12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  15 x 1 = 15
 1. கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.

  (a)

  முதல் 

  (b)

  இரண்டாம் 

  (c)

  மூன்றாம் 

  (d)

  நான்காம் 

 2. தாய்சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு 

  (a)

  உடல்வெளிக்கருவுறுதல் 

  (b)

  GIFT 

  (c)

  ZIFT 

  (d)

  கோரியான் நுண்நீட்சி ஆய்வு 

 3. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

  (a)

  டி.என்.ஏ மூலக்கூறின் 5' முனையில் மட்டுமே இரட்டிப்படைத்தல் தோன்றும்.

  (b)

  டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

  (c)

  டி.என்.ஏ பாலிமகரஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூகளியோட்டுகளை இணைக்கும்.

  (d)

  ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

 4. எலைசா என்ற உயிர் வேதி செய்முறையை கண்டறிந்தவர்கள் யார்?

  (a)

  கேரி முல்லிஸ் 

  (b)

  அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லிண்ட்மேன் 

  (c)

  கேம்பெல் மற்றும் வில்மட் 

  (d)

  எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான்  

 5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

  (a)

  WWF

  (b)

  IUCN

  (c)

  ZSI

  (d)

  UNEP

 6. பின்வருவனவற்றில் எது உணவுச் சங்கிலிகளின் ஊட்ட நிலைகளை கடக்கும்போது எப்போதும் குறைகின்றது?

  (a)

  எண்ணிக்கை

  (b)

  வேதிப்பொருள்

  (c)

  ஆற்றல்

  (d)

  விசை

 7. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றகளில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்

  (a)

  25 AB, 25 ab, 25 Ab, 25 aB

  (b)

  10 AB, 10 ab

  (c)

  45 AB, 45 ab

  (d)

  45 AB, 45 ab, 5 Ab, 5 aB

 8. முப்புள்ளி சோதனைக்  கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரை ய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால்

  (a)

  ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (b)

  இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (c)

  பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

  (d)

  மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

 9. ஒரே ககுரோமோசோமில்  G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
  வரிசையை எழுதுக.

  (a)

  G H S L

  (b)

  S H G L

  (c)

  S G H L

  (d)

  H S L G

 10. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே

  (a)

  A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C

  (b)

  A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற் றும் T ⟶ A

  (c)

  C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற் றும் G ⟶ A

  (d)

  G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற் றும் C ⟶ G

 11. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தா ல், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

  (a)

  900 cM

  (b)

  90 cM

  (c)

  9 cM

  (d)

  0.9 cM

 12. முதன் முதல் மரபணுத் தொகுப்பு வரிசைப்படுத்தப்பட்ட தாவரம் 

  (a)

  ஸொலனம் டியுபரோசம் 

  (b)

  ஜியோ மெய்ஸ் 

  (c)

  ஒரைசா சாட்டைவா 

  (d)

  ட்ரிட்டிகம் ஏஜிப்டியாக்கா 

 13. குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரம், சதைப்பற்றுடைய மற்றும் சதைப்பற்றற்ற தாவரங்கள் இதற்க்கு எடுத்துக்காட்டு  _____________

  (a)

  வறண்ட நிலத்தாவரம் 

  (b)

  சதைப்பற்றற்ற தாவரம் 

  (c)

  செயல்நிலை வறட்சி 

  (d)

  இயல்நிலை வறட்சி 

 14. பொதுவாக முதல்நிலை வழிமுறை வளர்ச்சியில் தொடர்புடைய சிற்றினம்?

  (a)

  லைக்கன் 

  (b)

  மாஸ்கள் 

  (c)

  நுண்ணுயிரிகள் 

  (d)

  இவை அனைத்தும் 

 15. பயிர் பெருக்கத்தில் வேகமான முறை

  (a)

  அறிமுகப்படுத்துதல்

  (b)

  தேர்ந்தெடுத்தல்

  (c)

  கலப்பினமாதல்

  (d)

  சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. கடல் சாமந்தியின் பாலிலி இனப்பெருக்க முறையை விவரி?

 18. உடல் வெளிக் கருவுறுதல் எவ்வகைப் பெண்களுக்கு பயன் அளிக்கும்?

 19. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

 20. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?

 21. செந்தரவுப் புத்தகம் – இதை பற்றி உனக்கு தெரிவது என்ன?

 22. தாவர கருவியலின் மைல்கற்களை வெளிக்கொணர்க.

 23. முதல் சிற்றினங்களுக்கிடையேயான உடல் கலப்பினங்களை உருவாக்கியவர் யார்? குறிப்பு வரைக.

 24. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

 25. இயற்கையில் சர்க்கரை வெற்றில் உள்ளது?

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. பொய்யான பிரசவ வலியை ஏற்படுத்துவது எது?

 28. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?

 29. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

  நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
  அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
    டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
  செதில் புண்கள் காணப்படுதல். 
  டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
  நிமோனியா    
 30. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.

 31. உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை பற்றி சிறுகுறிப்பு தருக.

 32. உடலக்கரு உருவாக்கத்தின் பயன்பாடு எது?

 33. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை வரைந்து A, B, C பாகங்களை குறிப்பிட்டு, எந்தவகையான ஒட்டுண்ணி என எழுதி எ.கா தருக.

 34. பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல்மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய்?

 35. புவி வெப்பமடைதலை நாம் ஏன் தடுக்க வேண்டும்?

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. கடல் சாமந்தி மற்றும் நாடாப்புழுவில் நடைபெறும் பாலிலி இனப்பெருக்க முறையான துண்டாதல் பற்றி விரிவாக விடையளி.

  2. சூழல்வெளி பாதுகாப்பின் முக்கிய கருத்துகளை தொகுத்து எழுதுக.

  1. நீர் மாசுபாட்டினை தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக.

  2. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

  1. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  2. இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிக்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.

  1. களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நண்மைகள் யாவை?

  2. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
   நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

  1. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

  2. நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தைப் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment