம் அடைகாக்கும் காலம் 
    புட்டாளம்மை      
    சின்னம்மை      
    டெங்கு காய்ச்சல்      
  14. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  15. பால் எவ்வாறு தயிராக மாற்றப்படுகிறது? தயிர் உருவாகும் முறையினை விளக்குக.

  16. உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?

  17. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது?

  18. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?

  19. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?

  20. எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

  21. வாழிடம் என்றால் என்ன?

  22. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?

  23. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

  24. குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி

  25. இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப்பப்பகுதிகள் எத்தனை? அவற்றைப் பெயரிடு.

  26. "அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து.

  27. பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

  28. வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?

  29. பசுமை இல்ல விளைவு இல்லாவிட்டால் பூமி எவ்வாறு இருக்கும்?

  30. கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.

  31. பதியமிடல் என்றால் என்ன?

  32. ஒட்டுதல் மற்றும் பதியமிடல் வேறுபடுத்துக.

  33. உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.

  34. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.

  35. மரபியல் - வரையறு.

  36. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய் து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
    i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
    ii) சரியான மரபணு வகைய கலப்பிணை வரைக .
    iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?

  37. வ.எண் கேமீட்டுகளின்
    வகைகள்
    வழித்தோன்றல்களின்
    எண்ணிக்கை
    1. ABC 349
    2. Abc 114
    3. abC 124
    4. AbC 5
    5. aBc 4
    6. aBC 116
    7. ABc 128
    8. abc 360

    i) இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
    ii) மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு
    உருவாக்குவாய் ?
    iii) மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.

  38. தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?

  39. நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?

  40. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  41. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

  42. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுப்படுத்துக.

  43. கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை ஏதேனும் ஒரு காரணம் தருக.

  44. மணற்பாங்கான மண் சாகுபடிக்கு உகந்ததல்ல - ஏன் என விளக்குக.

  45. நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி

  46. ஓசோன் துளை என்றால் என்ன?

  47. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?

  48. பொய் தானியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  49. வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள்.

  50. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment