12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  14 x 1 = 14
 1. உறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :
  கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
  உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
  காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  (a)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (b)

  ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

  (c)

  'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

  (d)

  'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை 

 2. வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு 

  (a)

  12-160 துடிப்பு/நிமிடம் 

  (b)

  130-150 துடிப்பு/நிமிடம் 

  (c)

  120-150 துடிப்பு/நிமிடம் 

  (d)

  130-160 துடிப்பு/நிமிடம் 

 3. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

  (a)

  டி.என்.ஏ மூலக்கூறின் 5' முனையில் மட்டுமே இரட்டிப்படைத்தல் தோன்றும்.

  (b)

  டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

  (c)

  டி.என்.ஏ பாலிமகரஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூகளியோட்டுகளை இணைக்கும்.

  (d)

  ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

 4. பறவைகள் தோன்றிய காலம் 

  (a)

  டிரையாசிக்

  (b)

  வீராசிக் 

  (c)

  கிரிடேஷியஸ் 

  (d)

  பெர்மியன் 

 5. எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்காக தண்டு செல்கள்ப் பிரித்தெடுத்தல், பதப்படுத்தல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கியது _______________ ஆகும்.

  (a)

  தொப்புள் கோடி இரத்த வங்கி 

  (b)

  தண்டு செல் வங்கி 

  (c)

  இரத்த வங்கி 

  (d)

  ஜீன் வங்கி

 6. பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.

  (a)

  இலையுதிர் காடுகள்

  (b)

  வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்

  (c)

  ஊசியிலைக் காடுகள்

  (d)

  அமேசான் காடுகள்

 7. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?

  (a)

  தாமிரம்

  (b)

  வெள்ளி

  (c)

  பலேடியம்

  (d)

  தங்கம்

 8. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே

  (a)

  A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C

  (b)

  A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற் றும் T ⟶ A

  (c)

  C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற் றும் G ⟶ A

  (d)

  G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற் றும் C ⟶ G

 9. பயோ டெக்னலாஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர் 

  (a)

  வெய்ஸ்னர் 

  (b)

  கார்ல் பிரான்டில் 

  (c)

  சாங்கர் 

  (d)

  கார்ல் எரிக்கி 

 10. தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் சிறப்பு வகை திசுக்கள் _____________

  (a)

  சைலம் 

  (b)

  புளோயம் 

  (c)

  பாரன்கைமா 

  (d)

  வெலாமன்

 11. எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத வெற்றுப் பரப்பில் முதலில் குடியேறும் தாவரங்கள் __________ என்று அழைக்கப்படுகின்றன.

  (a)

  முன்னோடி சிற்றினங்கள் 

  (b)

  படிநிலை 

  (c)

  சுய வழிமுறை வளர்ச்சி 

  (d)

  வேற்று வழிமுறை வளர்ச்சி 

 12. 14% மற்றும் 6% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான முறையே

  (a)

  N2O மற்றும் CO2

  (b)

  CFCs மற்றும் N2O

  (c)

  CH4 மற்றும் CO2

  (d)

  CH4 மற்றும் CFCs

 13. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு
  பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

  (a)

  சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

  (b)

  சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினார ம்

  (c)

  சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

  (d)

  சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

 14. வில்வம் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது?

  (a)

  லேமியேசி 

  (b)

  டூட்டேசி 

  (c)

  வைட்டேசி 

  (d)

  யுகார்பியேசி 

 15. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

  (a)

  25%

  (b)

  50%

  (c)

  100%

  (d)

  75%

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. விலங்குகளில் காணப்படும் பிளவுறுதலின் வகைகள் யாவை?

 18. ஹார்மோன் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன.

 19. எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான β- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை – விளக்குக.

 20. ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறைமூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.

 21. இந்தியாவில் உள்ள மிகை உள்ளூர் உயிரினப்பப்பகுதிகள் எத்தனை? அவற்றைப் பெயரிடு.

 22. இனப்பெருக்கம் என்றால் என்ன?

 23. அத்தி மற்றும் குளவி இடையிலான நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.

 24. தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை? 

 25. பேசில்லரி சீதாபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பீட்டு வேறுபடுத்துக..

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?

 28. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?

 29. மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக

 30. மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரைஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.

 31. பாலைவனத்தில் உள்ள விலங்கினங்கள் அதிக வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக காணப்படக்கூடிய தகவமைப்புகள் பற்றி எழுதுக.

 32. அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன? அதன் கூறுகள் யாவை?

 33. முன்னோடி கூட்டுறவு என்றால் என்ன?

 34. அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்துவிளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

 35. மான்ட்ரியல் ஒப்பந்தம் என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுக.

  2. மரபற்று போதல் என்றால் என்ன? 

  1. மின்னணுக் கழிவுகள் என்பது எதைக் குறிக்கிறது?

  2. மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.

  1. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க.

  2. வேதிய சடுதி மாற்றிகள் - விவரி 

  1. பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.

  2. பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அதன் வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.

  1. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

  2. அரிசியின் பொருளாதார முக்கியத்துவத்தை தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment